CA – Zero Cost Course – Topper Experience

CA toper

சி.ஏ தேர்வு சற்று கடினமாக கருதப்படும் தேர்வுகளில் ஒன்று. சமீபத்தில் மே மாதம் நடந்த சி.ஏ தேர்வில் சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற மாணவர் இந்திய அளவில் முதலிடம் பிடித்து தமிழகத்தை தலைநிமிரச் செய்துள்ளார். இவ்வளவு கடினமான தேர்வில் முதலிடம் பிடித்தது எப்படி என அவரிடம் கேட்டோம்.

‘‘நான் 7-ம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு சி.ஏ படிப்பின் மீது ஆர்வம் வந்துவிட்டது. எனது உறவினர் ஒருவர் சி.ஏ படித்து வந்தார். அவரது தூண்டுதல்தான் எனக்கு இந்தப் படிப்பின் மீதான ஆர்வத்தைக் கூட்டியது.

பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சி.ஏ படிப்பை துவங்கிவிட்டேன். 2012-ம் ஆண்டு சி.ஏ படிப்பின் முதல்நிலை தேர்வில் 180/200 மதிப்பெண் பெற்று சேலம் அளவில் முதலிடம் பிடித்தேன். 2013-ம் ஆண்டு சி.ஏ இன்டர் தேர்வில் 551/700 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 7-வது இடத்தைப் பிடித்தேன். 2014-ம் ஆண்டு கம்பெனி செக்ரட்டரி தேர்வில் இந்திய அளவில் முதலிடமும், தற்போது சி.ஏ இறுதி தேர்வில் 613/800 மதிப்பெண் பெற்று  முதலிடத்தையும் பிடித்துள்ளேன்” என்றார்.

முதலிடம் பிடித்ததற்கு அவர் பின்பற்றிய 6 சக்சஸ் ஃபார்முலாக்கள்:

1. சி.ஏ தேர்வில் ஜெயிக்க 8-10 மாதங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும்.

2. முழுக் கவனத்துடன் படிக்க வேண்டும். மற்ற படிப்புகளோடு துணைப் படிப்பாக இதனை தேர்வு செய்யாமல் முழுமையாக இதனை படிப்பது அவசியம்.

3. இதில் நாம் முதலீடு செய்வது நேரம் மற்றும் நமது எதிர்காலத்தையும்தான். எனவே, அவற்றின் அருமை தெரிந்து படிக்க வேண்டும்.

4. கடின உழைப்பும், விடாமல் தொடர்ந்து படிப்பதும்தான் வெற்றி பெற அவசியம்.

5. பெற்றோர்களிடம் சி.ஏ படிப்பின் முக்கியத்துவத்தை புரிய வைப்பதும் அவசியம். மற்ற படிப்புகளை போல் அல்லாமல் சி.ஏ படித்தால் சுயமாக தொழில் செய்யலாம்.

6. சி.ஏ.வை தேர்வு நேரப் படிப்பாக அணுகாமல், அதனை பயிற்சியாக அணுகினால் வெற்றி நிச்சயம்.’’

Ref: Nanayam Vikatan 2016-July-31

2 Responses to CA – Zero Cost Course – Topper Experience

  1. S. Suresh says:

    வாழ்த்துக்கள், உழைப்பு என்றுமே உயர்வைத்தரும்….

  2. all the best sriram , pray god always

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *