சுப்பிரமணி மாமாவும் சித்திரகுப்தனும்

சுப்பிரமணி மாமாவும் சித்திரகுப்தனும் :

சுப்பிரமணி மாமா – ஒரு தீவிர பிராமண அபிமானி. அவரின் 18 வயதில் Reservation Quota வினால் அவருக்கு கல்லுரி சீட் கிடைக்காமல் போனது. அதிலிருந்து அவருக்கு இட ஓதுக்கீடு பற்றி ஒரு தீவிரமான அபிப்ராயம் தோன்றி விட்டது.

-x-x-x-x-x

பிராமணர்கள் அழிக்க படுகிறார்கள் என தீவிரமாக நம்பினார். எப்போதும் பிராமண உயர்வு பற்றியும் ஒற்றுமை இன்மை பற்றியும் அதிகம் பேசுவார். அனேகமாக ஒரு அரசியல் கட்சி பற்றி வாரம் ஒருமுறையேனும் விமர்சனம் செய்வார். அரசியல் புள்ளி விவரங்களை பற்றி விரல் நுனியில் வைத்து இருப்பார். எவராலும் அவரை வாதத்தில் தோற்கடிக்க முடியாது.

-x-x-x-x

ஒருமுறை பிராமண சங்க கூடத்துக்கு போனார். “நாம் என்ன செய்தோம். நமக்கு என்று ஒரு வங்கி (Bank) வேண்டும், ஒரு என்ஜினீரிங் கல்லூரி வேண்டும். ” என நீண்ட நேரம் பேசினார். பலர் கை தட்டினார்கள். அங்கிருந்த நிர்வாகி சுப்பிரமணி மாமாவிடம் ஒரு சிறு நிகழ்ச்சியை நடத்த சொல்லி கேட்டார். அவர் பகுதியில் உள்ள சிலரை சங்கத்துக்கு உறுப்பினர் ஆக்கி, ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். சுப்பிரமணி மாமா சிலரிடம் உறுப்பினர் ஆக சொல்லி கேட்டார். கூட்டத்துக்கு கூப்பிட்டார். ஆனால் எதுவும் சரிபடவில்லை. எப்படியோ ஒரு கூட்டத்தை நடத்தி விட்டார். கூட்டம் நடத்த இடம் வாடகை மட்டும் காபி என கொஞ்சம் செலவானது. சுப்பிரமணி மாமாவுக்கு இதெல்லாம் சரிப்படவில்லை.

வாரம் எதாவது சங்க வேலை வந்தது. யாராவது வீட்டுக்கு வந்தார்கள். நெறைய பேசினார்கள். டிவி பார்க்க முடியவில்லை. “செயல்” பட வேண்டி இருந்தது.   கொஞ்சம் எரிச்சலும் கோபமும் வந்தது. எதோ ஒரு சின்ன காரணத்துக்கு சிறு சலசலப்பு. இவர் “Prestige ” பத்மநாப ஐயர் போல் முறுக்கி கொண்டார். “பாலிசி என்றால் பாலிசி” என்றார். “விட்டு தொலைங்கோ” என்று மாமி சொல்ல சங்கத்துக்கு போவதையே நிறுத்தி விட்டார்.

அவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து அவரை அழைப்பார்கள். பல ஆலோசனைகளை வழங்குவார். “சங்கத்திலிருந்து என்னை கூப்பிடுகிட்டே இருகாங்க. எனக்குத்தான் டைம் சரியாய் இருக்கு” என்று அடிக்கடி சொல்லி கொள்வார்.

x-x-x-x-x-x

அவருக்கு ஒரே பையன். அமர்க்களமாக திருமணம் நடந்தது. 2000 பேர் திருமணத்துக்கு வந்தார்கள். முழுமையான வழக்கை. 72 இறந்து போனார். சுடுகாட்டுக்கு 6 பேர் வந்திருந்தார்கள்.

x-x-x-x

நீங்கள் படிக்கும் இந்த நேரத்தில் சுப்பிரமணி மாமா எம லோகத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். நாமும் என்ன நடக்கிறது என பார்ப்போம்.

x-x-x-x-x-x

எமன் : சுப்பிரமணி!. ப்ரம்மஹத்தி தோஷத்துக்கு (பிராமணர்களை அழிப்பதற்கு) காரணமாக இருந்ததால் உங்களுக்கு தலைகீழாக தொங்கும் தண்டனை விதிக்கிறேன்.

x-x-x

சுப்பிரமணி மாமா : இது அநியாயம். நான் ஒரு தீவிர பிராமண அபிமானி. பிராமணர்களுக்கு என்று ஒரு வங்கி ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியவன் நான். என்னை போய் ?

சித்திரகுப்தன் : தனியாக வங்கி ஆரம்பிக்க உங்களால் எவ்வளவு தர முடியும்.

சுப்பிரமணி மாமா : 5000 ரூபாய்.

சித்திரகுப்தன் : வங்கி ஆரம்பிக்க 500 கோடி Reserve வங்கிக்கு தர வேண்டும். அது தவிர வங்கி நடத்த நூற்று கணக்கான கோடி வேண்டும். இது போல அபத்தமாக உங்கள் வீடு பற்றி நீங்கள் யோசிக்க மாட்டிர்கள். ஆனால் பொது விஷயம் என்றால், அபத்தமாக யோசனை கூறி, பலரையும் குழப்புவீர்கள். இது தவறு இல்லையா?

-x-x-x-

சுப்பிரமணி மாமா : ப்ராமண சங்கத்து நிர்வாகிகள் என் இல்லத்துக்கு அடிக்கடி வருவார்கள். உங்களுக்கு தெரியுமா?

சித்திரகுப்தன் : அவர்கள் உண்மை விசுவாசிகள். நீங்கள் செயல் படுபவர் போல பேசியதால் அவர்கள் உங்கள் இல்லத்துக்கு வந்தார்கள். கடைசி வரை நீங்கள் உங்கள் சமூகத்துக்கு எதுவும் செய்யவில்லை. மேலும் செயல் படுபவர்கள் நேரத்தையும் கெடுத்தீர்கள்.

x-x-x-x-x

சுப்பிரமணி மாமா : நான் இட ஒதுக்கீட்டை எதிர்த்தேன். என் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தேன்.

 

சித்திரகுப்தன் : இதுவரை நீங்கள் இட ஒதுக்கீபட்டுக்கு எதிராக 7842 பேரிடம் வாதாடி இருக்கிறீர்கள். உங்கள் கடைசி காலத்தில் Face Book மூலம் பலரிடம் வாதம் செய்திருக்கிறீர்கள். பெரும்பாலும் “இட ஒதுக்கீடு மூலம் பலன் பெறுபவர்கள் திறமை இல்லாதவர்கள் என பேசி பலரை வெறுப்படைய வைத்தீர்கள். அதில் 4411 பேர், உங்கள் வாதத்தை பற்றி கவலை படவில்லை. 1802 பேர் உங்களை மட்டும் வெறுத்தார்கள். மீதி உள்ள 1629 பேர் பிராமண குலத்தையே உங்களால் வெறுத்தார்கள். அதில் சிலர் மேற்பதவிக்கு செல்லும்போது பிராமணர்கள் மீது வெறுப்பை வெளி கட்டினார்கள். சிலர் பிராமண எதிர்ப்பு கட்சிக்கு உங்களால் ஆதரவு அளிக்கும்படி செய்திர்கள். இது தவறு இல்லையா?

x-x-x-x-x

சுப்பிரமணி மாமா : என் கருத்தை சொல்ல எனக்கு உரிமை உள்ளது. இதில் தவறு என்ன?

சித்திரகுப்தன் : உண்மை. ஆனால் உங்கள் தனிப்பட்ட விவகாரத்தில் நெளிவு சுளிவுடன் எவரும் உங்கள் குடும்பத்தை வெறுக்காத வண்ணம் பேசும் நீங்கள், பிராமண குலத்தை பலர் வெறுக்கும் படி மட்டும் நடந்து கொள்கிறார்கள். இது சரியா?

x-x-x-x

அது மட்டும் இல்லாமல் “வெறும் பேச்சு” போதும் என நீங்கள் தீர்மானித்து விட்டிர்கள். உங்கள் மகனை பள்ளியில் சேர்த்தீர்கள். கல்லுரியில் சேர்த்தீர்கள். திருமணம் செய்து வைத்தீர்கள். இவை அனைத்தும் “செயல்கள்”. உங்கள் சமூகத்தின் மீது நீங்கள் வைத்த அபிமானம் என்பது உங்களின் அறிவு குழந்தையை போன்றதே. அதற்கு நீங்கள் செய்தது என்ன. வெறும் பேச்சு மட்டுமே.

உங்கள் வாதத்தால் / செய்கையால் பலரை பிராமண வெறுப்பாளர்களாக மாற்றி உள்ளீர்கள். அதனால் உங்களுக்கு தண்டனை கொடுக்க பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பற்றி நீங்கள் செய்திருக்க வேண்டியதை பற்றி இந்த லிங்கில் படியுங்கள்.

Say “Yes” to Reservation

பிறகு உங்களுக்கு தெரியும் பிராமண வெறுப்பை வெல்வது எப்படி என்று. ஆனால் உங்களுக்கு தெரியாமல் ஒரு சமுகத்தை வெறுப்பின் நிழலில் தள்ளி விட்டிர்கள்.

x-x-x-x

பின்குறிப்பு : சித்திரகுப்தன் செய்தது சரியா இல்லையா என்பதை படிப்போரின் கருத்துக்கே விடுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *