கடந்த ஒரு ஆண்டு – பிராமண எதிர்ப்பு – பதிவு – II

விடை தெரிய வேண்டிய கேள்விகள் :  நமது எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை பாதிக்கும் கேள்விகள்.  இதை படிப்பவர்கள் அவசர பட்டு எதிர்வினை ஆற்ற வேண்டாம்.  நமது சமூக பற்றை வெளிப்படுத்த கோபமான வார்த்தைகள் எந்த விதத்திலும் பயன் படாது.  இது உங்கள் யோசனைக்கு மட்டும்:  விவாதங்களை முன் வைய்யுங்கள் :  தனி நபர் தாக்குதலை அல்ல.

 

நாம் நான்காவது தலைமுறையாக “பிராமண எதிர்ப்பை” சந்திக்கிறோம்.  1920′ களில் நம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் Vs இன்றைய நிலை

குற்றச்சாட்டு : பிராமணர்கள் அரசு வேலையில் அதிகம் இருக்கிறார்கள்

நமது இன்றைய நிலை :  அரசு வேலை வாய்ப்பில்,  45 வயதுக்கு கீழ் உள்ளோர் எவரும் அரசு பணியில் இல்லை.  அரசு கல்வி நிலையங்களில் நாம் இல்லை.  டாக்டர்கள் / வக்கீல்கள் / அரசியல் வாதிகள் என எந்த துறையிலும் நாம் இல்லை.  நமது சமூகத்தில் 20-25% பேர் வெளி மாநிலங்களில்/ நாடுகளில்  வசிக்கிறார்கள்.  அவர்களில் பலருக்கு  தமிழக தொடர்பு மிக சொற்பம்.  98% சதவீத கிராமங்களில் நமது சமூகத்தவர் எவரும் இல்லை.   ஒரே குழந்தை என்ற கணக்கில் நம் சமூகம் பெருமளவு சுருங்கி விட்டது.  நாம் அதிகம் வசிக்கும் இடங்களில் பார்த்தால் 45 வயதுக்கு கீழ் ஈர்ப்புபவர் மிக மிக குறைவு.  (மாம்பலம் / மயிலை / ஸ்ரீரங்கம் என எந்த பகுதியிலும் 30 நிமிடம் நின்று கண்களால் கணக்கு எடுங்கள்.  எத்தனை இளைஞர்கள் / வயதானவர்கள் என்று).   70 ஆண்டுகளுக்கு முன் “பிராமண எதிர்ப்பு” என்று கூறப்பட்ட காரணங்கள் எதுவும் இப்போது செல்லுபடியாகாது.

குற்றச்சாட்டு : பிராமணர்கள் பழமை விரும்பிகளாக இருக்கிறார்கள்.

இன்றைய நிலை :   யாரை பார்த்து வேண்டுமானாலும்  (எந்த சமூகத்தை பார்த்து) எவர் வேண்டுமானாலும்  இந்த குற்றச்சாட்டை வைக்கலாம்.  நம் நிலையை பார்ப்போம்.  கால மாறுதல்களை மிக அதிக விரைவில் ஏற்ற வண்ணம் இருக்கிறோம்.

குற்றச்சாட்டு : கல்வியில் மற்றவரை அனுமதிக்கவில்லை.

இன்றைய நிலை :  இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என பலர் வாதங்களை வைத்தாகி விட்டது.  1920 களில் நிலவி வந்த கல்வி பற்றி / கல்வி கற்ற மாணவர்களின் சமூகம் பற்றி  அரசு (Statistics) ஆதாரத்துடன் பலர் எழுதியாகிவிட்டது. இன்றைய நிலையில்  அரசு கல்வி நிலையங்களில் நமது சதவீதம் மிக மிக குறைவு (இந்த  கட்டுரையின் நீட் பற்றி எழுத படித்திருக்கிறது)

குற்றச்சாட்டு : பிராமணர்கள் தமிழர்கள் இல்லை. வட மொழியை ஆதரிப்பவர்கள்.

இன்றைய நிலை : தமிழும் வட மொழியும் சிவ பெருமானின் கையில் உள்ள உடுக்கையில் இரண்டு பக்க சத்தங்கள் என நாம் நம்புகிறோம்.  தமிழுக்கு நாம் செய்த தொண்டுகள் பல.   இந்த நூறாண்டில் 100 தமிழ் இலக்கிய வாதிகள்  வரிசை படுத்தினால் நம் சமூகத்தின் பங்கு 50% இருக்கும். தமிழை செம்மொழி என முதலில் வாதாடியது பரிதிமாற் கலைஞர்.  இலக்கியம் தொகுத்தவர் உ.வே. சாமிநாதர் என பாரதி முதல் வாலி வரை அற்புத மனிதர்களை கொடுத்த சமூகம்.

என் தாயாரை நேசிக்க / பாசத்தை காட்ட, பக்கத்து விட்டு அம்மாவை திட்ட வேண்டாம் என்று நம்புகிறோம். “ஒழிக” என்று எந்த மொழியையும் சொல்லும் நிலையில் நாம் இருந்ததில்லை.

ஆனால் “இந்தி ஒழிக / வட மொழி ஒழிக” என்று சொன்னவர் வீட்டில் அடுத்த தலைமுறை தமிழ் தெரியாமல் வளர்கிறது.  இன்று தமிழகத்தில் தனியார் பள்ளியில் படிக்கும்  பெரும்பாலான 75% மாணவர்களுக்கு தமிழ்  சரியாக படிக்க தெரியவில்லை.    (இந்த நிலை கவலைக்குரியது.  தாய் மொழி மீது உணர்வுள்ளவர்கள் அனைவரும் யோசிக்க வேண்டிய நேரம் இது.  “ஏன் தமிழ் படிக்க வேண்டும்” என்ற கட்டுரையை நமது மாணவர்களுக்கான வழி கட்டியாக வெளியீட்டு இருக்கிறோம். அவசியம் படியுங்கள் ;  Advantage of learning tamil  – http://brahminsforsociety.com/tamil/learning-tamil/)

உலகம் முழுதும் சென்றாலும் உள்ள தமிழ் சங்கம் ஆரம்பித்தவர்களை  கவனியுங்கள்; நம் சமூகதினரின் பங்களிப்பு எற குறைய எல்லா சங்கங்களிலும் இருக்கும். இலங்கை தமிழருக்கு அடுத்ததாக உலகம் முழுதும் தமிழ் சங்கம் அமைத்தவர் நாம்;   அமெரிக்கா போனாலும் “அகத்து” மொழி விடுவதில்லை.

என் தாயை மலடி என்கிறான்.  எண்னத்தை சொல்ல?

x-x-x-x-x-x-x-x-x

நம்மை வெறுக்க காரணங்கள் இல்லை. பிரும்மாண்ட பிரச்சாரங்கள்;  கடுமையான எதிர்ப்புகள்;  கோடி கணக்கில் பணம் மற்றும் உழைப்பும்  நமக்கு எதிராக செலவிட பட்டும்   தமிழ் சமூகம் நம்மை கை விடவும் இல்லை.

கடந்த 30 வருடங்களில் பிராமண எதிர்ப்பு நோக்கி அரசியல் நகர்வுகள் நடந்துள்ளன. ஆனால் அவை மக்களின் கவனத்தை கவரவில்லை. (உம்  90’களில் நடத்த பட்ட திருப்பு முனை மாநாடு).  பிராமண எதிர்ப்பு கண்டிப்பாக ஒட்டு வாங்கி தராது என்பது இன்றைய நிலை.

 

தமிழகத்தின் இப்போதைய பிராமண எதிர்ப்பு :  (ஒரு ஆண்டு காலம்)

 

  1. முதலாவதாக வந்தது நீட் எதிர்ப்பு

நீட் ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது ஒரு கொள்கை சார்ந்தது.  முதல் கேள்வி “கல்வி மாநில உரிமை. அதில் மத்திய அரசு தலையிடலாமா?  இரண்டாவது கேள்வி “நீட் நல்லதா அல்லது கெடுதல் செய்யுமா”.  முன்றாவது கேள்வி “நீட் தவிர வேறு வழி, சிறந்த வழி இருக்கிறதா?. ஆம் எனில் அது என்ன?”  நான்காவது “தற்போதைய (நீட் முன்பாக இருந்த) முறையே சரியா?. அதில் குறை இருந்ததா?

 

நீட் பார்ப்பன சதி என்ற வாதம் வைக்கப்பட்டது தான் முதல் ஆச்சரியம்:

 

Neet Result  உண்மை நிலை:

 

உண்மை 1 :  BC / MBC / BCM / ST / SC   இவர்களுக்கு கிடைத்த மொத்த சீட்டுகள் 93.3%.  சதவீதம்

 

உண்மை 2 : Open Category பிரிவில் வந்தவை 833 சீட்டுகள். அவை

 

Forward Cast (FC)  : 211

Backward Cast (BC)   :  434

Most Backward Cast (MBC) : 97

Backward Muslim (BCM) ; 44

Scheduled Cast (SC) :  36

Special Central Assistance (SCA): 1

 

பார்ப்பன சதி  : அதெல்லாம் சரி!.  பாப்பானுக்கு 211  சீட்.  பெரியாரின் மண் இது.  அடுக்குமா?

 

211 சீட்டுகளும் பிராமணர்களுக்கு இல்லை.  தமிழகத்தில் உள்ள சைவ வெள்ளார் / முதலியார் / செட்டியாரின் ஒரு பிரிவு என தமிழக மக்கள் தொகையில் 10% இருப்போருக்கானது.   வெற்றி பெற்ற  211 பெயர்களை பார்க்கும்போது மலையாள / கிறிஸ்துவ / வட இந்திய பெயர்கள் நிரம்பி வழிகின்றன.  பாப்பான்கள் சதவீதம் சுமார் 0.50% முதல் 1% வரை இருக்கலாம் என தெரிகிறது. (it is unofficial count, but very close to the truth)

 

வெளி மாநில மாணவர்கள் OPEN CATEGORY யில்  மருத்துவ சீட் பெறுவது பற்றி தமிழக எதிர் கட்சி தலைவர் திரு ஸ்டலின் விசாரணை கோரினர்.

 

NEETடுக்கு முன்பும்  NEETடுக்கு பின்பும் பிராமணர்களில் மருத்துவ சீட்’ல்  எந்த வித்தியாசமும் இல்லை.

 

பிராமண எதிர்ப்பு ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

x-x-x-x-x-x-x-x-x-x-x-x

 

இரண்டாவதாக : மெர்சல் திரைப்படம் :

 

நமது வீட்டு வாண்டுகள் மட்டும் அல்ல  ஏன் நம்மில் பலரும் விஜய் ரசிகர்கள்.  அவர் கிருத்துவர் என்பது நம்மில் பெரும்பாலோருக்கு தெரியாது.  தெரியவும் தேவை இல்லை.  அவர் படங்களில் பிராமணர்களை கேவலமாகவும் சித்தரித்த காட்சிகள் இருந்தது இல்லை (அல்லது மிக மிக குறைவு).  நம் குல இளைச்சர்கள் மற்ற தமிழ் இளைச்சர்கள் போல “அஜித் கட்சி” அல்லது “விஜய் கட்சி”.

 

படத்தில் GST க்கு  எதிரான வாதங்கள் வைக்கப்பட்டன.    நம்மில் பலரும் GST யை எதிர்த்தும் அல்லது ஆதரிக்கவும் செய்கிறார்கள்.  அதுவும் சாப்ட்வேர் / ஆகிக்கொண்டனசி / ஆடிட்டிங் மற்றும் சேவை துறையில் வரி 12% இருந்து  14.5% மாறி GST இல்  18% உயர்ந்தது.  இவற்றில் தொழில் செய்த நம்மவர் பலர் பாதிக்க பட்டு புலம்பியதை பார்க முடிந்தது.

 

GST சரியா இல்லையா?  நாட்டுக்கு நன்மை தருமா தராதா?  படத்தில் வந்த விமர்சனம் சரியாய் இல்லையா? படத்தில் தந்த தகவல்கள் உண்மையா இல்லையா?  இது தான் தமிழகத்தின் முன் இருந்த கேள்வி.

 

ஆனால் பரந்துபட்ட ரசிகர்களை உடைய ஒரு நடிகரின் படத்துக்கான எதிர்ப்பு “பிராமண எதிர்ப்பாக” வடிவமைக்க பட்டது எப்படி ? எப்படி ? எப்படி ? எப்படி ? எப்படி?

 

x-x-x-x-x-x-x

 

முன்றாவதாக காஞ்சிபுரத்தில் ரயில் நிலையத்தில் நமது குல ஆச்சாரியர்கள் படங்கள் அழிக்கப்பட்டன.   பொது இடத்தில மத அடையாள சின்னங்கள் தேவையா என்று பலரும் கேட்டார்கள்.  நாகூர் / வேளாங்கன்னி போன்ற ரயில் நிலையங்களிலும் அந்த இடத்தை சேர்த்த மத அடையாள சின்னங்கள் வரைய பட்டிருந்தன.  இது ரயில்வேயின் வழக்கமான விஷயம்.  ஆனால் இந்த காரியம் (படங்களை அழித்தது) ஒரு சிலரால் செய்யப்பட்டது.  அதனால் இது ஒரு நிறுவன ரீதியானது என கொள்ள வேண்டாம்.  இது “பிராமண வெறுப்பு” என்று எடுத்து கொள்ள வேண்டாம்.  மேலும் அலச வேண்டிய அவசியம் இல்லை.

 

 

அடுத்ததாக சில தனி நபர் மற்றும் சிறு குழுக்கள் உள்ளவர்கள் மிக மோசமான வார்த்தைகளை பயன் படுத்தி நம்மை சில நேரங்களில் விமர்சித்ததை இந்த வருடம் காண முடிந்தது.  இது மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.  மேலும் இந்த பறந்து பட்ட தமிழகத்தில் மற்ற சமூகத்தினரை மோசமாக பேசும் நபர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.  இஸ்லாமியர்கள் / கிருத்துவர்கள் / தலித்துகள் / சில மாவட்டங்களில் வசிக்கும் பெரும்பான்மை இன மக்கள் என

பலரும் இது போல விமர்சனங்களை சந்திக்கிறார்கள்/ பாதிக்க படுகிறார்கள்.  இது போல் அநாகரிக பேச்சுக்களை  எவர் செய்தாலும் / எவரை எதிர்த்து செய் தாலும் அவர்களுக்கு தமிழ் சமூகம் ஆதரவு அளிப்பது  இல்லை.   நாமும் அவர்களை பற்றி பேசாமல் கடந்து போவோம்

 

வேண்டுகோள் :  “பாப்பார புத்தி” என்று     நம்மை திட்டும்போது உங்களுக்கு வலித்தால், எந்த கரணம் கொண்டும் எவரையும் அவர்களின் ஜாதி மற்றும் மதரீதியில்  விமர்சிக்க வேண்டோம்.

 

x-x-x-x

 

நான்காவது, வைரமுத்து ஆண்டாளை பற்றி எழுதிய வார்த்தைகள்.  நம்மிடையே 40 வயதுக்கு மேற்பட்ட பலர் இளையராஜா / வைரமுத்து பாடல்களை கேட்டு கொண்டே தூங்க பழகியவர்கள்.  ஒருசில பாடல் வரிகளை தவிர வைரமுத்து “பிராமண எதிர்ப்பை / ஆன்மிக எதிர்ப்பை ” எழுதியவர் அல்ல.  அவரிடம் இருந்து வந்தது ஒரு திடீர் தாக்குதல்.  நம்மில் பலரால் வலியை / வேதனையை தாங்க முடியவில்லை என்பது நிஜம்.  சாலைக்கு வராத சமூகம், பெருமளவில் கண்டன கூடங்களுக்கு வந்தது என்பதும் உண்மை.  டாகடர் ராமதாஸ், டீ டீ வி தினகரன், வாசன், மற்றும் பல ஆன்மிக பெரியவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

 

கூட்டங்களுக்கு வந்தவர்கள் 40-50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் (95%).  நிதானமாக இருப்பவர்கள்.  யோசித்து செயல் ஆற்றுபவர்கள்.  வன்முறையை கனவில் கூட ஆதரிக்காதவர்கள்.  கேவலமான பேச்சுக்களை ரசிக்காதவர்கள்.  தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய பிராத்தனை முறையை நாடுபவர்கள்.

 

நீ கடவுளை நம்பாமல் இருப்பது உன் உரிமை?  நம்புவது என் உரிமை?  ஆனால் என் நம்பிக்கையை மிக கீழ்த்தரமாக விமரிசிக்க நீ யார்? என்பதே நமது வாதமாக இருந்திருக்க வேண்டும்.  தமிழகம் முழுவதும் ஆத்திகர்கள் ஒரு தரப்பில் அணி வகுத்திருக்க வேண்டும்.

 

“பிராமண எதிர்ப்பாக” மாறியது எப்படி? எப்படி? எப்படி? எப்படி? எப்படி?

 

நம்மால் விமர்சனங்களையும் கீழ்த்தரமான வார்த்தைகளையும் பிரித்து பார்க்க தெரியவேண்டும்.  உதாரனனமாக “அனைவரும் ஏன் அர்ச்சகர் ஆக கூடாது? என்பது இந்த மதத்தின் மீது வைக்கப்படும் விமர்சனம்.  ஆனால் அர்ச்சகர்களை பற்றி _____  என பேசுவது கீழ்தரமானது.

 

ஒரு குலத்தை / ஒரு பிரிவை பற்றி ஒட்டு மொத்தமாக வெறுக்கும் மன நிலை ஒரு மனோ வியாதியை போன்றது.     மனதில் படிந்த வெறுப்பு என்பது ஒரு தொழு நோயை போன்றது.  அவர்கள் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.  அவர்களு பதில் அளிக்கும் போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  நம் தரத்தில் பதில் அளிக்க வேண்டும்.  அவர்களுக்கு புரியும்படி என ஆரம்பித்து அவர்களை போலவே நாமும் பேசினால், அவர்கள் தன் வியாதியை நமக்கு பரப்பி விட்டார்கள் என்றே பொருள்

 

 

நினைவில் கொள்ளுங்கள்  : வெறுப்பு எனும்  வியாதியின் உச்சமே ஹிட்லரை 6 லட்சம் யூதர்களை கொல்ல வைத்தது.  இலங்கையில் ஆயிரம் ஆயிரம் தமிழர்களை கொல்ல கரணம் இந்த வெறுப்பு மனோ வியாதியே.   நம் குலத்தார் எவருக்கும் இந்த மனோ வியாதி வராமல் அரங்கன் காத்தருளட்டும்.

 

குறிப்பு : (இந்து) கடவுள் மறுப்பு என்பது 75 ஆண்டு காலமாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்யப்படுகிறது.  அதற்கு பதிலும் அளிக்கப்படுகிறது.  ஆத்திகர் தரப்பில்  மகா பெரியவர், திரு மிகு வாரியார் ஸ்வாமிகள், மா போ சி, ராஜாஜி என பதில் அளித்தார்கள்.  ஆத்திகர் தரப்பு  பெரும் மதிப்பை மக்களிடம் பெற்றதாகவும் இருந்தது.    நாகரிக குறைவான வார்த்தைகளை நாத்திகர் தரப்பு பயன் படுத்தினாலும்,  ஆத்திகர் தரப்பில் எந்த விதமான தடுமாற்றமும் இல்லை. இன்று ??????????????……………….

 

ஐந்தாவதாக, ஸ்வாமி விஜேந்திரர் தமிழ் தாய் வணக்கத்துக்கு எழுந்து நிற்கவில்லை என்ற சர்ச்சை.  “பாலும் கனி தேனும் கலந்தே நான் உனக்கு தருவேன்!. நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா? ” என சரஸ்வதி புஜையன்று அனைத்து இல்லங்களிலும் இந்த பாடலை பாடி வணங்கும் சமூகம் நம் சமூகம்.

 

ஸ்வாமி விஜேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.  அவர் தியானத்தில் இருந்ததை படத்தில் பார்க்கவும் முடிந்தது.   ஸ்வாமி விஜேந்திரரை பொறுத்தவரை எந்த சர்ச்சை கூறிய வார்த்தைகளையும் கூறாதவர்.  எந்த அரசியல் நிலைப்பாட்டையும் எடுக்காதவர்.  அதனால் அவர் மீது தனிப்பட்ட கோபம் இருக்க வாய்ப்பு இல்லை என்று சொல்லலாம்.

 

ஸ்வாமி விஜேந்திரர் தியானத்தில்  இருந்தது / எழுந்து நிற்காதது சரியா இல்லையா என்பது சர்ச்சை.  இது இயல்பாக இருந்திருக்க வேண்டும்.  ஆனால் தமிழகம் முழுதும் நடந்த / நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களும், அவற்றில் காட்டும் ஆவேசமும், மிக கண்ணிய குறைவான செய்கைகளும் அவற்ற்றை ஊடகங்கள்  முழுவதும் வெளியிடுவதும், அவற்றிக்கு தமிழ் சமூகம் எதிர்ப்பு கட்டாதிருப்பதும் புதியது.  கடந்த 80 வருடங்களில், நமது ஆச்சாரியர்கள் இந்த அளவுக்கு கீழ் தரமாக விமர்சிக்க படுவது இதுவே முதல் முறை.  (மீண்டும் ஒருமுறை படியுங்கள்; நமது ஆச்சாரியர்களை பற்றி மட்டும்).

 

ஒரு வன்மம் தெரிகிறது.   கண்டிப்பாக அவர்கள் ஸ்வாமி விஜேந்திரர் தியானத்தில் இருந்ததை பற்றி மட்டும் எதிர்ப்பாக இருந்தால், இந்த வன்மம் தேவை இல்லாதது.

 

ஒரு அறிவார்ந்த சமூகம் தன்னை சுற்றியுள்ள சூழலை அலசி ஆராயும்.  360 டிகிரி என்பார்கள்.  காரணங்களை  எதிர் பக்கம் மட்டுமல்ல, தன் பக்கமும் ஆராய்பவன் நமது சமூகத்தை கடும் வேதனையில் இருந்து மீட்கிறான்.

 

நம் பதிவுகளில் நம் நேரடியாக பிரச்சனையின் காரணத்தையும் மற்றும் அதன் தீர்வின் வழிமுறைகளையும் நம் குழுவின் முன் வைப்போம்.    “உள் நோக்கு பார்வையை” நாம் தீர்வாக வைக்கிறோம்.  நம்மை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து அதை செய்துகொண்டே இருக்க போகிறார்கள்.  ஆனால் அவர்கள் தரப்பை மதிக்க தகுந்ததாக / செல்வாக்கு உள்ளதாக மாற்றுவது நமது நண்பர்களா?  இல்லையா?

 

என்பதே இந்த பதிவின் ஆதார கேள்வி.

 

 

நாம் பிராமண எதிர்ப்பை நாம் காலத்துடன் முடித்துவைக்க போகிறோமா.  அல்லது நமது குழந்தைகளுக்கும் கொடுக்க போகிறோமா?

 

 

பகவான் கிருஷ்ணர் நமக்கு புத்திசாலித்தனமான வழியை காட்டட்டும்.

 

அட்மின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *