பிராமண வெறுப்பு 2017 – பதிவு 1

 

ஒரு சரித்திரம் :
ஈ வே ரா – சிலை உடைப்பும் – விளைவுகளும்

2007 ம் ஆண்டு, இந்து மக்கள் கட்சி அமைப்பினர் என்று கூறப்பட்ட சிலரால் ஸ்ரீரங்கம் ஈ வே ரா சிலை உடைக்கப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து தமிழகம் முழுதும் பிராமணர்கள், குறிப்பாக அர்ச்சர்கர்கள் பல இடங்களில் தாக்க பட்டனர். மேற்கு மாம்பலத்தில் நடந்த தாக்குதலில் 65 வயது முதியவர் கை உடைந்தது. தாக்குதல்களை கண்டித்து சாலை மறியல் செய்யப்பட்டது. தாக்குதல் நடத்திய அனைவரும் கைது செய்யபட்டு அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர். ஆனால் தமிழகம் முழுவதும் எழுந்த மக்கள் எதிர்ப்பு வன்முறை பரவாமல் தடுத்தது

பிராமண எதிர்ப்பு 2017:

கடந்த 20 ஆண்டுகளாக பெருமளவில் பிராமண வெறுப்பு என்பது மிகவும் குறைந்துள்ளது என்பதை நினைவில் கொள்வோம். நமது இளைஞர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அரசு வேலையிலும் எவரும் இல்லை. என்ற சமூக காரணங்களும், பிராமண எதிர்ப்பு என்பது வோட்டு சேர்க்க உதாவது என்ற அரசியல் காரணமும் சேர்ந்து வெறுப்பு என்னும் நெருப்பை அணைத்து விட்டது.

மெர்சல் திரைப்படம் :

படத்தில் GST க்கு எதிரான வாதங்கள் வைக்கப்பட்டன. நம்மில் பலரும் GST யை எதிர்த்தும் அல்லது ஆதரிக்கவும் செய்கிறார்கள். அதுவும் சாப்ட்வேர் / ஆகொண்டனசி / ஆடிட்டிங் மற்றும் சேவை துறையில் வரி 12% இருந்து 14.5% மாறி GST இல் 18% உயர்ந்தது. இவற்றில் தொழில் செய்த நம்மவர் பலர் பாதிக்க பட்டு புலம்பியதை பார்க முடிந்தது.

GST சரியா இல்லையா? நாட்டுக்கு நன்மை தருமா தராதா? படத்தில் வந்த விமர்சனம் சரியாய் இல்லையா? படத்தில் தந்த தகவல்கள் உண்மையா இல்லையா? இது தான் தமிழகத்தின் முன் இருந்த கேள்வி.

மத்திய அரசின் சார்பில் மத்திய அமைச்சர் ராதா கிருஷ்ணன் மற்றும் ப ஜ க தலைவர்களான ஹ. ராஜா மற்றும் தமிழிசை போன்றோர் மெர்சல் படதுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது ஜனநாயக நாட்டில் இயல்பே.

இதுவரை ஜாதி என்பது எங்கும் வரவில்லை. திரு ராஜா அவர்கள் விஜய் ஒரு கிருத்துவர் என பதிவிட்டார். ஜாதிய சாயல் புகுந்தது.

நமது வீட்டு வாண்டுகள் மட்டும் அல்ல ஏன் நம்மில் பலரும் விஜய் ரசிகர்கள். அவர் கிருத்துவர் என்பது நம்மில் பெரும்பாலோருக்கு தெரியாது. தெரியவும் தேவை இல்லை. அவர் படங்களில் பிராமணர்களை கேவலமாகவும் சித்தரித்த காட்சிகள் இருந்தது இல்லை (அல்லது மிக மிக குறைவு). நம் குல இளைஞர்கள் மற்ற தமிழ் இளைஞர்கள் போல “அஜித் கட்சி” அல்லது “விஜய் கட்சி”.

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் நம் குலம் விமர்சிக்க பட்டது. மிக கேவலமான வார்த்தைகள் பயன்படுத்த பட்டன. ஆனால் பரந்துபட்ட ரசிகர்களை உடைய ஒரு நடிகரின் படத்துக்கான எதிர்ப்பு “பிராமண எதிர்ப்பாக” வடிவமைக்க பட்டது.

இந்த விவகாரத்தை முதலில் ஆரம்பித்த பா ஜ க தலைவர் தமிழிசை மத்திய அமைச்சர் ராதா கிருஷ்ணன் போன்றவர்களின் ஜாதி எங்கும் வெளிவரவில்லை. ஏனெனில் அவர்கள் செய்தது பா ஜ க அரசியல். ஆனால் திரு ராஜா மட்டும் ஜாதி குறிக்கப்பட்டு விமர்சிக்க பட்டார். நம் குலம் பொது வெளியில் தாக்கப்பட்டது.

இந்த கேள்வியை தந்தி டிவியில் பாண்டே அவர்கள் திரு ராஜாவிடம் கேள்வியாக கேட்டார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

x-x-x-x-x-x-x-x

வைரமுத்து ஆண்டாளை பற்றி எழுதிய வார்த்தைகள். நம்மிடையே 40 வயதுக்கு மேற்பட்ட பலர் இளையராஜா / வைரமுத்து பாடல்களை கேட்டு கொண்டே தூங்க பழகியவர்கள். ஒருசில பாடல் வரிகளை தவிர வைரமுத்து “பிராமண எதிர்ப்பை / ஆன்மிக எதிர்ப்பை ” எழுதியவர் அல்ல. அவரிடம் இருந்து வந்தது ஒரு திடீர் தாக்குதல். நம்மில் பலரால் வலியை / வேதனையை தாங்க முடியவில்லை என்பது நிஜம். சாலைக்கு வராத சமூகம், பெருமளவில் கண்டன கூடங்களுக்கு வந்தது என்பதும் உண்மை. டாகடர் ராமதாஸ், டீ டீ வி தினகரன், வாசன், மற்றும் பல ஆன்மிக பெரியவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தார்கள். முதலில் வைரமுத்து அவர்களுக்கு ஆதரவு பெருகவில்லை. ஆனால் பரவலாக எதிர்ப்பு இருந்தது.

கூட்டங்களுக்கு வந்தவர்கள் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் (95%). நிதானமாக இருப்பவர்கள். யோசித்து செயல் ஆற்றுபவர்கள். வன்முறையை கனவில் கூட ஆதரிக்காதவர்கள். கேவலமான பேச்சுக்களை ரசிக்காதவர்கள். தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய பிராத்தனை முறையை நாடுபவர்கள்.

நீ கடவுளை நம்பாமல் இருப்பது உன் உரிமை; நம்புவது என் உரிமை; ஆனால் என் நம்பிக்கையை மிக கீழ்த்தரமாக விமரிசிக்க நீ யார்? என்பதே நமது வாதமாக இருந்திருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆத்திகர்கள் ஒரு தரப்பில் அணி வகுத்திருக்க வேண்டும்.

ஒரு கண்டன கூட்டத்தில் திரு ராஜா அவர்கள் வைரமுத்து தயார் மீது ஒரு மோசமான வார்த்தையை பயன் படுத்தினர். உடன் இந்த பிரச்சனை பிராமணர் பிரச்சனையாக மாறியது. (கூடவே “சோடா பாட்டில் வீசுவோம்” – “மன்னிப்பு கேட்கிறோம் – 24 மணி நேர சாகும் வரை உண்ணா விரதம் – கை விடல் – மீண்டும் 12 மணி நேர சாகும் வரை உண்ணாவிரதம் – மறுபடியும் கை விடல் – என்று ஒருபக்கம் ஒரு போராட்டம் நகைச்சுவையாகியது வலி மிகுந்த வேதனை)

மீண்டும் பிராமண வெறுப்புக்கு நெய் ஊற்ற பட்டது. இந்த முறை திரு பாரதி ராஜா, மிக கடும் எதிர்ப்பை ஒருங்கினைத்தார். இது பார்ப்பன திமிருக்கும் தமிழ் கவிஞன் ஒருவருக்குமான பிரச்சனையாகி போனது.

ஒரு மார்கழி புரட்சியாக, நம் மத உணர்வுகளை கேவலப்படுத்துவோர் எதிர்காலத்தில் தயங்கும்படி அகி இருக்கவேண்டிய போராட்டம், மிக கேவலமான வர்த்திகளால், தரம் தாழ்த்த விமர்சனகளால் முழுவதுமாக வேணடிக்கப்பட்டது.

முழுவதும் கெட்டவுடன் திரு ராஜா தன் வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவித்தார்.

x-x-x-x-x-x-x-x-x

ஸ்வாமி விஜேந்திரர் திரு ராஜா அவர்கள் நடத்திய ஒரு விழாவுக்கு சென்றார். அங்கு அவர் தமிழ் தாய் வணக்கத்துக்கு எழுந்து நிற்கவில்லை என்ற சர்ச்சை. “பாலும் கனி தேனும் கலந்தே நான் உனக்கு தருவேன்!. நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா? ” என சரஸ்வதி புஜையன்று அனைத்து இல்லங்களிலும் இந்த பாடலை பாடி வணங்கும் சமூகம் நம் சமூகம்.

ஸ்வாமி விஜேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. அவர் தியானத்தில் இருந்ததை படத்தில் பார்க்கவும் முடிந்தது. ஸ்வாமி விஜேந்திரரை பொறுத்தவரை எந்த சர்ச்சை கூறிய வார்த்தைகளையும் கூறாதவர். எந்த அரசியல் நிலைப்பாட்டையும் எடுக்காதவர். அதனால் அவர் மீது தனிப்பட்ட கோபம் இருக்க வாய்ப்பு இல்லை என்று சொல்லலாம்.

ஸ்வாமி விஜேந்திரர் தியானத்தில் இருந்தது / எழுந்து நிற்காதது சரியா இல்லையா என்பது சர்ச்சை. இது இயல்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழகம் முழுதும் நடந்த போராட்டங்களும், அவற்றில் காட்டும் ஆவேசமும், மிக கண்ணிய குறைவான செய்கைகளும் அவற்றை ஊடகங்கள் முழுவதும் வெளியிடுவதும், அவற்றிக்கு தமிழ் சமூகம் எதிர்ப்பு கட்டாதிருப்பதும் புதியது. தமிழகம் முழுதும் நூற்றுக்கணக்கான இடங்களில் நமது ஆச்சாரியர்களின் படங்களுக்கு செருப்பு மலைகள் போடப்பட்டன. கடந்த 80 வருடங்களில், நமது ஆச்சாரியர்கள் இந்த அளவுக்கு கீழ் தரமாக விமர்சிக்க படுவது இதுவே முதல் முறை.

நினைவில் கொள்ளுங்கள். காஞ்சி மடத்தின் மீது கொலை குற்றம் சாட்ட பட்டபோது கூட இந்த அளவு கேவலமாக எவரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.

இதில் வலி என்னவென்றால் ஸ்வாமி ஜெயேந்திரர் தன் இறுதி காலத்தில் காஞ்சி மடம் மிக மோசமாக நடத்தப்பட்டதை தெரிந்து கொண்ட பிறகே அமரர் ஆனார்.

ஒரு வன்மம் தெரிகிறது. கண்டிப்பாக அவர்கள் ஸ்வாமி விஜேந்திரர் தியானத்தில் இருந்ததை பற்றி மட்டும் எதிர்ப்பாக இருந்தால், இந்த வன்மம் கண்டிப்பாக இருந்திருக்காது. இப்போது யார் மீது இருந்த வன்மம் எவர் மீது பாய்ந்தது. திரு ராஜாவை தண்டிக்க நமது மதிப்புக்குரிய ஆச்சாரியர்கள் அவமதிக்க பட்டனர்.

இந்த நிலைக்கு யார் காரணம் ?

x-x-x-x-x-x-x-x
திரிபுராவில் லெனின் சிலை உடைக்க பட்டது. உங்களுக்கு லெனின் பற்றி தெரியுமானால், அவரின் வழக்கை தெரியுமானால் அதுவும் அவரின் இறுதி காலம் தெரியுமானால், நிச்சயம் நீங்கள் சிலை உடைப்புக்கு வருத்த படுவீர்கள். மேலும் ஒரு சித்தாந்தத்தை தோற்கடிப்பது என்பது சிலை உடைப்பது அல்ல.

திரு ராஜா அவர்கள் இன்று திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல நாளை ஈ வே ரா வின் சிலையும் உடைக்கப்படும். என்று பதிவிட்டார். தமிழகத்தின் அத்தனை கட்சிகளும், கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கையை உடைப்பேன், தைரியமிருந்தால் செய்து பார் என சவால்கள் வந்தன. பா ஜ க தமிழக தலைமை அவரை கை விட்டது.

இன்று:

1. கோவை திருப்பூரில் ஈ வெ ரா சிலை உடைக்கப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.
2. பல இடங்களில் திரு ராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்து இடங்களிலும் பார்ப்பன வெறுப்பு மேலோங்குகிறது
3. வழக்கம் போல் திரு ராஜா மன்னிப்பு கோருகிறார்
4. அமிட்ஷா கண்டன அறிக்கை
5. சென்னையில் பலரின் பூணல் அறுப்பு. 15 வயது சிறுவனின் குடுமி அறுப்பு – திக வை சேர்ந்த நால்வர் போலீசில் சரண்
6. அடுத்து…….???????

இந்த வேகத்தை / வெறுப்பை குறைக்கும் வகையில் பிராமண சங்க தலைவர் திரு நாராயணனை அவர்கள் திரு ராஜா அவர்களை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இதை தவிர வேறு எதை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் (Damage Control)

x-x-x-x-x

ராஜாஜி, பாரதி, வெங்கட் ராமன், சத்திய மூர்த்தி என்ற பல அரசியல் தலைவர்களை கொடுத்த சமூகம். ஆனால் எந்த தனிப்பட்ட தலைவரும் நம் சமூகத்தின் முழு பிரதிநிதி ஆக முடியாது. படித்த சமூகம், பரந்து பட்ட கருத்துக்களை கொண்ட சமூகம். எந்த காலத்திலும் ஒரே அரசியல் தலைமையின் கீழ் இயங்கியது இல்லை. அப்படி ஒரு அரசியல் தலைமையின் கீழ் இருப்பது தவறு. நமது அரசியல் கொள்கைகள் நம் அறிவு படியே இருக்க வேண்டும். நாட்டின் நலனே பிரதானம் என்பதே நமது கொள்கையாக இருக்க வேண்டும்.

நம்மிடம் நாத்திகர்கள் இருக்கிறார்கள். கம்யுனிஸ்டுகம், காங்கிரஸ், அதிமுக மட்டுமல்ல திமுக வுக்கு ஒட்டு போடுபவரும் இருக்கிறார்கள். ஒரு அரசியல் கட்சி / ஒரு தலைவர் என்பது நமது சமூகத்துக்கு பொருந்தாத ஒன்று.

x-x-x-x-x-x-x-x-x-x

நம் எதிர்கால தலைமுறைக்கு நாம் “பிராமண எதிர்ப்பை” சொத்தாக விட்டு விட்டு செல்ல போகிறோமா? அல்லது “பிராமண வெறுப்பு” குறைந்த/ இல்லாத சமூகத்தை கொடுக்க போகிறோமா.

75 ஆண்டுகளுக்கு முன் நம் மீது வைக்கப்பட்ட குற்ற சாட்டுகளுக்கு / பிராமண வெறுப்பின் காரணங்கள் எவையும் இப்போது செல்லாது (அரசு வேளையில், கல்வியில் நாம் அறவே இல்லை). பெருமளவு “பிராமண வெறுப்பு” குறைந்து வருவதை கண்டோம். நம்மை வெறுப்பவர்கள் மக்களின் கவனத்தை பெறவில்லை. ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக “பிராமண வெறுப்பை” மீண்டும் உருவாகும் நிலை இருக்கிறது.

பிராமணர்கள் பற்றிய சமூகத்தின் நன் மதிப்பே (Social Capital) நம்மை வெறுப்பிலிருந்து காக்கும் கவசம். இந்த நன்மதிப்பு 5000 ஆண்டுகளாக நம் முன்னோர் தம் தியாகத்தால் / நடத்தையால் / நேர்மையால் / உழைப்பால் உருவாக்கியது. வெறும் பேச்சால் / தரம் குறைந்த வார்த்தைகளை பயன் படுத்துவோர் நம் நன் மதிப்பை ஒழிப்பது நியாமில்லை. அப்படி செய்பவர்களை ஆதரிப்பது நம் குலத்துக்கு செய்யும் கேடாகும்.

நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்: உங்கள் பிள்ளையின் / தம்பியின் / பேரனின் எதிர்காலம் பற்றிய நினைவோடு இருங்கள். “பிராமண வெறுப்பை” குறைப்பது என்பது நெருப்பின் மீது பெட்ரோல் ஊற்றுவது அல்ல. அரசியல் சண்டையை நம் தலையில் ஏற்றும் ,முயற்ச்சிக்கு பலியாக வேண்டாம். பொதுவெளியில் பதிவு செய்யும் உங்கள் கருத்துக்கள் பிராமண வெறுப்பை அதிகரிக்குமா அல்லது பிராமண வெறுப்பை குறைக்குமா என்று யோசியுங்கள்? கடும் நெருக்கடியில் இருக்கும் ஒரு குலத்தை மேலும் சிக்கலில் ஆழ்த்த வேண்டாம்.

x-x-x-x-x-x-x-x-x-x-x-x

இந்த பதிவு ஒரு தலைவர்க்கோ அல்லது ஒரு அரசியல் கட்சி க்கு எதிராகவோ எழுதப்பட்டதல்ல என்று மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் சொல்ல முடியும். ஏன் இந்த திடீர் பிராமண வெறுப்பு என்ற கேள்விக்கு நமது பதிலை தந்திருக்கிறோம்.

ஒரு அறிவார்ந்த சமூகம் தன்னை சுற்றியுள்ள சூழலை அலசி ஆராயும். 360 டிகிரி என்பார்கள். காரணங்களை எதிர் பக்கம் மட்டுமல்ல, தன் பக்கமும் ஆராய்பவன் நமது சமூகத்தை கடும் வேதனையில் இருந்து மீட்கிறான்.

நம் பதிவுகளில் நம் நேரடியாக பிரச்சனையின் காரணத்தையும் மற்றும் அதன் தீர்வின் வழிமுறைகளையும் நம் குழுவின் முன் வைப்போம். “உள் நோக்கு பார்வையை” நாம் தீர்வாக வைக்கிறோம். நம்மை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து அதை செய்துகொண்டே இருக்க போகிறார்கள். ஆனால் அவர்கள் தரப்பை மதிக்க தகுந்ததாக / செல்வாக்கு உள்ளதாக மாற்றுவது நமது நண்பர்களா? இல்லையா?

x-x-x-x-x-x-x-x-x

பகவான் கிருஷ்ணர் நமக்கு புத்திசாலித்தனமான வழியை காட்டட்டும்.

குறிப்பு :

1. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்: நம் குலத்துக்கு எது நல்லது என்பதை யோசித்து பதிவு செய்யுங்கள். உங்கள் அரசியல் சார்புகளை கொஞ்சம் தள்ளி வைத்து, குலத்தின் நன்மையை மட்டும் என சில நிமிடங்கள் யோசித்தால் மேற்கண்ட பதிவின் நோக்கம் புரியும்.

2. அரசியல் பேசுவதில்லை என்பதே நம் நிலை. அதனால் மட்டுமே கடந்த ஒரு ஆண்டாக நடக்கும் பிராமண எதிர்ப்பின் அரசியல் கோணம் பற்றி கருத்துக்களை பதிவு செய்ய தயங்கி தவிர்த்து விட்டோம். வேறு வழி இல்லாமல் இந்த அரசியல் பதிவு இங்கு பகிரப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *