பிராமண வெறுப்பு 2017 – எதிர் கொள்ளும் வியூகங்கள்

நேற்றைய பதிவின் தொரடர்ச்சி :
பிராமண எதிர்ப்பு மேலோங்க திரு ராஜா எவ்விதம் காரணமாகிறார் என்று நீண்ட பதிவை வெளியிட்டிருந்தோம். 25 இக்கும் மேற்பட்ட நம் குழுக்களில் விவாதம் நடந்தது. ஒரு மோசமான வார்த்தை கூட பயன்படுத்த படவில்லை. நம்கருத்தை தீவிரமாக எதிர்த்தவர்கள் கூட, தங்கள் எதிர்ப்பை வெகு நாகரிகமாக பதிவு செய்திருந்தார்கள். வந்தனம்.
x-x-x-x-x-x-x
8-மார்ச்-2017
பல இடங்களில் பிராமணர்கள் தாக்க படும் சம்பவங்கள் நடந்தன. எவருக்கும் தெரியாது போனது மீனின் அழுகை குரல். 15 வயது சிறுவன் முதல் 78 வயது பெரியவர் வரை பொது இடங்களில் மிக கேவலமாக நடத்தபட்டிருக்கிறார்கள் / தாக்க பட்டிருக்கிறார்கள். திரு ராஜாவுக்கு எதிரான, ப ஜ க வுக்கு எதிரான போராட்டம், ஆனால் ஏன் . எதற்காக பிராமணர்கள் தாக்க பட வேண்டும் என்ற கேள்வி 8 கோடி மக்களின் மனசாட்சியை எட்டவில்லை. ஒரு குரல் இல்லை கூட இல்லை நமக்கு ஆதரவாக.
இன்றைய எதிர்ப்பில் கலந்து கொண்டர்வர்களை கவனியுங்கள். உடல் மொழியில் தெரியும் வெறுப்பை / வேகத்தை கவனியுங்கள். சரித்திரத்தில் பல இடங்களில் இந்த வெறுப்பை பற்றி படித்திருக்கிறோம். நாஜிக்களின் உடல்மொழியில், தமிழனை அழித்த சிங்களவனின் ஆவேசத்தில் படித்திருக்கிறோம். இப்பொது நமக்கு எதிராக, சாலைகளில் அணி திரட்டப்படுகிறது. வெறுப்பு எனும் பெரு நெருப்பு.

ப ஜ க வின் மௌனமும் கவனிக்க தக்கது. போகிற போக்கில் தமிழிசை ஒரு வரி கண்டனம் தெரிவித்தார். அதுவும் ஒரு பேட்டியில் ஒரு வரி . வேறு தீவிரமான அறிக்கை வரவில்லை. ஏன் என்ற கேள்வியை ப ஜ க வுக்கும் / ஹிந்து ஒற்றுமை பற்றி வரிந்து கட்டிக்கொண்டு நமக்கு பதில் அளித்தவர்களின் மன சாட்சிக்கு விட்டு விடுகிறோம். நாம் தனிமையில் இருக்கிறோம். முத்து ராமலிங்க தேவர் அவர்களோ / அல்லது தாணு லிங்க நாடார் அவர்களோ இன்று இல்லை. எளியோரை தாக்கும் போது “நான் இருக்கிறேன்” என்று சொல்லும் சத்திரியன் குறைந்து போய்விட்டான். நீ எளியோனாக இருப்பது தவறு என்பதே இன்றைய நிலை. ஒரு நூல் இழையானால் அறுத்து விடலாம். அழுத்தமாக இணைத்த நூல் கூட்டத்தை அறுபது கடினம். ஒற்றுமை மட்டுமே நம்மை காக்கும். உங்கள் பங்களிப்பை காலம் கேட்கும் நேரம் இது.

ஏன் திடீரென கிளப்பும் வெறுப்பு :
நம்மை இப்போது எதிர்க்க காரணங்கள் இல்லை என்பதை சென்ற பதிவில் பார்த்தோம் (“அரசு வேளையில் / கல்வியில் நாம் அறவே இல்லை. 20%-30% பிராமணர்கள் வெளி நாட்டில் / மாநிலத்தில் வசிக்கிறார்கள். 90% கிராமங்களில்பிராமணர் ஒருவர் கூட இல்லை. மூன்றாவதாக பிறந்த குழந்தையை 25 வருடத்தில் பார்த்ததில்லை. 50% தம்பதியினர் 1 குழந்தையுடன் நிறுத்துகிறார்கள். சாப்ட்வேர் துறையில் அதிக வேலை இழப்பு நம் சமூகத்துக்கு இருக்கிறது. வெளியேற்ற படும் 45 வயதானவர்களில் பிராமணர்கள் மிக அதிகம். போலீஸ் / நீதிபதிகள் / வக்கீல்கள் என மக்கள் தொடர்புடைய வேலைகளில் நம்மவர் எவரும் இல்லை. அரசாங்கத்தையே, சமூகத்தையோ, அரசியலையோ மாற்றும் /பாதிக்கும் வகையில் நாம் செல்வாக்குடன் இல்லை).
x-x-x-x-x-x-x-x-x-x
தமிழகம் – அரசியல் போர்க்களம் :
அணி 1 : பிராமண எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, திராவிடர் ஆரியர் பிரச்சனை – இவையே ஆயுதங்கள்
அணி 2 : இந்து மத ஆதரவு / ஆன்மிகம் போன்றவை
அணி 3 : தமிழ் உணர்வு / திராவிட எதிர்ப்பு
அணி 1 : தி மு க தலைமையில் : திரு கருணாநிதி செயலாக இருந்தவரை எந்த குழப்பமும் அவருக்கு இல்லை. பிராமண எதிர்ப்பு என்பது அவருக்கு ஒரு ஆயுதம். செல்வி ஜெயலலிதா வை சில தாக்க உதவும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று. அதனால் பல பிராமண வெறுப்பு கும்பல்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்தார். பல நேரங்களில் பிராமண / இந்து மத எதிர்ப்பை அவரே முன் எடுத்து செல்லுவார். அதனால் அவருக்கு எழும் எதிர்ப்பையும் தாங்கும் சக்தி படைத்தவரக அவர் இருந்தார். பிராமண எதிர்ப்பு குறைந்தாலும் அதை அணையாது காப்பாற்றியவர் அவர். அதே நிலையில் அவர் பிராமண நண்பர்கள் சூழ சூழ வரவும் செய்தார். பிராமண வெறுப்பு என்ற நெருப்பை குளிர் காய மட்டும் பயன் படுத்தியவர். அது வீட்டை எரிக்கும்படியும் ஆகாமல் இருக்கும் படியும் பார்த்து கொண்டார் என்பதை கவனிக்கவேண்டும்.

இன்றைய தலைமை, ஸ்டாலின், தன் ஆயுதங்களை தீர்மானிக்க வில்லை. (கோயிலுக்கு சென்றது, “எங்கள் கட்சியிலும் இந்துக்கள் இருக்கிறார்கள்” என்று சொன்னவற்றை – நினைவு படுத்துக). கடந்த 40வருட அரசியலில் அவர் பிராமண எதிர்ப்பை வெளிப்படுத்தினார் என்று சொல்ல முடியாது. மேலும் நமது சமூகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்களுடன் அவருடைய உரையாடல் (அனுமதி இன்றி வெளியிட முடியாத நிலை) கேள்விபட்டவரை அவருக்கு பிராமண வெறுப்பு இருப்பதாக தெரியவில்லை. வளர்ச்சியின் அடிப்படையில், அனைவரையும் அரவணைத்து அவர் மக்களை சந்திப்பார் என்றே தோன்றுகிறது. அடுத்த சில மாதங்களில் அவர் என்ன செய்ய போகிறார்என்று தெரியும்.
ஒரு இயக்கத்தின் தலைமை மாறினால், அதன் வழி முறைகள் மாறும். அடுத்த 10 ஆண்டுகள் “பிராமண வெறுப்பு” அரசியல் திரு ஸ்டாலின் என்ன நிலை எடுப்பார் என்பதை பொறுத்தே அமையும். பொதுவாக தி மு க வின் அடுத்த தலைமுறை பிராமண எதிர்ப்பு மற்றும் இந்து கடவுள் மறுப்பு என்பதில் ஆர்வமாக இல்லை. (உங்கள் கவனத்திற்கு : திரு வீரமணி உள்ளவரை, தி மு க தோற்கும் – திரு மு கிஅழகிரி).
ஆனால் நமது எதிர்ப்பாளர்கள் அவர் “பிராமண எதிர்ப்பை” கடை பிடிக்க வேண்டும் என்று அவரை வற்புறுத்துகிறார்கள்.

தி மு க வின் தலைமை மாற்றியவுடன் நமது குல பெரியவர்கள் அவருடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டிருக்க வேண்டும். நமது தற்போதைய நிலைமையை அவருக்கு எடுத்துரைத்திருக்க வேண்டும். . நாம் நம் தரப்பை அவருடன் பகிர்ந்து கொள்ள தவறி விட்டோம். (நினைவில் கொள்க : திரு ஸ்டாலின் பற்றிய துக்ளக்கின் நிலை).
ஆனால் பிராமண வெறுப்பு தான் வெற்றி பெற உதவுமானால் அந்த ஆயுதத்தை அவர் பயன் படுத்த வாய்ப்பு உள்ளது. அவரின் மிக பெரிய சவாலாக இருக்கப்போவது திரு சீமான் தலைமையிலான அணி. சித்தாங்க ரீதியில் எதிர் எதிரே இருப்பவர் (தி முக Vs ப ஜ க) தோற்கலாம் / வெற்றி பெறலாம். ஆனால் ஒருவர் மற்றவரின் அடிப்படையை அசைக்க முடியாது. ஆனால் திரு சீமான் பயன் படுத்தும் ஆயுதம் “தமிழ்”. அதுவும் மற்ற திராவிட மாநிலங்கள் நமக்கு எதிரான நிலை எடுக்கும்போது, அவர் திராவிட எதிர்ப்பை முன் வைக்கிறார். மேலும் கடவுள் எதிர்ப்பை கை விட்டதை அறிவித்துவிட்டார். (முருகன் என் பாட்டன். மாயன் என் நில தலைவன் -x- கடவுள் இல்லை என்று சொல்லுபவன் எப்படி “பகுத்தறிவாளன்ஆவான்”. ஒரு எழுத படிக்க சிந்திக்க தெரியாதவன் “கடவுள் இல்லை” என உரக்க சொன்னால் அவன் பகுத்தறிவாளனா? அறிவாளியா? புத்தி உடையவனா? கடவுள் இல்லை என்று சொல்பவனை “கடவுள் மறுப்பாளன்” என்றுவேண்டுமானால் சொல்லாம். அவனை பகுத்தறிவாளன் என்று சொல்லுவது அறிவீனம் – என்று புது வடிவத்தை தருகிறார்) பிராமணர்கள் தமிழர்களா என்ற கேள்விக்கு பாரதியின் , உ வே சாமிநாதரின் பிள்ளைகளை நாம் தமிழர் இல்லை என்றுசொல்ல போகிறோமா ? என்று கேட்கிறார்.
திரு ஸ்டாலின் அவர்களின் அவர்களின் முன் இருக்கும் ஒரு பிரச்சனை: “தமிழ்” உணர்வு மேலெழுந்தால் “திராவிடம்” கிழே போகும். திரு கருணாநிதி அவர்களிடம் இருந்த “தமிழ்” என்ற ஆயுதம் திரு ஸ்டாலின் அவர்களிடம் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். திராவிடத்தை தூக்கி நிறுத்த “பிராமண வெறுப்பு” பயன்படும் என்பது அவரை சுற்றி உள்ளவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

x-x-x-x-x-x-x-x

இப்பொது நடப்பது “பிராமண எதிர்ப்பு” பயன்படுமா இல்லையா – என்பதை பற்றிய சோதனை ; கடந்த ஒரு வருடத்தில் பல சந்தர்ப்பங்களில் பிராமண எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து வெறி ஏற்றும் பேச்சுக்களை பேசி வந்தனர். பெரியகாரணம் இல்லாமல் ஒரு விஷயத்தை பெரியதாக மாற்ற முடியாது. NEET – மிக அதிகமாக பிராமண வெறுப்புக்கு பயன்பட்டது. ஆனால் பிராமணர்கள் NEET இல் பயன் பட வில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அதனால் அது எடுபடவில்லை.
இந்த நிலையில் அவர்களுக்கு திரு ராஜா மிக சிறந்த மேடை அமைத்து கொடுத்தார். திரு ராஜாவை காரணமாக வைத்து அவர்கள் பிராமண வெறுப்பு எனும் சோதனையை செய்து பார்த்தார்கள். செய்து முடித்தார்கள்.
திரு வீரமணி / திரு சுபவீ போன்றவர்களுக்கு ‘பிராமண வெறுப்பு” என்பது ஒரு பிராண வாயு/ஆக்ஸிஜன் போல. அது இல்லாமல் அவர்களின் அடையாளம் போய் விடும். பெரும் பணம் புழங்கும் வணிகம் அது. அதனால் அவர்கள் நம் மீது தாக்குதலை தொடர்ந்த வண்ணம் இருப்பார்கள். மேலும் அவர்கள் உண்மையிலயே நமது சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பிராமணர்கள் தான் காரணம் என்று மனதளவில் நம்புகிறார்கள். இவர்களை மாற்ற முயல்வது முடியாத காரியம். ஆனால் அவர்கள் தரப்பை பல படுத்துவதும் அல்லது பணவீனமாக்குவதும் நம் கையில் / நடவடிக்கையில் இருக்கிறது. “பிராமண வெறுப்பு” சமுகத்தில் எடுப்பட்டால், திரு ஸ்டைலின் அந்த ஆயுதத்தை ஏந்தலாம். அடுத்த 5 ஆண்டுகள் நமக்கு தலைவலியாக போகும். அது எடு படாவிடில் அது பற்றி கண்டு கொள்ளவே மாட்டார். ப ஜ க தலைவர்கள் பூணல் அறுப்பாய் கண்டிக்க வில்லை என ஒரு கணம் யோசித்து பாருங்கள். இன்றைய தேதியில் பிராமணர்களுக்கு ஆதரவாக பேசுவது தனக்கு பயன் தருமா என்று அவர்களுக்கு தெரியவில்லை. தேவை இல்லாமல்அவர்கள் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பவில்லை. இதே கன்யாகுமரியில் நம்மவர் ஒட்டு 50,000 இருந்தால், ப ஜ க தமிழக தலைமை வேறு நிலை எடுத்திருக்கும். இதுவே யதார்த்தம்.

சுய நலமில்லாமல் நியாயத்தின் பக்கம் ஒரு சிலரால் மட்டுமே இருக்க முடியும். அவர்களுக்கு நம் வந்தனங்கள்.

நம் குலத்தின் நலத்தை வேறு ஒருவர் காப்பாற்றுவார் என்று நினைப்பது மிக பெரிய அறிவீனம். நம்முடைய உழைப்பு இல்லாமல் நம் குலத்தை காத்து கொள்ள முடியாது. பிராமண வெறுப்பை குறைப்பதில் நமது எதிர்காலம் இருக்கிறது.

x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

பிராமண எதிர்ப்பை குறைக்கும் வியூகங்களை இப்போது பார்ப்போம்.

வியூகம் ஒன்று: உள் நோக்கு பார்வை : இட ஒதுக்கீடு
நம் எதிரிகள் சொல்லும் காரணங்களை கவனிப்போம். நமக்கு எதிராக சொல்லும் வாதங்களை ஆய்வு செய்வோம்.
A) இட ஒதுக்கீடு :
” தமிழர்களே!!!! தமிழர்களே!!!! பிராமணர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள். அவர்களை விட்டால் உங்கள் பிள்ளையின் / பேரனின் வாய்ப்புகளை பறித்து கொள்வார்கள்” – இது அவர்கள் வாதம். கூட்டம் சேருகிறது.
ராஜஸ்தானில் “குஜர்கள்”, குஜராத்தில் “படேல்” சமூகம் 1990இல் இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள். இப்போது அவர்கள் தங்களுக்கும் இட ஓதுக்கீட்டை கேட்கிறார்கள். அடுத்த 30ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு கண்டிப்பாக இருக்க போகிறது. அவர்கள் புத்தி சாலி தனமாக இட ஒதுக்கீடு கேட்டு போராடுகிறார்கள்.
45 வயதுக்கு கீழ் உள்ள அரசு ஊழியர்களில் பிராமணர்கள் 0% சதவீதம். கடந்த 10 வருடங்களில் அரசு வேலைக்கு முயற்சி செய்யும் பிராமண இளைஞ்சன் ஒருவனையாவது நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா. பின் ஏன் நாம் முட்டாள்தனமாக பொது வெளியில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து பிராமண வெறுப்பை வளர்க்க வேண்டும்.
“தமிழர்களே!!!! தமிழர்களே!!!! பிராமணர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் இல்லை. 10,000 ஆண்டுகளாய் நாம் இணைந்து இருந்தோம். உங்களுக்காக நாங்கள் பிராத்தித்தோம். உங்களின் வீட்டின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்குகொண்டோம். எங்களில் ஏழைகளுக்கு / முதல் தலைமுறை படிப்பவர்களுக்கு 2% இட ஒதுக்கீடு வேண்டும்”.
இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம்.
இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம்.
இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம்.
எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்
இந்த செய்தி தமிழகம் முழுதும் தெரிய படுத்த வேண்டும். வெற்றி பெற்றால் சிறப்பு. நாம் வெற்றி பெறாவிட்டால் மிக சிறப்பு.
இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு வரும். நம் இனிய எதிரிகள் எப்படி வாதிடுவார்கள் என்று பார்ப்போமா?
” தமிழர்களே!!!! தமிழர்களே!!!! பிராமணர்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறார்கள். அவர்களுக்கு 2% வேண்டுமாம். அவர்களில் உள்ள ஏழைகளுக்கு / முதல் தலைமுறை பட்ட தரிகளுக்கு 2% வேண்டுமாம். விட மாட்டோம் !. அவர்களுக்கு கொடுக்க மாட்டோம்” – இப்போது அவர்களுக்கு கூட்டம் கூடுமா? அல்லது சிரிப்பு வருமா.
நம் பகைவரை வெல்வது என்பது பகமைக்கான காரணங்களை இல்லாமல் செய்வது – சாணக்கியன் வாக்கு (சும்மா அள்ளி விட்றதுதான்).
இட ஒதுக்கீடு பற்றி சரித்திரம் மற்றும் அனைத்து விவரங்களையும், நம் நிலையையும் அறிந்து கொள்ள நமது வலை தளத்தின் உள்ள
http://brahminsforsociety.com/tamil/reservation-a-view/ நேரம் கிடைக்கையில் படியுங்கள்.
செயல் திட்டம் :
தேவை : 100 பேர் கொண்ட குழு. நல்ல படித்த / மிக பொறுமை உள்ள / எந்த காலத்திலும் கட்டுப்பாடு உள்ளவர்கள். 60% – 50 வயதுக்கு மேல் – 25% – வயது குறைந்தவர்கள் – 15% – வைதிக பணி செய்பவர்கள். ஒரு குழுவுக்கு 10 பேர் மற்றும் ஒரு ஒருங்கிணைப்பாளர்.
அனைத்து பணிகளையும் ஒருங்கிணைக்க ஒரு 1 அல்லது 2 முழு நேர பணியாளர்கள்.
சந்திப்புகள் :
இந்த குழு தமிழகதில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள், சமூக தலைவர்கள், எழுத்தாளர்கள், திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், என1000 பேரை தேர்தெடுத்து சந்திக்க வேண்டும். நம் நிலையை அவர்களுக்கு தெரிய படுத்த வேண்டும். அவர்களின் ஆதரவை இட ஓதுக்கீட்டுக்கு கோர வேண்டும்.
பிரச்சாரம் :
தமிழகம் முழுதும் அனைத்தை நகரங்களிலும் போஸ்டர்கள் ஓட்ட வேண்டும். சிறு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பெரும்பாலும் பிராத்தனை நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும்.
எதிர்ப்பு :
கண்டிப்பாக நமக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது எனறு எதிர்ப்பு வரும். அவர்கள் எதிர்க்கட்டும். நாம் அமைதியாக நமது பணியை தொடரவேண்டும்

x-x-x-x-x-x-x-x-x-x-x

வியூகம் இரண்டு: . அனைவரும் அர்ச்சகர் ஆகலாம். தலித் அர்ச்சகர்
நமக்கு எதிராக சொல்லப்படும் வாதம்.
“ஒரு தலித் இந்த நாட்டின் ஜனாதிபதி ஆகலாம். ஆனால் “அர்ச்சகர்” ஆக முடியுமா?
ஒரு சரித்திர பார்வை :
1920 களில், திராவிட இயக்கங்களின் ஆரம்பம் “நீதி கட்சி”. அது சாதி வாரி இட ஓதுக்கீட்டை கேட்கிறது. அவர்களின் அறிக்கையில் கோயில் அர்ச்சகர் தவிர்த்த மற்றபணிகளுக்கு என்று தெளிவாக குறிப்பிடுகிறார்கள். அப்போது அவர்கள் அர்ச்சகர் பணிக்கு இட ஒதுக்கீட்டை விரும்பவில்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது. கரணம் சுலபமாக யூகிக்கக்கூடியது. சாதி வாரி இட ஒதுக்கீடு என்றால், தலித்துகள் அர்ச்சகர் ஆகலாம். மிட்டாக்களும், மிராசு தாரர்களும், பெரும் பணம்படைத்தவரும், ஆண்ட பரம்பரையினரும் மீனாக்ஷி அம்மன் கோயிலில் கை கட்டி, வாய் பொத்தி ஒரு தலித்தின் கையால் பிரசாதம் வாங்குவதை நினைத்து கூட பார்க்கவிரும்பவில்லை. அதனால் அர்ச்சகர் பணிக்கு இட ஓதுக்கீடு வேண்டாம் என்று அறிக்கை விட்டார்கள்.
1990 களில், மேலவளவு, கீழவளவு பஞ்சாயத்துகளில் தலைமை பதவி தலித்துகளுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்க படுகிறது. ஆனால் அரசாங்கத்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடத்த முடியவில்லை. பெரும் கலவரம் மற்றும் போட்டியிட்ட தலித் கொல்ல படுகிறார். இந்த நிலையில், திரு வீரமணி அவர்கள் “பெரும்பான்மை” மக்களின்கருத்தை அறிந்து பஞ்சாயத்துகளில் இட ஓதுக்கீடு “தலித்துகளுக்கு” அளிக்க வேண்டும் என்று எழுதினார். இதுவே அவரின் தலித் இடஒதுக்கீட்டின் நிலை.
இவை இரண்டும் அவர்களின் மன நிலையை தெரிவிக்க மட்டுமே இங்கு சுட்டி காட்ட பட்டன. ஆனால் அவர்களின் பலகீனங்களின் பின் நாம் ஒளிந்து கொள்ளவேண்டாம். அந்த கேள்வியை நேரடியாக சந்திப்போம். அதுவே நியாயமான நிலை யாகும்.
“தலித்துகள் அர்ச்சகர் ஆக வேண்டும்” என்பதை நாம் ஏன் முன் எடுக்க வேண்டும் ?
காரணம் 1 : அடுத்த 1000 ஆண்டு
நமது சனாதன தர்மம் 5000 ஆண்டுகளை கடந்தும் உயிர் துடிப்புடன் இருக்கும் காரணம், சரியான நேரத்தில் மாறுதல்களை ஏற்றதனால் தான் என்பதை நினைவில்கொள்வோம். மேலும் சீர்திருத்தங்களை முன் நிறுத்தியவர் பெரும்பாலும் பிராமணர்களே. சரித்திரம் முழுதும் நாம் ஆதாரங்களை அடுக்கலாம். ஸ்ரீ ராமானுஜர் முதல் தமிழகத்தின் கோயில் கதவுகளை தலித்துகளுக்கு திறந்து வைத்த வைத்திய நாத ஐயர் வரை நம் பங்களிப்பு மிக அதிகம். சனாதன தர்மத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது நமது கடமை ஆகும்.
காரணம் 2: நமது ஆச்சாரியர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பெரும்பாலோர் பிராமணர் அல்லாதவர்களே. நாம் அடி பணித்து வணங்குகிறோம். ஒரு தலித், முழு வேதம் கற்று, தனி வாழ்வில் ஒழுக்கமுடையவராக, பக்தி உடையவராக இருந்தால், அவர் அர்ச்சகர் ஆவதில் என்ன தவறு. நாம் இரன்டு தலைமுறையாக நகரங்களில் வாழ்கிறோம். நமக்கு தலித் வெறுப்பு இருந்ததில்லை. நம்மில் 80% பேர் இதை எதிர்க்கவும் மாட்டார்கள் என்பது நிச்சயம்.
கரணம் 3: கேரளம் வழி காட்டுகிறது
கேரள மாநிலத்தில் நம்மை விட கோயில்களில் ஆச்சார அனுஷ்டானங்களை மிக தீவிரமாக கடை பிடிப்பவர்கள் அதிகம். கேரளா தேவஸ்தானம் போர்டு தலித் அர்ச்சகர்களை நியமித்து இருக்கிறது. கேரளா நம்பூதிரிகள் (பிராமணர்கள் ) எவரும் எதிர்க்க வில்லை. அது இயல்பாக நடக்கிறது.
இது ராமானுஜர் பிறந்த பூமி. ஆழ்வார்கள் / நாயன்மார்கள் அவதரித்த மண். தமிழகத்தில் தலித் அர்ச்சகர் ஏன் கூடாது.
கரணம் 4: யதார்த்த நிலை
1. இன்றைய தினம் 30 வயதுக்கு கீழ் உள்ள அர்ச்சகர் (பட்டாச்சாரியார்) மற்றும் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களின் விகிதம் சுமார் 20:80. பெரும்பாலனான கோயில்களில் அர்ச்சகர் தட்டுப்பாடு இருக்கிறது. பல இடங்களில் வயதான அர்ச்சகர்கள் தின சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் 50%கோயில்களில் அர்ச்சகர் இருப்பது சந்தேகமே.
2. நமது வேத பாட சாலைகளில் பெரும்பாலும் வட நாட்டை சேர்த்த மாணவர்கள் படிக்கிறார்கள். தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு.
3. வைதீகத்தில் இருப்பவருக்கு திருமணம் ஆவது என்பது கடந்த 5 வருடங்களில் அபுர்வ நிகழ்ச்சி ஆகிவிட்டது. இந்த நிலையில் வைதீகத்தை தொழிலாக இந்ததலைமுறை எடுக்காது.
4. வைதிகதில் இருப்பவர்கள் மிக கடுமையான / மன ரீதியில் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.
(இரண்டு வருடங்களுக்கு முன் அடித்து கொல்லப்பட்ட மணிகண்ட குருக்கள் – Ref : https://www.thenewsminute.com/…/temple-priest-bludgeoned-de…
)

சுமார் 300 கோயில்களில் உள்ள 2000 அர்ச்சகர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். சுமார் 12000 அர்ச்சகர்கள் மிக வறிய நிலை. அறநிலைய துறை கொடுப்பது மாத சம்பளம் Rs.750 லிருந்த Rs.2000 மட்டுமே. பல கோயில்கள் ஒரு விளக்கு ஏற்ற முடியாத நிலையில் இருக்கின்றன. இந்த நிலை மாற வேண்டுமானால், அனைவரையும் ஈடுபடுத்த வேண்டும்.

காரணம் 4 : ஒரு தார்மிக கேள்வி?

நமது வேதங்களை காப்பது நமது கடமையா ? இல்லையா? பிராமணர்கள் வேதம் படிக்க முன் வராத நிலையில், நமது பாரம்பரியத்தை யார் காப்பது. நம் வேதங்களையும் சாஸ்திர சம்ரதாயங்களையும் நம் தலைமுறையுடன் அழிப்பது மிக பெரும் பாவம். அது செய்து நம் முன்னோரின் சாபங்களுக்கு உள்ளாக போகிறோமா.

அல்லது

தகுதி உடைய / ஆர்வம் உடைய நபர்களுக்கு வேதத்தை கற்று கொடுத்து, சிறிய மாறுதல்களுடன் நமது சனாதன தர்மத்தை காக்க போகிறோமா ?

வேதத்தை அனைவருக்கும் கற்று கொடுப்போம். தகுதியான எவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலை உருவாக்குவோம். “அரிஜன அர்ச்சகரே வருக!!!.. பிரசாதத்தை அள்ளி தருக”

நமது வறிய நிலையில் உள்ள கோயில்களுக்கு உங்கள் பங்களிப்பை தர விருப்பமா? எங்களின் “நம்ம கோயில்” ப்ரொஜெக்ட்டில் இணையுங்கள் (Ref : http://brahminsforsociety.com/…/category/namma-koil-project/ )

x-x-x-x-x-x-x-x-x-x-x

வியூகம் மூன்று: சைவம் / அசைவம் மோதல்

சைவம் / அசைவம் என்ற பிரிவை எப்படி எதிர்கொள்ளவது?

சுமார் 150 வருடங்களுக்கு முன், தமிழகத்தில் பல சமூகத்தவர் சைவ உணவையே கொண்டவர்கள். திருவள்ளுவர் சைவ உணவு பழக்கத்தை பற்றி எழுதியதை நினைவில் கொள்ளுவோம். ஆனால் கடும் கலாச்சார தாக்குதலுக்கு உட்பட்டு, பல சமூகத்தவர் அசைவ உணவுக்கு மாறினர். சமீப காலத்தில், கடந்த 50 வருடத்தில், சைவ சித்தாந்தங்களுக்கு பெயர் பெற்ற ஒரு சமூகம் அசைவ பிரிவு / சைவ பிரிவு என பிரிந்து போனது ஒரு வருத்தமான நிகழ்வு. சமீபத்தில் கொங்கு பகுதியின் ஆராய்ச்சி கட்டுரையில், 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு கொங்கு சமூகம் எப்படி அசைவம் உண்ணும் சமூகமாக மாறியது என எழுதியிருந்தது.

திராவிட சிந்தனையாளர்களால் அசைவ உணவே தமிழர் உணவாக முன் நிறுத்த படுவது பிராமண எதிர்ப்பின் வேறு வடிவம். பலர் திருவள்ளுவர் முதல் வள்ளலார் வரை சொன்ன கருத்துக்களை வசதியாக மறந்து திராவிட சிந்தனைளையில் மயங்கி கிடக்கிறார்கள். இன்னமும் அசைவ உணவு எந்த தமிழ் குடும்ப விழாக்களில் பரிமாற படவில்லை. இன்னமும் பசு வணங்கப்படுகிறது. தமிழ் நாட்டின் மஞ்சு விரட்டு எல்லா இடங்களிலும் பாரம்பரியமான கோயில் திருவிழா என்பதை நினைவில் கொள்ளுவோம்.

சைவ உணவு சரியானதா அல்லது அசைவ உணவு சரியாய் என்ற வாதம் புதிதாக “பிராமண எதிர்ப்பாளர்களை உருவாக்குகிறது. நமது சிறு வயதில் இருந்தே நம் மீது தாக்குதல் ஆரம்பிக்கிறது. பிராமண மாணவர்கள் சாப்பாட்டில் சிக்கன் வைப்பது அனேகமாக 100% நடந்திருக்கும். நமது குழந்தைகளை இந்த நிலையை எதிர் கொள்ள நாம் நிச்சயமாக தயார் செய்ய வேண்டும். எப்போதும் அசைவ உணவு உண்பவரை பார்த்து “இது பாவம்” என்று சொல்லாதே. அது அவர் வழி; நம் வழி நமக்கு என்று சொல்லித்தர வேண்டும்.

நம்மில் பலர் பல விதமான சைவ உணவுகளை உண்பதை எதோ பாவ செயல் போல் பேசுவதை பார்க்கலாம். மோர் சாதமும், மாவடுவும் புதிய தலைமுறைக்கு பத்தாது. இத்தாலியன் பாஸ்தா, பிட்ஸா, மெர்ச்சிகன் பிரிட்டோ என உலகின் அணைத்து சைவ உணவுகளையும் ஒரு கை (வாய் ) பாருங்கள். அதே நேரம் விலங்கு களை கொன்று செய்யும் எதையும் பயன் படுத்தாதீர்கள். (மணி பர்ஸ் / பெல்ட் / ஷூ / செருப்பு / யானை தந்ததினால் செய்த பொருள்கள்) என எவற்றியும் பயன் படுத்த கூடாது என சொல்லி கொடுங்கள்.

இதற்கு ப்ராஜெக்ட் ஜப்பான் என்ற கனவு திட்டத்தை முன் மொழிகிறோம்: http://brahminsforsociety.com/…/project-japan-training-cen…/
x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

வியூகம் நான்கு :: கண்டிப்பாக செய்ய கூடாதவை

நமது சாஸ்திரம் “பிரம்ம ஹத்தி தோஷம்” என்பதை சொல்லுகிறது. எவன் ஒருவன் பிராமணர்களை துன்புறுத்துகிறானோ, அவனுக்கு வரும் தோஷம் இது. எவன் ஒருவன் பிராமண எதிரிகளை தன் செய்கையால் உருவாக்குகிறானோ, அவனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் பிடிக்கட்டும்.

கிழே கொடுக்கப்பட்ட செய்கைகள், புதிய பிராமண எதிரிகளை உருவாகும்.

1. “வீடு வாடகைக்கு – பிராமணர் மட்டும்” – என்று விளம்பரம் செய்தல்; இதை பார்க்கும் அனைவர்க்கும் வெறுப்பு வரும். ” வாடகைக்கு – சைவம் மட்டும்” என்றால் அதை புரிந்து கொள்ள முடியும்.
2. “என் நிறுவனத்தில் பிராமணர்களுக்கு மட்டும் முன் உரிமை” – இந்த செயல் நமது குலத்தையே முழுதுமாக வீழ்த்திவிடும். நம் மக்களில் பெரும்பாலோர் 90% பல சமூகத்தவர் ஆரம்பித்த தொழிலில் இருக்கிறார்கள். அவர்களை நம் எதிரிகளாக்கினால் நம்மில் 90% பேர் வேலை இழக்க நேரிரும். வெகு சிலர் செய்யும் செய்கை, நமது குலத்தையே நாசமாக காரணமாகும். “நேர்மை + திறமை” இரண்டும் உள்ளவர்களுக்கு முன் உரிமை என்று சொல் / செய். பிராமணர்கள் பெரும்பாலும் பயனடைவர்.
3. “நான் மடி – தள்ளி நில்” – புதிய பிராமண வெறுப்பாளர்களை உருவாக்கியது இந்த சொல். இந்த வார்த்தைகளை பிராமணர் அல்லாதவர் மீது பயன் படுத்தும் எவருக்கும்
தோஷம் நிச்சயம் உண்டு. (ஆச்சாரம் என்பது நேர் வழி என்று பொருள்; பத்து / எச்சல் போன்றவை சுத்தத்தின் வழிகள். அதன் பின் அறிவியல் இருக்கிறது. தினமும் குளி (திருவள்ளுவர் வாக்கும் கூட) என்பது மடி; இவை அனைத்தும் ஆரோக்கிய வாழ்க்கையின் ஆதார வழி முறைகள். உள் / வெளி பாத்திரம் என்பதன் பின்னால் ஒரு அற்புதமான கிட்சன் மேனேஜ்மென்ட் இருக்கிறது – என்பதை நமது அடுத்த தலைமுறைக்கு புரிய வைப்போம்)
4. “நம்வாளுக்கு பிசினெஸ் சரி படாது” – இவன் பிராமணர்களை வளர்வதை தடுக்கிறான். தோஷம் நிச்சயம்.

இதுவரை உள் நோக்கு பார்வை (நம் குறைகளை சரி செய்யும் விதம்) பார்த்தோம். இதையும் மீறி கண்டிப்பாக நம் மீது தாக்குதல் இருக்கும். நமது தற்காப்பு வியூகத்தை பார்ப்போம்.

வியூகம் ஐந்து : தற்காத்து கொள்வது எப்படி?

1. சினிமா : பல படங்களில் நம் சமூகம் மிக கேவலமாக சித்தரிக்க படுகிறது. நம் சமூகத்தை சேர்த்தவர்கள் / இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் அதை விளம்பரமாக பயன் படுத்துகிறார்கள். நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை நோக்கி நாம் நம் எதிர்ப்பை வைக்கிறோம். அது அவர்களுக்கு வசதியாக போய் விடுகிறது. ஒரு விஷயத்தை நாம் மறந்து விட்டோம். நடிகர் / இயக்குனரை விட முக்கியமான கதா பாத்திரம் தயாரிப்பாளர். மொத்தமாக 15-20 தயாரிப்பாளர்கள் மட்டுமே தமிழ் சினிமாவை கட்டுக்குள் வைக்கிறார்கள். அவர்களை அணுகி நம் தரப்பு நியாயத்தை சொல்லும் பொது, கண்டிப்பாக பலன் இருக்கும். அவர்கள் கிஸ்தி / இட் போன்ற சிக்கல்களில் இருப்பவர்கள். மற்றொரு சிக்கலில் மாட்ட விரும்ப மாட்டார்கள்.

2. டிவி நிகழிச்சிகளில் நம் குலத்தை மோசமாக காண்பித்தால், நாம் அணுக வேண்டியது அதன் விளம்பரதாரரை மட்டுமே. பல நிறுவனங்களில் நம்மவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் முலம் சேன்னல்களுக்கு தகுந்த செய்தியை தர முடியும். மேலும், விளம்பரதாரர் வட நாட்டு நிறுவனமாக இருந்தால், அவர்களுமு பிராமண வெறுப்பு இருக்காது. கண்டிப்பாக நம் தரப்பு நியாயத்தை புரிந்து கொள்வார்கள்.

3. பெரும்பாலும் நடிகர்களை தனிப்பட்ட முறையில், விளம்பரம் இல்லாமல், அணுகினால் அவர்கள் நம் தரப்பு நியாங்களை புரிந்து கொள்ளவே செய்வார்கள். ஒரு நகச்சுகை நடிகரை நோக்கி “ஐயா. நீங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கிறீர்கள். எங்கள் குலத்தை மட்டும் காரணமே இல்லாமல் அழ / நோக வைப்பதன் காரணம் என்ன?” என்று கேட்டால் அடுத்த படத்தில் அவர் நம்மை பற்றி மோசமாக வசனம் பேச தயங்குவார்.

இதற்கு 100 பேர் கொண்ட குழு வேண்டும். புத்திசாலித்தனமான / கொஞ்சம் செல்வாக்கு கொண்ட குழு அமைத்து செயல் பட்டால், ஒரு வருடத்தில் பெருமளவு ஊடக தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

நிதானமான / புத்திசாலிதனமான நடவடிக்கைகள் நம் குலத்தை காக்கும். வெறும் பேச்சு அல்ல; செயல் மூலமே தீர்வு வரும். இந்த தீர்வுகளை www.BrahminsForSociety.comபரிந்துரைக்கிறது / பரப்புகிறது. (நமது பிராமண சங்க நிர்வாகிகளுக்கு இந்த பதிவு சேர உதவுங்கள்)

இந்த ஐந்து வியூகங்களை சேர்ந்து ப்ராமண எதிர்ப்பை 80% குறைத்து விடும்.

x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

தமிழகமும் பிராமண வெறுப்பும் :

தமிழகத்தை பிராமண எதிர்ப்பு எப்படி பாதிக்கிறது என்று பார்ப்போம்?

திரு சிதம்பரம் மகன் திரு கார்த்தி அவர்களை பற்றி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஊழல் குற்ற சாட்டுகளை வைத்தார். அவரின் வெளி நாட்டு சொத்து மதிப்பை வெளிட்டார். கார்த்தியின் பதில் என்ன தெரியுமா. “ஆரிய நாய்களுக்கு நான் பதில் சொல்ல தேவை இல்லை”. இது தான் தமிழக அரசியல். ஒரு அருவருப்பான / நாற்றம் எடுக்கும் ஊழல் முகத்தை “சமூக நீதி / ஆரிய வாதம் / பிராமண வெறுப்பு” என்ற முகமூடியேன் கீழ் ஒளிந்து கொள்ளலாம்.

நம் நடவடிக்கைகளால் பிராமண வெறுப்பு என்பதை நாம் ஒழித்தால், தமிழகம் நிச்சயமாக ஊழல் பேர்வழிகளிடம் இருந்து காப்பாற்ற படும்.

x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

காலம் உங்கள் பங்களிப்பை கேட்கிறது : தனி ஒருவனால் செய்ய கூடியவை

1. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை (1% முதல் 10% சதம் வரை – உங்கள் நிலைமைக்கு மற்றும் மன விசாலத்துக்கு ஏற்ப) சமூக காரியங்களுக்கு ஒதுக்குங்கள். முதல் தேதி உங்கள் முதல் செலவு “மோட்ஷ” செலவாக / இறைவன் செலவாக இருக்க வேண்டும்.
2. எந்த ஒரு பிராமண இறுதி ஊர்வலமும் அனாதை போல, 4 பேருடன் செல்கிறது. திருமணத்துக்கு 2000 பேர் வரும் சமூகம், இடு காட்டுக்கு 4 பேர் வரும் சமூகமாக இருப்பது கேவலமான நிலை. எந்த மரணத்துக்கும் இறுதி வரை நடந்து சென்று இடு காட்டில் மரியாதையை செய்து “காத்திருங்கள் சொர்க்கத்தில்” என வழி அனுப்பி வையுங்கள். புண்ணிய காரியம். என்று பிராமண மரணம் 100 பேருடன் அமைதியாக ஊர்வலம் போகிறதோ, குறித்து கொள்ளுங்கள், அன்று நமது விடிவு காலம் ஆரம்பிக்கும்.
3. நமக்காக 4 இயக்கங்கள் இருக்கின்றன. (தம்பிராஸ், தம்பிராஸ் ரெஜிஸ்டெரெட், அகில பாரத பிராமணர் சங்கம் (ABBA), வேர்ல்ட் பிராமின் அச்சொசியாடின்(WBWA)). இவற்றில் உங்கள் மனதுக்கு பிடித்த ஒன்றில் இணைந்து பணியாற்றுங்கள். ஒரு வாரத்தில் 2 மணி நேரமாவது சமூக காரியங்களுக்கு கொடுங்கள். (FaceBook Twitter – சமூக காரியம் அல்ல).
குறிப்பு : BrahminsForSociety.com ஒரு Vertical இயக்கமல்ல. Horizondal இயக்கம். (connecting / working with all organizations) புதிதாக ஒரு இயக்கம் ஆரம்பிப்பதில் எந்த பயனுமில்லை என்பதால், நாம் மேற்கண்ட இயக்கங்களில் இணைந்து நமது சமூகத்திற்கான ஒரு காரியத்தை(initiative) செய்கிறோம். ABBA உடன் இணைந்து “நம்ம கோயில்” ப்ராஜெக்ட் மற்றும் WBWA இணைந்து “Entreprenior Training” ; மற்ற 2 இயக்கங்களுடன் இணைந்து செயல் பட விரும்புகிறோம் – இது நமது நிலை)
4. உங்களால் மற்றவருடன் பணியாற்றுவது முடியவில்லை எனில், உங்கள் நண்பர்களுடன் / உறவினருடன் சேர்த்து உங்கள் மனதுக்கு பிடித்த சமூக காரியத்தை செய்யுங்கள்.
5. கண்டிப்பாக உங்கள் உயிலில் சமூக காரியத்துக்கான ஒதுக்கீடு இருக்கட்டும். நரன் சேவையே நாராயணன் சேவை.
6. கண்டிப்பாக ஒட்டு போடுங்கள். உங்களுக்கு பிடித்த கட்சிக்கு ஒட்டு போடுங்கள்.

ஒரு சமூகம் – ஒரு குற்றச்சாட்டு / விமர்சனம்

நாம் போராட்டங்களை எதிர்ப்பதாகவும், மென்மையான அணுகுமுறையை வலியுறுத்துவது தவறு என்றும் தம் கருத்தை பதிவு செய்திருந்தார்கள்.
அவர்களுக்கு வந்தனம்.

தமிழ் பிராமண சமூகத்தில் ஒரு வழக்கம் பின் பற்ற பட்டு வந்தது. நமது சமூகத்தை சேர்ந்த எவரேனும் அரசனால் தண்டிக்க பட்டால் அவர் சமூக புறக்கணிப்புக்கு உள்ளவார். அவரால் தொடர்ந்து அக்கிரகாரத்தில் இருக்க முடியாது. இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பின் பின்பற்ற படும் நடை முறை. (செவி வழி செய்தி : புத்தக ஆதாரணமில்லை). இதன் விளைவாக பல தலைமுறையாக குற்ற செயல்களிலிருந்து விலகி இருக்க முடிந்தது. நாம் முழுக்க முழுக்க கோயில்களை சுற்றி இருந்தோம். மேலும் வட நாட்டை ஒப்பிடுகையில் இங்கு அந்நிய படை எடுப்பும் குறைவு. இதுவே நமது ஜீன்களில் இருக்கும் மென்மை போக்கின் காரணம். வாஞ்சி போன்றவர்கள் வித்தியாசமானவர்கள். கலெக்டர் ஆஷ் கொல்லப்பட்ட பின் போலீஸ் கைகளில் சிக்காமல் இருக்க பாரத மாதா சங்கத்தை சேர்ந்த சுமார் 8 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். நமது குலம் ஆங்கிலேயர்க்கு எதிராக போராட்ட வீரர்களை அதிகம் கொடுத்தது. ஆனால் அவர்கள் அஹிம்சை வழியை கடைபிடித்தனர். பெரும்பாலும் ஒரு மென்மை தன்மை கொண்ட சமூகம் நமது சமூகம். இந்த நிலையை வேறு ஒரு சில சமூகங்களிலும் நாம் பார்க்கலாம். (சமூகத்தின் பெயர் தவிர்க்க பட்டுள்ளது)

வடநாட்டில் இதற்கு நேர் எதிர் நிலை. முதல் சுதந்திர போரில் ஆரம்ப வித்து மங்கள் பாண்டே ஒரு பிராமணர். மேலும் தந்தியா தோபே, நானா, ஜான்சி ராணி போன்றவர்களும் பிராமணர்களே. அந்த காலத்தில் பெருமளவு வட இந்தியா பிராமணர்கள் ராணுவத்தில் பணி செய்தனர். ராஜ புத்திரர்களுக்கு இணையாக முதல் சுதந்திர போரில் பங்காற்றினார். இப்போதும் கூட, அவர்கள் போராடும் வழி முறைகளில் தீவிர தன்மை இருப்பதை காணலாம்.

நமது பதில் :

நமது இயல்பான குணத்துக்கு எதிராக செயல் பட தூண்டுவது பயனளிக்காது.
நாம் போராட்டங்களை எதிர்க்கவில்லை; போராடும் முறை சரியாக இருக்க வேண்டும் என்கிறோம்.
சுதந்திர போராட்டம் என்பது ஆங்கிலேயர்களை பற்றி அசிங்கமாக பேசுவது அல்ல.
ஆமை ஓடவும் முயல் இருந்த இடத்தில இருந்தே தப்பிக்கவும் முயற்சி செய்தால் அழிவு நிச்சயம். நம்முடைய களம் / முறை நாம் வெற்றி பெரும் வகையில் இருக்க வேண்டும். (play with our strength)
மேலும், நாம் தாக்க படும் போது, ஒரு வார காலம், FB யில் எழுதி தள்ளி பின் செயல் இல்லாமல் போவது பயன் ஒன்றுமில்லை / வீரமில்லை. நிதானமான தொடர் நடவடிக்கைகளே நமக்கு பலன் தரும்.

*** முற்றும் ***
முக்கிய குறிப்பு : தேவை இருந்ததால் இந்த பதிவில் கொஞ்சம் அரசியல் பேசும்படி ஆனது. நம் பயணம் அரசியல் தவிர்த்தே இருக்கும்.

x-x-x-x-x-x-x-x-x

மேலும் ஒரு நிமிடம் :
ஒரு சமூகமாக நமக்கு தேவைகள் என்ன?
(இவை நமது கனவுகள் மட்டுமே – நமது தேவைகளை எளிய கதைகளாகி வெளியிடுகிறோம். இதை படிப்பவர் மனதில் சத்தி இருந்தால் இவற்ற்றை உண்மையாக்கலாம்
).

1. மாணவர்கள் / தொழில் முனைவோர் / Career வழிகாட்டி – தமிழகத்தின் நன்கு நகரங்களிலும் நமக்கு நல்ல வசதியுடன் கூடிய Training Infrastructure வேண்டும். (Ref the story of project Japan : http://brahminsforsociety.com/…/project-japan-training-cen…/)
2. Brahmin’s Business Network : ஒரு கோடி முதல் 5 கோடி வரை / 6 கோடி முதல் 10 கோடி வரை / 11 கோடி முதல் 25 கோடி வரை – Business செய்யும் பிராமண தொழில் முனைவோரை மூன்று மாதத்துக்கு ஒருமுறை ஸ்டார் ஓட்டலில் மத்திய உணவுடன் கூடிய ஒரு சிறு கூட்டத்தை ஏற்பாடு செய்யும் Network. தங்களுக்கும் பிசினஸ் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள உதவும்.
3. Angel Investors : சிறு அளவில் தொழில் தொடங்க உதவும் நெட்ஒர்க். (http://brahminsforsociety.com/…/02/09/brahmin-angel-invest…/)
4. திருமண பிரச்சனைகள் : நாம் இது பற்றி அதிகம் எழுதி விட்டோம். விசிட் (How to make arraged marriages attractive – read more http://brahminsforsociety.com/ta…/category/brahmin-marriages )
5. திருமண மண்டபங்கள் : அனைத்து கோயில் நகரங்களில் மிக குறைந்த செலவில் திருமணம் நடத்தம் வகையில்.
1. Brahmins HelpDesk : http://brahminsforsociety.com/…/20…/12/03/brahmin-help-desk/
2. Priest Network : http://brahminsforsociety.com/…/…/09/brahmin-angel-investors

x-x-x-x-x-x-x-x-x-x-x-x

2 Responses to பிராமண வெறுப்பு 2017 – எதிர் கொள்ளும் வியூகங்கள்

 1. வைணவக் கோவில்களில் உற்சவங்கள் ஆண்டு முழுதும் நடக்கின்றன. பெருமாள் வீதி உலா வரும்போது, முன்புறம் ஒரு கோஷ்டி ஆழ்வார்களின் பாசுரங்களை, அதாவது பிரபந்தங்களை, சந்தத்துடன் சொல்லிக்கொண்டும், பெருமாளுக்குப்பின் இன்னொரு கோஷ்டி வேதம் சொல்லிக்கொண்டும் வரும்.

  பிரபந்தங்களை சந்தத்துடன் கற்றுக்கொள்வது எளிது. தமிழ் மீது ஆர்வம் உள்ள எவரும், சில நாட்களிலேயே ஓரளவு கற்றுக்கொள்ளலாம்.

  இப்போது, முதல்படியாக, ஆழ்வார் பாசுரங்களில் ஈடுபாடு உள்ள பிராமணர் அல்லாதவரைத் திரட்டி அவர்களுக்குப் பிரபந்தம் சொல்வதில் பயிற்சி அளித்து, அவர்களும் பிராமணர்களுடன் கைகோர்த்துக்கொண்டு பிரபந்த கோஷ்டியில் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

  இந்த ஒரு project-ஐ ஆரம்பித்து செயல்படுத்துவது எளிது.
  நமது சீர்திருத்தத்தை இவ்வாறு தொடங்கலாமே.

 2. Rajeshkumar says:

  சிறப்பான பதிவு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *