அடிமையா நீ

சிறப்பு பதிவு:

தலைப்பு : அடிமையா நீ :

நீட் எழுதும் தமிழக மாணவர்களை “நீ ராஜஸ்தானுக்கு போ; ஒட்டகத்தில் போய் தேர்வு எழுது” என்று மத்திய தேர்வு ஆணையம் கூறுகிறது.  தமிழகம் முழுதும் கண்டனம்.  5000 பேருக்கு மேல் கேரளம் செல்ல வேண்டும்.  1000 பேருக்கு மேல் ராஜஸ்தான்.

 1. மற்ற மாநில மாணவர்கள் வேறு இடங்களுக்கு சென்று தேர்வு எழுத வேண்டிய நிலை இல்லை. தமிழக மாணவர்கள் மட்டும் என் அவதி பட வேண்டும்?
 2. அட! சரி சார்!. தவறு நேர்ந்துவிட்டது! எதிர் பார்த்ததை விட அதிகம் பேர்  தேர்வுக்கு வந்தார்கள். தமிழக செண்டர்களில் இடம் இல்லை என்றே வைத்து கொள்ளுவோம்.   அடுத்த நடவடிக்கை என்ன செய்திர்கள்?  புதிய சென்டர்களை உருவாக்கினீர்களா?  IPL லுக்கு சிறப்பு ரயில் விடும் உங்களால், நீட்டுக்கு ஒரு சிறப்பு ரயில் விட முடியாதா?

இந்த கேள்விகளில் உள்ள நியாயம் எவரையும் உறுத்தும். இந்த பதிவு இவற்றை பற்றியது அல்ல.   இது போன்ற விவகாரங்களில் நம் சமூகத்தினர் ஒரு சிலர் செய்யும் தவறுகளை பற்றியது.

(இதை படித்தவுடன் உங்களுக்கு கோபம் வந்தால், தயவு செய்து எதிர் வாதங்களை பதிவிடுங்கள்.  அதை வெளியிட தயாராக இருக்கிறோம்).

மகேந்திர ஐயர் (பெயர் மற்ற பட்டுள்ளது) 70 வயது. மிக Close-upப்பில் செல்பி எடுத்து (நெற்றியில் விபூதி பட்டை) Profile Picture.   “ராஜஸ்தானுக்கு ஏன் தேர்வு எழுத போகக்கூடாது.  அமெரிக்க விசா வுக்கு ராத்திரியெல்லாம் காத்திருக்கு தயாராக இருக்கும் போது……  Etc..Etc..Etc…….என்று ஒரு பொதுவான தளத்தில் பதிவிட்டு இருந்தார்.  173 பேர் பதில் கமெண்ட் செய்திருந்தார்கள் ((நேற்றைய 6.30 மணி கணக்கு).  “பாப்பார புத்தி ….உன் பெண் ____ ஆனால் இப்படித்தான் பேசுவாயா…..2000 வருடமாக எங்களை படிக்க விடவில்லை.  2018லும் உங்கள் புத்தியை காட்டுகிறீர்களே…

அதே நேரத்தில் தமிழக ப ஜ க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மத்திய தேர்வு ஆணையத்தை  கண்டித்து பேசுகிறார்.  திரு பொன் ராதா கிருஷ்ணன் 1 சதவீத தவறு நேர்ந்து விட்டது என மன்னிப்பு கேட்கும் தொனியில் பேசுகிறார்.

பதவி / அதிகாரம் / புகழ் என  அனுபவிப்பவர்கள்,  அமைதி காக்கிறார்கள்.  ஆனால் 70 வயதான  மகேந்திர ஐயர்ருக்கு பா ஜ க எதுவும் செய்ய போவதில்லை.  ஆனால் பொது வெளியில் தானும் திட்டு வாங்கி, தன் குடுத்பத்தினருக்கும் திட்டு வாங்கி கொடுத்து, தான் பிறந்த சமூகத்துக்கும் திட்டு வாங்கி கொடுத்து உலகின் கண் முன்னே கேவலமாக தெரிகிறார்.

மகேந்திர ஐயர்ருக்கு மனசாட்சி இல்லையா.  கண்டிப்பாக இருக்கும்.  நம் மாநில குழந்தைகள் அவதி படும் போது, அது கண்டு வருத்தம் வராத அளவுக்கு மனிதாபிமானம் இல்லாதவரா என்றால்   இல்லை அவர் ஓரளவு உதவும் மனம் கொண்டவர்தான்.   தான் பொது வெளியில் திட்ட படும் போது மானம் பார்க்காத எருமை தோல் கொண்டவரா என்றால், நிச்சயமாக இல்லை.  சமூகத்தில் மரியாதைக்குரிய பதவிகளை வகித்தவர்.

70 வயதானவர்.  அனுபவஸ்தர். மதிக்க படுபவர்.  பொது நியாயம் தெரிந்தவர். ஆனால் “மோடி” என்று வைத்துவிட்டால், பலருக்கு கண்களில் கருப்பு கண்ணாடி போட்டு கொள்கிறார்கள்.

இவர்கள் நம் சமூகத்தை பெரும் வெறுப்பில் தள்ளுகிறார்கள்.

x-x-x-x-x-x-x-x-x-x-x-x

தமிழக அரசியல் விதி எண் 1:

தமிழிசை மற்றும் திரு பொன் ராதாகிருஷ்ணன் ஒரு விஷயத்தை எதிர்த்தால் அது ப ஜ க வின் நிலை. திரு ராஜா எதிர்த்தால் அது “பாப்பான்” நிலை.

தமிழக அரசியல் விதி எண் 2:

பொது வெளியில் வேறு சாதியை சேர்த்தவர் மோடியை ஆதரித்தால், அதற்கு அவர் சாதி காரணம் அல்ல.  ஐயர் என்று பெயர் வைத்து கொண்டவர் ஆதரித்தால், ‘பாப்பார புத்தி”

x-x-x-x-x-x-x-x-x

நாம் தாக்கப்படும் போது ப ஜ க என்ன நிலை எடுக்கிறது?

 1. தமிழகம் முழுதும் சங்கரசாரியார் உருவ பொம்மைகள் மிக மோசமாக நடத்தப்பட்டன. ப ஜ க வெளியிட்ட எதிர் கருத்து என்ன?  எதுவும் இல்லை.
 2. பூணல் அறுக்கப்பட்டது. ப ஜ க ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை.  (போகிற போக்கில் ஒரு வார்த்தை தமிழிசை சொன்னார்).

ஆனால் நாம் தாக்க பட்ட போது, மருத்துவர் ராமதாஸ் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்கள் நமக்கு ஆதரவாக பேசினார்.  அவர்கள் நம் நன்றிக்குரியவர்கள்.

மிக தீவிரமாக ப ஜ க வை ஆதரித்தும்,  தி மு க வை எதிர்த்தும் பேசி / எழுதி தானும் திட்டு வாங்கி, தன் குலத்தையும் அனைவராலும் திட்ட வைக்கும் புண்ணிவான்களுக்கு ஒரு கேள்வி.

அடுத்த வருடம், மோடி 250 தொகுதிகள் மட்டும் பெற்று, ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி 38 தொகுதிகள் பெற்றால், அவர்களுக்குள் கூட்டு வருமா வராதா?.   பாஜக தலைவர்கள் கோபால புறம் செல்வார்களா அல்லது மாட்டார்களா?.

இதற்கு பதில் அளிக்கும் முன் ஒரு சிறு தகவல்:  திரு H.ராஜா அவர்கள் 1989 வரை மிக தீவிரமாக இந்து முன்னணியில் பணியாற்றினார்.  மிக கடுமையாக தி மு க வை விமர்சனம் செய்தவர்.  2002 நடந்த சட்டசபை தேர்தலில் தி மு க ஆதரவுடன் போட்டியிட்டார்.  “கலைஜரின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று சொல்லி வெற்றி பெற்றார்.  இன்னமும் “முன்னாள் MLA ” என்று அவர் பெயர் முன் அடை மொழியுடன் வலம் வருகிறார்

இது தவறு என்று சொல்லவில்லை.  அரசியலில் நிரந்தர பகை இல்லை.  நட்பும் இல்லை.  என்ற அடிப்படையை புரிந்து கொள்ளுங்கள் என்று தான் சொல்லுகிறோம்.

இந்த நிலையில் “பொது நியாயத்துக்கு” எதிராக பேசி, எழுதி, தமிழ் நாட்டு மக்களின் கோபத்தை நம் குலம் மீது திருப்புவது நியாயமா என்பதுதான் கேள்வி?

காஷ்மீர் பிராமணர்கள் நிலை:

1970 முதல் 1988 வரை, காஷ்மீரில் எல்லா  தேர்தல்களிலும் காங்கிரஸ் முறை கேடு செய்தது.  அதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது.  ஆனால் காஷ்மீர் பிராமண சமூகம், மக்களுடன் இணையாமல் காங்கிரேசை ஆதரித்தது.   1989 இல், காஷ்மீர் பிராமண சமூகம் தீவிர வாதிகளால் தாக்க பட்ட போது, அவர்களை ஆதரிக்க எவரும் முன் வரவில்லை.  அவர்களின் ஓட்டை வாங்கி கொழுத்தவர்கள் வாய் திறக்கவில்லை.  இன்றைய தினம் அகதிகளாய் அழியும் நிலையில் இருக்கிறார்கள்.  (கவனிக்கவும் :  காஷ்மீர் பிராமணர்கள் நிலைக்கு மேற்சொன்னது பல காரணங்களில் ஒன்று மட்டுமே)

தன்னை சுற்றியுள்ள மக்களின் உணர்வுக்கு எதிரான நிலை எடுத்து, தான் சார்த்த சமூகத்தின் அழிவை தேடுவது அறிவீனம் மற்றும் துரோகம.

x-x-x-x-x-x-x-x-x

உன் தெருவின் நன்மைக்காக உன் விட்டு நலனை விட்டு கொடுக்காதவர்கள்,  தன் கட்சிக்காக   தன் மாநிலத்தின் நலனை எதிர்த்து பேசுவது சரியா?

x-x-x-x-x-x-x-x

தமிழ் நாட்டின் நலன் நமது நலன்.

மனிதாபிமானம் இல்லாது பேசுபவன் / எழுதுபவன் பிராமணன் மட்டுமல்ல, மனிதனே அல்ல.  ராஜஸ்தானுக்கு எக்ஸாம் எழுத செல்லும் ஒரு குழந்தையை பார்த்து பரிதாபம் வரவில்லை எனில், நீ மனிதனே அல்ல.

ஹார்ட் அட்டாக்கில் இறந்து போன தந்தையாய் பற்றி தெரியாமல் எக்ஸாம் எழுதும் 17 வயது மாணவனை பார்த்து உனக்கு வருத்தம் வரவில்லை என்றால், உனக்காக எமன் நரகத்தில் காத்திருக்கிறான் என்று புரிந்து கொள்.

பிராமணனின் அடிப்படை தகுதி மனிதாபிமானம். மற்ற உயிர் மீது கொள்ளும் பரிவு. அதை விட்டு விடாதீர்கள்.

நீ எந்த கட்சியை வேண்டுமானாலும் ஆதரி. அது உன் உரிமை.  ஆனால் நமது சமூகத்துக்கு கெட்ட பேர் வந்தாலும் சரி என்று, தன் கட்சியின் பின்னால் அலைவதற்கு நீ ஒன்றும் அடிமை இல்லை

x-x-x-x-x-x-x-x-x-x

குறிப்பு :  இந்த முறை நீட் டுக்கு வந்த எதிர்ப்பு “பிராமண எதிர்ப்பாக” மாறாது போனது.   அது ப ஜ வுக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்குமான போராட்டமாக இருந்தது.  தான் அமைதியாக இருந்ததன் முலம் திரு H.ராஜா அவர்கள் நம் குலத்தின் நன்றிக்குரியவராகிறார்.

4 Responses to அடிமையா நீ

 1. R Nagarajan says:

  I fully agree. This post has reflected my feelings on our people supporting BJP and Modi blindly. As you have written correctly what did the party do when our people were affected. Today Dinamani’s editorial quoted an instance ofcuuting brahminin boys’ sacred threads by the authorities in some NEET exam centres. No media reported. No comments from BJP office bearers.

  • அதென்ன ‘sacred thread’? அதில் சாவியைக் கோத்துக்கொள்கிறீர்கள், பல நேரங்களில் ஆணியில் மாட்டி விடுகிறீர்கள்.

   பூணூலின் ப்ரம்ம முடிச்சில் ‘bit’ வைத்திருப்பான்; வெட்டி விட்டார்கள். சட்டையை வெட்டினார்கள், முடியை வெட்டினார்கள், பட்டனைப் பிடுங்கினார்கள், அதேபோல் ‘extra’வாக இருந்த நூலை வெட்டினார்கள்.

   அந்த மாணவன் சனியன் தொலைந்தது என்று மகிழ்ச்சி அடைந்திருப்பான்.

   மறுபடியும் பூணூல் அணிய வேண்டும் என்றால், ஊரைக்கூட்டி புரொஹிதரை வரவழைத்து, ப்ரஹ்மோபதேசம் பெற வேண்டும்.

 2. Narayanan.V says:

  All along the years..everybody outside tamilnadu, were writting a test called AIPMT(all india pre medical test)
  This was conducted by the order of supreme court,not by UPA OR NDA governments.As usual in tamilnadu examction was granted as in the case of 69% this made many kalvi thanthis to earn crores of money.now that route is closed so heavy protest to neet,we have enjoyed this facility for over 16 years. Engineering should be brought under some sort of entrance test, so that only highly equiped colleges will remain,students will also benefit,A engineering graduate is avilable for a salary of 15k but a plumber charges 750/hour,where is tamilnadu is heading,going against the steam is not wrong, supporting a very wrong practice is also not good.

 3. தமிழ் நாட்டில், பி.ஜே.பி என்றாலே சில வருடங்களுக்கு முன் இருந்த ‘வடக்கத்தியான், ஹிந்தி வெறியன், பணம் கொழுத்த வியாபாரி கட்சி என்ற ஒரு இமேஜோடு, இப்போது, பார்ப்பான் கட்சி என்ற தோற்றம் உருவாகி விட்டது. அத்துடன் கூட, ராஜா, சேகர், மோடி மற்றும் பி ஜே பி துதி பாடும் இந்த மதிரி வலைத் தளங்கள், இவை சாதித்தது என்னவென்றால், பார்ப்பான், பி ஜே பி இவை இரண்டுமே தமிழர் நலன் விரோதக் கட்சிகள் என்ற எண்ணத்தை வேரூன்றச் செய்ததுதான்.

  தமிழ் நாட்டுப் பார்ப்பான் செய்த மிகப்பெரிய தவறு: மத்தியில் மோடி பதவிக்கு வந்த பின் துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பது. பிறாமணர் அல்லாத தமிழர் ஒரு சிலருக்கு பி ஜே பி மீதும் மோடி மீதும் இருந்த கொஞ்ச நஞ்ச பரிவும் மொத்தமாகத் தொலைந்து போய் விட்டதற்கு முழுக் காரணமும் தமிழ்ப் பார்ப்பனர்கள்தான்.

  இப்போது, நீட்டுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு, மற்றவர்களை மேலும் மேலும் விரோதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

  பாவம், திரு பொன். ராதாகிருஷ்ணனும் திருமதி தமிழிசையும் நம்மிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.

  இந்தியாவில் பி ஜே பி அழியப்போவது இந்துத்வ வெறியர்களாலும் அவர்களுடைய ராமர், கிருஷ்ணர், பசு, புராண, இதிஹாஸ, கலாச்சார பக்தியாலும். தமிழ் நாட்டில் அழிவதற்கு, இங்கிருக்கும் பார்ப்பனர்கள் போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *