Article from Sudeshi Magazine

ஒரு கதை ரொம்பநாளாக ஒட்டப்பட்டு கொண்டிருக்கிறது.  பிராமணன் பிரமனின் முகத்தில் இருந்து பிறந்தான்; சூத்திரன் காலில் இருந்து பிறந்தான் …..இப்படி சொல்வது இந்து மதம் (புருஷ சூத்திரத்தில் வரும் ஒரு செய்யுள்).  அந்த ஸ்லோகத்தின் பொருள் என்ன என்று சுதேசி பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையை பகிர்கிறோம்.  (நமது  குறிப்பையும்  படித்து விட வேண்டுகிறோம்)

x-x-x-x-x-x-x

பிராமணன் தலையில் பிறந்தான்; சத்திரியன் தோளில் பிறந்தான்; வைஷியன் தொடையில் பிறந்தான்; சூத்திரன் பாதத்தில் பிறந்தான்! -இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர்

உண்மை என்ன?

உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது. சமஸ்கிருதம் தெரியாமலேயே நீங்கள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் புகட்டிவிடும் போது. சமஸ்கிருதம் அறிந்து அடியேனால் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லிவிட முடியும்.

புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்

‘‘பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:

ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,

பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” (ரிக் வேதம் 10-90-12)

ஸ்லோகத்தின் பொருள்

வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை புகட்டுபவன் பிராமணன், அப்பேர்பட்டவன் முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருத்தல் வேண்டும்.

இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்திரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் அவனால் போர்களையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும்.

வைஷியனானவன் பொருளை ஈட்டும் போது பிறர் வயிற்றிர்க்கு வஞ்சனை அளிக்காமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல தீர்க்கமாக வலிமையான துடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும்.

சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும். மேலும் பல தொழிலில் சிறக்க அவனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும்.

இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?

மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது? வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்.

பிறப்பால் வர்ணங்கள் இல்லை – மனு தர்மம்:

பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம்,

“ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே”

அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே, தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்). இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.

இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:

ஜன்மனா – பிறப்பால்; ஜாயதே – பிறந்த அனைவரும்; சூத்ர – சூத்திரரே; கர்மணா – தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ – இருபிறப்பாளனாக; ஜாயதே – பிறப்பாளன் ஆகிறான்.

 

திரு.லி.முனீஸ்வர சாஸ்திரிகள்

ஸத் வித்யா ஸ்தானம் டிரஸ்ட்

வேளச்சேரி சென்னை.

9382679290

-x-x-x-x-x-x-x

பின் குறிப்பு -1:

இந்து மதத்தின் கருத்துக்கள் வேதங்கள், உபநிஷகள், இதிகாசங்கள், புராணங்கள், சூத்திரங்கள், சாகைகள் மற்றும் பல முனிவர்கள் / ஆச்சாரியர்கள் எழுதிய புத்தகங்கள் / விளக்க உரைகள் என சமஸ்கரத்திலும், ஏனைய இந்திய மொழியிலும் பறந்து விரித்து இருக்கின்றன.  தொகுத்தால் 50 லக்ஷம் செயுளுக்கு / ஸ்லோகங்களுக்கு மேல் வரலாம்.

இதில் உலகம் வியக்கும் கருத்துக்கள் இருக்கின்றன.  சிலவற்றை காலத்துக்கு ஏற்றவையாக இல்லை என நீங்கள் (எவரும்) நினைக்கலாம். “காலத்துக்கு தகுந்த அளவில் சாஸ்திரங்கள் மாறுகின்றன” என்பதே சாஸ்திரம் சொல்லுகிறது.

எதாவது ஒரு செயுளை எடுத்து கொண்டு “குயோ முயோ” என்பவர்களுக்கு புரிய போவதில்லை.  தமிழகத்தின் / இந்தியாவின் / இந்து மதத்தின் சில குறைகளுக்கு எவர் காரணமோ அவரே அதன் பெருமைகளுக்கு காரணம்.   நமது நிறைகளுக்கு நான் கரணம்; குறைகளுக்கு பார்ப்பான் காரணம் என்று சொல்வது எந்த விதத்தில் “அறிவு  நியாயம்” என்று தெரியவில்லை.  (You cannot catch one neck for mistakes and crown another head for success of any project – Principle of Project management and decision making).

நம்முடைய பெருமைக்கும், தவறுகளுக்கும் நாம் அனைவரும் (அதாவது, நம் அனைவரின் முன்னோர்கள்) காரணம்.  காலத்துக்கு ஏற்ப நியாயமான வாதங்களை ஏற்று, நாம் அடுத்த கட்டத்துக்கு நமது சமூகத்தை எடுத்து செல்வோம் என்பதே சரியான  வாதமாக இருக்க வேண்டும்.

-x-x-x-x-x

பின் குறிப்பு -2:

நாட்டார் தெய்வங்களை பிராமணர்கள்  வணங்குவதில்லை என்று ஒரு கதை பல நாட்களாக ஒட்டி கொண்டிருக்கிறார்கள்.   கிராம தேவதை வணக்கம் என்பது அந்த கிராமத்தின் வழக்கம்.  அந்த கிராமத்தில் குடியிருப்போரின் வழக்கம்.  அவ்வளவே.  பல குடும்பங்களின் குல தெய்வம் கிராம தேவதையாக இருப்பது நமக்கு தெரியும்.  கடந்த 100 ஆண்டுகளில் பிராமணர்கள் கிராமத்தை விட்டு வெளியேறி விட்டதால், (தமிழ் நாட்டில் 95% கிராமங்களில் பிராமணர் எவரும் இல்லை), அந்த பழக்கம் நம்மிடையே குறைவு.  அனாலும் இன்னும் சில பேர் நாட்டார் தெய்வங்களை வணங்கவே செய்கிறார்கள்.  இந்த கட்டுரையின் ஆசிரியர் பெயரை கவனியுங்கள். அது புரியும்.

கிடா வெட்டி பொங்கல் வைக்கும் ஒரு குடும்பம், புரட்டாசியில் கவிச்சு தவிர்த்து பெருமாளுக்கு விரதம் இருக்கிறது. இரண்டில் எது அந்த குடும்பத்தின் அடையாளம் என்று கேட்டால் இரண்டுமே தான். இது நமது பன்முக தன்மை. நமக்கு குழப்பமில்லை. பலருக்கு இது புரிவதில்லை. புரிய போவதும் இல்லை.

x-x-x-x-x-x

பின் குறிப்பு -3:

சுதேசி பத்திரிகை பல நேரங்களில் இந்து மதம் சார்ந்த தாக்குதல்களுக்கு பதில் அளிக்கிறது.  வாழ்த்துக்கள்

Visit : www.sudeshi.com

குறிப்பு : இந்த போஸ்ட் Face Book  இல் வெளியிட்டோம். பலர் தங்கள் குல தெய்வங்களின் பெயர்களை பதிவு செய்தார்கள். நமது குடும்ப பழக்கங்களை விடாது அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்லுங்கள்

 

Regards
Admin.
Brahminsforsociety.com

Join BFS (Brahmins For Society) us :

Via fb group :  https://www.facebook.com/groups/brahminsforsociety/

Via email group : http://brahminsforsociety.com/tamil/join-us/

 

 

 

 

One Response to Article from Sudeshi Magazine

  1. Purushothaman says:

    A Message at the site says that ” the site has been suspended” when I visited http://www.sudeshi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *