Business Book Review – பிஸினஸ் சைக்காலஜி – சதிஷ் கிருஷ்ணமூர்த்தி
நீங்க இளிச்சவாயனா சார்?
உங்கள முகத்தைக் கண்ணாடியில் பார்த்திருக்கிறீர்களா?
உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால் பல சமயங்களில் பலர் முகத்தில் இளிச்சவாயன் என்று எழுதியிருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு!
அது எப்படி சார்? ஏழு கோடி தமிழர்களை விட்டுவிட்டு படவட்டம்மன் கோயில் பாலூற்றும் விழாமுதல் பள்ளிக் கூடக் கட்டட நிதிவரை கரெக்ட்டாய் நம்மைத் தேர்ந்தெடுத்து டொனே~ன் வாங்கிச் செல்கிறார்கள்: ஊரில் எத்தனையோ பேர் குடியிருக்க நம்மைக் கண்டுபிடித்தக் கடன் வாங்கி எஸ்கேப் ஆகிறார்கள், தெருவில் பல பேர் குடியிருக்க நம்மை அசோசியே~ன் செக்ரட்டரி ஆக்கி, இருக்கும் வேலை பத்தாது என்று தெரு வேலை முழுவதையும் நம் தலையில் கட்டுகிறார்கள். ரோட்டில் எத்தனையோ பேர் நடக்க நம்மிடம் மட்டும்வந்து பர்ஸைத் தொலைச்சிட்டேன், ஊர் போக பஸ்ஸ{க்கு பணம் இல்ல, உதவி பண்ணுங்க ப்ளீஸ் என்று கேட்டு நம் பர்ஸைக் காலியாக்கி நாம் வீட்டுக்குச் செல்ல மற்றவரிடம்………. சிக்கியிருக்கான். இவனை அடிச்சு மீன் பாடி வண்டியில போட்டு மூத்திரசந்துக்கு அனுப்பலாம் என்று தோன்றுகிறதா?
கேட்டதைக் கேள்வி கேட்காமல் கொடுக்கிறோம், ஏன்? சொன்னதைச் சொன்னபடி செய்கிறோம், எதனால்? வந்தவரிடம் கூசாமல் குனிகிறோம் எதற்கு? வடிகட்டிய கேனையாய் இருக்கிறோம் எப்படி?
இதற்கு சைக்காலஜியில் விடை இருக்கிறது. நம் எண்ணங்களின், செயல்பாடுகளின் உண்மையை உணர்ந்த உளவியல் உதவி செய்கிறது. அந்த விடைகளில் சிலதை அறிமுகப்படுத்தவே இப்புத்தகம், நம்மை நாம் கொஞ்சமாவது அறிந்து கொள்ளவே இத்தொகுப்பு, அப்படி அறிமுகமாகி, அறிந்துகொள்ளும் வி~யங்களை பிசினஸில் பயன்படுத்திப் பயன்பெறவே இம்முயற்சி.
முதலிலேயே ஒன்றைத் தெளிவாக்கிவிடுகிறேன். நான் சைக்காலஜிஸ்ட் அல்ல: நன்கு ஒரு மார்க்கெட்டிங் ஆலோசகன். மார்க்கெட்டிங்கை, பிராண்டை, விற்பனையை நேர்படுத்தி, வளர்க்க உதவுவது என் பணி அவ்வகையில் சிறு தொழில் முதல் மீடியம் சைஸ் பிசினஸ் வரை ஓரளவு பரிச்சயமுண்டு, நிர்வாகவியல் படித்த காலம் முதல் சைக்காலஜி மீது கொஞ்சம் நாட்டம் உண்டு. புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகள் படித்தேன். படித்துக் கொண்டியிருக்கிறேன். படித்த வி~யங்களைத் தொழிலில், கம்பெனியில், பணியாளர்களிடம் வாடிக்கையாளர்களிடம் பார்க்கிறேன், பார்த்துக் கொண்டிருக்கிறேன். படித்த, பார்த்த, புரிந்து கொண்ட வி~யங்களை தொகுப்பு இப்புத்தகம்.
இப்புத்தகத்தில் நான் எழுதியிருக்கும் வி~யங்களை என்னுடைய கண்டுபிடிப்புகள் அல்ல. கோடிட்டுக் காட்டியிருக்கும் ஆய்வுகள் விளக்கியிருக்கும் கோட்பாடுகள் எல்லாம் தேர்ந்த சைக்காலஜிஸ்ட்கள் சொன்னவை, செய்தவை, சேர்ந்தவை, சாதித்தவை.
உங்களைப் போல் ஒரு வாசகனாய்த்தான் அவர்கள் ஆய்வை, எழுத்தை, சாதனைகளைப் படித்தேன். அதை உங்கள், என் நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். நம் தொழிலோடு, பிசினஸோடு, கம்பெனியோடு, கடையோடு சேர்த்து யோசித்தேன். அதன் விளைவுதான் நீங்கள் இந்தப் புத்தகத்தில் படிக்கப்போவது.
நீங்கள் பிசினஸ் செய்வது மனிதர்களுடன் என்ற பட்சத்தில், தொழில் செய்வது மனிதர்களுக்கு என்ற விலாசத்தில் அவர்களுக்கு மனம் என்று ஒன்று இருந்தே தீரும். அந்த மனம் அவர்களை வழிநடத்தும் விதத்தை, செயல்படுத்தும் முறையை, வாங்கத் தூண்டும் உணர்வை அறிய இப்புத்தகம் ஒரளவாவது உதவும்.
இப்புத்தகத்தில் உள்ளவை “தி இந்து” (தமிழ்) பத்திரிகையில் தொழில் ரகசியம் என்ற என் வாராந்திர ஊழடரஅn-ல் நான் எழுதிய கட்டுரைகள். அப்பகுதியில் பிசினஸ், மார்க்கெட்டிங், நிர்வாகவியல் என்று பல துறைகள்பற்றி எழுதினேன். சைக்காலஜி பற்றியும் அது நம்மை. நம் எண்ணங்களை, மனதை, நம் தொழிலை, பிராண்டை பாதிக்கும் விதங்களைப் பற்றியும் பல கட்டுரைகள் எழுதினேன்.
அவை நன்றாக இருந்தன, பிடித்திருந்தது, உபயோகமாய் இருந்தது என்று பல நல்ல இதயங்கள் நேரில் கூறினார்கள், ஃபோனில் பேசினார்கள். மெயிலில் எழுதினார்கள். தங்கள் மனதிற்குள்ளும் சொல்லிக் கொண்டார்கள்!
அந்தப் பாராட்டு தந்த தைரியத்தில் அக்கட்டுரைகளை இன்னமும் விரிவாக்கி, மேலும் விளக்கங்கள் சேர்ந்து, அதிக வி~யங்கள் கூட்டி, புதிய உதாரணங்களுடன் பெரியதாக்கினேன், விரிவாக்கியது புத்தகமாய் உருவெடுத்தது.
பூர்வ ஜென்மத்தில் எதனாலோ எனக்குக் கடன்பட்ட பாவத்துக்கு நான் எழுதுவதை எல்லாம் வெளியிடும் கிழக்கு பதிப்பகத்துக்கு அனுப்பினேன். புதிப்பாசிரியர் நண்பர் பத்ரி சே~hத்ரி ஆர்வத்துடன் பிரசுரித்திருக்கிறார்.
எத்தனையோ புத்தகங்கள் இருக்க, இதை நீங்கள் கையில் எடுத்திருக்கிறீர்கள், உங்கள் முகத்தில்…
வேண்டாம், நான் ஏதாவது சொல்லப்போய் இப்புத்தகத்தைக் கீழே வைத்துவிடுவீர்கள், அப்படி செய்யாமல் வாங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
நண்பன்
சதிஷ் கிருஷ்ணமூர்த்தி
புத்தகத்தின் பெயர்: பிஸினஸ் சைக்காலஜி
ஆசிரியர்: சதிஷ் கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு பதிப்பகம்
117, First Floor, Ambal’s Building, Lloyds Road, Chennai 600 014.
phone : 91-44-4200-9603.
I want this book
Address is given at the end. Please call them and get the book.