Project Japan – Training Center

japan1

ராமநாதனை சத்ய நாராயாணா கோயில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். மஞ்சளாக ஸ்ரீசூரணம் மற்றும் நாமம்;  47 வயது;  முணுமுணுயென காயத்திரி;   (வேறு எதுவும் தெரியாது! 6-ம் வகுப்பில் போட்டிக்காக 10 பாட்டுக்கள் திருப்பாவை  மனனம் செய்தது. கொஞ்சம் அரை குரையாக ஞபகம்)  பெருமாளை சேவிப்பார்.  பிரசாதம் வாங்குவார்.   அலுவலகம் செல்வார்.  வீடு திரும்புவார். சுலபமான மனிதர்.

ராமநாதன் 10 வருடத்துக்கு முன் இப்படி இல்லை.  புகை, தண்ணி என்று இருந்தார்.   39 ல் பாழா ய்போன இருதயம் ஒரு வினாடி நின்று இயங்கியது.  ஒரு அதிர்ச்சியில்,  மயக்கத்தில்,  எமன் பாச கயிற்றை வீச, JUST Miss;  டாக்டர்களின் சாகசத்தில், எந்திரங்களின் விடாத கண்காணிப்பில், தப்பித்துக் கொண்டார்.  புகை பகை என விட்டார்.

ஒரு நாள் ஏதேச்சயாக மஞ்சள் ஸ்ரீசுரணத்துடன் அலுவலகம் சென்று விட்டார். பார்பவர்கள் மரியாதையாக பார்பது போல இருந்தது. கண்ணாடியில் ஆன்மீக களை சொட்டியதாக நம்பினார். 40 களில் அவசியமான அடையாளம் தேவைப்பட்டது.  ராமநாதன் தன் அடையாளத்தை சுகமாக சுமையாக தாங்கி கொண்டார். ஆன்மீக அடையாளம் பொருத்திப்  போனது!

நாமதாதனுக்கு படிக்கும் பழக்கம் அதிகம் இல்லை. கொஞ்சம் மகாபாரதம் கொஞ்சம் ராமாயணம் தெரியும்.

சோ’ வின்  “எங்கே பிராமணன்” ஜெ டீவியில் பார்த்து அதைப்பற்றி லஞ்ச் டயத்தில் பேசுவார். அட! கொஞ்சம் பேர் ஆர்வமாய் கேட்பார்கள்.

சமஸ்கிரத பாரதியில் சேர்ந்து படிக்க வேண்டும். பிரபந்தம் படிக்க வேண்டும் என 6 மாதத்துக்கு ஒரு முறை நினைத்துக் கொள்வார்.

ஒருமுறை “வேதங்கள் ஒரு அறிமுகம்” என்ற புத்தகத்தை மாம்பலம் ஸ்டேஷன் ரோடில் பழைய புத்தக கடையில் பார்த்தார்.  200 பக்க புத்தகம்.  சல்லிசாக கிடைத்தது.  கொஞ்சம் கொஞ்சமாக படித்தார். 4 வேதங்களை பற்றி / அறிமுகமாக அந்த புத்தகம் பேசியது.     ராமநாதன் தனக்கு 4 வேதங்களை பற்றி தெரியும் என நம்பினார்.  சந்தோஷமாக இருந்தது.

ராமநாதன் ஆன்மீகத்தில் தனக்கு  ஞானம் இருப்பதாக தனக்கு தானே நம்பினார். “எல்லாம் அவன் நடத்துறான்;   நாம நடக்கிறோம். அவ்வளவு தான்” என்று அடிக்கடி சொல்லுவார்.   இது அவருக்கு தெரிந்த  வேதாந்த கருத்து என்று நம்பினார்.

மகன் கோபி படுசுட்டி.

“ஏன்பா! “ஏன் மந்திரங்கள் புரியும்படி இல்லை: இந்த மந்திரத்தின் அர்த்தம் என்ன?  அர்த்தம் தெரியாமல் சொன்னால் ஏதாவது பயன் இருக்குமா?”

“துரோணர் விரலை கேட்டதுக்கு காரணம் அவன் கீழ்சாதி என்பதால்தானே?”

“முட்டையில் ப்ரோட்டீன் இருக்கு.  அதை சாப்பிட்டால் தப்பா?”

“எதுக்கு வெஜிடேரியானக   இருக்கனும்?”

“ராமாயணம் நிஜமாகவே நடந்ததா?”

நாமதாதனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. நமது பாரம்பரியத்தை புதிய தலைமுறைக்கு எடுத்து சொல்லும் சக்தி அவருக்கு இல்லை.  அவருக்கு என்ன சொல்லுவது என்றும் தெரியவில்லை. அவரின் பதில் சொதப்பலாக இருப்பது அவருக்கே தெரிந்தது.

பையனை நினைத்து கவலையாக இருந்தது. பையனை உற்று கவனித்தார். கோயிலுக்கு போவதில்லை/ வருவதில்லை. ஸ்ரீசூரணம் இட் டால் 30 நிமிடத்தில் அழிந்து விடுகிறது. ராமநாதன் பயந்தார். 8 ம் வகுப்பு படிக்கும் பையனை நல்வழிபடுத்த  நம் கலாசார நம்பிக்கைகளை பற்றி சொல்லி கொடுக்கும் வழியறியாது திகைத்தார்.

அப்போது தான் “Project Japan” பற்றி கேள்விப்பட்டார். பணம் கட்டினார்.  மகனை கொஞ்சம் பலவந்தபடுத்தி சேர்த்தார். மூன்று நாட்கள் தங்கியிருக்க வேண்டும். குட்டி குருகுலம் ஒரு பள்ளி  வளாகத்தில் 100 மாணவர்களுடன் துவங்கியது.

“Project Japan” மிகுந்த யோசனையுடன்/ஆழ்ந்த அறிவுடன் பலதுறை வல்லுனர்களால் டிசைன் செய்யப்பட்டுருந்தது. ஜப்பானியர்கள் தங்கள் மொழி, கலாச்சாரம் மீது பெருமதிப்பு வைத்திருப்பார்கள். அதே நேரம் தொழில் நுட்பம் மற்றும் வணிகத்திலும் தலை சிறந்து இருப்பார்கள். ஆழ்ந்த வேர்களுடன் இருக்கும் வானுயர்ந்த மரம் போல – நம் மாணவர்களை ஜப்பானியர்கள்  போல  தயார் செய்யதே –   Project Japan.

அதிகாலை பயற்சி முகாம் அதிரடியாக ஆரம்பித்தது.

உங்களுக்கு சக்தி அதன் மூலம் வருகிறது? என்று கேட்கபட்டது.

மாணவர்கள் கோரசாக உணவின் மூலம் என பதிலலித்தார்கள்.

அனைவரும் மூச்சை பிடித்துக் கொள்ளுங்கள் – ஆணை.

ஒரு நிமிடத்தில் தடுமாறினார்கள்.

உங்களுக்கு சக்தி எதன் மூலம் வருகிறது” – மீண்டும் அதே கேள்வி கேட்கப்பட்டது.

இப்போது மாணவர்கள் “காற்று” என்றனர்.

ஒரு சிறிய குறும்படம் ஓடியது. நீண்ட நாட்கள் சூரிய வெளிபடாமல் இருப்பரின் உடல் மாற்றங்கள் காண்பிக்கப்பட்டன.

“உங்களுக்கு சக்தி எதன் மூலம் வருகிறது – மீண்டும் அதே கேள்வி. இப்போது பலர் “சூரிய ஒளியும்”  நமக்கு சக்தியை கொடுக்கிறது என்றனர்.

காற்று –  உணவு – சூரியன் என உணர்ந்தனர்.

காற்றை அதிகம் எடுத்துக்கொள்: உணவை தேவையான அளவு எடுத்துக் கொள். சூரிய சக்தியை சரியான நேரத்தில் (அந்தி வேலையில்) எடுத்துக் கொள் என விரிவான எடுத்துரைக்கப்படுகிறது.

இறதியில் சந்தியாவதனம் வேறு கோணத்தில் விளக்கப்பட்டது.

சந்தியாவதனம்,  இப்போது அனைவருக்கும் புரிந்தது. சிறிய மாற்றங்களுடன் உடல் மற்றும் மனதை ஊக்குவிக்கும் சக்தியாக “சந்தியாவத்தம்” புரிந்து கொள்ளப்பட்டது.

அடுத்து விளையாட்டு.  ஒருவர் தோற்றாலும் குழுவே தோற்றுவிடும்.  வேண்டும் அனைவருக்கும் தோல்வி  அல்லது அனைவருக்கும் வெற்றி. “Do not Compete  each other;  Just collaborate”  என மாணவர்கள் மனதில் பதித்தார்கள்.

காலை  உணவுக்கு பிறகு பாட்ஷா  படம் காட்டப்பட்டது.  “ரா…ரா… ராமையா…. பாடல். அனைவரும் பாடலுக்கு நடனம் ஆட வேண்டும். இரண்டாவது முறை பாடலை கேட்டு குறிப்பு  எடுக்க வேண்டும்.  மூன்றாவது முறை குறிப்பை சரி பார்க்க வேண்டும் என்றார் ஆசிரியர். மாணவர்கள்  ஆனந்தமாய் கூத்தாடினார்கள்;  குறிப்பு எடுத்தார்கள்.

அர்த்தம் புரிந்து  “எட்டுக்குள்ளே வாழ்க்கை” என எல்லா எட்டு வயது பருவத்தை பற்றியும் எழுதினார்கள். அந்த பாடல் வரிகள் கருத்துள்ளவை  என்றும் வியந்தார்கள்.

அடுத்தது 2 நிமிடம் கண்ணை மூடி மௌன நேரம்.

பின் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் என்ற அறிமுகத்துடன் ஆழ்ந்த நிசப்பத்தினிடையே ஒரு சமஸ்கிரத ஸ்லோகன் ஒலிபரப்பட்டது.

அதன் தமிழ் அர்தம் விறிந்தது.

“முதல் எட்டில்.. இரண்டாம் எட்டில்.. மூன்றாம் எட்டில்..

 

இந்த சமஸ்கிரத ஸ்லோகத்தையே நீங்கள் பாட்ஷா படத்தில் கேட்டீர்கள் என்று உரை முடிந்தது. மாணவர்கள் ஒரு கணம் திகைத்து போனார்கள்.

 

மாற்றத்தின் துவக்கம்;….

பல்வேறு விளையாட்டுகள்ஃ விவாதங்கள் எளிய செயல்முறை விளக்கங்கள்.

கொடுரமாக நடத்தப்படும் விலங்குகளை பற்றிய காட்சி; அசைவம் உண்ணாதவர்களை பற்றி திருவள்ளுவர் சொன்ன குரள்;  அதே நேரத்தில் அசைவம் உண்பவரிடம் அது தவறு என்று ஏன் சொல்லக் கூடாது என்ற விளக்கம்; Belt, Money Purse or Silk dress  பயன்படுத்த மாட்டோம் என உறுதி எடுத்துக் கொண்டார்கள்.

“ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் பேசு” என்ற போட்டி

“பேச்சு கலையை வளர்த்துக்  கொள்ள வேண்டியதின் அவசியம்”

என விளையாடும் / சுவாரசியமாக பயிற்சி நடந்தது.

 

மறுநாள்.

மகாபாரதம் எத்தனை ஸ்லோகங்கள் ? சுமார் 95000.   தலைமுறை தலைமுறையாய் மனனம் செய்தே அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றார்கள். எப்படி அவர்களால் அனைத்தையும் சுலபமாக மனப்பாடம் செய்ய முடிந்தது ?

“பிரம்மி மூலிகையின் மகத்துவம் மற்றும் மூச்சு பயிற்சி சூரிய நமஸ்கரம்”

 

மூன்றாம் நாள் :

“I love to Earn Money”

“பணம்! அதிகம் சம்பாதி, அதிகம் கொடு என்ற தலைப்பில் ரூ.500 பெருமானமுள்ள Stationary  பொருள்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டன. அவற்றை ரூ.100 லாபம் வைத்து விற்க வேண்டும். முன்பின் தெரியாதவர்களிடம் மட்டுமே விற்க வேண்டும் என்பதே விதிமுறை எவர் உதவியும் பெறக்கூடாது.

கோபிநாத் தெருவில் நின்று பொருள்கள் விற்கமுன் மொத்தம் 125 ரூபாய் இலாபம்.

“இதுவே உங்களின் முதல் சம்பளம், முதல் இலாபம் இதை நீங்கள் செலவழிக்கலாம். உங்களுக்காகவோ, உங்களுக்கு தெரிந்தவர்களுக்காகவோ செலவழிக்க கூடாது. ஆனால் உங்களுக்கு அது மகிழ்ச்சியை தர வேண்டும்.

கோபிநாத் யோசித்தான், வெய்யிலிலும், புழுதியிலும் சென்னை தெருவில் நின்று கொண்டு விற்றதால் வந்த காசு.

பெரிய Size  சாக்லேட் வாங்கினான். சாலையில் குப்பை பெறுக்கி கொண்டிருந்த இரண்டு சிறுவர்களுக்கு கொடுத்தான். அவர்கள் முதலில் தயங்கி, பின் வாங்கி, பின் பிரித்து/ பின் சுவைக்கும் போது,  10ம் வகுப்பு படிக்கும் கோபிநாத் சாக்லேட்டின் சுவையை தன் நாலில் உணர்ந்தான். ஏதோ ஒரு மகிழ்வுணர்வு நெஞ்சில் பொங்கியது.

கோபிநாத்  முழுதாய் மாறிப்போனான்.  ராமநாதனுக்கு இப்போது தன் மகன் சமூகத்துக்கு பயனுள்ள மனிதனாக மாறுவான் என்று நம்பிக்கை வந்தது.

 

இது கனவு மட்டுமே.  கனவுகளை விதைக்கிறோம்.  கனவு மெய்ப்பட பிரதிக்கிறோம்

Face Book Introduction:  We are publishing “Needs / Dreams”  of Our community.   We request all the parents to read this and it address one of the important needs for our next generation.

 

 

21 Responses to Project Japan – Training Center

 1. P.Balasubramanian says:

  Let it be a good beginning.Best Wishes.

 2. Raghavan says:

  Good Msg

 3. Pichamani Kumar says:

  let us initiate goodness to our next generation.

 4. L.Nagarajan says:

  Realy a welcome move.Keep going.

 5. usharani says:

  Super

 6. muthuraman.r says:

  viraivil kanavu meipadum. project japan pondra ondrai admin anumathi udan namathu pakuthikalil nadatha virumbukirom

 7. Jayanthi says:

  Sir எ பேரனுக்கு எல்லாத்தையும் எடுத்து சொல்லணும்னு தோணறது. அவனுக்கு வயசு 3

 8. Alamelu says:

  Wonderful concept to transform our children, without rejection from them, and making them to transform themselves.. It will have a great impact and make them respect the old values which r neglected.. Do they conduct such classes, if so where and whom to contact.pl…

 9. Ravisankar says:

  எனது பையன் (தற்போது வயது 29 ),டீன் ஏஜாக இருக்கும்போது இந்த ட்ரைனிங் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ற எனது ஏக்கம் தீராது .பெரு மூச்சு விடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாத நிலைமை ..

 10. Sai Manikandan says:

  Dear sir,

  Pranaams.

  I am Manikandan from Coimbatore. I am not belongs in brahmin community.

  May you accept my boy to participate in this project.

  With warm wishes.

  Manikandan

 11. vanaja sundararajan says:

  impressed

 12. Fantastic! There MUST be a Japan centre in every town, big panchayats, kshetrams and district.They did a similar thing in South Korea and now see where they are, challen ging Japan! All the best for All, Always, Prasanna, Founder- Intellectuals for India, Green INDIA.

 13. Kannan says:

  Iam Kannan.. MD Of. BEST. T.( TRAINING & PLACEMENT) Company in Tirunelveli Kanyakumari & Salem. Can you suggest how to implement this project along with you for the benefit to all. Pls inform by mail or Ism anticipating for your call. Kannan.p.v. (Best T. Nellai.) bestinfojobs@gmail.com. 9791695916/9894095916.

 14. Nagarajan C says:

  Impressive.
  It is high time we endeavor to change the westernized mindset if the new generation for a better society with good life principles and values.
  Every town, village should have such a centre.
  Once started all schools too will follow.

 15. H Sundararaman says:

  Like to join your Project Japan Pl inform about the possibilities I am aged 66 & retired
  Brahmin , physically fit

 16. H SUNDARARAMAN says:

  Received your mail. Not answered my query. I like to join your project to help others , as a volunteer. Is it possible?

  • Rangarajan Madanagopalan says:

   Being in Canada, I hear from a friend who worked in Japan and who is now working here that if only we, from India, know their language, they’d treat us like gods! Their respect for elders, industriouness, the spirit of zen-Buddhism etc can well be emulated by us. Kudos to your Japan Project!

   • admin says:

    Sir the project is only on wishful thinking. Yet to be realized. Once it comes to reality we will keep you posted.

 17. RAMGOPAL says:

  Wonder full initiative, need of the hour, we are involved in similar initiative of identifying the natural talent through our Indic methodology and provide solutions to students from age of 9 to 22.

  Like to implement project Japan to our community at Cbe, please let me know the modalities to kick start this initiative.

 18. Sukumaran Iyer.k. says:

  Very good.. please try to implement in word and spirit in all towns. I am a retired bank manager from Hosur. Should there be any opening here, I volunteer myself…please initiate.

  • P Veeraraghavan says:

   Very good project and need of the hour for today’s young generation. Wishing all the best and also wish to be a part of this project, if required. Once again wishing the project a big Success.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *