புரோகிதர் வழக்கை

 

Corporate Iyer

மேற்கண்ட இந்த படத்தை நமது BraminsForSociety.Com Face Book Groupல் பதிவிட்டிருந்தோம். கடும் வாத பிரதி வாதங்கள் நடந்தன.  அதை அடுத்து …..

நேற்றைய பதிவுக்கு எதிர் வினைகள் பல. பெரும்போலோனோர் நமது வாதத்தை ஏற்று இருந்தார்கள். அதில் பலர் வருத்தப்பட்டும் இருந்தார்கள்.
Let’s see FACT SHEET :
1. சமீபத்தில் வைதீகத்தில் இருப்பவரின் திருமணத்திற்கு சென்று இருக்கிறீர்களா? நீங்கள் அதிர்டசாலி. மிக அப்பூர்வ நிகழ்வாக அகி கொண்டிருக்கிறது.
2. வைதிக குடும்பத்தில் வளரும் பெண் இன்று பட்ட படிப்பு படிக்கிறார்கள். அவர்கள் வைதீகத்தில் உள்ளவரை திருமணம் செய்து கொள்ள முன்வருவதில்லை. மற்ற பெண்களை பற்றி சொல்ல தேவை இல்லை.
3. திருமணத்திற்கு முக்கியமான தடை, OUTLOOK. (உடை & தோற்றம்)
4. தமிழக வேத பாட சாலைகளில், மாணவர் எண்ணிக்கை மிக மிக குறைந்து விட்டது. வெளி மாநிலத்தை சேர்த்தவர்கள் இங்கு வந்து வேதம் படிக்கும் நிலை உள்ளது.
நம் கண்ணெதிரே ஒரு பாரம்பரியம் அழிந்து கொண்டிருக்கிறது. நாம் வேடிக்கை பார்க்க போகிறோமா? அல்லது மாறுதல்களை ஏற்று அடுத்த கட்டத்துக்கு நகர போகிறோமா? என்பதே கேள்வி.
இதற்கான தீர்வாக கார்பொரேட் ஐயர் என்ற கனவு ப்ரொஜெக்ட்டை கொடுத்திருந்தோம். பலர் அதை படிக்காமலே விமர்சனம் செய்தார்கள். உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். ஆனால் முழுவதும் புரிந்து கொண்டு விமர்சனம் செய்யுங்கள்.

HATE CRIMES : இரண்டு வருடத்துக்கு முந்தைய நிகழ்வு.
மணிகண்ட குருக்கள், வயது 30, திருமணமாகி 2 வயதில் குழந்தை: கிராம கோயில் அர்ச்சர்கராக நியமிக்கப்பட்டார். மாதம் Rs. 5000 சம்பளம் பேசப்பட்டது. ஊர் பெரியவரின் திருமணத்துக்கு வருமாறு கட்டளை இடப்பட்டது. வேறு வேலை ஒப்புக்கொண்டதால் திருமணத்துக்கு வரமுடியாத நிலையை சொன்னார்.
முன்றாம் நாள் 4 பேர் சேர்ந்து சொல்லி சொல்லி அடித்தார்கள். 2 நாள் கோமாவில் இருந்தார் பின் மரணமடைந்தார். மணிகண்டனின் வீட்டுக்கு இறந்த உடலை எடுத்து கொண்டு போக கூட அனுமதிக்க இல்லை. அங்கு நடந்ததை சகோதரி ஸ்ரீப்ரியா வின் வார்த்தையில் கேட்டால் மனம் வெறுத்து போகும். எவராலும் கண்டு கொள்ளப்படாத கொலை. எவர் மனசாட்சியையும் உறுத்தாத கொலை. அனாதையாய் விடப்பட்ட ஒரு அர்ச்சகரின் மரணம் (செய்தி ஆதாரம் மற்றும் புகை படம் கொடுக்க பட்டிருக்கிறது). நீங்கள் இந்த செய்தியை முதல் முதலாக படிக்கிறீர்கள் என்றால், அர்ச்சக சமுதாயத்துக்கு நாம் என்ன செய்திருக்கிறோம் என்று புரிந்து கொள்ளுங்கள்.
“பிராமண வெறுப்புக்கு” வைதீகத்தில் இருப்பவர் அதிகம் பாதிப்பு அடைகிறார்கள். அவர்களின் தனித்துவமான உடை மற்றும் சிகையினால் பொது வெளியில் அவமான படுகிறார்கள். திரை / டிவி என எல்லா ஊடகங்களிலும் மோசமாக கிண்டல் செய்யப்படுகிறார்கள். உடனடியாக நம்மால் செய்யக்கூடியது OUTLOOK கை (தோற்றத்தை) மாற்றி கொள்வது மட்டுமே. விபத்தில் அடிபட்டவனின் ரத்த போக்கை நிறுத்துவது அவனை காப்பாற்றும் செயல். அதுபோல வைதீகத்தில் இருப்பவர் OUTLOOK க் மாற்றி கொள்வது, அவர்களின் வலியை பெருமளவு குறைக்கும் என்ற நோக்கத்தோடு நேற்றைய நமது பதிவு இருந்தது.

நீண்ட கால தீர்வு
Strategy – 1: அவர்களின் ஆயுதங்களை பலமிழக்க செய்யுங்கள். நம்மை வெறுக்க கரணம் இல்லாது செய்யுங்கள்.
1. “பிராமணனே உயர்ந்தவன் / அவனே புத்திசாலி / Etc Etc” என்று பொது வெளியில் உளறி கொட்டி மற்றவை நம் எதிரிகளாகி ” ப்ராமண எதிர்ப்பை” அதிக படுத்தும் அனுகூல சத்ருக்களை “ஊமையாகும்” படி எம்பெருமான் அரங்கனை வேண்டுகிறேன். அவர்கள் நம் குலத்தை அழிப்பதால் அவர்களுக்கு ‘ ப்ரம்ம ஹத்தி” தோஷம் ஏற்பட சபிக்கிறேன்.
2. பிராமணர்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம் ஒருதரம் – ஆதரிக்கிறோம் இரண்டுதரம் – ஆதரிக்கிறோம் முன்று தரம். எங்களில் உள்ள ஏழைகளுக்கு கல்வியில் ஒதுக்கீடு கேட்கிறோம். என்று தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் தண்டோரா போட்டு சொல்ல வேண்டும்
3. “அனைவரும் அர்ச்சர்கர் ஆகலாம்” என்பதை நாமே முன்னிருந்து நடத்த வேண்டும். (எவ். மதுரை வைத்தியநாத ஐயர், ராஜாராம் மோகன்ராய்)
(மேற்கண்ட விஷயங் கள் “ஏன் முக்கியம்: என்பது பற்றி நமது வலை தளத்தில் கட்டுரைகள் வெளியிட பட்டுள்ளன)
இவை நம்மை எதிர்க்கவேண்டிய காரணங்களை எதிர் முகாமுக்கு இல்லாமல் செய்துவிடும். மனசாட்சி உள்ள 90% சதவீத எதிரிகள் மாறிவிடுவார்கள். மீதி இருப்பவரை சமூகம் ஒதுக்கி தள்ளும். நம் எதிர்கால தலைமுறைக்கும் நல்ல சூழல் ஏற்படுத்தி கொடுக்கும்
Strategy – 2: நம்மை அழித்து ஓழிக்க நினைப்பவர் முன் வாழ்ந்து காட்டுங்கள்
ஒரு சமுகமாக நமக்கு தேவையானவற்றை நமது வலைதலத்தில் தொடர்ந்து வெளியிடுகிறோம். (Bramin Training Cetner, NOG for Archagas / Prohit’s, Career guides, Mentor & Mentee, Project Japan (parenting guide on our cultural / scientific lines, Brahmins Business Entrepreneur network, etc etc). உதவி கோர்; உதவி செய்; என்பதே நமது வழியாக இருக்கட்டும்.
நேற்றைய பதிவுக்கு 80% பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக்கொள்ளும் எந்த குலமும் வாழும். நம் சமுதாயத்துக்கு எதிர் காலம் நிச்சயமாக இருக்கிறது.
நமது சுதந்திரத்துக்கு போராடியவர்கள் 0.5% சதவீதம் மட்டுமே. அதற்கே சுதந்திரம் கிடைத்து விட்டது. நம்மில் சிலர், நாணயமாகவும் / திறமையாகவும் சமுதாயத்துக்கு செயல்பட முன்வந்தால் நாம் குலத்திற்கு முன் உள்ள சவால்களை வென்று விடலாம். 100000 வார்த்தைகளை விட / ஆலோசனைகளை விட / கவலைபடுவதை விட – ஒரு நற்செயல் மேலானது.

நம்முடன் இணைய விரும்புவோர் Click செய்து Join ஆகவும்.
https://www.facebook.com/groups/323175998120886/
இந்த பதிவை “லைக்” செய்யாதீர்கள். அதனால் ஒரு பயனும் இல்லை. “ஷார்” செய்யவும்.
பின் குறிப்புக்கள்:
1. புரோகிதர்களுக்கான Project.
எங்கள் இல்லத்தில் லட்சுமி பூஜையும்/சுதர்சன ஹோமமும் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எங்கள் பகுதியின் ஐயர் கிடைக்கவில்லை. வழக்கம் போல் Google லை கேட்டேன். ஒரு வெப்சைட்டில் “உங்கள் ஐயர்” என்று வந்தது. வலை தளைத்தில் ஐயர்-ரை புக் செய்ய போனேன். எனது பெயர் முகவரி மற்றும் பிறந்த தேதி, குலதெய்வம், கோயில் இஷ்ட தெய்வம் என எல்வாவற்றையும் வாங்கிக் கொண்டது. பணம் கொஞ்சம் அதிகம் தான். இதில் வெப்சைட் “NON Profit Organization” என்று பீற்றி கொண்டது. கொஞ்சம் எரிச்சாலாகிப் போய் வலை தளத்தை மூடப் போனேன். என் மனைவியின் நச்சரிப்பால் வேறு வழியின்றி பணத்தை கட்டினேன். 24 மணி நேரத்தில், ஒரு ஆச்சரியம் எனக்கு நீண்ட EMAIL வந்தது.
1. என் குலதெய்வம் கோயிலுக்கு என்பேரில் கொடுத்த நன்கொடை ரசீது (எந்த நல்ல காரியங்களையும் குலதெய்வம் வேண்டுதல் இல்லாமல் செய்ய கூடாது என்று காரணம் இருந்தது)
2. எனது சொந்த மாவட்டத்தில் உள்ள எனக்கே தெரியாத பழமை வாய்ந்த கோயிலுக்கு (வருமானமில்லாத கோயிலுக்கு) ஒரு சிறிய நன்கொடை மற்றும் அந்த கோயிலின் படங்கள், புராண கதை மற்றும் கட்டிய பாண்டிய மன்னனின் கதை, அந்த கோயிலில் வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் என தல புராண புத்தகம். அந்த கோயிலின் இன்றைய பழுதுடைந்த நிலையில் போட்டோக்கள் அனுப்பப்பட்டிருந்தன. அந்த கோயிலின் பராமரிப்பு பணிக்காக ஒரு சிறிய தொகை வருடம் தோறும் அனுப்பி புரவலராக இணையும் படி கேட்டுக் கொண்டது. (அவர்களின் வலை கலத்தில் என் போட்டோ புரவலராக வருமாம்.)
3. பூஜைக்கான பொருள்களின் List; ஐயர் போட்டோ; அவரின் நம்பர் என தெளிவாக அளிக்கப்படிருந்தன.
பூஜையன்று அதிகாலை காலிங் பெல் அடிக்கவே கதவை திறந்தேன். “நீங்கள் தானே ஐயர் வேண்டும் என கேட்டிருந்தீர்கள்” தெளிவான ஆங்கிலத்தில் கேட்டார். அவருக்கு நடுத்தர வயதிருக்கும். படிய வாரிய தலை வெளிர் நில நிறத்தில் முழுக்கை சட்டை மற்றும் கருப்பு நிறத்தில் பேண்ட் ஒரு Executive Look நான் “ஆம்” என்றேன். உங்களுக்கு பணியாற்ற வந்திருப்பவன் நான் தான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எனக்கும் என் மனைவிக்கும் என்னவோ போல் ஆகியிட்டது. நாங்கள் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் ஒரு Corporate Iyer ரை எதிர்பார்க்கவில்லை. வேறு வழியின்றி அவரை வரவேற்றேன். அவரின் கையில் Suitcase Bag இருந்தது. அதில் வலைதளத்தின் பெயர் எழுதியிருந்தது. Bathroomமிற்கு சென்று கால், கைகளை அலம்பிக் கொண்டு வந்தார். உடை மாற்ற இடம் கேட்டார் கொடுத்ததேன்.
ஊடைமாற்றி வெளியே வந்தவரை பார்த்தும் நிஐ ஆச்சிரியம். உடல் முழுவதும் 12 திருநாமங்கள், பஞ்சகசம், பன்னீர் வாசனை, காதில் கடிக்கன், பின் வாரிய தலை என முழு ஐயர் கோலத்தில்இருந்தார். அடுத்த ஒரு மணி நேரம் ஆனந்தமான இருந்தது. கணீரென்ற குரலில் சுத்தமான தமிழில் பூஜைக்கான பலன்களை விவரித்தார். கவனம் இறைவனிடத்தில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். சமஸ்கிரத சுலோகங்களுக்கு தமிழில் அர்த்தம் சொல்லி அசத்தினார். என் குழந்தைகளுக்கு இரண்டு சிறிய புத்தகங்கள் பரிசளித்தார். (ராமாயணம் படக்கதை, வேத காலத்தில் முறையில் கல்வி பயிலும் பயிற்ச்சி) அனைத்திலும் வலைதளத்தின் பெயர் இருந்தது. நான் மகிழ்ந்து. மேலும் தட்சணை அளித்தேன். என் பணத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து ஒரு கவரில் போட்டு என்னிடமே திருப்பி கொடுத்து எங்கள் குலதெய்வக் கோயிலில் சேர்த்து விடும்படி கேட்டுக் கொண்டார். என் (EXTRA) பணத்தை மறுத்த விதம் எனக்கு பிடித்த இருந்தது நான் அவருடன் சிறது நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். அவர் வலைதளத்தின் செயல்பாடுகளை விவரித்தார்.
இன்றைய சமுகம் வேட்டி கட்டுபதையே தவிர்கிறது. இந்த நிலையில் குடுமியும் பஞ்சாகமும் கட்டியவர்கள் பொது வெளியில் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகிறார்கள். ஒரு முல்லாவோ அல்லது பாதிரியாரோ அவர்களின் பாரம்பரிய உடையில் வரும்போது மதிக்கும் இந்த சமுகம் புரோகிதரை அவரின் பாரம்பரிய உடைக்காக அவமான படுத்துகிறது.
சினிமா ட்ராமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் எங்கள் தொழில் கேவலப்படுத்தப்படுகிறது. பல நேரங்களில் எண்களின் பிள்ளைகள் பள்ளிகளில் கிண்டல் செய்யப்படுகிறார்கள். ஆத்திக்க அன்பர்களும் அதை கண்டும் காணத்து போல் இருக்கிறார்கள்.
வைதீகத்தில் இருப்பவர்களுக்கு இந்த காரணங்களால் திருமணம் ஆவது மிக மிக கடினம். உண்மையை சொல்ல போனால் திருமணமே ஆவதில்லை. புதிதாக வைதீக தொழிலை ஏற்பவர்களின் எண்ணிக்கை மிக குறைந்து போய் விட்டது. வேதம் படிப்போர் அருகிவிட்டனர்.
இந்த நிலை தொடர்ந்தால் வெகு சிலரே வைதீகத்தில் இருப்பார்கள். மேலும் DEMAND – SUPPLY CONCEPT படி வைதீகத்துக்கான செலவும் மிகவும் கூடி விடும். வேறு வழியில்லாமல் பலர் வைதீக வழக்கங்களை புறக்கணிக்க வேண்டி வரும். இந்த நிலை அடுத்த 10 ஆண்டுகளில் நமது பாரம்பரியத்தை முழு அழிவில் கொண்டு போய் விட்டுவிடும்.
நான் 12 வருடம் வேதம் படித்தவன். நான் இந்த முயற்சியில் இறங்க ஆரம்பத்தில் மிகவும் தயங்கினேன். ஒரு டாக்டரோ / போலீஸ்காரரோ தங்கள் தொழில் தவிர்த்த நேரத்தில் Uniform உடையுடன் இருப்பதில்லை. ஆனால் புரோகிதர் மட்டும் ஏன் ஒரே உடையுடன் / சமூக அவமதிப்பை பொறுத்துக்கொண்டு இருக்கவேண்டும். அது மட்டும் இல்லாமல் நாங்கள் சொல்லும் மாந்திரங்களில்/ ஆச்சாரத்தில் எந்த மாற்றமும் இல்லை. பூஜை இல்லா காலங்களில் எங்கள் உடை மட்டும் காலத்திற்கேற்ப மாற்றி கொள்வதில் தவறு என்ன?
இது கோயில் பிரசாத்தை வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் தட்டில் தருவது போலத்தான். பிரசாதம் தன் இயல்பை / தன்மையை / தூய்மையை இழப்பதில்லை. எங்கள் உடை மாற்றம் புஜையை / யாகத்தை பாதிப்பதில்லை.
நான்கு Software Professionals சேர்ந்து இந்த வலை தளத்தை ஆரம்பித்துள்ளனர். இது NON PROFIT ORGANIZATION ஆகும்.
புரோகிதர்களின் தகுதிக்கு ஏற்ப PART TIME வேலையும் செய்கிறோம். நான் ஒரு சிறு நிறுவனத்தில் CASHIER. நான் என் தந்தை தொழிலான புரோகிதமும் செய்கிறேன். வலைதளத்தின் செயல்கள் போக, மீதி பணம் என் Account-க்கு வந்துவிடும்.
வைதீக மற்றும் சாஸ்திரங்களை பற்றி பொது மக்களுக்கு புரியும் படி தமிழில் விளக்கமளிக்க எங்களுக்கு வலை தளம் சிறப்பு பயிற்சி அளிக்கிறது. நான் பொது வெளியில் அவமானப்படுத்தப்படாமல் மற்றவருடன் சரிசமமாக நடத்தப் படுகிறேன்.
சிலர் இந்த மாறுதலை எதிர்கிறார்கள். இந்த எதிர்ப்பு இயல்பானது. இந்த மாறுதலை எதிர்ப்பவர்கள் வைதீகத்தில் இருப்பவர்களின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் பெருமறைவு வரவேற்பு இருக்கிறது என்று கூறி முடித்தார். நான் மகிழ்ச்சியிடனும் மரியாதையுடனும் அவரை வழியனுப்பினேன்.
இந்துமதம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது. உலகில் எந்த கலாச்சாரமும் இவ்வளவு பழமையானதாகவும் உயிர்துடிப்பனதாகவும் இல்லை. பழமையை புதிய கோணத்தில் அணுகுவதே இந்து மதத்தின் சிறப்பு என்று நினைத்து கொண்டேன்
பின் குறிப்பு : ஒவ்வொரு வருடமும் என் பிறந்த நாளுக்கு என் இஷ்;ட தெய்வ பிரசாதம் வீட்டுக்கு வருகிறது.
இது கனவு தான் . நிஜமாக கூடிய கனவு.
2. மணிகண்டன் கொலை : http://www.thenewsminute.com/…/temple-priest-bludgeoned-dea…
3. நேரம் இருப்பவர்கள் எம் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள். மனமும் சக்தியும் இருபவர்கள் உதவுங்கள்.http://brahminsforsociety.com/tamil/needurhelp/

Regards

Admin

One Response to புரோகிதர் வழக்கை

  1. Ganesh Iyer says:

    this hatred is more prevalent in Tamil Nadu only. I live in Maharashtra, where pandits are respected. I also have the same feeling in few other states as well.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *