எப்படி ஆரம்பிக்கலாம் Business – சொல்லி கொடுக்கும் ஒரு பயிற்சியாளர்

business trainingசிற்பம் செய்பவர் / ஓவியம் தீட்டுபவர் / எழுத்தாளர், கவிஜர்  என சில பேரின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க தோன்றும்.  இந்த வரிசையில் “தொழில் முனைவோரை உருவாக்குபவர்” என்பதையும் சேர்க்கலாம்.  ஹரி பாஸ்கர்   சந்திப்போம் வாருங்கள்.

ஹரி பாஸ்கர்  ஒல்லியாக இருக்கிறார்.  பளிச் என சிரிக்கிறார்.  நாம் சுலபமாக அவரை கவனிக்காது கடந்து விடுவோம்.  ஆனால் பேச பேச ஆணித்தரமாய் நம் மூளையை ஆக்ரமிக்கிறார்.  தமிழும் ஆங்கிலமும் கலந்த வார்த்தை பிரயோகம்.  மணி பிரவாள நடையாய் அருவி போல் வார்த்தை கொடுக்கிறது. அனுபவம் தெறிக்கிறது.

அவருடன் நமது சந்திப்பு:

BrahminsForSociety.Com :  “தொழில் முனைவோரை உருவாக்குபவர்” பயிற்சி என்றால் என்ன?

ஹரி பாஸ்கர்  :  சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்று ஆசை மட்டும் படுவோரை,  அதை லட்சியமாக்கும் பயிற்சி.  அவரின் மூளையில் / மனதில் / ரத்தத்தில்  “சொந்தமாக தொழில் செய்யவேண்டும்” என்ற எண்ணத்தை புகுத்தவேண்டும்.  வெறும் ஆசை உங்களை எங்கேயும் கொண்டு போகாது.  செயல் மட்டுமே அடுத்த தளத்துக்கு உங்களை கொண்டு செல்லும்.   அதன் வழிமுறைகளை கற்று கொள்வதுதான்  தொழில் முனைவோர்  பயிற்சி.

BrahminsForSociety.Com :  தொழில் முனைவோராக என்ன தகுதி வேண்டும்?

ஹரி பாஸ்கர்  :  ஆசை வேண்டும்.  நேர்மையாக  பெரும் பணம் சம்பாதிக்க ஆசை வேண்டும்.  என் சொந்த காலில் நிற்பேன் என்ற லட்சியம்  வேண்டும்.  “வேலை தேடி போகாமல் பலருக்கு வேலை கொடுப்பேன் என்ற கொஞ்சம் கர்வம் வேண்டும்.  என்ன தோல்வி வந்தாலும் மீண்டும் வருவேன் என்ற விடாமுயற்சி  வேண்டும்

BrahminsForSociety.Com : எந்த வயதில் நாம் தயாராக வேண்டும்.

எந்த வயதிலும் ஆரம்பிக்கலாம்.  8வது படிக்கையில் துவங்குவது உத்தமம்.

 

BrahminsForSociety.Com :  சார்!… 14 வயதிலா. குழந்தை சார்!!!

எதற்கு ஆசிரியப்படுகிறீர்கள்.  14 வயது பையனை கடைக்கு கூட அனுப்பாமல் ஜாக்கிரதையாக வளர்க்கும் தாய்மார்கள் அவனின் முதுகெலும்பை உடைத்து ஒரு கூண்டு பறவையை, பறக்க இயலாத பறவையை உருவாக்கி அவனின் எதிர்காலத்தை சுத்தமாக காலி செய்கிறார்கள்.  16 வயதில் இந்திய ராணுவத்துக்கு ஆள் எடுக்கிறார்கள்.  உங்களுக்கு 14 வயது ஒரு குழைந்தையா?

 

BrahminsForSociety.Com: எப்படி?

பள்ளி செல்லும் சிறுவர் கடைகளில் அப்பாவுக்கு/அம்மாவுக்கு துணையாக வியாபாரம் செய்து  பார்த்ததில்லை. பணம் சம்பாதிக்க சொல்லி கொடுங்கள்.  10 பேனா வாங்கி அவனிடம் கொடுத்து விற்று வா என்றால் அது தான் MBA Marketing  பயிற்சி.  நல்ல விஷயங்களை இளம் வயதிலே அறிமுகப்படுதுங்கள்.  பணத்தை பெருக்குவது  பற்றி / சிக்கனம் பற்றி  கற்று கொடுங்கள்

BrahminsForSociety.Com :  பலர் வேலையில் இருந்து கொண்டே Part Time பிசினஸ் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள்.  உங்களின் அறிவுரை என்ன.

நல்லது தான்.  உண்மையில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.  Part Timeமாக 1 மணி நேரம் வேலை செய்து கோடீஸ்வரராக கனவு கண்டால் கிடைக்காது.  Part time Business உங்கள் சூழ்நிலையை பொறுத்தது தேர்ந்து எடுக்கவேண்டும்.

பெரிதாக செய்யகூடிய வியாபாரத்தை பார்ட் டீமில் சிறிதாக துவங்குங்கள்.  ஓரளவு பிசினஸ் புரிந்தபின் அதையே முழு நேர தொழிலாக கொள்ளலாம்

BrahminsForSociety.Com: பலர் பிஸ்னஸ் RISK என்று பயப்படுகிறார்கள்.  அந்த தயக்கமே அவர்களை முயற்சி செய்ய விடாமல் தடுக்கிறது.

கீழே வீழ பயந்தால் சைக்கிள் கூட கற்று கொள்ள முடியாது.  ஒரே ஒரு நிமிடம் முன்னாடி செல்வதற்காக நமது இளைஜர்கள் சாலையில் எடுக்கும் ரிஸ்க் கை பாருங்கள். அதை விடவா பிசினஸ் ரிஸ்க்?

உங்கள் ரிஸ்க் என்ன என்பதை எழுதிப்பாருங்ககள்.  அதிகபட்ஷம் என்ன ஆகும்? எவ்வளவு நஷ்டம் வரும். உங்களால் தாங்க முடியுமா என்பதை எழுதி பாருங்கள். உங்களால் ரிஸ்க்கை தெளிவுடன் எடுக்கமுடியும்.

BrahminsForSociety.Com:  புதிதாய் பிசினஸ் ஆரம்பிக்க நினைப்பவருக்கு உங்கள் அறிவுரை என்ன?

 1. தொடர்ந்து பிசினஸ் பற்றி படியுங்கள். வெற்றி கதைகளை படியுங்கள்.
 2. நீங்கள் பார்க்கும் (சிறு கடை முதல் பெரிய தயாரிப்பு வரை) அனைத்தையும் பற்றி யோசியுங்கள். அவர்களின் பிசினஸ் முறை / வெற்றி தோல்வி / லாப நஷ்டம் என யோசித்து பாருங்கள்
 3. பிசினஸ் வட்டத்திற்குள் (Meetup.com, TIE network, entrepreneur network etc) செல்லுங்கள்
 4. பணத்தை நேசியுங்கள். நேர்மை வழியில் பணம் சம்பாதிப்பது உங்கள் கடமை.
 5. உங்களுடைய சம்பாத்தியத்தில் ஒரு சிறு பகுதியை சமூகத்துக்கு/நாட்டிற்கு செலவு செய்யுங்கள். நீங்கள் பணம் அதிகம் பண்ண இரண்டு காரணம் வேண்டும். (A) உங்களுக்காக / உங்கள் குடும்பத்துக்காக (பB) நம் சமூகத்துக்காக / நாட்டிற்காக.  இதுவே வெற்றியின் ரகசியம்

நம் சமுகத்துக்கு உங்கள் அறிவுரை என்ன?

நாம் சுமார் 30 லட்சம் இருப்போம்.  உலகின் யூதர்கள்   30 லட்சம் பேர் தான். உலகில் உள்ள மிக பெரும் பிஸ் அவர்களே உருவாக்கினார்கள் / நடத்துகிறார்கள்.  நினைத்தால்  அரசாங்கத்திடம் வேலை கொடு வேலை கொடு என பிச்சை   எடுக்காமல் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை நீங்கள் கொடுக்கலாம்

நாம் அவருக்கு நம் வாழ்த்துக்களை சொன்னோம்.  அவரின் சேவை தொடரட்டும்.

அவரின் பயிற்சியை பெற விரும்புவோர் harivin@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

உதவி கோர் ; உதவி செய்  – இதுவே நம் தாரக மந்திரம்

Hari Baskar Profile:

haribaskar

TRAINER: Entrepreneur Development Institute -Tamil Nadu
National Small Industries Corporation – NSIC
Past Junior Chamber International Trainer –
Specialized in – *Management *Marketing *EDP * Costing *Business Structuring etc.,

AWARD: BEST MENTOR 2017 – Entrepreneur Development & Innovation
Institute – Government of Tamil Nadu

SOCIAL WORK:

CAREER COUNSELOR-for Schools & College – More than 15000 students Counseled

BUSINESS COUNSELOR -More than 5,000 Entrepreneurs Counseled and
250 Entrepreneurs Mentored and more than 1500 SHG’s Analyzed on Business Adoptability

Organizational Positions – TRUSTEE – MEET
Vice Chairman BYST Chennai Cluster
Past Zone Co-ordinator Junior Chamber International Zone XVI Past LOM President Chennai Anna Nagar Junior Chamber
Regular Blood Donor for the past 30 years.

 

14 Responses to எப்படி ஆரம்பிக்கலாம் Business – சொல்லி கொடுக்கும் ஒரு பயிற்சியாளர்

 1. Anandhan narayanasamy says:

  Very good.

 2. R Krishnamurthy says:

  An excellent inspiration. One’s talent will emerge in the area of entrepreneurship to provide employment to many in addition to decent earnings in right path and comfortable living.

  • AMVEL Kumar says:

   Yes we have to teach.
   We can start entroprunership with in our youth from their 9 plus class.
   Need not be a class mark intelligent.
   He need be parret or photo copier.
   He is hard worker.

   best wishes.

 3. NAGARAJ says:

  My son in 4th engineering CSE. Can he attend week end classes? We are from Pondicherry.

  • admin says:

   t is great. We look for meeting and training your son. Connecting Hari baskar, business trainer. Thanks. (please check your mail)

 4. venkatesan says:

  SIR,I WANT TO START ARECA LEAF PLATES MANUFACTURING IN OUR VILLAGE,PLEASE GIVE ME VALUABLE IDEAS ABOUT THIS BUSINESS.

 5. lalitha says:

  Dear sir,
  My daughter is working in MNC.She is 25 yrs old. She is not interested to continue her present job and want to start her own business.She is B.E., COMP.SCI graduate. Later she want to give job opportunities to the poor and needy. your advice please.
  lalitha

 6. Raghunath Iyangar says:

  Keen to know about entrepreneourship. My life is similar like Raghavan. Standing at the junction road where to head.. Pls help out. Raghunath Iyangar.

 7. Raghunath Iyangar says:

  Interested

 8. I am 57 years old and wish to opt for VRS. I wish to start a small business but have no idea when and where to begin. I will be highly obliged if I can get proper guidance. I will be more than happy with a 1% return per month on my investment.
  Alternately, I would like to take up investment advisory role and guide the future retirees with regard to investment of funds.

 9. Balasubramanian says:

  Nice to know this information Sir Thanks a lot

 10. i came to bangalore at the age of 19 and started business and running for the past 40 years successfully.From stationery, audiovisual, event management and presently in to Gated community development – real estate big projects – completed sri shankara colony a 45 acer project http://www.shankaracolony.com and presently a 60 + acer project Bharatha Bhoomi Town ship near Srirangam duly approved by DTCP and RERA. Any one Entrepreneur,Investor,CA,Lawyer,Marketing, Sales, Software enterprising persons interested to join pl welcome. We shall train rural boys and girls in marketing and office management and assure they can easily earn up to Rs. 50,000 to Rs. 1 lakhs per month who is ready for smart and hard work with sincerity and wants to help others to go. We can do wonders as the market and opportunity are very big. interested pl contact me 9845012158 tvv234@gmail.com also refer to our web site http://www.shankaracolony.com and http://www.bharathabhoomi.in best wishes.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *