Brides Hand Book – Part I

Brahmin Marriage

மணப்பெண்ணுக்கு ஒரு வார்த்தை :

வாழ்கநீ.  நல்ல மணமகனை தேர்ந்து எடுத்து வழிய பல்லாண்டு.  நமது குலத்தில் நல்ல மணமகனை தேர்வு செய்ய இது சிறு குறிப்பு :

1. திருமண செலவுகளை பகிர்ந்து கொள்ளாத மணமகனை தவிர்த்து விடு. முதுகெலும்பில்லாதவனுடன் வாழ்வது கேவலம்.
2. அவன் ஒரே ஒரு பிள்ளை என்றால், மனிதர்களுடன் பழக / சேர்ந்து வாழ / பகிர தெரிந்தவனா என்று பார். “அம்மா கோண்டு” – நல்ல பிள்ளையாக இருக்கலாம்; ஆனால் புருஷனாக இருப்பதில் அவர்கள் தடுமாறுகிறார்கள்.
3. “எங்களுக்கு உறவினர் எவரும் இல்லை, கல்யாணத்துக்கு நாங்க 10 பேர்தான் வருவோம்” என்று மாப்பிள்ளையை பெற்றவள் சொன்னால் …… மகளே!. நீ யோசி. உறவினருடன் பழக தெரியாத மாமியாரும், நட்பு வட்டம் இல்லாத பிள்ளையும்…….
4. நீ ஒரு பெண்ணாக இருந்தால், உன் பெற்றோர் உன் வருமானம் (ஒரு பகுதி) தேவை பட்டால், அது உன் உரிமை / கடமை. இதை ஒப்பு கொள்ளும் மணமகனை தேர்வு செய்.
5. திருமணத்துக்கு பிறகு, புதிய உறவுகள் உனக்கு வருகின்றன. நீ திருமணம் செய்து கொண்டவன் அனாதை அல்ல. அவன் உறவுகளும் உனதே. அவர்களை நேசி.
6. அதி அளவுக்கு மீறிய நாகரிகம் கொண்டவர்களை கவனி. உனக்கே புரியும் எங்கு நிறுத்துவதென்று.

இரண்டு வரன்கள் : ஒரு பார்வை

மணமகனின் தாயாரின் வார்த்தைகள் :

“என் பையன் ரொம்ப நல்ல பையன். வயசு 31 ஆறது.  70000 சம்பாதிக்கிறான்.  ABC கம்பெனியில 5 வருஷமா இருக்கான்.  எங்களுக்கு ஒரே பையன்தான்.  இந்த காலத்துல ஒரு பையனை சீராட்டி வளர்க்காதே கஷ்டம்.  அதனால ஒரே பையன்தான்.

என் பையன் சும்மா சொல்லக்கூடாது. ஒரு கெட்ட பழக்கம் கிடையாது.  ஆபீஸ் முடுஞ்சா உடனே வீட்டுக்கு வந்துடுவான்.  இருக்கிற இடமே தெரியாது.  படிப்புல கெட்டிக்காரன்.  B.E  90% எடுத்து முடிச்சான்.

நாங்க நல்ல பொண்ணா தேடிகிட்டு இருக்கோம்.  எங்களுக்கு எதிர் பார்ப்பு எதுவும் இல்லை.  நல்லபடியா கல்யாணம் பண்ணி வெச்சா போதும்.  எங்க தரப்பில் அதிகம் மனுஷா இல்லை.

பொண்ணு வேலைக்கு போன நல்லது.  இந்த காலத்துல இரண்டு பேர் சம்பாரிச்சாதான் வழக்கை நல்லபடியா இருக்கும்.”

இப்போது இதன் அர்த்தங்களை பார்க்கலாம்:

வார்த்தை : “70000 சம்பாதிக்கிறான்.  ABC  கம்பெனியில 5 வருஷமா இருக்கான்”

வேறு அர்த்தம் :  மொத்தம் 10 வருட அனுபவம்.  அதற்கு 70000 என்பது மிக பெரிய வெற்றியல்ல.  கொஞ்சம் முயன்றால் அடுத்த கட்டத்தை எட்ட கூடிய நிலையில் இருக்கிறான்.

x–x—x—x—x–x

வார்த்தை : எங்களுக்கு ஒரே பையன்தான்.  இந்த காலத்துல ஒரு பையனை சீராட்டி வளர்க்காதே கஷ்டம்.  அதனால ஒரே பையன்தான்.

வேறு அர்த்தம் : 30 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் பெரும் பாரமாக பார்க்கப்பட்டனர்.  அதனால் பெண் குழந்தை வேண்டோம் என முடிவெடுத்த புண்ணியவதி.  தனக்கு பெண் குழந்தை கூட வேண்டாம் என்ற பெண் “மாட்டு பெண்ணை” எப்படி நடத்துவாள்.

x–x—x—x—x–x

வார்த்தை : ஒரு கெட்ட பழக்கம் கிடையாது.

வேறு அர்த்தம் : நல்ல விஷயம் தான். அனால் இது மட்டுமே பெரிய தகுதி இல்லை என்பதும் உண்மை.

x–x—x—x—x–x

வார்த்தை : ஆபீஸ் முடுஞ்சா உடனே வீட்டுக்கு வந்துடுவான்.  இருக்கிற இடமே தெரியாது.

வேறு அர்த்தம் : வெளி உலக தொடப்புகள் இல்லது இருப்பவர்கள்.  எவர் வம்புக்கும் போகாது என்பது croton’s செடிக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.  மனிதர்களுக்கு அல்ல.   பெரும்பாலும் “அம்மா கோண்டுகளாக” இருக்க வாய்ப்புள்ளது

x–x—x—x—x–x

வார்த்தை : படிப்புல கெட்டிக்காரன்.  B.E  90% எடுத்து முடிச்சான்.

வேறு அர்த்தம் : படிக்கும்போது நல்ல மார்க் என்பது சரிதான்.  ஆனால் ஏன் மேற்கொண்டு தொடரவில்லை.  படிக்கச் பிடிப்பவன் அதை தொடரவேண்டியது இயல்புதானே.  படிப்பு தன்னை உயர்த்தி கொள்ளவா அல்லது வெறும் MARK கா?

x–x—x—x—x–x

வார்த்தை : நாங்க நல்ல பொண்ணா தேடிகிட்டு இருக்கோம்.  எங்களுக்கு எதிர் பார்ப்பு எதுவும் இல்லை.  நல்லபடியா கல்யாணம் பண்ணி வெச்சா போதும்.

வேறு அர்த்தம் : கெட்ட பெண் என்று எவரும் இல்லை.

10 லக்ஷம் வரதட்சினை கொடுத்து உன் பிள்ளையை திருமணம் செய்துகொள்ள இங்கு எந்த பெண்ணும் தவம் கிடைக்கவில்லை.    உங்களுக்கு எதிர்பார்ப்பு இல்லை என்பது விஷயம் இல்லை.

இது பெண் விட்டு கல்யாணம் மட்டும் இல்லை.  ஆணுக்கும் கல்யாணம்தான்.  உன் கல்யாணத்கு உன் பங்களிப்பு என்ன?   என்பது தான் கேள்வி.

x–x—x—x—x–x

வார்த்தை : பொண்ணு வேலைக்கு போன நல்லது.  இந்த காலத்துல இரண்டு பேர் சம்பாரிச்சாதான் வழக்கை நல்லபடியா இருக்கும்.”

வேறு அர்த்தம் : சுலபம்.  பையன் முன்னேற அவனுக்கு சம்பாதிக்கும் பெண் தேவை. மற்றபடி அம்மாவுடன் டிவி பார்த்து பொழுதை கழிக்க பயன்படும்.

–x—x—x—x—x–

மணமகனின் தாயாரின் வார்த்தைகள் :

“என் பையன் ரொம்ப நல்ல பையன். வயசு 31 ஆறது.  70000 சம்பாதிக்கிறான்.  ABCஸ்ய்ஸ் கம்பெனியில 5 வருஷமா இருக்கான்.  எங்களுக்கு ஒரே பையன்தான்.   எங்களுக்கு பெண் குழந்தை மீது கொள்ளை ஆசை. ஆனால் பிறக்கவில்லை.  எங்கவீட்டுக்கு வரும் பெண் எங்க பெண் போலத்தான.

எங்க பையன்னுக்கு  நெறைய FRIENDS  உண்டு.  LIONs CLUB Member ரா  இருக்கான்.  எதிர்காலத்துல பிசினஸ் பண்ணனும்னு நெனைக்கிறான்.  அவன் Friendடோட ஒரு Part Time பிசினஸ் செய்கிறான்.

எங்க தரப்புல நிறைய பேர் கல்யாணத்துக்கு வருவாங்க.   கல்யாண செலவுல நாங்க பாதியே ஏத்துகிறோம்.

பெண் வேலைக்கு போறதும் போகாததும் அவ இஷ்டம். அவ சம்பளத்துல அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரு பகுதியை கொடுத்தாலும் எங்களுக்கு சம்மதம்.  அவங்க தானே கஷ்டப்பட்டு  பெண்ணை வளந்துருக்காங்க?

Last but important : Groom to Bride : “mmma…. Nice meeting you.  My mom might have told you all good things about me.   I want you to know this.  I rarely drink Wine and Bear.   Whenever there is a party, I drink.   I am in Control, but still i want you to know this before you take decision”

Marriage fixed.

 

5 Responses to Brides Hand Book – Part I

 1. RAJA RAGOTHAMAN says:

  This is the problem with Brahmin society, where the woman talks about marriage proposal for the son, all are discussed dominated by the Woman. Crux of the problem is this. Such woman are not going to change, and son of such woman will not get married in today’s modern society. WE need a moment to change the old mindset of such woman. The articles itself is a hypocratic mindset, keeping the old woman as focus. where is the bride in all this

 2. radha sriram says:

  i really appreciate this post. i won’t entirely blame that groom’s mom.but what about the responsibility of the father? the mind setup of having son or sons makes them RAJAMATHA should change.in today’s scenerio,girls too heirs.

 3. Viswanathan says:

  I find in all marriage discussions, the mother of the bride / groom take centre stage and they only deal with all aspects.Where is the FATHER? Is he heard or involved.It is a sad situation.There is need for a combined effort by both the parents on either side.This is not happening.I have seen several father’s made Dummies.

  • N.Veeramani says:

   In Brahmin weddings the bride’s mothers have more role to play than the groom’s mother and father. The ceremonies are designed like that and this need not be a contention as a heart burn issue.

 4. Ravi Kumar says:

  There is a definite need for all brahmin groups to get together and try to find a solution to these problems. Persons who need to address these problems are keeping quite without finding a solutions. Brahmin Matrimonial issue certainly needs attention from think tanks of the community.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *