10% reservation – God’s gift
10% இட ஒதுக்கீடு – நம் பார்வை?
மோடி தலைமையிலான மத்திய அரசு OC CATEGERY உள்ளவர்களில் ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டை கடந்த வருடம் அறிவித்தது. இந்திய அளவில் அனைத்து மாநிலங்களும் இந்த இட ஒதுக்கீட்டை அமுல் செய்ய ஆரம்பித்து உள்ளன.
தமிழ் நாட்டில் முக்கிய காட்சிகள் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர். அதாவது தமிழ் நாட்டில் அ பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அமுல் செய்ய பட மாட்டாது. இது தான் எதார்த்த நிலை.
இந்த நிலையை மாற்ற OC பிரிவு தலைவர்கள் அடுத்த சில மாதங்களில் / நாட்களில் ஒரு பொது கருத்தை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
இட ஒதுக்கீட்டின் சரித்திரம் / பிராமண எதிர்ப்பு / திராவிட சிந்தனையாளர்களின் நோக்கம் மற்றும் அவர்களின் எதிர் வியூகம் – மற்ற சமூகத்தினரின் அச்சம் – முதலியவற்றை முழுதும் புரிந்து கொண்டால் மட்டுமே நம்மால் ஒரு யதார்த்த நிலையை எடுக்க முடியும்.
தி மு க தன்னுடைய நேரடி எதிர்ப்பை பதிவு செய்துவிட்டது. வழக்கம் போலவே டிவி நிகழ்ச்சிகளில் மத்திய அரசு சார்பாக எந்த விதமான முன் தயாரிப்பும் இல்லாதவர்களை தேர்தெடுத்து அழைத்து, நமது தரப்பில் நியாயமே இல்லாதது போல நடத்துவார்கள். இனி எல்லா பத்திரிகைகளும் 10% சதவீத ஒதுக்கீட்டை எதிர்த்து எழுத ஆரம்பிக்கும்.
ஆனால் இது காலம் நமக்கு தந்த வரம்.
இது இட ஒதுக்கீடு மட்டும் அல்ல. இது பிராமண எதிர்ப்புக்கு தேவை இல்லாத நிலையையும் ஏற்படுத்த முடியும். நாம் சமூக ரீதியாக (அல்லது அரசியல் காரணமாக) இது நாள் வரை திராவிட சிந்தனையாளர்களால் தனிமை படுத்த பட்டோம். இப்போது OC Group இணைவது முலம் நவீன தீண்டாமையை ஒழித்து காட்டுவோம்.
நம் சமூகதுக்கு யதார்த்தமான ஒரு பார்வையை வைக்க விரும்புகிறோம்.
உங்கள் பணியாக இந்த வாதத்துக்கு/ யோசனைக்கு :
1. எதிர் வாதங்களை அல்லது மாற்று யோசனைகளை வைக்கலாம்
2. இந்த கட்டுரையின் பார்வை சரி என நினைத்தால் மிக மிக அதிகம் பகிருங்கள். அனைத்து சமூகத்தினரும் இதை படிக்கும் படி செய்யுங்கள் ;
உங்கள் பங்களிப்பை கண்டிப்பாக கொடுங்கள்; காட்டு தீயை போல் இந்த கட்டுரையை பரவ செய்யுங்கள்.
சரித்திரத்தின் பக்கங்களில் இருந்து….
(சரித்திரம் தெரியாதவன் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறான்…)
நம்மில் பலருக்கு இட ஒதுக்கீட்டின் வரலாறு தெரிவதில்லை. பிரபலமான பிராமண பிரமுகர் / நடிகர் ஒருவர் திரு கருணாநிதியை சந்தித்து பிராமணர்களுக்கு 7% இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டார். திரு கருணாநிதி அவர்கள் பிராமண நடிகரை திரு வீரமணி அவர்களை சந்திக்கும்படியும், இட ஒதுக்கீட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ளவும் கூறி அனுப்பினார். அந்த நடிகருக்கு வரலாறு தெரியாததால், திரு கருணாநிதி அவர்களிடம் மேற்கொண்டு வாதிட / பேச முடியவில்லை.
நமக்கு தெரிந்திருக்க வேண்டிய வரலாறு இது.
18ம் நூற்றாண்டு வரை நமது குலம் வேதம் ஓதுவது மற்றும் பாட சாலைகள் நடத்துவது என்று இருந்தது. பெரும்பாலும் கோயில் பணி; அல்லது சமையல் பணி. வெகு சிலரே அதிகாரத்தில் அருகில் இருந்தனர். மிக சிலர் நில சுவான்தார்களாக இருந்தனர். பெரும்பாலோர் வறுமையில் இருந்தனர். “ஏழை பிராமணர்” பற்றிய கதைகள் ஏராளம். சங்கீத மும்மூர்த்திகள் மற்றும் 1900 ஆரம்ப நாட்களில் வாழ்த்த நமது குலத்து பெரியவர்களின் வாழ்கை வரலாற்றை படித்தால் அதில் ஏழ்மை நிறைந்து இருக்கிறது. நம் குலம் எளிய வாழ்கை வாழ்ந்தது.
ஆனால் 19ம் நூறாண்டு நமது குலத்திற்கு புதிய கதவை ஆங்கிலேய ஆட்சி திறந்தது. அது வரை அரசு அதிகாரம் இல்லாத குலம், ஆங்கிலம் படித்தால் “அரசு வேலை” என்ற நிலையை நன்கு பயன்படுத்தி கொண்டது. ஓட்டை உடைசல் அக்ராகரத்திலிருந்து திடீரென கலெக்டர்கள் / தாசில்தாரர்கள் / வக்கீல்கள் முளைத்தார்கள். அரசு வேலையில் பிராமணர்கள் அதிகம் பெற்றனர் .
ஒரு சமீபத்திய செய்தியில் முலம் நீங்கள் கடந்த கால நிலையை புரிந்து கொள்ளலாம்:
சமீபத்தில் “ஹிந்து” பத்திரிகையில் தமிழில் M.A / B.Ed/PHD படிப்பவர்களை பற்றிய செய்தி வந்தது. தமிழில் உயர் படிப்பு படிப்பவர்களின் பெருபாலோனர் “ஒரு குறிப்பிட்ட” குலத்தை / சாதி பிரிவை சேர்த்தவர்கள் (90% பேர் ஒரே பிரிவை சேர்த்தவர்கள்). அதற்கான காரணகளும் அலசபட்டன. விளைவு: அடுத்த 10 ஆண்டுகளில் அரசு தமிழ் ஆசிரியர் வேலைக்கு அந்த ஒரு பிரிவை சேர்த்தவர் மட்டுமே தகுதி பெறுவார். மற்றவர்கள் தகுதி பெற மாட்டார்கள். அவர்கள் சதி செய்து “தமிழ் ஆசிரிய அரசு” பணியை பெறவில்லை. இது இயல்பாக நடக்கிறது.
1910-1950 களில் அரசு வேலை சுலபமாகவே கிடைத்தது. சாதாரணமாக படித்தாலே அரசு வேலை. 8-10ம் வகுப்பு படித்த அனைவர்க்கும் அரசு வேலை கிடைத்தது. பிராமணர்கள் “சதி” செய்து அரசு வேலை பெறவில்லை. இயல்பாகவே அரசு வேலைக்கு பிராமணர்கள் முயற்சித்தார்கள். கிடைத்தது. அவ்வளவே.
அன்றைய சமுகத்தில் சலசலப்பு. பிராமணர்கள் அரசு வேலையில் அதிகம் பெறுவதாக விமர்சனம் எழுந்தது. அதில் உண்மையும் இருந்தது. ஆனால் பிராமணர்கள் மீது வெறுப்பு இல்லாத காலம். இந்த சலசலப்பும்/ விமர்சனமும் புரிந்து கொள்ள கூடியதே. நம் வீட்டில் சொத்து பங்கு பிரிக்கும் போது, ஒருவர் மிக மிக அதிக்கம் பெற்றால் என்ன நடக்கும் என்பதை யோசித்து பாருங்கள். ஏன்? உங்கள் குழந்தைகளுக்கு சாக்லெட்டை பகிர்ந்து கொடுக்கும் போது, ஒரு குழந்தைக்கு அதிகம் கொடுத்து பாருங்கள். உங்களுக்கு “ஏன் எதிர்ப்பு” என்பது புரிந்துவிடும்
1920 களின் ஆரம்பம். பிராமணர் அல்லாதோர் இயக்கங்கள் முளைத்தன. ஒரு சமூகத்துக்கான மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டார்கள்.
வாதம் 1: பிராமணர்கள் தன் திறமையில் அடிப்படையில் வேலை பெறுகிறார்கள். அதில் என்ன தவறு
வாதம் 2 : அரசு வேலை ஊர் பொது கிணறு போன்றது; அதில் இருக்கும் தண்ணீர் அனைவருக்கும் பொது சொத்து. அனைவருக்கும் பங்கு அளிக்க பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட தெரு (அக்கிரகாரம்) மட்டும் ஆதிக்கம் செலுத்துவது தவறு.
(For your consideration: ஆங்கில அரசில் வேலை செய்வது அடிமை தனம்; அதற்கு “நான் , நீ ” என்று போட்டி இடுவது மிக தவறு” என்றும் ஒரு சிறு குழுவினர் மூன்றாவது கோணமாக வைத்தனர் – தேச பற்றாளர்கள் இதையும் மனதில் நிறுத்துங்கள்)
1930 களில் ஆங்கில அரசு ஒரு கமிட்டியை அமைத்தது. சர் சிபி ராமசாமி ஐயர் பிராமணர்கள் சார்பாக கலைந்து கொண்டார். எதிர் தரப்பினர் பிராமணர்களுக்கு 16% அரசு வேலையில் பங்கு அளிக்க வேண்டும் எனவும், 84% மற்றவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். சர் பி ராமசாமி ஐயர் தலைமையில் ஆன பிராமணர்கள் குழு இதை ஏற்க மறுத்தனர். கூட்டம் தோல்வியில் முடிந்தது.
சர் சிபி ராமசாமி ஐயர் தலைமையில் ஆன குழு எதிர்காலத்தை பற்றி கணிக்க தவறிவிட்டனர். சில ஆயிரம் பேர் அரசு வேலை பெற, அதனால் பலனடைய, நமது குலத்தின் எதிர் காலத்தையே பணயம் வைத்து விட்டனர். ஒரு சரித்திர தவறு நடந்தது. அதுவும் எந்த விமர்சன பார்வையே இல்லாமல் நடந்தது.
அதன் விளைவை நாம் இன்றும் பார்க்கிறோம். தமிழ் நாட்டில் பிராமண எதிர்ப்பு பிரும்மாண்டமான வளர்ச்சியடைய இந்த தவறான முடிவே காரணமாகியது. நம்மை எதிர்ப்போர் “உன் மகனின் / மகள் / மற்றும் பரம்பரையின் வாய்ப்புகளை பிராமணர்கள் பறிக்கிறார்கள்” என்று தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்கள். அந்த வாதம் நன்கு எடுபட்டது. நம்மை எதிர்பவர்களிடம் ஒரு பிரம்பை / கட்டையை கொடுத்து நம்மை அடிக்கும் படி செய்துவிட்டோம். கடந்த மூன்று தலைமுறையாக பிராமண எதிர்ப்பு என்னும் சிலுவையை சுமக்க வேண்டி இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பிராமண துவேஷம் எனும் விஷத்தை ஏற்க வேண்டி இருந்தது.
குறிப்பு : சர் சிபி ராமசாமி ஐயர் என்ற தனி நபரின் மீது குற்றம் சாட்டி நாம் அனைவரும் தப்பிக்க இயலாது. அவர் அந்த காலத்தில் இருந்த நமது குலத்தவரின் மன நிலையை பிரிதிபலித்தார் என்றே கருத வேண்டும்.
நம் வீட்டில் சாக்லட் அதிகம் பெரும் /சாப்பிடும் குழந்தை, அனைவருக்கும் சமமாக பிரிக்க வேண்டும் என்று சொன்னால், அதை எதிர்த்து ரகளை செய்யும். இது மனித மனதின் பலகீனம். இதே பலகீனம் அன்றைய நம் சமூகத்தில் பலருக்கு இருந்தது என்பதை நாம் ஏற்க வேண்டும்.
For your consideration ஒரு சமீபத்திய உதாரணத்தை எடுத்து கொள்ளலாம். 18% சதவீத தலித் இட ஒதுக்கீடு அருந்ததியர் சமூகத்துக்கு கிடைப்பதில்லை என்று ஒரு விமர்சனம். அதாவது, மற்றவர்கள் அருந்ததியருக்கான பங்கை யும் சேர்த்து அனுபவிக்கிறார்கள் என்பது அவர்கள் வாதம்/குற்றச்சாட்டு. அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன் வந்தது. அதற்கு பரவலாக எதிர்ப்பு வந்தது, போராட்டங்கள் கூட நடந்தன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
For your consideration: “தவறு நடக்கவில்லை” என்று சாதிப்பதில் இல்லை நமது சமூக நலம்; “நாங்கள் சரித்திரத்தில் பக்கங்களில் இருந்து பாடம் கற்றோம்; அதை கடந்து வந்துவிட்டோம்” என்று நிரூபிப்பதில் தான் நமது சமூக நலன் இருக்கிறது
போதுமான அளவு சரித்திரம் மற்றும் சமூக மனநிலையை படித்து விட்டோம். சரித்திரத்தை மனதில் நிறுத்தி, எதிர்கால நிலையை எடுப்போம்
2019 Today:
இன்றைய நிலையில் :
காலங்கள் மாறின. நம் மனநிலையும் மாறியது. நமது குலம் மாற்றத்தை ஏற்றுக்கொண்டது.
கடந்த 10 வருடங்களின் நமது இளைஞர்கள் எவரேனும் அரசு வேலைக்கு விண்ணப்பித்தோ, அல்லது TNPC Exam எழுதியோ பார்த்திருக்கீர்களா ?
இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!
அரசு வேலையை நம்பாத ஒரு தலைமுறையை உருவாக்கியிருக்கிறோம். உண்மையில் 45 வயதுக்கு கீழ் உள்ள பிராமண குலத்தை சேர்ந்த அரசு ஊழியர் எவரும் இல்லை. அரசு ஊழியராக இருக்கும் ஒரு சில பிராமணர்கள் Retire வயதை நோக்கியிருக்கிறார்கள். இந்த தலைமுறை இளைஞர்கள் TNPC Exam எழுதுவது கூட இல்லை தமிழக அரசு வேலையில் 100 % சதவீத இட ஒதுக்கீடு அமுலில் இருக்கிறது. இன்றய நிலையில் அரசு வேலையில் நமது பங்கு 0% அருகில் இருக்கிறது.
(For your consideration: நாம் கடந்த கால தவறுகளில் இருந்து விடுபட்டு விட்டோம் என்று உண்மையில் பெருமை படலாம்)
ஆனால் கல்வி துறையில் பாதிப்புக்குள்ளாகிறோம். அதுவும் வசதி குறைந்த மாணவர்கள் கடும் பாதிப்புகுள்ளாகிறார்கள். நம் குலத்திலிருந்து டாக்டர்கள் மற்றும் வக்கீல்கள் வருவது என்பது அரிது.
Other Community – (OC Group) – பார்வையில்
தமிழ் நாட்டில் 69% இட ஒதுக்கீடு அமுலில் இருக்கிறது. 31% Open Category. அதாவது எவர் அதிகம் மதிப்பெண் எடுகிறாரோ அவருக்கு கிடைக்கும். இட ஒதுக்கீட்டில் இருப்பவரும் இங்கு போட்டி போடலாம்.
சுலபமாக புரிந்து கொள்ள : ஒரு BC மாணவர் 99% மதிப்பெண் பெற்றால், அவருக்கு OC Categoryஇல் இடம் கிடைக்கும்.
சமீபத்தில் நடந்த NEET Exam (2018) பற்றிய ஆய்வு:
Total Seats Allocated for OC : 833 (31% of the total Doctor seats in Tamil Nadu)
The community split of the OC category seats as follows.
BC – 434 / MBC – 97 / Backward Muslim: 44 / SC : 36 / SCA : 1
அதாவது 622 இடங்கள் மதிப்பெண்/திறமையின் அடிப்படையில் மேற்கண்ட BC/MBC/SC சமூக மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
The forward community got only 211 out of 833 seats allocated to the OC category. அதாவது மொத்த இடங்களில் 7% இடங்கள் OC category மாணவர்களுக்கு கிடைத்தது
மீதி இருந்த (7% சதவீத) இடங்கள் அனைத்தும் பிராமிணர்களுக்கு மட்டுமே கிடைத்தது என்று வழக்கம் போல் ஒரு வாதம் எழுந்தது. ஸுராஜ்யா பத்திரிகை மொத்தம் உள்ள 211 மாணவர்களின் பெயர்களை வெளியிட்டு ஒரு அலசலை வெளியிட்டது. ஏராளமான கேரளா கிறிஸ்துவர்கள் மற்றும் வட நாட்டு பெயர்கள் அந்த பட்டியலில் இருந்தன. (இது பற்றி திரு ஸ்டாலின் அவர்கள் அரசை குற்றம் சாட்டி அறிக்கை ;வெளியிட்டார். இது மத்திய பிரதேச மாநிலத்தின் வியாபம் ஊழல் போன்றது என்று குற்றம் சாட்டினார் ; ஆனால் எந்த காரணத்தினாலோ மேற்கொண்டு எவரும் இதை பேசவில்லை).
பெயர் அடிப்படையில் பிராமண மாணவர்களை அடையாளம் கொண்டால் சுமார் 50 முதல் 70 பெயர் வரை வருகிறது. அதாவது சுமார் 0.50% முதல் 0.75% வரை மட்டுமே பிராமண மாணவர்கள். ஆனால் கண்டிப்பாக 1% குறைவாக இடங்கள் மட்டுமே பிராமண மாணவர்கள் NEET ல் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என கொள்ளலாம். (இது மிக சரியான கணக்கீடு முறை அல்ல. சாதிவாரியாக அரசு தகவல்களை அளிப்பதில்லை. நம்மிடம் உள்ள தகவல்கள் அடிப்படையில் உண்மைக்கு மிக அருகே தோராயமாக கணக்கிடுகிறோம்).
Fair Guess : மொத்த இடங்களில் OC Category 5% கீழான இடங்களை மட்டுமே பெறுகிறது
ஐயர், ஐயங்கார், சைவ பிள்ளை, சைவ முதலியார், நாட்டு கோட்டை செட்டியார், கம்மவார் நாயுடு என தோராயமாக 100 சாதிகள் OC பிரிவில் இருக்கின்றன. மொத்த மக்கள் தொகை 15% முதல் 20% வரை இருக்கலாம். ஆனால் 5% கீழான இடங்களுக்கு போராடி கொண்டிருக்கிறார்கள்.
இந்த பொது இடங்களுக்கு அண்டை மாநில மாணவர்களும் இங்கு வந்து போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்கள். இங்கு இருக்கும் சமூக நீதி வீரர்களின் வாதம் இதுதான்.
“கேரளா கிறித்துவரோ / வடநாட்டு செட்டோ இங்கு வந்து NEET எக்ஸாம் எழுத்து OC Categoriy வெற்றி பெற்று டாக்டர் ஆகலாம். ஆனால் ஒரு ஐயரோ, செட்டியாரோ, பிள்ளைமாரா டாக்டர் ஆகக்கூடாது”; உங்கள் சமூக நீதியை நினைத்து நொந்து கொள்ள தான் வேண்டும்.
இப்போது இந்த அநியாயத்துக்கு ஒரு முடிவு வந்திருக்கிறது. மத்திய அரசு 10% இட ஒதுக்கீட்டை OC பிரிவுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்தியா முழுவதும் இந்த புதிய இட ஒதுக்கீடு அமுல் செய்யப்பட, தமிழ் நாட்டில் மட்டும் இதற்கு திராவிட கட்சிகளால் எதிர்ப்பு உள்ளது. தமிழ் நாட்டில் OC category காண இட ஒதுக்கீடு அமுல் செய்ய பட மாட்டாது
இந்த எதிர்ப்பை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று ஆராயலாம். முதலில் நாம் தமிழ் நாட்டின் கள நிலவரத்தை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.
கள நிலவரம் 1: பிராமண வெறுப்பும் அதன் ஒரு காரணியான இட ஒதுக்கீடும்
ஒரு சமுகத்தை சேர்த்தவர் மீது அவரின் பிறப்பின் அடிப்படையில் வெறுப்பை உமிழும் கூட்டம் எல்லா காலத்திலும் இருத்திருக்கிறது. முஸ்லிம்கள் / கிறிஸ்த்தவர்கள் / தலித்துகள் / தெலுங்கு / மலையாளம் / கன்னட பேசுவோர் மீது பிறப்பின் அடிப்படையில் வெறுப்பு காட்டுபவர்கள் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் சில மாவட்டக்களில் பெரும்பான்மையாக இருக்கும் சமூகங்களின் மீது அநியாயமாக பழி சுமத்தி பேசுபவரும் இருக்கிறார்கள். ஒரு மனித கூட்டத்தை பற்றி மோசமாக பேசுபவன் / எழுதுபவன் மனதில் வெறுப்பு எனும் குஷ்டம் படர்ந்து இருக்கிறது.
இப்படி மற்ற சமூகங்கங்ககளின் மீது வெறுப்பு உமிழ படும் பொது, தமிழர் மனசாட்சி விழித்து கொள்கிறது. பெரும்பாலோர் இத்தகைய செயலை செய்பவரை எதிர்கிறார்கள். வெறுப்பு செய்தவர் பதுக்கி போகிறார் அல்லது தன் பேச்சை மாற்றி கொல்கிறார். நம் தேசம் ஆஃப்ரிக்க நாடுகளை போல் இன வாரியாக அடித்து கொண்டு ரத்த வெள்ளமாக ஆகாமல் இருப்பதற்கு நமது பெரும்பாலான மக்களின் மனசாட்சியுடன் கூடிய எதிர்ப்பே காரணம். இந்த நாட்டை அதுவே காக்கிறது.
ஆனால் பிராமணர்களை மீது காட்டும் வெறுப்புக்கு தமிழ் சமூகத்தின் மனசாட்சி அதிகம் எதிர்ப்பு காட்டுவதில்லை. பிராமணர் மீது வெறுப்பை உமிழுபவர் “சமூக நீதிகாக போராடுபவர்” என்று ஒரு முகமோடியின் பின் நிற்க்கிறார். உங்கள் பிள்ளைகளின் வேலையை / படிப்பை பிராமணர்கள் பிடுங்கி கொள்ளாமல் நங்கள் தடுப்போம் என்று பிராமண எதிர்ப்பாளர் கூறி கொள்கிறார். மற்றவர் வெறுப்பினால் பாதிக்கப்படும் போது ஏற்படும் மனசாட்சியின் குரல், பிராமணர் பாதிக்கப்படும் போது பெருமளவு அமைதியாகி விடுவதற்கு இதுவே காரணம் .
ஒரு உதாரணம் மூலம் இந்த மனோ நிலையை விளக்கலாம்.
உங்கள் தெரிவில் 4 பேர் சேர்ந்து ஒரு ஒல்லியான மனிதனை அடித்து கொண்டு இருப்பதை பார்க்கிறீர்கள். உடனே “ஏம்ப்பா இவனை அடிக்கிறாய் ?” என்று அந்த மனிதனுக்கு ஆதரவாய் குரல் கொடுக்கிறீர்கள். அடித்தவர்கள் “சார்!, உங்க வீட்டுலேருந்து குதித்து வந்தான். உங்கள் வீட்டுக்கு திருட வந்தவன் இவன்”. என்று சொன்னால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும். நீங்கள் உங்கள் மன சாட்சிக்கு விடை கொடுத்து அனுப்பி விடுவீர்கள். இதுவே யதார்த்தம்.
இது தான் தமிழ் நாட்டிலும் நடக்கிறது. “பார்ப்பனர்கள் உங்கள் வேலை வாய்ப்பை திருடி கொள்கிறார்கள். இட ஒதுக்கீட்டை எப்படியாவது அழிக்க நினைகிறார்கள்.” என்று ஒரு பிரச்சாரம் நடக்கிறது. அதன் விளைவு, தமிழர் தம் மனசாட்சி நம் விஷயத்தில் அதிகம் விழிப்பது இல்லை.
இதில் இன்னொரு பக்கமும் இருக்கிறது. நம்மவர் பலர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுவதை தொடர்ந்து செய்கிறார்கள். நம்மில் பலர் இட ஒதுக்கீடு பெறுபவர் திறமை குறைவானவர்கள் என்று வாதிடுவதையும் பார்க்கிறோம். இதை விட முட்டாள் தனமான வாதம் எதுவும் இல்லை
திறமை என்பது நம் குலத்துக்கு மட்டுமே உள்ளது என்றால் ஒவ்வொரு கல்லுரியில் 31% (OC Quota ) நம் குல மாணவர்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால் அப்படி இல்லை. OC quota வில் BC மற்றும் இதர பிரிவினர் பெருமளவில் வெற்றி என்பதை முன்பே பார்த்தோம்
For your consideration: (NEET) OC யில் நம் பங்கு 0.5% போக, 30.5% மற்றவரே திறமை அடிப்படையில் பெறுகின்றனர்.
இப்போது B.E உதாரணத்தை பார்ப்போம்
அண்ணா பல்கலை கழகத்தின் B.E – Civil இட ஒதுக்கீடு (2017)
OC – Cut off Mark : 197.5
BC Cut off Mark : 197.00
OC and BC cutoff வித்தியாசத்தை பாருங்கள். நம்மில் பலர் எவ்வளவு அறியாமையில் இருக்கின்றோம் என தெரியும்.
197.50 (OC)வாங்கியவன் புத்திசாலி.
197 (BC) வாங்கியவன் முட்டாளா? அறிவு உள்ளவன் இப்படி சொல்வனா?
தனிப்பட்ட முறையில் ஒருவர் தன் மகனின் திறமை பற்றி உயர்வாகவும் உங்கள் மகனை / மகளை திறமை பற்றி தாழ்வாகவும் பேசி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரை, எவ்ளவு நல்லவராக இருந்தாலும், உங்களுக்கு பிடிக்குமா? அவரின் மீது வெறுப்பு வருமா வராதா? ஏனேனில் உங்கள் மகனும் திறமைசாலி தான் . அது மட்டும் இல்லாமல் உங்கள் சுய மரியாதையை அவர் கேவல படுத்துகிறார். அவர் மீது உங்களுக்கு வெறுப்பு வந்தால் அது சரியே.
மற்றவரை பற்றி மோசமாக பேசுபவர், ஊரை பகைக்கிறார் என்று அர்த்தம். அவரின் அழிவை ஊர் கொண்டாடும். அவர் நாகரிகம் இல்லாதவர் என்று அறியப்படுவார். அவர் தன் நண்பர்களால் மறைமுகமாகவும் எகிரிகளால் மிக கேவலமாகவும் திட்ட படுவார். அது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பதோடு முடிந்துவிடும்.
ஆனால் ஒரு (பிராமண) குலத்தை சேர்ந்த சிலர் “தாங்களே அறிவாளிகள்” என்றும் மற்றவர் மூடர் என்றும் பொது வெளியில் சொல்லி திரிந்தால் அந்த குலத்தின் மீது வெறுப்பு படரும். அந்த குலத்தை மெதுவாக அழிக்கும். எவன் ஒருவன் நம் குலத்தை மற்றவர் வெறுக்கும்படி தன் பேச்சால் / எழுத்தால் / செயலால் செய்கிறானோ அவன் நம் குலத்தை அழிக்கும் பாவத்தை சுமக்கிறான்.
நாம் அறிவிக்க வேண்டியது:
பிராமணர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் இல்லை. எங்களில் ஏழைகளுக்கு / முதல் தலைமுறை படிப்பவர்களுக்கு 2% இட ஒதுக்கீடு வேண்டும்.
1. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். (ஒரு தரம்)
2. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். (இரண்டு தரம்)
3. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். (முன்று தரம்)
எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்
அவ்வளவு தான்.
முக்கிய குறிப்பு :
இனி, இட ஒதுக்கீடு குறித்து நம்மவர் எவரேனும் தவறாக பேசினால், பிராமண எதிர்ப்பை / வெறுப்பை வளர்க்கும் செயலாக கருத வேண்டும். அவர்களுக்கு ‘பிரும்ம ஹஸ்தி தோஷம்” பிடிக்கட்டும் என சபிக்கிறோம்.
X-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
கள நிலவரம் 2: 10 சதவீதத்தில் நமக்கான பங்கு எவ்வளவு? ஏன்?
Option 1: 10 சதவீதத்தை பிராமணர்களுக்கு 2% மற்றவர்களுக்கு 8%
Option 2 : 10 சதவீதத்தை பிராமணர்களுக்கு 2% மற்ற சமுகத்தை இரண்டாக பிரித்து 4% + 4% சதவீதம்
Option 3 : 10 சதவீதத்தை 3 பங்குகளாக பிரிக்கலாம் (4% + 3% + 3%). தற்போதுள்ள OC ஜாதிகளை 3 தனி பிரிவுகளாக பிரித்து இடம் ஒதுக்கலாம். இதில் ஏதாவது ஒரு பிரிவில் பிராமணர்கள் இடம் பெறுவார்கள்.
இப்படி கேட்கும் போது என்ன நடக்கும் என்று பார்க்கலாம்:
நமக்கு 2% போதும். இது கிடைத்தாலே தற்போதைய நிலையை விட, நாம் 4 மடங்கு அதிகம் டாக்டர்கள் ஆவோம். 4 மடங்கு வக்கீல்கள் ஆவோம். 1000 மடங்கு தமிழ் ஆசிரியர் ஆவோம். தமிழ் நாட்டில் அரசு பணியில் நாம் இருப்போம். மக்கள் தொடர்பு பணியில் இருப்போம். டெக்னாலஜி மட்டும் கட்டி கொண்டு இருக்காமல், தமிழ் நாட்டை விட்டுக்கு வெளியேறி வாழாமல் இருப்போம்.
2% போதும் ; 2% போதும் ; 2% போதும்.
கள நிலவரம் 3: திராவிட சிந்தலையாளர் எதிர்ப்பை எதிர் கொள்ளவது எப்படி?
இவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்
முதல் வகை: நம் சமூகத்தின் பெரும்பாலான (அல்லது அனைத்து) பிரச்சனைகளுக்கும் பார்ப்பான் கரணம் என்று மனதார நம்புபவர்கள். ஒரு தலித் தாக்க பட்டால், அல்லது ஒரு அநியாயம் நடந்தால், ஜாதி பார்க்காமல் எதிர்த்து குரல் கொடுப்பார்கள். பார்ப்பனர்கள் அவர்கள் வீட்டில் குடி இருந்தாலோ / அல்லது அவர்கள் நிறுவனத்தில் குடி இருந்தாலோ அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்களுக்கு இருப்பது பார்ப்பன எதிர்ப்பு (வெறுப்பு எனும் அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் இருக்க செய்வது அவர்களின் மன சாட்சி)
இரண்டாம் வகை : வெறுப்பு / வெறுப்பு அதுவே அவர்களின் பிழைப்பு. அவர்களின் முதலீடு – பார்ப்பன வெறுப்பு. பலன் – பதவி / அதிகாரம் / பணம்; எந்த கேவலமான வார்த்தையையும் பார்ப்பனர் மீது பயன் படுத்தலாம். பெரும்பாலும் அதற்கு கை தட்ட ஒரு கூட்டம் காத்திருக்கும். அவர்களுக்கு பெரும் பணம் காத்திருக்கிறது. இவர்களுக்கு யார் பணம் தருகிறார்கள் என்பதை பற்றி பல செய்திகள் இருக்கின்றன. இடம் இல்லாத காரணத்தினால் அவற்றை பற்றிய தகவல்களை தவிர்ப்போம்.
முன்றாம் வகை : தான் மாட்டி கொண்டால் உடனே கவனத்தை திருப்ப பார்ப்பன எதிர்ப்பு. அவர்கள் பார்ப்பன எதிர்ப்பை பேச ஆரம்பித்தவுடன் ஒரு கூட்டம் அவர்களை ஆதரிக்க ஆரம்பிக்கிறது. மேடை தருகிறது. சில நேரங்களில் தம் தலைமையை கவர, புதிய கட்சியில் தன் விசுவாஸத்தை நிரூபிக்க என பல நேரங்களில் பார்ப்பன எதிர்ப்பை கையில் எடுக்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் இன்ஸ்டன்ட் இட்லி மாதிரி; 3 முதல் 12 மாதம் வரை பார்ப்பன எதிர்ப்பை பேசுவார்கள் – அவ்வளவு தான்;
இவர்களை மாற்ற நினைப்பது நடக்காத காரியம். ஆனால் இவர்களின் ஆயுதத்தை செயல் இழக்க செய்யலாம்.
நாம் 2% எங்களுக்கு போதும் என அறிவித்தால், நம்மை எதிர்ப்பவர் பேசுவதை கேளுங்கள்.
பார்ப்பனர்கள் இட ஒதுக்கீடை ஆதரிக்கிறார்களாம். இது பெரியாருக்கு வெற்றி. நம் திராவிட இனத்துக்கு வெற்றி. (கை தட்டல்)
பார்ப்பனர்கள் தங்களுக்கு 2% வேண்டும் என்று கேட்கிறார்கள். அரசு ஊழியர்களாக நீங்கள் கொள்ளை அடிப்பது போதாதா. ஏற்கனவே உங்களிடம் இருப்பது போதாதா. (கூட்டம் கொஞ்சம் குழப்புகிறது – கடைசியாக எந்த வருடம் நான் பார்ப்பன அரசு ஊழியனை பார்த்தேன்… எவனுமில்லை);
2% ஒதுக்குவது சமூக நிதிக்கான எதிரான செயல்; பெரியாருக்கு / அண்ணாவுக்கு நாம் செய்யும் துரோகம். அனுமதிக்க மாட்டோம்
மற்ற முன்னேறிய சமூகத்தினர் 8% ஒதுக்கீடு கேட்கிறார்களாம். நீ ஏன் பார்ப்பானுடன் இருக்கிராய். நீ என் இனம். உனக்கு கொடுப்பதில் தடை இல்லை. ஆனால் பார்ப்பானுக்கு 2% கொடுக்க மாட்டோம்
(இப்படி இவர்கள் பேச வேண்டும் என்று நம் குல தெய்வத்தை வேண்டி கொள்வோம்; இவர்களின் முகமுடி கழன்று விழும். தமிழ் நாட்டில் மனா சாட்சி நமக்காக விழித்து கொள்ளும். திராவிட சமூக சீர்திருத்த நாடகத்தின் கடைசி காட்சியாகும்)
2% மட்டும், அதுவும் ஏழைகளுக்கு / முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு (அர்ச்சகர் மற்றும் சமையல் தொழில் செய்பவர் போன்ற) கொடுப்பதை தமிழ் மக்களின் மனசாட்சி ஏற்கும். கூட்டம் சிரிக்கும். தமிழ் நாட்டு மக்கள் நம்மை எதிர்பவரை பார்த்து சிரிக்கவே செய்வர்.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
நாம் புரிந்து கொள்ள கள நிலவரம் பார்த்தோம்;
இப்பொது வெற்றி பெரும் வழி முறைகளை அல்லது நாம் தோற்கும் வாய்ப்புகளை தவிர்ப்பது எப்படி? என்று பார்க்கலாம்.
தமிழ் நாட்டில் சுமார் 75 முதல் 100 ஜாதிகள் OC categoryல் இருக்கிறார்கள். அவர்களின் கூட்டமைப்பு அமைக்க பட வேண்டும் (முயற்சி நடப்பதாக தெரிகிறது)
1. ப்ராமண சங்கமோ / அல்லது பிராமண தனி நபரோ – தலைமை ஏற்க கூடாது.
2. அனைத்து கட்சியினரும் அந்த கூட்டமைப்பில் இருக்க வேண்டும். அனைவரையும் சந்திக்க வேண்டும். நமக்கு எதிராக செயல் படும் காட்சிகளை கூட தொடர்பு கொள்ள வேண்டும். அது அவர்களின் எதிர்ப்பை குறைக்கும்.
3. சில “அட்மின்” களை “தயவு செய்து சர்ச்சையாக எதையாவது எழுதி காரியத்தை கெடுத்து விடார்த்தீர்கள் என்று கலீல் விழுந்து கேட்டு கொள்ள வேண்டும்
4. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எவர் பேசினாலும் அவரை எதிர்க்க வேண்டும். அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் 10% இட ஒதுக்கீடு செய்யும் கட்சிக்கே நம் OC Categoryல் உள்ளவர்கள் வாக்கு அளிப்பார்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
சில எதிர் வாதங்கள் / நம் தரப்பு வாதங்கள்.
வாதம் 1 : ஏழைகள் என்பதற்கு வருடத்துக்கு 8 லட்சம் என்று வரைமுறை வைத்து இருக்கிறார்கள். இது முறையா?
நம் வாதம் 1: இந்திய அரசு BC/SC Categoryல் சலுகை அனுபவிக்க 8 லட்சம் என்று விதிமுறை வைத்து இருக்கிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் அது 5 லட்சம் என்று இருந்தது. சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் மோடி அரசு அதை 8 லட்சம் என மாற்றி அமைத்தது. (இப்பொது பேசும் நியாயவான்கள், அப்போது வாய் திறக்கவில்லை) ; இந்திய அரசு கொள்கை படி ஒரு நபர் இட ஒதுக்கீடு பெற அவரின் வருமானம் 8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். அவர் OC/BC/ST என்று எதுவாக இருந்தாலும் இதுவே கொள்கை. நம்மை பொறுத்தவரை 8 லட்சத்தை குறைத்தால் கண்டிப்பாக வரவேற்போம்.
வாதம் 2: IITல் professor களாக 75% பேர் மேல் சாதிகாரர்கள். IIT professorகளாக 65% பேர் மேல் சாதிகாரர்கள். மத்திய அரசு பணியில் இன்னமும் 27% BC வரவில்லை. Etc Etc
நம் வாதம் 2 : இதில் மேல் சாதி என்பது என்ன என்று விளக்க வேண்டும். தமிழ் நாட்டில் 12500 கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில் 95% கிராமங்களில் ஒரு பிராமணர் கூட இல்ல. அப்படி என்றால் தமிழ் நாட்டு கிராமங்களில் மேல் சாதியினர் இல்லவே இல்லையா.
ராஜஸ்தானில் / மத்திய பிரதேசம் / உத்தர பிரதேசம் பகுதியில் உள்ள குஜ்ஜார் எனும் ஜாதியை சேர்த்தவர்கள், நாங்கள் 7 கோடி பேர், எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என பெரும் போராட்டம் நடத்தினர். குஜராத்தில் படேல் ஜாதியினர் தங்கள் 2 கோடி என்றும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் கேட்டனர். மஹாராஷ்ராவில் மாறாட்ட ஜாதியினர் இதே போல் போராடினர். இவர்கள் அனைவரும் OC Categoryயை சேர்ந்தவர்கள் பிராமணர்கள் மட்டும் என்று சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது.
எங்களை பொறுத்தவரை 27% இட ஒதுக்கீட்டை ஒழுங்காக அமுல் படுத்து. அதை செய்யா விட்டால் அது கிரிமினல் குற்றமாகும். அது போல தலித் என்று பொய் சான்று கொடுத்து இட ஒதுக்கீடு பெறுபவற்றையும் கைது செய்ய வேண்டும்.
மத்திய அரசு நிறுவனத்தில் எங்காவது ஒரு சாதி பிரிதிநித்துவம் அதிகம் இருந்தால், அவர்களுக்கு ஓய்வு கொடுத்தாலும் எங்களுக்கு ஆட்சபனை இல்லை.
நங்கள் கேட்பதெல்லாம் தமிழ் நாட்டில் எங்களுக்கு உரிய பங்கை தாருங்கள்
இந்த பதிவை / புத்தகத்தை காட்டு தீ போல் பரவ செய்யுங்கள்.
இவண்
தன் குலம் மீது பாசம்; மற்ற அனைவருடன் நேர்மையான நட்பு;
தமிழ் மீது காதல்; தாய் நாட்டின் மீது மாறாத பற்று;
இறையே! இவையே நாம் வேண்டுவது.
Regards
Admin.
முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அலசல் நடுதிலையாக எழுதப்பட்டுள்ளது. இதில் இல முக்கிய சங்கதிகள் உள்ளன.
1) பிராமணர்கள் மட்டும் திறமையானவர்கள் என்ற வாதம் கூடாது.
2) நடைமுளையில் இருக்கும் இட ஒதுக்கீட்டை எதிர்க்க கூடாது. காலத்தின் கட்டாயமாக அதை ஒன்றுக்கொள்ள வேண்டும்.
3) EWS இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களின் கருத்தை மாற்ற முயல வேண்டும்.
4) EWS ல் உள்ள 10% ல் பிராமணர்களுக்கு 2% அல்லது 3% போதும.
மேற்சொன்ன நான்கில் முதல் மூன்றும் ஒரே விஷயத்தின் வெவ்வேறு நிலைகள்தான். இவற்றை பரவலாக கொண்டு செல்ல வேண்டியது அவசியம். பிராமணர்கள் அனைத்துக் கட்கிகளிலும் சேர்ந்து ஆனால் தங்களுக்குள் பிரிவுபடாமல் ஒரே தளத்தில் தளத்தில் இயங்க வேண்டும். இது மிகவும் சிரமமான ஆனால் அவசியமான வேலை.
நான்காவதாக சொல்லப்பட்ட உள் ஒதுக்கீடு இந்த நிலையில் அவசியபில்லை. இதில் நம்மவர்கள் எவ்வளவு சதவீதம் பயன் பெறுகிறார்கள் என்பதை கணக்கில் கொண்ட பிறகு வலியுறுத்தலாம்.ஆரப் பத்திலேயே நம்பங்கை குறைத்துக் கொள்ளக் கூடாது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் OBC பிரிவினரின் வருமான வரம்பான ரூ 8 லட்சத்தில் பயனாளரின் பெற்றோரின் சம்பளம் வருமானத்தில் சேராது. ஆனால் EWS ல் பயனாளர் பெற்றோரின் சம்பளம் ரூ 8 லட்சத்தில் சேரும். இந்த ஓர வஞ்சனை களையப்பட வேண்டும். இந்தக் கருத்து சரியா என்பது விவாதிக்கப்பட வேண்டும்.
முயற்சி வெள்ளி பெற நம் சமூகத்தில் வசதியான, சமுக அந்தஸ்து உள்ளவர்கள் மனது வைத்து முன் வரவேண்டும் வேண்டும். ஏழை சொல் அம்பலமேறாது.
முயற்சி வெற்றி பெறட்டும் !
Excellent Analysis with practical solutions… superbly crafted