Category Archives: 56 வயதினிலே

Jallikattu – a Real warrior

Jallikattu – our Real Warrior – 20 years of dedicated service for  Cow production and  organic forming; If you are 40+, it is mush read article   56 வயதினிலே –  இனிய மனிதர்கள் வரிசை “பசு” ராகவன்

Introduction:

10-20’ல் படிப்பு / 20ன் முடிவில் திருமணம் / 50 களில் ஓய்வு.  காலச்சக்கரம் சுழல நம் வாழ்கை பயணம்.  நம் முன்னோர் வாழ்க்கையை  1. பிரம்மச்சரியம்  2. குடும்பஸ்தன்  3. வனவாசி  4. சன்யாசி என்று நான்கு வகைகளாக பிரித்தார்கள்.  நாம் முதல் இரண்டை வாழ்த்து பார்க்கிறோம்.  ஆனால் 50-60 இல் டிவி சீரியல் நம் வாழ்க்கையை முடித்து வைக்கிறது.  நாம் பெற்ற வாழ்கை கல்வி பெரும்பாலும் வீணாகிறது.

வனவாசி  :  இன்றைய Definition “சமுகத்துக்கு வாழ்பவன்” என்று கொள்ளலாம்.   இந்த இனிய மனிதர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்க்கிறோம்.

“பசு” ராகவன் :

ராகவன்.  27ல் திருமணம்;  2 குழந்தைகள்;   சொந்த பிசினஸ்;   கையில் சில்லரை;   கொஞ்சம் சேவை மனம்;  குழந்தைகள் வளர இருவருக்கும் திருமணம்;   சம்சார கடலில் 75% கடந்தாகிவிட்டது.  எதிரில் உள்ளது “ரெகுலர்” வாழ்கை:  டிவி சீரியல்-பேரன், பேத்தி புராணம் – முட்டி வலி – சர்க்கரை – “Wait for Death”.    அனால்  மனதில் கேள்வி?   அடுத்து என்ன?   என் உலக கடமை என்ன?

ஒரு முறை காஞ்சிக்கு சென்றார். (ஐயங்கார் மாமா. அனாலும் காஞ்சி பக்தி ).  பெரியவர் தரிசனம்.  மன சலனம் பற்றி கேட்டார்   “அதுவாய் உன்னை தேடி வரும். அதுவாய் உன்னை விட்டு போகும்” என்று பதில் வந்தது.

வந்தது.  ஒரு விவசாயியை சந்திக்கும் வாய்ப்பு.  விவசாயின்  வேதனை கதை.  இடு பொருள் + உழைப்பு = தோல்வி (வருவாய் இல்லாமை).

ராகவனுக்கு விவசாயம் தெரியாது.  சென்னை மனிதர்.  பேண்ட் & சட்டை மற்றும் Schooty ல் வலம்  வருபவர் மற்றும் அந்த கால BA.  விவசாயம் பற்றி துளியும் தெரியாது.  ஆனால் மனதில் வலி. ஒரு விவசாயி தோற்க என்ன காரணம் என்ற தேடல் மூளையில் துவங்கியது.     அன்றைய இரவு தூக்கமில்லை.  மன்னி (அல்லது ராகவன் மாமி )  தூக்கம் வராததற்கு காரணம் அஜிரணம் என்று நினைத்து கஷாயம் காச்சி கொடுத்தார்.  அவருக்கு தெரியாது குழப்பம் வயிற்றில் இல்லை, புத்தியில் / மனதில் என்று.

நம் நவீன விவசாயம் பற்றி படித்தார்.  நம் பாரம்பரிய விவசாயம் பற்றி படித்தார்.  பசுவுக்கும் விவசாயதுக்கும் உள்ள தொடர்பு புரிந்தது.  நம் நாட்டு பசு மூலம் கிடைகும்  உரமே விவசாயத்தை காக்கும் என்று புரிந்து கொண்டார்.  படிக்க படிக்க பசு அவரை கவர்ந்து இழுத்தது.  பாலேக்கர் / நம்மாழ்வார் என தொடர்பு ஏற்படுத்தி கொண்டார்.   பசு பாதுகாப்பு பற்றி பேசினார் / எழுதினார்.

பெரியவர் வாக்கு நிஜமானது.  நன்கு ஓடிய  BUSINESS ஒரு பெட்ரோல் தீர்ந்த வண்டியை போல்  நின்று போனது.  அனால் அவருக்கு குழப்பம் ஏதும் இல்லை.  அவர் அடுத்த கட்டத்தில் இருந்தார்.   56 வயதில் ஒரு புதிய அத்தியாயம் அவருக்கு இருந்தது.    வெறும் ராகவன் இப்போது “பசு” ராகவன் ஆனார்.

அப்போதைய மத்திய அமைச்சர் மேனகா காந்தி “பசு” ராகவனை விலங்குகள் வாரிய உறுப்பினர் ஆக்கினார்.  இந்தியாவெங்கும் “கோ சாலா” நடத்தியவர்களை சந்திக்கும் அனுபவம் கிடைத்தது.     பால் மரத்த மாடுகளை அடி மாடக  அனுப்பும் கொடுமையை கண்டார்.  பசு பால் தரவில்லை என்றாலும் அது பணம்/பலன்  தரும் என்று நிரூபிக்க பல ஆராய்ச்சி  மேற்கொண்டார்.

தன் முதல் கோ சாலாவை   தாம்பரத்தை  அடுத்த சிங்க பெருமாள் கோயில் பகுதியில் ஆரம்பித்தார்.  இரண்டாவது கோ சாலா திருவாரூர் மாவட்டத்தில் ஆரம்பிக்க பட்டது.  அங்கு இருந்த விவசாயிகளுக்கு “இயற்கை விவசாயம்” பற்றி வகுப்புகள் எடுத்தார்.   நாட்டு பசுவின்  முலம் “பஞ்ச காவியா” என்ற இயற்கை உரத்தை நம் பாரம்பரிய முறையில் தயாரிக்க கற்று கொடுத்தார்.  கோ சாலா வை சுற்றி பல நிலங்கள் இயற்கை விவசாய முறையில் பூத்து குலுங்கின.

Wipro/TCS/Infosys என்று நண்பர்கள் அழைத்த பொது அவர்களுக்கு “உணவும் வாழ்வியலும்” என்ற தலைப்பில் வகுப்புகள் எடுக்கிறார்.

ஒரு பக்கம் பேரன் பேத்திகளை கொஞ்சுகிறார். மறு புறம் “பஞ்ச காவ்யா” தயாரிக்க சாணம் அள்ளுகிறார். அடுத்த நாள் எதோ ஒரு கார்பொரேட் கம்பனியில் Computer – PPT யுடன் கிளாஸ் எடுக்கிறார்.    இயற்கை தேன் வாங்கிக்கேறிங்களா? என்று தேன் பாட்டிலும் தெனை மாவும் விற்கிறார்.  இனிக்கிறது, அவரின் வாழ்கை போல.

பொழுது போக்கு என கேட்டால் “பிரபந்தம்” படிப்பது என்கிறார்.  அடிக்கடி மாமி யை அழைத்து கொண்டு பல கிராம விஜயம்.  அங்குள்ள பெருமாள் கோயில் தரிசனம் என ஆன்மீகத்தில் கலக்குகிறார்.

அவரின் பேச்சை கேட்க அடுத்த கூட்டம் தயாராகிறது.  இயற்கை வேளாண்மை மற்றும் பசு மாட்டின் பெருமை பற்றிய நீண்ட சொற்ப்பொழியு  கேட்ட அந்த கார்பொரேட் இளைசர்கள் தயாராகிறார்கள்.

எப்படி மாமா இந்த வயதில் இவ்வளவு ACTIVA  இருக்கீங்க?    என்று கேட்டோம். பக்கத்தில் இருந்த அவர் நண்பர் (Same age) “ACTIVE” வா இருக்கியா என்று அழுத்தி  சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்தார்.  நாங்கள் புரியாதது போல் இருதோம்.  “டே … சும்மா இருடா” என்று செல்லமாய் அவரை கடிந்து கொண்டார்.  “Live is a verb.  My live is nothing but my activity.  that’s it”.

இளமையை அனுபவித்தவர்கள். பணம் சேர்க்க தன் வாழ்நாளை செலவிட்டவர்கள்.  ஒய்யூ காலம் என்பது ஒய்ந்து போன காலம் இல்லை என உணர்த்தினார்கள்.   56 வயதில் கலக்குகிறார்கள்.

நம் நெஞ்சம் நிரம்ப விடை பெற்றோம்.

To hear his speech: