Category Archives: நம்ம கோயில் Project

அர்ச்சகன் பேசுகிறேன்

அர்ச்சகன் பேசுகிறேன் :

தங்கத்தில் கூரை வேய்ந்த கோயில்;  கடும் கூட்டம்;  பளபளபான  அர்ச்சகன்;  கழுத்தில் மெல்லிய செயின்; காதில் கடுக்கன்;  கேட்காமல்  கொட்டும் பணம்; வெளி மாநிலத்தவர் “பண்டிட்ஜி” என வணங்கும் தோற்றம்; அழுக்கிலா வேட்டி; வெள்ளி சரிகையில் அங்க வஸ்திரம்; சொந்தம் மற்றும் சுற்றதாரிடம் மதிப்பு;  பசு நெய்யினால் வந்த தேஜஸ்;  செல்வாக்கு உள்ளவர் கூட மதிக்கும்   தோற்றம்;

ஒரு அர்ச்சகர் என்றவுடன் உங்களுக்கு வரும் பிம்பம் இது.

NammaSevaProject Execution – MBA Case Study Experience

Note :  Read when you find lot of time and you are really bored or nothing important to do.  

We assure a Tiny smile as a gift.

BrahminsForSociety.com –  Dream story to reality – Project Execution – a Fun Story

Start:

We, Bramins for Society dot com, prepared a master list of our community needs.  We want to give a spicy / interesting reading.  So, based on the need list, we have published dream stories in our website (You can see all the stories in கனவுகள் தேவைகள் menu of our site). 

நம்ம கோயில் Project

மிக மிக முக்கியமான பதிவு: ஒரு நல்ல முயற்சி வெற்றி பெற அது அதிகம் பேரை சென்றடையவேண்டும். இதை படிக்கும் அனைவரும் ஷேர் செய்ய வேண்டுகிறோம். இந்த முயற்சியில் பங்கெடுத்து கொள்ளுங்கள். பாலம் கட்டப்படுகையில் பலம் அதிகம் உள்ளோர் பாறையை எடுத்து கொடுங்கள். பலம் குறைத்தோர் மணலையாவது தள்ளுங்கள்.

ஒரு பிரச்சனை – தீர்வை தேடி 
நாம் தொடர்ந்து ஒரு பிரச்னையை பற்றி FB / Watt’s up படிக்கிறோம். பாழடைந்த கோயில்; ஒரு அர்ச்சனை கூட செய்ய முடியாத கோவில்; நம் அரசர்களால் கட்ட பட்ட கோயில்; தமிழ் வளர்த்த கோயில்; அர்ச்சகர் / பட்டாச்சாரியார் ஒரு சிறு வருமானம் இல்லாத கோயில். அரசு அறநிலைய துறை என்ன செய்கிறது ? என்று கேள்வி வரும். மனம் உறுத்தும். வலிக்கும். ஆனால் என்ன செய்வது என்பது தெரியாது. எப்படி உதவுவது என தெரியாது. செய்தியின் நம்பகதன்மையும் தெரியாது. மனம் வலித்தாலும் நாம் கடந்து போவோம் மறுமுறை இதே போன்ற செய்தியை படிக்கும் வரை …..
நமது சமூகத்தை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தங்களால் முடிந்த வரை பல கோயில்களுக்கு உதவுகிறார்கள். ஆனால் நம் பங்களிப்பு என்ன என்ற கேள்வி மனதில் வருகிறது