Category Archives: Tamil Writers

கி.ரா.நினைவலைகள்: “சபையால் புறக்கணிக்கப்பட்டவன் நான். எனக்கு எந்த எதிர்பார்ப்புமில்லை!”

உடல்நலக் குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த கி.ரா, நேற்று காலமாகிவிட்டார். அவரது உடல் இன்று மதியம் புதுவையிலிருந்து அவரது சொந்த ஊரான இடைசெவலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

“எனக்கு ஒரே ஒரு ஆசை… எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்… நல்ல உழைப்பாளி… ஆரோக்கியமான உடம்பு… வயது தொண்ணூறை நெருங்குது… ஒருநாள் இரவு கட்டில்ல அசந்து தூங்கிக்கிட்டிருந்தாரு. வழக்கமா காலையில நாலு மணிக்கெல்லாம் எழுந்து நடக்க ஆரம்பிச்சிருவாரு… ஆனா அன்னிக்கு இன்னும் எழுந்திருக்கலே. சரி, வேலை அலுப்பா இருக்கும்ன்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க. நல்லா விடிஞ்சிருச்சு, அப்பவும் எழுந்திருக்கலே. விடிஞ்சு பாத்தா கட்டையா விரைச்சுட்டார். கைகளை எல்லாம் கஷ்டப்பட்டுத்தான் பிரிக்க வேண்டியிருந்துச்சு. எல்லாரும் சொன்னாங்க… ‘எப்பேர்ப்பட்ட சாவு… நமக்கும் இப்படியாகணும்… இப்படியாகணும்’ன்னு நினைக்கிறாங்க. நானும் நினைச்சுக்கிட்டிருக்கேன்… நமக்கும் அப்படியொன்னு வரணும்…”

Janakiraman

நான் எழுத வந்ததும், தி.ஜானகிராமனைப் பற்றிய பிம்பம் எனக்குள் உருவானதும் 1970-களில்தான். அப்போது என் வயது 25-ஐக்கூட எட்டவில்லை. ஆனந்த விகடனில் 1970-களில் தி.ஜானகிராமனின் ஒரு முத்திரைச் சிறுகதையோடு அவர் பிறந்த ஊரின் சிறப்புகளைப் பற்றி அவரே எழுதிய சிறு கட்டுரையும் வெளிவந்தது. அப்படித்தான் நான் ஜானகிராமனின் பிறந்த ஊர், கீழவிடயல் கருப்பூர் என்பதைத் தெரிந்துகொண்டேன். அப்போதைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், வலங்கைமானுக்கு மிக அருகில் அமைந்த ஊர். தி.ஜானகிராமனின் பிறந்த ஊரைத் தெரிந்துகொண்டவுடன், அவரை நேரில் சந்தித்துவிட வேண்டும் என்ற தவிப்பு மேலோங்கிவிட்டது. நானிருப்பது, தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்துக்கு அருகிலிருக்கும் இடையிருப்பு. என் ஊருக்கும் கீழவிடயலுக்கும் சுமார் பதினாறு மைல்கள்தான். பேருந்து வசதி இருந்தது. அவர் முகத்தையாவது நேரில் பார்த்துவிட்டு வந்துவிடவேண்டும் என்ற தவிப்பான தவிப்பில் பேருந்து ஏறிவிட்டேன்.

பி.எஸ்.ராமையா – 300 சிறுகதைகள் எழுதிய கவனிக்கப்படாத படைப்பாளி!

மேடையேறி பேசுகிறவனுக்குக் கிடைக்கும் மரியாதை, அந்த மேடையை அமைத்தவனுக்குக் கிடைப்பதில்லை… அவனும் ஒரு பேச்சாளனாகவே இருந்தாலும். அந்தக் கதைதான் எழுத்தாளர் பி.எஸ்.ராமையாவுக்கு நிகழ்ந்தது. மணிக்கொடி பத்திரிகைதான் நாம் குறிப்பிடும் மேடை.

300-க்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருந்தாலும் அவர் இலக்கிய உலகத்தில் மறக்கப்பட்ட மனிதராகவே இருந்தார். மணிக்கொடி பத்திரிகையின் ஆசிரியராக 1935 மார்ச் முதல் 1938 பிப்ரவரி வரை பணியாற்றியவர் பி.எஸ்.ராமையா.

ஞாநி : இறுதி அஞ்சலி

ஞாநி இறந்துவிட்டார் என்ற செய்தி அவரது உடல்நிலையை அறிந்திருந்தவர்களுக்கும் அதிர்ச்சியளிப்பதாகவே இருந்திருக்கும்.
சிறுநீரகம் பழுதடைந்து வாரம் இரண்டுமுறை டயாலிசிஸ் செய்துகொள்ளும் ஒருவரது ஆயுள்
அத்தனை கெட்டியானதல்ல எனத் தெரிந்திருந்தாலும் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள
முடியவில்லை.
ஏனென்றால் ஞாநியை போல தமிழ்நாட்டில் இன்னொருவர் இல்லை. ஞாநியைவிட நாடகத்தை
நன்றாக அறிந்தவர்கள் தமிழில் உண்டு, ஆனால் அவரளவுக்கு நாடகத்தை மக்களுக்காகப்
பயன்படுத்தியவர் வேறெவரும் இல்லை; ஞாநியைவிட இதழியல் தெரிந்தவர்கள் பலர் தமிழில்
இருக்கின்றனர், ஆனால் அவரைப்போல சமரசமில்லாத இதழியலாளராக வாழ்கிறவர்கள் அரிது;
ஞாநியைவிட எழுத்துத் திறமை கொண்டவர்கள் தமிழில் உள்ளனர், ஆனால் அவரைப்போல
அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசும் எழுத்தாளர்கள் குறைவு.

கு.ப.ரா… பெண் மனதை அப்பட்டமாக சித்திரித்த எழுத்தாளர்!

இந்த 10 ஆண்டுகளாக பரதேசிபோல் திரிந்தபோதும், உப்பு சத்தியாக்கிரகம் காரணமாக ஆறு மாத காலம் சிறையில் இருந்தபோதும் அடிக்கடி என் மனதில் தோன்றி, என்னை மயக்கிய பெண் உருவம் யாருடையது எனத் தவித்தேன். அப்பா! அது நூருன்னிஸாவுடையதுதான். முக்காடிட்ட ஒரு சிறுமியின் குற்றமற்ற முகம்; அதில் மை தீட்டிய இமைகளிடையே குறுகுறுவென அசைந்தாடும் இரண்டு விழிகள்.ரோஜாக்களிடையே மல்லிகையைப்போல கீழ் இதழை சற்றே கடித்து வெளியே தொற்றிய பல் வரிசை. இத்தகைய உருவம் மோகினிபோல் என் மனதில் குடிகொண்டு ஆட்டிவைத்ததேஅது அவளுடையது!” (கு..ராவின் நூர் உன்னிஸா கதையிலிருந்து…)

க.நா.சு: ஓர் எழுத்தியக்கம்

தமிழ் நவீன இலக்கியத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான க. நா. சுப்ரமண்யம் நூற்றாண்டையொட்டி வெளியிடப்படும் கட்டுரை இது. க.நா.சுவின் படைப்புலகம், அவர் குறித்த மதிப்பீடுகள் தொடர்ந்து இடம்பெறும்.

– பொறுப்பாசிரியர்

க. நா. சுப்ரமண்யம் (1912- 1988) எழுதிய நூல்களை நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என ஆறு வகையாகப் பிரிக்கலாம். இலக்கிய வரலாறு அவரை விமர்சகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பதிவு செய்துகொண்டு அவரது மற்றவகைப் படைப்புகளைப்

இவரின் எழுத்துகள் மண்ணைக் கிளறும் மழைத்துளிகள்! – தி.ஜா நினைவுக் கட்டுரை

மழையின் முதல் துளி நிலத்தில் விழும்போது எழும் மணம் பிரியமானது. அந்த மழையின் சக்தி இவரின் எழுத்துக்கு உண்டு. மண்ணைக் கிளரும் மழை போலதான் இவர் எழுத்தும், மனத்தைக் கிளறி பேரன்பின் வாசத்தில் நம்மைக் கிறங்க வைக்கும். இந்தச் சின்னஞ்சிறு எழுத்துகளுக்கு அவ்வளவு அன்பின் சுமையைச் சுமக்கும் வலிமையை எப்படி இவர் தருகிறார் என வியக்க வைக்கும். “எனக்கு உலகம் முழுக்க அணைச்சுத் தழுவிப் பிரவாகமா ஓடணும் போலிருக்கு” என்று சொல்லும் இவரின் கதைமாந்தர்கள் படிக்கும் போதே நம் அருகில் அமர்ந்து நம்மை அணைத்துக்கொள்வதைப் போன்ற உணர்வை எழ வைக்கும்.

பார்ப்பவர்களை எல்லாம் கட்டிப்பிடித்துப் பேச, கரம் பிடித்துப் பேச எழும் ஆசைகளைத் தடுக்க நம்மைப் போராட வைக்கும். மண்ணைக் கழுவும் மழையைப் போல, மனதில் படர்ந்திருக்கும் பேதங்கள், பொறாமைகள், கோபதாபங்கள்

வாலி என்றொரு கவி

கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர்

பாடலாசிரியர்களாகக கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் கவிஞர் வாலி பாடல் எழுத திரைப்படத்துறைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அதற்கு முன்பு பக்திப் பாடல்களை (கற்பனை என்றாலும்) எழுதிக் கொண்டிருந்தார். அந்தப் பாடல்களைப் பாட வந்த திரைப்பட புகழ் டி.எம். சௌந்தர்ராஜன் கவிஞர் வாலியை சென்னைக்கு வரச்சென்னார். அங்கு வந்து சினிமாவுக்கு பாடல் எழுத முயற்சி செய்யுங்கள் என்றார். அவர் அழைத்ததை திரையுலகமே அழைத்தாக எண்ணி சென்னைக்கு வந்தார் கவிஞர் வாலி.

Tribute to Ashokamitran

அசோகமித்திரன்: ஓய்வில்லா எழுத்தியக்கம்

தமிழின் மாபெரும் எழுத்தாளர்களுள் ஒருவரான அசோகமித்திரன் கடந்த 23-03-2017 அன்று காலமானார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்புலகில் தீவிரமாக இயங்கிவந்தவர் அசோகமித்திரன். இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட குறுநாவல்கள், ஒன்பது நாவல்கள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என விரியும் படைப்புலகம் அவருடையது. 1960-களில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய அவர், தன் இறுதி மூச்சுவரையிலும் எழுத்தாளராகவே வாழ்ந்தார். எண்பது வயதுக்குப் பிறகும் அவரது எழுத்து வேகம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. நம் ‘தி இந்து’ நாளிதழிலும் சமீபத்தில் அவர் எழுதிய ‘மவுனத்தின் புன்னகை’ தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் – சாண்டில்யன்

ரலாற்று நாவல்களின் தன்மையை வடிவமைத்த எழுத்தாளர் சாண்டில்யன். நாகப்பட்டினம் மாவட்டம்,  திருஇந்தளூரில் 1910 -ஆம் ஆண்டு நவம்பர் 10 -ஆம் தேதி பிறந்தார் சாண்டில்யன். அவரது இயற்பெயர் பாஷ்யம்.  பெற்றோர் பெயர் , சடகோபன் அய்யங்கார், பூங்கோதைவல்லி.