Advantage of Learning Tamil

Advantage of Learning Tamil (0h.. Title in English)

நமது சமூகம் கடந்து வந்த CAREER பாதை நீண்டது.  முதலில் ஆசிரியர்கள் பிறகு அரசு ஊழியர்கள் பிறகு வங்கி ஊழியர்கள் பிறகு Software.  அடுத்து என்ன!

——

அடுத்து வருவதனை எதிர்கொள்ள நமது அடுத்த தலைமுறையை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றிய பார்வை.

அடுத்த சில ஆண்டுகளில்

xxxxxx—-1—–xxxxxxxx

ஓவ்வொரு வீட்டிலும் B.E பட்டதாரி வாங்கியவர் இருப்பார் . இப்போதைய 10-ம் வகுப்பை போல் பட்டதாரி படிப்பு இருக்கும். ஆனால் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து விட்டிருக்கும்.  மதிப்பெண்கள் பயமுறுத்தும். 100% சதவீதம் மதிப்பெண் என்பது சாதாரணமாகும். கணக்கில 95% சதம் என்பது மிக சாதாரண மதிப்பெண் (இப்போதே அப்படித்தான்)

— ஆனால் புத்தி கூர்மைக்கும் மதிப்பெண்ணுக்கும் உள்ள தொடர்வு அறுந்துபோகும்.  கணக்கில் 99% வாங்கியவருக்கு ஒரு சிறு லாஜிக்(LOGIC) புரியாமல் விழிப்பதை பார்க்கலாம்

 

xxxxxx—-2—–xxxxxxxx

தொலைக்காட்சி அடிமைகள் மிக மிக அதிகமாக இருப்பார்கள். புதிய சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு புதிய வடியங்களில் நாம் அடிமைகள் ஆவோம். (பார்வைக்கு அடிமை ஆவது)

—  ஆனால் கற்பனை வளம் குறைந்து போகும்சாதாரணமான ஒரு காரியத்தை செய்ய கூட எதாவது Format / Guideline தேவைப்படும்

 

xxxxxx—-3—–xxxxxxxx

ஆங்கில கல்வியின் ஆதிக்கம் படரும், தமிழகத்தில் 90%  ஆங்கில கல்விவே இருக்கும். தமிழில் கற்பவர்கள் குறைந்து போவர்.

–  ஆனால் மொழி (ஆங்கிலமோ, தமிழோ) ஆளுமை உள்ளவர்கள் குறைந்து போவார்கள்தமிழும் ஆங்கில வார்த்தைகளும் கலந்து பேசும்போது ஒப்பேத்துவார்கள்ஒரு விஷயத்தை தெளிவாக விளக்க முடியாத ஒரு ஊமை கூட்டம் இருக்கும் 

xxxxxx–xxxxxxxx

மேற் சொன்ன,  “ஆனால்”  என்று ஆரம்பிக்கும் வாக்கியங்களை கவனியுங்கள்.  ஆங்கிலத்தில் White Space  என்று சொல்வார்கள். அதாவது நமக்கான இடம்.  எவரும் ஆக்ரமிக்காத இடம். அதிக போட்டியில்லாத இடம்.  மிக அதிகமாக தேவையுள்ள இடம்.  நம் குழந்தைகளின் திறமைகளை WHITE SPACE-சை நோக்கி கூர்படுத்துவதே புத்திசாலித்தனம்.

x-x-x-x-x-x-x-x

மொழி ஆளுமை:

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் கடைக்காரருக்குமான உரையாடல்:

மாணவன்: ஏங்க Broom Stick  வேணுங்க

கடைக்காரர் : அப்படினா என்ன தம்பி?

மாணவன்: Broom Stick க்குக

கடைக்காரர் : தமிழ் சொல்லுபா, எதுக்கு அது?

மாணவன்: குப்பை எடுப்பாங்க

கடைக்காரர் : “இதுலா!”  என குப்பை கூடையை காட்டுகிறார்.

மாணவன்: இல்லைய்ங்க நீட்டா இருக்கும்

கடைக்காரர் : இதுவா …. என (“முறத்தை” காட்டுகிறார்).

மாணவன்: இல்லைய்ங்க   நீட்டா நீட்டா இருக்கும். Stick Stick  க்கா இருக்கும்.

—- **

மேற்கண்ட உரையாடல் சத்தியமாக சென்னையில் நடந்தது. ஒரு துடப்பத்தை வாங்க யுத்தமே செய்யும் நிலை. Broom Stick க்கு தமிழில் துடப்பம் என்று தெரியாதது ஒரு கொடுமை. கடைக்காரருக்கு தான் நினைப்பதை புரியும்படி அந்த மாணவன் வேறு வகைகளில், சொற்க்களில் அந்த மாணவன் சொல்ல  முடியாதது  இன்னுமொரு கொடுமை.

x-x-x-x-x-x-x-x

தமிழக பிராமணர்கள்  தமிழில் இயல்பாக நல்ல உச்சரிப்புடன் தெளிவாக பேசக்கூடியவர்கள். அவர்களின் மொழி ஆளுமை சுலபமாக ஆங்கிலத்தில் பேசவும் கற்றுக்கொள்ள  முடிந்தது.  சென்ற தலைமுறையில் சாதனைகளுக்கு அது  முக்கிய காரணம்.   நமது சமூகம் சிறந்த தமிழ் எழுத்தாளர்களை அளித்தது.  இலக்கியவாதிகளை அளித்தது.  பேச்சாளார்களை அளித்தது.  திறமையான வக்கீல்களை  அளித்தது.   கற்பனை திறைமை அவர்களை சாதனையாளராக மாற்றியது. உங்கள் வாழ்க்கையில் சந்தித்த புத்திசாலி மனிதர்களை நினைவில் கொண்டு வாருங்கள். 90% நன்கு பேச தெரிந்தவர்களாக இருப்பார்கள் (Communication skill is a key to success).

காலக்கொடுமை துடப்பம் கூட வாங்க தெரியாத இளைஜனை இன்று உருவாக்கியிருக்கிறோம்

நாம் நமது குழந்தைகளின் மொழி ஆளுமையை முடக்கி போடுகிறோம். ஒரு சில (5-10%) பள்ளிகளை தவிர்த்து English Medium பள்ளிகள் மொழிப்புலமையை வளர்க்கும் நிலையில் இல்லை.

ஓட்டை உடைசல் ஆங்கிலத்தில் ஓப்பேற்றுகிறார்கள். “ஏன் பையன் ஆங்கிலத்தில் பேசுவத்தில்லை”  என்று கேட்டால் “நீங்க வீட்டிலே ஆங்கிலத்தில் பேசுங்க! தானா வரும்” என்கிறார்கள்.  நல்ல வேளை “நீ போய் இங்கிலாந்தில் குடியேறு!!  அப்போதான் ஆங்கிலத்தில் பேச வரும்” என்று சொல்லவில்லை.  பெரும்பாலான பெற்றோர் தன் பிள்ளைகள் தமிழை ஒரு மொழி படமாக எடுப்பதை தவிர்க்கிறார்கள். ஆங்கிலமும் இல்லாமல்  தமிழும் இல்லாமல் இரண்டும் கெட்டவையாக பேச முடியாத மௌனியாக வளர்ந்து,  “எங்க கம்பெனியில் வாயால வட சுட்டதான்  மரியாதை”  என புலம்பி தீர்க்கும் தலைமுறையை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.

-x-x-x—x-x-x-x-x-x

வாழ்க்கை பாடத்திலிருந்து………..

வரன் பார்க்கும் இடம் : தன்னை பார்க்க வந்த மாப்பிள்ளையுடன் பேச வேண்டும் என்றாள்.  பையன் படுத்திருந்தான் (B.E தான், வேறென்ன ; நல்ல உடை உடுத்தி இருந்தான்.  இது இரண்டும் அம்மா(அப்பா) சொல்லி கொடுத்தது.   ஆனால் புதிதாக ஒரு பெண்ணுடன், அவளை கவரும்/அவளுக்கு பிடிக்கும்  வகையில் பேச தெரியவில்லை.  கற்பனை சுத்தமாக இல்லை.  மேலும் வேலைக்கு போவது, திரும்ப படுத்து தூங்குவது, எப்போதாவது சினிமா, அதிகம் நண்பர்கள் இல்லை. கெட்ட பழக்கம் இல்லை,  புத்தகம் படிப்பது மற்றும் சமூக தொடர்பு என்ற நல்ல பழக்கமும் இல்ல,  ஒரு காய்கறியை போல  (vegetable) –  நல்ல பையனுக்கு அடையாளம் (என் பையன் யார் வம்புக்கும் போக மாட்டான் – தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பான் – இது அம்மா).  பேச எதுவும் இல்லை.  மூன்றவது நிமிடம் “எங்க அம்மா” என்றான். 10 நிமிடத்தில் “அம்மா” என 14 தடவை சொல்ல;

இப்போது அவனுக்கு 45 வயது, பிரமச்சாரி.  (அம்மாக்காரி பையன் வாழ்கை குட்டிசுவரான காரணம் புரியாமலேயே போய் சேர்ந்து விட்டாள்)

-x-x-x—x-x-x-x-x-x

காரணம் பெற்றோர்களின் அறியாமை:

நாம் பல பள்ளிகளில் (+1 and +2)   French சொல்லி கொடுப்பதை பார்க்கிறோம்.  அனால் ஒரு மாணவனாவது French புலமையுடன் இருப்பதாய் சொல்ல முடியுமா?  அவர்கள் 2 வருடத்தில் French   மறந்து போகிறார்கள்.  அந்த மாணவனின் உழைப்பு முழுவதும் வீணாகிறது.

French படித்தால் 95% மார்க் வாங்கலாம்,  தமிழ் படித்தால் மார்க் வாங்குவது கடினம், 60% மட்டுமே மார்க் வாங்க முடியும்  என்று பதில் வருகிறது.   மொழி பாட மதிப்பெண் மேற்படிப்புக்கு  பயன் பட போவதில்லை.  பயனில்லாத 95% மார்க்கை விட பயனுள்ள 60% மேலானது அல்லவா.  தாய் மொழி புலமை என்றும் பலன் தரும்.  மொழி ஆளுமையை தன் மகனுக்கு தராத பெற்றோர் அவனை எதிர்கால சவால்களுக்கு தயார் படுத்தாமல் விடுகிறார்கள்

நாளைய  தினம் கற்பனைத்திரன் மற்றும் மொழி ஆளுமை உள்ளவர்களால் மட்டுமே உலகம் ஆளப்படும். பட்டமும்,  மதிப்பெண்களுக்கும் மதிப்பிழந்து போகும்.  அனைவரும் B.E பட்டதாரி;  அனைவரும் 90%  மார்க் என்றால் அடுத்தது என்ன என்ற கேள்வி இயல்பானது.

கற்பனை திறன் மற்றும் மொழி ஆளுமை – ஓர் பாரம்பரிய வழி :

வயது 7- 10 : தமிழில் சிறுகதைகள், பஞ்சதந்திர கதைகள், அம்புலிமாமா மற்றும் சிருவர் இதழ்கள் படிக்க வேண்டும்.  படக்கதைகள் மிக மிக முக்கியம். இராமாயணம் மற்றும் மகாபார தத்தை பற்றிய அடிப்படை அறிவு;  வகுப்பில் பேச்சு போட்டி/ கட்டுரை போட்டி யில்  கண்டிப்பாக கலந்து கொள்ளுதல்.

x-x-x-x-x-x-x-x

Creativity Story – an Example:

ஒருத்தன் வரம் கேட்டான். பிரம்மாவிடம் சாகாத வரம் கேட்டான். பிரம்மா அப்படி வரம் தர முடியாது னு சொல்லிட்டார். அவன் யோசித்தான். சாகாத வரத்தையே வேறு விதமாக கேட்டான்.
நான் வயதாகி சாகக்கூடாது ; நோய் வந்து சாகக்கூடாது; காலையிலோ இரவிலோ சாகக்கூடாது  (சாயங்காலம்?). மனிதனாலோ / விலங்கினாலோ அரக்கனாலோ / தேவராலோ சாகக்கூடாது (பாதி விலங்கு பாதி மனிதன்). வீட்டுக்கு உள்ளேயோ , வீட்டுக்கு வெளியிலோ சாகக்கூடாது (வாசல்படி)  எந்த ஆயுதத்திலும் நான் சாகக்கூடாது (நகம்)….
கவனிச்சியா… He closed all Possibilities, but there is an exceptions for each conditions ;   அவன் சாகக்கூடாதுனு வரம் கேட்டான். பிரம்மா சிரித்து கொண்டே வரம் கொடுத்தார்.

அவன் எப்படி செத்தான் தெரியுமா????

Now the mid understand how clever is Lord Narasima who finds the hole on all possibilities.  It helps to understand if/Else conditions of the computer science.

x-x-x-x-x-x-x-x

வயது 11-15 : கவிதைகள் பற்றிய அறிமுகம், இதிகாசங்களை பற்றிய புத்தகங்கள, CRIME  /  துப்பறியம் கதைகள், வார இதழ்களில் வரும் JOKES, பட்டிமன்றங்களை பார்க்கும் வழக்கம், தினசரி TAMIL NEWS PAPER கண்டிப்பாக படிக்க வேண்டும்.

வயது 16-20 : ஆன்மீகம் மற்றும் கடவுள் மறுப்பு இரண்டையும் படித்தல்; பல்வேறு கொள்கை உடைய பத்திரிகைகளை படித்தல் (சிறு இதழ்கள்) தனக்கான கொள்கையை தேர்ந்தெடுத்து அது சம்மந்தமாக படித்தல்.

English:

Age 5-7 : Cartoon movies / Children movies (watch 3 movies in a week)

Age 7-10 : International Children movies

Age 10-16: Award winning Movies, introduction to English Navel  (ref imdb . com); youtube international speakers / documentary etc

Age 16-18 : Hollywood /  Europe / Iranian Movies, Self improvement books

Simple rule:

  1. Make our children “Read in Tamil and See in English”
  2. Never do the same thing again and again (Do not watch the same scenes in TV again and again – Eg. Aditya Channel) which kills creativity.
  3. Never take 2nd language as Hindi or Sanskrit.  Take always Tamil as your Second Language.    Hindi can be your third language or your children will learn speaking/understanding of hindi by outside course (maximum of 6 months) or simply watching  bollywood movies.

Observation :  (the following is our observation only. may not be 100% true).

Dad ! how are you.

நல்லா இருக்கேன.

How is the climate there!.  நல்ல வெயிலா ?

ஆமா!.  எம்போதும் போல தான்.

Ya.. Chitra also said.. It is difficult to stay in chennai for even couple of hours.

டிசம்பர் ல வந்தா வெயில் இருக்காது.

No No. She had music concert dad.  Not sure this time.

இத்துடன்  நிறுத்துவோம்.  Dad .. Mom என தன் மகன் அழைப்பதில் பெருமை கொண்ட அப்பா…இப்பொது 72 வயதில் ….முதியோர் இல்லத்தில்,  மகன்…..    நன்கு கவனித்து பாருங்கள்  உங்களுக்கும் கேட்கும் இந்த உரையாடல்.

அப்பா அம்மா வை விட Dad & Mom மை சுலபமாக விலக முடியும்.

அரசுக்கு ஒரு யோசனை:

நம் குழந்தைகள் 12ம் வகுப்பில் தமிழை தவிர்க்க காரணம் அதிக மதிப்பெண் மீதுள்ள ஆசையே.  மேலும் தமிழ் பாடம் கடினம் என்றும் கருதுகிறார்கள்.  அரசு 11ம் வகுப்பில் “நவீன தமிழ்” என்ற புதிய பாட புத்தகத்தை அறிமுக படுத்தலாம்.  அதில் சுவாரசியமான நடையில் உள்ள கதைகள் / கட்டுரைகள் / புது கவிதைகள் என எளிமையான தமிழில் எழுதப்பட்ட படங்களை அறிமுக படுத்தலாம்.  உதாணமாக சுஜாதாவின் கதை, வைரமுத்துவின் கவிதை, லேனா தமிழ்வாணனின் கட்டுரை என படிக்க சுவரசியமாக்கலாம்.   தமிழ் திரைப்படம் / உலக சினிமா என ஆய்யு கட்டுரைகளை அளிக்கலாம்.  நல்ல நாடகங்களை பார்த்து விமர்சனம் எழுதும் பாடம் வைக்கலாம்.  மாணவர்கள் ரசித்து படிக்கும்படி செய்யலாம்.  180 மதிப்பெண் சுலபமாக பெரும் வகையில் எக்ஸாம் இருக்கவேண்டும்.

தமிழில் மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்கள் இபோதைய தமிழ் படத்தை படிக்கலாம்.  அதாவது இரண்டு தமிழ் இருக்க வேண்டும் 1. நவீன தமிழ்  2. சிறப்பு தமிழ்.  மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் தேர்வு செய்துகொள்ளவேண்டும்.  மேலும் மதிப்பெண் பெற மட்டுமே பிரெஞ்சு /  ஹிந்தி என படிக்கும் மாணவர்களுக்கு இது தமிழ் படிக்கும் ஆர்வத்தை தூண்டும்.  இதுவே சுலப தீர்வாகும்.

  1. Maths and science can be taught in english.  But Social science can be taught in Tamil.

குறிப்பு :  நமது சார்பாக இந்த யோசனை பள்ளி கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பப்படும்.

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.