பிராமண வெறுப்பின் நிழல்லில்

முன்குறிப்பு:

நமது நாட்டில் பல குலத்தை, சாதியை, மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பிறந்த பிரிவின் காரணமாக அவமான படுத்தப்படுகிறார்கள். சில  சமயங்களில் பழிவாங்கப்படுகிறார்கள். தமிழகத்தை பொடுத்தவரை பிராமண எதிர்ப்புக்கு முற்போக்கு, சமூக சிந்தனை, மனித நேயம் என்று சிலர் பெயர் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த தொடரில் மனிதாபிமானம் இல்லாத வெறுப்பினால்   பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் மற்றும் அவர்கள் அதை கையாண்டவிதம் போன்றவற்றை விளக்குகிறாம். மனமறிந்து பொய்யுரைகாதிருக்க இறைவனை பிராத்திக்கிறோம்.

ஒன்றை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்.  இன்றும் தமிழ் நாட்டில் இரு குவளை முறை இருக்கிறது. ஒருவரின் பிறப்பை வைத்து கேவலப்படுத்தும் முறை இருக்கிறது.  இங்கு பலருக்கும் அநியாயம் மிக சாதாரணமாக நடக்கிறது.  இங்கு விவரித்த சம்பவங்கள் “நமக்கு இப்படி நடக்கிறதே” என்ற புலம்பல் காவியம் இல்லை.  மோசமான மனிதர்களை சந்திக்கும் பொது / வெறுப்பை அவர்கள் காட்டும் போது நாம் எப்படி எதிர் கொள்வது என்பதை உணர்த்தவே இந்த தொடர் எழுதப்படுகிறது.

Story – 1 :  All Brahmins are Get Out

அது ஒரு கணிப்பொறி நிறுவனம்.  சாதாரணமாக காணும் திறமையாளர்களை விட   அவர்கள் மிக திறமையானவர்கள். பட்டை தீட்டிப் வைரங்கள், உலகளவில 20 நாடுகளிலும்  பெங்களுரிலும் சென்னையிலும்  அலுவலகம்.   “ MY CODE MY CRAFT   ” என நெஞ்சை நிமிர்த்தும் பெருமிதம்.

நிறுவனத்தில் வேலை கிடைப்பது மிக கடினம். எட்டு நேர்முக தேர்வுகள். மிக  கடுமையான தேர்வுகள்.   ஆனாலும் சமூகத்தின் கடை நிலையில் இருப்பார்களையும் இணைத்துக் கொள்ள Training  அளித்து வேலையும் கொடுப்பார்கள். சமூக அக்கரையும் உயர்ந்த தொழிற்நுட்பமும் பணக்கார தன்மையும் கொண்ட இனிய கனவு.

காட்சி : 1          நிறுவனத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. நமது தேர்வு முறை பெண்களுக்கு கடினமாக இருக்கிறது. அதனால பெண்களுக்கான தேர்வுமுறையில் சற்று தளர்தலாம் என்றது நிறுவனம்.

நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் ஒருசேர எதிர்த்தார்கள். திறமையில் பாலின பேதம் கூடாது என்றார்கள். தேவையெனில் பெண்களுக்காக சிறப்பு  தேர்வுகள் நடத்தலாம். அதிக பெண்களை நம் நிறுவனத்தில் சேர ஊக்குவிக்கலாம். ஆனால் எந்த விதத்திலும் தகுதி குறைவை ஊக்குவிக்க கூடாது என்பார்கள். நிறுவனம் அந்த யோசனையை  ஏற்றது.

அடுத்த காட்சியை படிக்கும் முன் ஒரு முன்குறிப்பு :-

நிறுவனத்தின் CEO  ஒரு அமெரிக்க வாழ் தமிழர்.   உயர்ந்த சமூக லட்சியங்கள் கொண்டவர், சாதாரண நிலையிலிருந்து வளர்ந்தவர். நிறுவனத்தின் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் உத்வேகத்தை அளிப்பவர். மரியாதைக்குறியவர், கண்டிப்பாக பின்பற்ற வேண்யவர் என நினைக்கவைப்பவர்.;

காட்சி  2:   நிறுவனத்தில் உயர்மட்ட கூட்டம்.  உங்களின் எத்தனை பேர் பிராமணர்கள் ? என  கேட்டார்  CEO.  கொஞ்சம் ஆச்சரியத்துடன் கைகள் உயர்ந்தன. அவரின் வாயிலிருந்து அமிலமாக “பிராமண ” எதிர்ப்பு வெளிப்பட்டது. இது வரை கேட்டறியாத “சாதி” வாதம் / வெறுப்பு.  தெளிவாகவே புரிந்தது, இங்கு இனி தொடர்வது அவமானம்

அமைதி, பேரமைதி வலியுடன் கூடிய அமைதி.  அவர்களில் சிலர் நிறுவனம் சிறியதாய் ஆரம்பிக்கபபட்டதிலிருந்து பணியாற்றுபவர்கள். தினமும் 12 மணி நேர உழைப்பு;  நிறுவனத்தை பெருமிதத்துடன நெஞ்சில் சுமந்தவர்கள். அந்த வலியை வேதனையை மேற்கொண்டு சொல்லாமல் அடுத்து நகர்வோம்.

அவர்களுக்கு ஏன் ? எதற்காக? எதனால் ? என்ற கேள்விகளுக்கும் பதில் தெரியவியவில்லை.   அநீதி என புலம்புவதில் அர்த்தமில்லை. எதிர்பதில் ஆர்வமில்லை.  அவர்கள் இராஜினாமா கடிதங்கள் கொடுத்தார்கள்;  சிலர் வேறு வேலைக்கு சென்றார்கள்.

காட்சி  3 :  தாய் நிறுவனம் (ஆம் இன்னமும் அவர்கள் தங்களின் நிறுவனம் பற்றி  நல் மதிப்புடனே இருக்கிறார்கள்) போன்றே இரு சிறு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதே உயர்தரும் மற்றும் கலாச்சாரம் சமூக அக்கரையுடன் இரண்டும் வெற்றிகரமாக செயல்படுகின்றன. என் நாட்டை நேசிப்பது என்பது என நாட்டின் எளிய மக்களுக்கு உழைப்பதே! சமூக அக்கரை என்பது ஒரு குறிப்பிட்ட குழு  மீது காட்டும் காழ்ப்புணர்ச்சி அல்ல! நேசிப்பை, அன்பைப் பகிர்வதே. இதுவே அந்த இரு நிறுவனங்களின் தாரக மந்திரம்.

குறிப்பு : அந்த நிறுவனத்தில் இருப்போரின் 80% பேர் நம் குலத்தை சேர்த்தவர்கள் அல்லர். சந்தேகமில்லாமல் சமூக பொறுப்புடன் / மானுட நேயத்துடன் செயல் படுபவர்கள். ஆனால் “பிராமண எதிர்ப்பு” என வரும்போது பெரும்பாலோனோர் “அமைதி” காக்கிறார்கள். மனசாட்சி தூங்க போய் விடுகிறது.

இந்த நிலை நமக்கும் / நாட்டுக்கும் நல்லதல்ல; “பிராமண எதிர்ப்பை” குறைக்க வேண்டியதன் அவசியம் மற்றும் நாம் செய்துகொள்ள வேண்டிய மாற்றங்களை பற்றியும் விரைவில் ஒரு குறும் தொடர் வெளிவருகிறது

வாழ்ந்து காட்டுவதே நம்மை வெறுப்பவருக்கு அளிக்கும் பதில்.

Story 2 : Arrogance via Face Book:

நவீன யுகத்தில் இன்றைய தினத்தில் எல்லோரும் எழுத்தாளர்கள்.  எல்லோரும் பத்திரிக்கையாளர்கள். விளைவு  பொய்கள்,  செய்திகள் / விமர்சனங்கள்   என்ற பெயரில் கோடிக்கணக்கானோர்க்கு ஒரு நொடியில் போய் சேர்கின்றன.

அதுபோல சில குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிரான கருத்து வன்முறை தொடர்ந்து அரங்கேறுகிறது (மூன்று அல்லது நான்கு சமூகங்கள் மாட்டி  கொண்டு தவிக்கின்றன) . பெரும்பாலும் மனநோய் பிடித்தவர்களின் கருத்துக்கள். இந்த மனநோய் ஒட்டிக்டிகாள்ளும் தன்மையுடையது.  நீங்கள் சார்ந்த சமூகத்துக்கு எதிராக கேவலாமாக பதிவிடுவார்.  நீங்கள் ஒருபடி இறங்கி அவனுக்கு பதிலளிப்பீர்கள் .  அவன் அடுத்ததாக இன்னும் கேவலாமாக பதிலளிப்பான். மறுபடி உங்கள் பதில் ……உங்களை அறியாமலேயே சாக்கடையில் இறங்கி கொண்டு இருப்பீர்கள். ஒரு பன்றியின் மனநிலை சாக்கடையில் ஊறி இருக்க பிடிக்கும் மனநிலைக்கு உங்களை அவன் தள்ளுகிறான்.

இத்தகைய நிலைமை எதிர்கொண்ட ஒரு நண்பனின் கதை :

நான் பல்லாயிரக்கணக்கான வேலை செய்யும் Software  நிறுவனத்தில் உயர்பதவியில் வகித்தவன். அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி சொந்தமாக தொழில் தொடங்கினென் என்று பணிபுரிந்த பலர் என்  FaceBook -ல் நண்பர்களாக தொடர்ந்தனர்.

ஒருமுறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவரிடமிருந்து, (அவர் மிகவும் Junior) ஒரு Post எங்களுக்கு வந்தது. அவர் மீது நான் அன்பும் மதிப்பும் வைத்திருந்தேன். அவருக்கு   Career Guidance (part of my job)  செய்தும் இருக்கிறேன்.

அந்த போஸ்டில் கல்பாக்கம், கூடங்குளம், மற்றும் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு அதன் ஆபத்துக்களை விவரித்து பார்பன சதி என்று முடித்திருந்தது.

அணு மின்சாரத்தைவிட சூரிய மற்றும் காற்று சக்தியை கொண்டு மின்சாரம் தயாரிப்தே சிறந்தது என நானும் நம்புக்கிறேன்.  வளர்ச்சி திட்டங்கள் ஒரளவு பதிப்பை உருவாக்குவதை தவிர்க்க முடியாது.  சிலரின் பாதிப்பை மனதில் கொண்டு வளர்ச்சி திட்டங்களை தடுப்பது. நம் நாட்டை மேலும் ஏழ்மையாக்கும். வளர்ச்சி திட்டங்களால் வரும் பாதிப்புகளை தவிர்க்க இயலாவிட்டாலும், குறைக்கவும் முடியும். எடுத்துக்காட்டாக சாலை அகலப்படுத்துதல், நடந்தால்  பல கட்டிடங்களை இடிக்க நேரிடும். இதை தவிர்க்க முடியாது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரண தொகை வழக்குதன் மூலம் பாதிப்பை குறைக்க முடியும். இங்கு பார்பன சதி, எங்கு வந்தது என விளக்கினால் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கும் என பதில் அளித்தேன்.

ஆவரின் நண்பர்கள் சிலர் எதிர்வினை ஆற்றிறார்கள். கேவலமான வார்த்தைகள், ஆரியன் பாப்பான் மற்றும் சில….

நாகரிக மற்ற  சொற்கள்.  சாக்கடை ஓரத்தில் சாராய கடையுடன் ஒருவரை ஒருவர் கீழ்த்தரமாக திட்டிக்கொண்டு சண்டைகளையும் மனிதர்களுடன் நீங்கள் நட்பு கொள்வீர்களா ?  அல்லது தமிழ் மூதாட்டி   சொன்னபடி அவர் கண்ணில் படாத விலகி செல்வீர்களா ? உங்களையும் உங்கள் நண்பர்களையும் அறிந்து கொண்டேன் .  நன்றி

என பதிவிட்டு  UNFRIEND செய்தேன் .

Lesson : அசிங்ககத்தை கண்டால் உடன் விலகு