Subramaniya Siva (1884-1925)

SubramaniyaSiva

”நான் ஒரு சந்யாசி. முக்தியடையும் வழியைப் பிரச்சாரம் செய்வதே என் வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி அதை அடையும் மார்க்கத்தை போதிப்பதே என் வேலை. சகலவிதமான வெளி பந்தங்களினின்றும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும். இதே போன்று ஒரு தேசத்தில் முக்கியாவது – அந்நிய நாடுகளின் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்வது; பரிபூர்ண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாட்டு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது, சுதந்திர லட்சியம் அதை அடையும் மார்க்கம். புறக்கணிப்பது – சுதந்திரப் பாதையில் குறுக்கே நிற்கும் எதையும் – சாத்வீக முறையில் எதிர்ப்பது, சுதேச கல்வி இவையேயாகும்.”

சுப்பிரமணிய சிவம் வரலாறும் ஒன்று. நமது சுதந்திர பொராட்ட வரலாறு இன்னமும் எழுதி முடிக்கப் படாத மகாகாவியமாகும்.

இதில் விடுபட்டுபொன பெயர்களும் நிகர்ச்சிகளும் ஏராளம். எத்தனையொ வீரத் தியாகிகளின் பெயர்கள் ஒப்புக்கு இடம் பெற்றுள்ளதெ தவிர முழுமையான தகவல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.

சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 4-10-1884 ஆம் வருடம் மதுரை அருகெ உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார். அவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாள் என்ற இரண்டு சகொதரிகளும், வைத்தியநாதன் என்ற சகொதரரும் உண்டு.

இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார் பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கெ இலவச உணவு உண்டு படித்தார். பின்னர் கொயமுத்தூரில் ஒரு வருடம் பிரவெச தெர்வுக்காக படித்தார் இக்காலமெ இவரின் தெச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த பொயர் யுத்தத்தில் பொயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் (அவற்றில் ஒன்று கூட இப்பொது நமக்கு கிடைக்கவில்லை ).

படிப்பு முழந்தது. குடும்பச் சுமை காரணமாக சிவகாசியில் பொலீஸ் இலாகாவில் குமஸ்தா வெலையில் செர்ந்தார். செர்ந்த மறுநாளெ இந்த வெலையை விட்டு விலகிவிட்டார். இவர் பார்த்த முதலும் கடைசியுமான வெலை இதுவெ.

1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைடிபற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தெச செவை மறந்தாரில்லை.

1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தை செர்ந்த தாவுர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவாற்றினார். இதனை கெட்ட சுப்பிரமணிய சிவாவின் தெசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நொக்கம் இளைஞர்களின் மனதில் தெசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதெ ஆகும். இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூவுர் சமஸ்தானத்தில் இருந்து உடனெ வெளியெற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக்கெதிராக பிரச்சாரம் செய்து வந்தார்.

சிவா மிகச் சிறந்த சொற்பொழிவாளர் இவரது பெச்சை கெட்ட பல இளைஞர்கள் தங்களை தெச செவையில் இணைத்துக் கொண்டனர். சிவா தன்னுடைய திட்டங்களுக்கு இளைஞர்களும், தொழிலாளர்களுமெ பக்க பலமாக இருப்பார்கள் என பலமாக நம்பினார். இவர்களுக்காக அயராது பாடுபட்டார். அப்பொது தான் அவருக்கு வ.உ.சி.-யின் நட்பு கிடைத்தது. அதெ காலத்தில் தான்  மகாகவி பாரதியுடன் நட்பு கொண்டார்.

இம் மூவருடைய நட்பு தமிழக சுதந்திர பொராட்ட வரலாற்றில் சிறப்பிடம் கொண்டது. இவர்கள் மூவரையும் தமிழகத்தின் தெசிய மும்முர்த்தினர் என்றெ குறிப்பிடலாம்.

வ.உ.சி. சிவா இணைந்து செயல்பட்டதால் நெல்லை மாவட்டம் விடுதலை பொராட்டத்தின் உலைகளமாக திகழ்ந்தது. இதனை கண்டு பயந்த பிரிட்டிஷ் அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தி இருவரையும் சிறைக்கு அனுப்பி மகிழ்ந்தது. இது குறித்து வ.உ.சி தனது சுயசரிதையில்…

இவர் பிரசங்கம் செய்ததற்காகத்
தவம் புரியும்பழதச நல் வருடம்
தீடிவன் றியம்பினான் நீங்கிலென் அதற்குக்
தாவில் உதவியை தந்ததற்காக
இருபது வருடமும் இயம்பிய டிநல்லையில்
ஒரு பிரசங்கம் உரைத்ததற்காக
இருபது வருடம் தீருவனம்
கற்றொர் மனமும் கலங்கிடச் டிசான்னான்
இறையும் கலங்கா டிதன்னும் கவர்ந்துள
இறையின் கொடைடியன ஏற்றென்.

என்று குறிப்பிடுகிறார்.

பின்னால் செய்து கொண்ட மெல் முறையீட்டினால் இருவருக்கும் தண்டனை குறைக்கப்பட்டது. சிவாவுக்கு 10 வருட தண்டனை 6 வருடமாக குறைக்கப்பட்டது. சிவா 2-11-1912-ல் விடுதலை அடைந்தார். விடுதலைக்குப் பின் சென்னையில் குடியெறினார். சென்னையில் பிரபஞ்ச சமித்திரன் என்ற வாரபத்திரிகையையும், ஞானபானு என்ற மாத பத்திரிகையையும் தொடங்கினார். ஞானபானு-வில் பாராதியாரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டார். பாண்டிச்செரியில் இருந்த பாரதிக்கு ஞானபானு சுதந்திர பொராட்ட ஆயுதமாக திகழ்ந்தது. பாரதி பல புனைப் பெயர்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி தெசிய உணர்வு ஊட்டினார். குத்தலும், கெலியும், கிண்டலும் நிறைந்த அன்றைய ஜமீன்தார்களையும், அவர்களை அண்டிப் பிழைத்த புலவர் கூட்டத்தினையும் தொலுரித்து காட்ழய சின்ன சங்கரன் கதை ஞானபானு-வில் வெளிவந்த பாரதியின் படைப்புகளில் குறிப்பிட வெண்டிய ஒன்று. சுப்பிரமணிய சிவாவின் சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி. மீனாட்சியம்மை உடல் நிலை மொசமாகி 15-5-1915-ல் சென்னையில் காலமானார். மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பயணங்கள் மெலும் அதிகப்பட்டன. ஊர் ஊராக சென்று மக்களுக்கு தெச உணர்வைய{ட்ழனார். பொது வுட்டமாக நடத்தாமல் மக்கள் எங்கு வுட்டமாக இருக்கிறார்களொ அங்கெ பெசினார்.

1919-ல் மீண்டும் இந்திய தெசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஆரம்பம் முதலெ சுப்பிரமணிய சிவா தொழிலாளர்பால் மிகுந்த அன்புடையவர் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு சங்கம் வைத்து ஒவ்டிவாரு செயலிலும் ஒற்றுமையுடன் செயல் பட வெண்டும் என்ற கருத்துடையவர். குறிக்கொளை அடைய இருவழிகள் உள்ளன. ஒன்று இயந்திரங்களை செதப்படுத்தி நசூ;டப்படுத்துவது, இரண்டு தொடர்ந்து வெலை நிறுத்தம் செய்வது. இதில் இரண்டாவது வழியையெ பின்பற்ற வெண்டும் என்ற கருத்துடையவர் சிவா. இதன் அடிப்படையில் 1920-ல் சென்னையில் நடைடிபற்ற ட்ராட் தொழிலாளர்களின் வெலை நிறுத்தத்தின் பொது தீவிர ஆர்வம் காட்டி தொழிலாளர்களுக்காக பகலிரவு பாராது உழைத்தார்.

1920-ஆம் வருடம் கல்கத்தாவில் லாலா லகூபதி ராயின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாக நடைடிபற்ற சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு விபின் சந்திர பாலர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றார்.

சிவாவின் உள்ளத்தில் காந்தியின் தாக்கமும் படியத் தொடங்கியது. தமிழ் நாடு என்ற பத்திரிகையில் திலகர் – காந்தி தர்சனம் என்ற சிறு நாடகத்தையும் சிவா எபுதியுள்ளார். சிவா வாழ்ந்த காலங்களில் நடைடிபற்ற மாநாடுகள், பொராட்டங்கள் அனைத்திலும் சிவா தனது பங்கை முழுமையாக செலுத்தியுள்ளார்.

அவர் கலந்து கொள்ளாத மாநாடுகளொ, பொராட்டங்களொ இல்லை என்றெ டிசால்லலாம். அவற்றிடிலல்லாம் சிவாவின் எரிமலைப் பிரசங்கங்கள் இடம் டிபற்றுள்ளன. சிவா மிகுந்த துனிச்சல் மிக்கவர்.

காந்தீயத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிரவாதக் தன்மை என்றுமெ அடங்கியதில்லை. சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் அரசாங்கம் இவருக்கு பல வழிகளில் தொல்லையளித்தது.

1921-ம் வருடம் இரண்டரை வருடம் கடுங்காவல் தண்டனை வர்ங்கியது. பின்னர் உவாரங்களில் விடுதலை செய்து விட்டது.

பின்னர் 27-11-1922-ல் ஒரு வருட சிறை தண்டனை அளித்தது. கொடுமையான சிறை வாழ்க்கை காரணமாக அவருக்கு தொபுநொய் ஏற்பட்டது.

இன்றைய நிலை பொல் இல்லை தொபு நொயாளியின் நிலைமை. இதற்கு சுப்பிரமணிய சிவாவின் நிலைமையும் ஒரு சாட்சி, அவருடைய நொயை காரணம் காட்டி சிவாவை ரயிலில் பயணம் செய்யக் கூடாதென்று அரசு தடைவிதித்தது. இதனைக் கண்டு கலங்கவில்லை. சிவா, கட்டை வண்டியிலும், கால் நடையாகவும் தன் பயணத்தை மெற்க்கொண்டு மக்களுக்கு அந்நிய ஆட்சியின் கொடுமைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார். பாரத தெசத்தை கடவுளாக கொண்ட சிவா பாரத மாதாவுக்கு கொவில் கட்ட தீர்மானித்தார். தருமபுரி அருகெ உள்ள பாப்பாராபட்ழயில் உள்ள தனது ஆசிரமத்தில் தெசபந்து சித்தரஞ்சன் தாலைக் கொண்டு 23-1-1923-ல் அழக்கல் நாட்ழனார். அந்த ஆலயத்தில் பல தெச பக்தர்களின் இலைகளை நிறுவ நினைத்திருந்தார். அவற்றுள் வ.உ.சி. சிலைக்கு முதல் நிலை கொடுக்கவும் திட்டமிட்ழருந்தார்.

நொயின் கொடுமையிலும் ஓயாத உழைப்பு நாடு அந்நியரின் ஆதிக்கப் பிழயிலிருந்து விடுவிக்கப் படவெண்டுடிமன்று அயராது பாடுபட்டார் இதனால் அவரது உடல் நலம் குன்றியது. இந்நிலையில் 1925-ல் கான்பூரில் நடைடிபறவிருந்த கம்யுனிஸ்ட்கட்சினரின் முதலாவது மாநாட்ழல் கலந்து கொள்ள திட்டமிட்ழருந்தார். உடல் நிலை தெறியவுடன் திருடிநல்வெலி வழியாக மெற்கு கடற்கரை யொரமாக பம்பாய் சென்று அங்கிருந்து கான்பூரில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். சிவாவின் உடல் நிலை நாட்பட நாட்பட மிகவும் மொசமடைந்து வந்ததினால் அவரால் திட்டமிட்டபடி கான்பூர் மாநாட்ழல் கலந்து கொள்ள முழயவில்லை. 22-7-1925-ல் தனது சீடர் சுந்தர பாரதியின் துணையுடன் பாப்பாரபட்ழயில் உள்ள தனது ஆசிரமத்திற்கு வந்து செர்ந்தார். சுப்பிரமணிய சிவாவிற்காக எதையும் செய்யத் துணிந்த வீரவாலிபர்களும், எதையும் தரத் தயாராக இருந்த செல்வந்தர்களும் பாப்பாராட்டியில் இருந்தனர்.

இவர்களிடையெ வந்து செர்ந்த மறுநாள் அதாவது 23-7-1925 வியார்க்கிர்மை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வார்ழ்வை நீந்தார். சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளை செய்து முழத்துள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் சிவாஜி நாடகம் மூலமாக தெச பக்தியை பரப்பினார் அவரும் நாடகத்தில் பங்கெற்று நழத்துள்ளார். ராம கிருஷ்ணர் மீதும் விவெகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா பல கனவுகளுடன் மறைந்து விட்டார். இத்தகைய பெரறிவாளர்களின் உழைப்பால் கிடைத்த சுதந்திர நாட்டில் வாழும் நாம். சுப்பிரமணிய சிவாவின் 117-வது பிறந்த நாளை கொண்டாடுகின்ற இந்த தருணத்தில் நமது அஞ்சலியை செலுத்துவொம்.

 

Ref: Tamil Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *