உதவி தேவை – பஹதி பிச்சாம் தேஹி

வாக்குறுதி

அரசியல் பற்றி பேசுவதில்லை.  அரசியல் சார்பு நிலை எடுப்பதில்லை.  எந்த சமுகத்துக்கு/ஜாதிக்கு/மதத்துக்கு  எதிரான கருத்துக்கள் அனுமதி இல்லை.  எந்த வடிவிலும் பணம் (டொனேஷன்) பெறுவதில்லை.   இது நமது குலதுக்கு சொந்தமான தளமானதால், இந்த தளத்தின் FOUNDER(s)  பற்றிய தகவல்கள் / புகைப்படங்கள் வெளியிடப்படுவதில்லை.

நேர்மையும், நம்பகத்தன்மையும் நமது வாக்குறுதி.

நமது குலத்துக்கு தேவையான நம்முடைய Projectகளை இங்கு அளிக்கிறோம்.  உங்கள் உதவி தேவை. உங்களுக்கு விருப்பமான ப்ரொஜெக்ட்இல்  உதவி செய்ய எங்களை தொடர்பு கொள்ளவும்.

x—x—–x—–x—–x—–x—-x—-x

Project Name :  Database for Brahmin Contributors :

தமிழ் நாடு பிராமண சங்கம் “அருந்தொண்டு ஆற்றிய அந்தணர்கள்” என்ற 5 Volume  கொண்ட புத்தக தொகுப்பை வெளியிட்டது.  மிக  சிறந்த / பெரிய முயற்சி.  ஆனால் அது பொது வெளியில் (இன்டர்நெட் போன்ற) கிடைப்பதில்லை.  மேலும் அது டாக்குமெண்டரி வடிவத்தில்  இருக்கிறது. TAMBRASS சின் மிக சிறந்த படைப்பு.

நமது Database of Great Contributors வேறு வடிவம்.  தியாகத்தால், சமூக அக்கறையால், தன் திறமையால் தானும் உயர்த்து நமது தமிழ் நாட்டுக்கும் பாரத தேசத்திற்கும் பெரும் பங்காற்றிய நமது சமூகத்தை சேர்ந்த மனிதர்களின் சுவாரசியமான செய்தி / கட்டுரைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடுகிறோம்.  நமக்கும் நமது அடுத்த தலைமுறைக்கும் உத்வேகம் கொடுக்கும் என நம்புகிறோம்.  “தனக்காக மட்டும் வாழாதே!.  உன் பங்களிப்பை நமது நாட்டுக்கு கொடு” என்பதே செய்தி.  (Read about our Great Contributors and get inspired and become one of them).

Current Status of the Project : On Going – Expected to be completed in 1 year

உங்கள் உதவி : நமது சமூகம் மற்றும் சமூக மனிதர்களை பற்றிய மிக சிறந்த செய்திகளை / கட்டுரைகளை (நீங்கள் எங்கு படித்தாலும்..புத்தகம் அல்லது web) எங்களுக்கு அனுப்பவும்.

x—x—–x—–x—-x—-x

Project Name :  Brahmin Connect (Hindi  and other parts of the country)

தமிழ் நாட்டின் பிராமண சமூகம் இப்போது உலகமெங்கும் சிதறி இருக்கிறது.  பலர் வெளி மாநிலங்களில் வாழ்கிறார்கள்.  இந்த நிலையில் நாம் பிற மாநில பிராமண சமூகங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்ளுதல் நமது திருமண பிரச்சனைகளை ஓரளவு தீர்க்கும்.  நமது சமூகத்தின் வியாபார வாய்ப்புகளை பெருக்கும்.

கற்பனை உதாரணங்கள் :  ராஜஸ்தானின் மிஸ்ரா மிக மிருதுவான சப்பாத்தி மாவு உற்பத்தி செய்கிறார். அவருக்கு சென்னையில் வியாபாரம் செய்ய ஆசை.  பல வகையிலும் முயற்சிக்கிறார்.  நமது வலை தளத்தின் மூலம் ஓட்டல் நடத்தும் ஸ்ரீனிவாச ராகவன் தொடர்பு கிடைத்து, அவர்கள் தங்களுக்குள் வியாபாரம் செய்யலாம். கும்பகோணம் அர்ச்சகர் குஜராத் கோயிலுக்கு அர்ச்சகர் ஆகலாம். 34 வயது ரவிக்கு உத்தர பிரதேஷ் பெண் கிடைக்கலாம்.  மத்திய பிரதேச குருக்கள் பையனுக்கு சென்னையை சேர்ந்த SOFTWARE EXECUTIVE  career guidance கொடுக்கலாம், அவனுக்கு பெங்களூரில் வேலையும் கிடைக்கலாம்.

நாம் செய்ய நினைப்பது ஒரு TECH BRIDGE  ஒன்றை உருவாக்குவது தான்.  நமது வலை தளத்தின் ஹிந்தி VERSION  விரைவில் வருகிறது.  நாம் கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் சிறிய தொடர்புகளை ஏற்படுத்தி இருக்கிறோம்.  மேற்கண்ட யோசனைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

Current Status of the Project :  In Slow Progress

உங்கள் உதவி : ஹிந்தி வலை தளம் தயார்.  உங்களுக்கு ஹிந்தி தெரியுமானால், உங்களால் நேரம் தரமுடியுமானால் (PART TIME JOB – சிறிய தொகை சம்பளமாகயும் தர முடியும்) எங்களை தொடர்பு கொள்ளுங்கள் (We look for research oriented person with Language skill).

x—xx—–xxx—–xxx

Project Name : Entrepreneur – Business Training  & Network

“நம்மவாளுக்கு பிசினெஸ் சரிப்பட்டு வராது” என்று சொல்லி சொல்லி நம் தலைமுறையை குள்ளமாக்கி விட்டோம். Security என கருதப்படும் அரசு வேலையில் நாம் இருக்க போவதில்லை. Corporate Sector வேலை என்பது “நடிகை” வேலையை போல. முழு உழைப்பையும் கொடுத்தபின், பக்க விளைவாய் BP, Sugar , Heart Problem, Back/Knee Pain, வந்த பின் 40+ ல் ” உனக்கு வயதாகிவிட்டது” என்று வீட்டுக்கு அனுப்புகிறார்கள். இப்போதல்லாம் Retirement Age 58 அல்ல, 41.
சிறிய கடை வைத்தவர் தன உழைப்பினால் 20 வருடத்தில் Department Store ஆக மாற்றும்போது, Corporate Companyல் 10 கோடி Turnoverல் வேலைக்கு சேர்த்தவர் அது 100 கோடி ஆவதை பார்க்கிறார். ஒரே வித்யாசம்; கடை முதலாளி Department Storeருக்கும் அவரே முதலாளி. ஆனால் கம்பெனியில் வேலை செய்தவர் 40+ வயதில் கை குலுக்கப்பட்டு வெளியேற்றப்படுவதை பார்க்கிறோம். Mid Age Career Crisis.
ஒரே வழி : வேளையில் இருக்கும்போதே ஒரு சிறு தொழிலை துவங்குவது.
நம் இயல்புக்கு தோதான பிசினஸ் ப்ரொஜெக்ட்டுகளை அளிக்கிறோம். படித்து / யோசித்து / செயல்படுங்கள். Life is nothing but Actions.

திரு ஹரி பாஸ்கர் (Business Trainer) நமக்காக Business Training   கொடுக்க உள்ளார்.  பலர் நம் மூலமாக  அவரிடம் உதவிகளை கேட்கின்றனர்.    (Please read Hari’;s interview to us : http://brahminsforsociety.com/tamil/2017/07/16/1426).

Current Status of the Project :  On Going ; Need to speed up

உங்கள் உதவி : நமக்கென்று ஒரு Training  Infrastructure வேண்டும்.  இடம் (30+ பேர் அமரும் வகையில்) A/C ஹால்  வேண்டும்.  பயன் படுத்தும் நாட்களுக்கு  சிறிய அளவில் நம்மால் வாடகை கொடுக்கவும் முடியும்.

–x—x—x—-x—-xx—-

Project Name : Career Training / Advice

நாம் சாப்ட்வேர் / அசவுண்டன்சி என பல துறைகளின் வல்லுநர்கள் கருத்துக்களை வெளியிடுகிறோம்.  தனக்கு பயனுள்ளதாக இருந்தது என பலர் நமக்கு எழுதுகிறார்கள்.  Face Book Forward  முலம் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் இந்த பகுதி பயனளிப்பதில் மகிழ்ச்சி.

Current Status of the Project :  In Progress;

உங்கள் உதவி : நமக்கென்று ஒரு Training  Infrastructure வேண்டும்.   மேலே கூறியவை.

–x—x—-x—x-

Project Name : Analysis / Serious Reading / For your consideration

இந்த வரிசையில் நமது பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முன் வைக்கிறோம்.  “பிராமண வெறுப்பை குறைப்பது எப்படி? நம்மை சிலர் வெறுக்கும் காரணம் என்ன?  நாம் என்ன செய்யவேண்டும் என்ற வாத பிரதி வாதங்களை உங்கள் முன் வைக்கிறோம்.

இட ஒதுக்கீட்டை ஏன் ஆதரிக்கவேண்டும்? அனைவரும் அர்ச்சகர் ஆவதை நாம் ஏன் முன்னெடுக்க வேண்டும்? திருமண பிரச்சனைக்கு தீர்வுகள்? என பல கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.   நமது சமூக நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள  பிராமண சங்கங்கள் பலவற்றின் செய்திகளை தொடர்ந்து வெளியிடுகிறோம்.

நமது குலம் மீது வைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கிறோம்.  (நான் ஆரியனா ? போன்ற கட்டுரைகள்); அதே நேரம் நம் கோணத்தில் குறையிருந்தால், மாறுபட்ட கோணத்தை நம் சமூகத்திடம் வைக்கிறோம்.

நாம் இப்போது 8,000 பேர் கொண்ட குழுவாக இருக்கிறோம்.  குறைந்தது நம் குழு  75000 (25,00,000 மக்கள் தொகையில் 3% சதவீதம்) இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனதுடன், நமது சமூகத்தின் மீது நிஜமான அக்கறையுடன் செயல் படுபவராக (வாய் சொல்லில் வீரராக இல்லாமல்), இருக்க கூடிய அனைவரையும் Electronic Bridge ஆக நம் குழு விளங்கவேண்டும்.

உங்கள் உதவி :  உங்கள் நண்பர்களை நம் குழுவுக்கு அறிமுக படுத்துங்கள்.  உங்களுக்கு பிடித்த நமது போஸ்டிங்களை  SHARE செய்யுங்கள்.  உங்கள் நண்பர்களை டேக் செய்யுங்கள்.  

Current Status : In progress

–x—x—x—x

வேண்டுகோள்:

நமது நாட்டு விடுதலை 1% பேரால் பெறப்பட்டது.  மூன்று பேர் சமைத்தால் 10000 பேர் சாப்பிடலாம்.   நமது சமூகத்தின் மீது அக்கறையும் / பாசமும் உள்ளவர்கள் 1% to 3% பேர் மட்டுமே இருப்பார்.  அந்த ஒரு சில சதவீத மக்களில் நீங்கள் கண்டிப்பாக இருப்பதால் தான் இந்த கட்டுரையை வாசிக்கிறீர்கள்.  பிறருக்காக யோசிப்பது / செயல்படுவது ஒரு புண்ணியம்.  இந்த உணர்வை கடவுள் உமக்கு கொடுத்தான், நீங்கள் பாக்கியசாலி.

உங்கள் பங்களிப்பு இல்லாமல் நமது தளம் அடுத்த கட்டத்தை எட்டாது.

  1. நமது FACEBOOK GROUP உடன் இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களை நம் சமூகத்தோடு பகிருங்கள். முடிந்தவரை SHARE செய்யுங்கள். (Click https://www.facebook.com/groups/323175998120886/ or Face Book search for BrahminsForSociety.com  – Click Join)
  2. After approval from admin; Notification (Under Adi Sankara picture) and click “ALL POSTS”
  3. மேற்கண்ட PROJECTடில் உங்களால் உதவி செய்ய முடியுமானால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் (BrahminsForSociety@gmail.com)

இன்றைய தினம் காயத்ரி தேவியின் உங்களுக்கு கிடைக்க பிராத்திக்கிறோம்.

Regards

Admin