Say “Yes” to Reservation

dr krishnaswamyபுதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணஸ்வாமியும்  – இட ஒதுக்கீட்டில் நம் நிலையும்

தேவேந்திரகுல மக்கள் பட்டியல் இனத்தவர்களாக இணைக்கப்பட்டது வரலாற்றுப்பிழை என்றும் அவர்களை தலித் பிரிவிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும்  அதற்காக கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என்றும் டாக்டர் கிருஷ்ணஸ்வாமி தெரிவித்தார்.  (News Ref : )

கடந்த சில காலமாகவே தேவேந்திரகுல சமூகத்தை சேர்த்தவர்கள் தங்களை தலித் பிரிவில் இருந்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.   சென்ற ஆண்டு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வை அழைத்து மாநாடு நடத்தி இந்த கோரிக்கையை வைத்தார்கள்.

1935ம் ஆண்டு தேவேந்திரகுல மக்கள் “பட்டியல்” இன மக்களாக ஆங்கில அரசால் அறிவிக்கப்பட்டது.  தலித் பட்டியலில் பல சலுகைகள் உள்ளன.  பல அரசு திட்டங்களுக்கு அவர்களுக்கு சலுகை கிடைக்கும். ஆனால் சமூக பெரியவர்கள் தலித் பட்டியல் மூலம் தங்கள் சமூகம் “பெற்றது என்ன – இழந்தது என்ன” என்று  அமர்ந்து யோசித்தார்கள்.  சில வருடம் முன் பட்டியல் இன மக்களில் இருந்து தங்கள் குலத்தை விடுவிக்க வேண்டும் என தீர்மானித்தார்கள்.

முதலில் கொஞ்சம் எதிர்ப்பு வந்தது.  “அரசு சலுகைகளை விட கூடாது” என்று ஒரு தரப்பு வாதம் செய்தது.  கல்வி / வேலை வாய்ப்பில் முன்னுரிமையை  ஏன் விட்டு தரவேண்டும்? என்ற கேள்வி எழுந்தது.  சிலருக்கு இழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததே.  ஆனால் ஒட்டு மொத்த சமூக  நலனுக்காக “தலித்” என்ற பெயரில் பெரும் சலுகைகளை இன்று இழக்க தயார் ஆகிறார்கள்.

இதே இட ஒதுக்கீடு :  பிராமணர்களின் பார்வை என்ன என்று பார்ப்போம் :

18ம் நூற்றாண்டு வரை நமது குலம் வேதம்  ஓதுவது மற்றும் பாட சாலைகள் நடத்துவது என்று இருந்தது.  பெரும்பாலோர் வறுமையில் இருந்தனர்.  “ஏழை பிராமணர்” பற்றிய கதைகள் ஏராளம்.  சங்கீத மும்மூர்த்திகள் மற்றும் 1900 ஆரம்ப நாட்களில் வாழ்த்த நமது குலத்து பெரியவர்களின் வாழ்கை வரலாற்றை படித்தால் அதில் ஏழ்மை நிறைந்து இருக்கிறது.  அரசு பதவியில் மிக மிக சிலரே இருந்தனர்.  நில உடமையும் இல்லை.  நம் குலம் எளிய வாழ்கை வாழ்ந்தது. பெரும்பாலும் கோயில்லில் வேலை செய்பவராக / வேதம் ஓதுபவராக இருந்தனர்.

ஆனால் 19ம் நூறாண்டு நமது குலத்திற்கு புதிய கதவை ஆங்கிலேய ஆட்சி திறந்தது.  அது வரை அரசு அதிகாரம் இல்லாத குலம், ஆங்கிலம் படித்தால் “அரசு வேலை” என்ற நிலையை நன்கு பயன்படுத்தி கொண்டது.  ஓட்டை உடைசல் அக்ராகரத்திலிருந்து திடீரென கலெக்டர்கள் / தாசில்தாரர்கள் / வக்கீல்கள் முளைத்தார்கள்.  அதுவரை அதிகாரம் செலுத்திவந்த சமூகங்கள்  இந்த மாற்றத்தை எதிர்த்தன. இது வகுப்புவாரி ஒதுக்கீடு என கோரிக்கைஆரம்பித்து இட ஒதுக்கீடாக உருவெடுத்தது.

சமீபத்தில் “ஹிந்து” பத்திரிகையில் தமிழில் M.A / B.Ed/PHD    படிப்பவர்களை பற்றிய செய்தி வந்தது.  தமிழில் உயர் படிப்பு படிப்பவர்களின் பெருபாலோனர் “ஒரு குறிப்பிட்ட” குலத்தை / சாதி பிரிவை சேர்த்தவர்கள் (90% பேர் ஒரே பிரிவை சேர்த்தவர்கள்).  அதற்கான காரணகளும் அலசபட்டன.  விளைவு:  அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ் ஆசிரியர் வேலைக்கு அந்த ஒரு பிரிவை சேர்த்தவர் மட்டுமே தகுதி பெறுவார்.  மற்றவர்கள் தகுதி பெற மாட்டார்கள்.    இங்கே “சதி செயல்” எதுவும் இல்லை.   இது இயல்பாக நடக்கிறது.

1910-1950 களில்  அரசு வேலை சுலபமாகவே கிடைத்தது.  சாதாரணமாக படித்தாலே அரசு வேலை. 11ம் வகுப்பு படித்த அனைவர்க்கும் அரசு வேலை கிடைத்தது.  பிராமணர்கள் “சதி” செய்து அரசு வேலை பெறவில்லை.  இயல்பாகவே அரசு வேலைக்கு பிராமணர்கள் முயற்சித்தார்கள்.  கிடைத்தது.  அவ்வளவே.   பிராமணர்கள் அதிகம் அரசு வேளையில் இருக்கிறார்கள் என்பது நம் குலம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.

சரித்திரத்தின் பக்கங்களில் இருந்து….

(சரித்திரம் தெரியாதவன் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறான்…)

நம்மில் பலருக்கு இட ஒதுக்கீட்டின் வரலாறு தெரிவதில்லை. பிரபலமான பிராமண தலைவர் ஒருவர் திரு கருணாநிதியை சந்தித்து பிராமணர்களுக்கு 7% இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டார். திரு கருணாநிதி அவர்கள் பிராமண தலைவரை திரு வீரமணி அவர்களை சந்திக்கும்படியும், இட ஒதுக்கீட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ளவும் கூறி அனுப்பினார். அந்த பிரபல தலைவருக்கு வரலாறு தெரியாததால், திரு கருணாநிதி அவர்களிடம் மேற்கொண்டு வாதிட முடியவில்லை.

நமக்கு தெரிந்திருக்க வேண்டிய வரலாறு இது.

அது பிரிடிஷ் காலம். 1930’ஸ் களில் பிராமணர்கள் அரசு வேலைக்கு அதிகம் தேர்வு பெற்று கொண்டிருந்தார்கள். சமுகத்தில் சலசலப்பு. ஆனால் பிராமணர்கள் மீது வெறுப்பு இல்லாத காலம். அரசால் கமிட்டி அமைக்கப்பட்டது. சர் பி ராமசாமி ஐயர் பிராமணர்கள் சார்பாக கலைந்து கொண்டார். எதிர் தரப்பினர் பிராமணர்களுக்கு 16% அரசு வேலையில் பங்கு அளிக்க வேண்டும் எனவும், 84% மற்றவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். சர் பி ராமசாமி ஐயர் தலைமையில் ஆன பிராமணர்கள் குழு இதை ஏற்க மறுத்தனர். கூட்டம் தோல்வியில் முடிந்தது.
சர் பி ராமசாமி ஐயர் தலைமையில் ஆன குழு எதிர்காலத்தை பற்றி கணிக்க தவறிவிட்டனர். சில ஆயிரம் பேர் அரசு வேலை பெற, அதனால் பலனடைய நமது குலத்தின் எதிர் காலத்தையே பணயம் வைத்து விட்டனர். ஒரு சரித்திர தவறு நடந்தது. அதுவும் எந்த விமர்சன பார்வையே இல்லாமல் நடந்தது.

அதன் விளைவை நாம் இன்றும் பார்க்கிறோம். தமிழ் நாட்டில் பிராமண எதிர்ப்பு பிரும்மாண்டமான வளர்ச்சியடைய இந்த தவறான முடிவே காரணமாகியது. நம்மை எதிர்ப்போர் “உன் மகனின் / மகள் / மற்றும் பரம்பரையின் வாய்ப்புகளை பிராமணர்கள் பறிக்கிறார்கள்” என்று தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்கள். அந்த வாதம் நன்கு எடுபட்டது. நம்மை எதிர்பவர்களிடம் ஒரு பிரம்பை / கட்டையை கொடுத்து நம்மை அடிக்கும் படி செய்துவிட்டோம். கடந்த மூன்று தலைமுறையாக பிராமண எதிர்ப்பு என்னும் சிலுவையை சுமக்க வேண்டி இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பிராமண துவேஷம் எனும் விஷத்தை ஏற்க வேண்டி இருந்தது.  அது அடுத்த தலைமுறையும் பாதிக்கத்திருக்க இந்த கட்டுரை எழுத படுகிறது.

இன்று திரு கிருஷ்ணசாமி அவர்களின் நிலை பற்றி யோசியுங்கள்;  அவர்கள் தலித் Reservation வேண்டாம் என்கிறார்கள். அதனால்  சில அரசு பதவிகளை இழக்கலாம்.  ஆனால் ஒட்டு மொத்த சமூகத்துக்கு எது நல்லது என்பதே அவர்களின் கோணமாக இருக்கிறது; சிலரின் நலனுக்காக ஒரு குலத்தை படு குழியில் தள்ள கூடாது என்பதே நம் நிலையாக இருக்க வேண்டும்.

2017  Today:

இன்றைய நிலையில் :

காலங்கள் மாறின.  நம் மனநிலையும் மாறியது.  நமது குலம் மாற்றத்தை ஏற்றுக்கொண்டது.

கடந்த 10 வருடங்களின் நமது இளைஞர்கள் எவரேனும் அரசு வேலைக்கு விண்ணப்பித்தோ, அல்லது TNPC Exam எழுதியோ பார்த்திருக்கீர்களா ?

இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!

அரசு வேலையை நம்பாத ஒரு தலைமுறையை உருவாக்கியிருக்கிறோம். உண்மையில் 45 வயதுக்கு கீழ் உள்ள பிராமண குலத்தை சேர்ந்த அரசு ஊழியர் எவரும் இல்லை. அரசு ஊழியராக இருக்கும் ஒரு சில பிராமணர்கள் ரிடயர் வயதை நோக்கியிருக்கிறார்கள். இந்த தலைமுறை இளைஞர்கள் TNPC Exam எழுதுவது கூட இல்லை தமிழக  அரசு வேலையில் 100 % சதவீத இட ஒதுக்கீடு அமுலில் இருக்கிறது.  இன்றய நிலையில் அரசு வேலையில் நமது  பங்கு 0% அருகில் இருக்கிறது.

ஆனால் கல்வி துறையில் பாதிப்புக்குள்ளாகிறோம். அதுவும் வசதி குறைந்த மாணவர்கள் கடும் பாதிப்புகுள்ளாகிறார்கள். நம் குலத்திலிருந்து டாக்டர்கள் மற்றும் வக்கீல்கள் வருவது என்பது அரிது. திறன் படைத்த மாணவர்கள் சி.ஏ. மற்றும் ஐ.டி துறைக்கு செல்கிறார்கள்.  ஆனால் இது தவிர்க்க முடியாதது.

நம் சமூகத்தினர் சிலர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலை எடுக்கிறார்கள். அவற்றை பற்றிய அலசல் :

பார்வை – 1  : Anti Reservation stand

“சென்னையில் வெய்யில் தாங்கலை”

“இந்த நாட்டில் எங்க பார்த்தாலும் ஊழல்”

“பஸ்ல Peak  Hour ல் கூட்டம் தாங்க முடியவில்லை”

மேற்கொண்டவற்றை பற்றி பேசுவது  பயனில்லாத செயல். இவற்றை  தவிர்க்க இயலாது. ஆனால் தப்பிக்க இயலும். புத்திசாலிகள் சிந்தித்து மேற்கண்ட பாதிப்புகளில் தவிர்க்கும் வழிகளை கடைபிடிக்கிடுர்கள். இன்றைய நிலையில் ஒரு பிராமண இளைஞன் தமிழக அரசு ஊழியராக இருப்பது மிக மிக கடினம்.  ஒரு RTO  அலுவலகத்தில் / வருவாய் துறை அலுவலகத்தில் /  போலீஸ் துறையில் ஒரு பிராமண இளைஜன்   வேலை செய்வதை விரும்பவேயில்லை.   இன்றைய இளைஞன் அதன் பக்கம் கூட செல்வதில்லை.

நிலைமை புரியாமல், நடுத்தர வயதுடையோர்  Face Book ல இடஒதுக்கீட்டுக்கு எதிரான போஸ்டிங் போடுகிறார்கள். “பாப்பார புத்தி” என திட்டும் வாங்கிறார்கள். நமது இயக்கங்கள் சில இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்பாட்டம் என வயதான மனிதர்கள் வைத்து  நடத்துகிறார்கள். சென்னை வெய்யிலை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தினால் என்ன நேருமோ அதே விளைவு தான் இந்த ஆர்பாட்டங்களுக்கும் நடக்கின்றது. வெறும்  வியர்வை மட்டுமே கண்ட பலன்.

இடஒதுக்கீட்டை  எதிராக பேசும் போதும் / செயல்படும் போதும் நாம் சமூகத்தில் பலரை நம் குலத்துக்கு எதிராக சிந்திக்க வைக்கிறோம் என்ற எளிய உண்மையை புரிந்து கொள்வோம.

பார்வை – 2   CREAMY LAYER

நம்மவர்கள்  CREAMY LAYER    எதிர்த்து அதிகம் பேசுகிறார்கள்.  CREAMY LAYER என்பது தற்போது இட ஒதுக்கீட்டை அனுபவித்து வரும் சாதிகளில் பணக்காரர்களை விலக்குவது ஆகும்.

குமரன் என்பவர் Backward Caste மாணவர் என்று வைத்துக் கொள்வோம். அவரின் தந்தை 5 இலட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கினால் அவர் Other Cast (OC) என்று கருதப்படுவார்.

இதன் மூலம் OC க்கான போட்டி மேலும் அதிகரிக்கும். இதில் நமது குலத்துக்கு என்ன நன்மை என்பதை யோசித்து மண்டையை உடைத்துக் கொண்டாலும் புரியாது. Backword Cast இல் உள்ள ஏழைகள் CREAMY LAYER பற்றி கேட்க வேண்டும்.   CREAMY LAYER நல்லதா அல்லது கெட்டதா அந்த குலத்தலரே யோசிக்கட்டும்.  நமது பங்களிப்பை எவரும் கேட்டவில்லை, விரும்புவதில்லை.

நம்மில் பலர்  CREAMY LAYER பற்றி வாய் வலிக்க வாதாடி “பாப்பார புத்தி” என திட்டும் வாங்கிறார்கள். நமது “கருத்து கந்தசாமிகள்” இந்த விஷயத்தில் வாய்முடி இருந்து, குலத்துக்கு / சமூகத்துக்கு தங்கள் வீட்டுக்கு திட்டு வாங்கி  கொடுக்காமல் இருந்தால் கோடி புண்ணியம்.

நல்ல பதவியில் இருபவர்கள், கவுரவமானவர்கள் கூட இட ஒதுக்கீட்டை பற்றி பேசி மோசமான வார்த்தைகளால் Face Book ல் திட்டு வாங்குகிறார்கள்.  Face Book ல் கேவலமான வார்த்தைகளை பயன் படுத்தும் ஒருவன் நிச்சயமாக நல்ல சிந்தனை உடையவன் இல்லை.   அவனிடம் போய் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வாதாடி, நம் குலத்தோருக்கு திட்டு வாங்கி கொடுப்பது வடிகட்டிய முட்டாள்தனம்.

பார்வை – 3   Reservation for Judges

நீதி துறையில் இட ஒதுக்கீடு வேண்டுமா என்று அடிக்கடி விவாதம் நடக்கிறது.  நம்வர்கள் பலர் “கருத்து கந்தசாமிகளாக” மாரி பேசி தள்ளுகிறார்கள்.  ஒரு Face Book  விவாதம் ஆவேசமாக நடந்தது.  பலர்  இட ஒதுக்கீடு முறைக்கு ஆதரவாக பேசினார்.  அனைவரும் இன்றைய நீதி துறையின் நிலைமைக்கு பிராமணர்களே காரணம் என்று ஒரே அடியாக அடித்தனர்.  வேறு வழியில்லாமல் நாம் சில உண்மைகளை சொல்ல வேண்டி வந்தது.

  1. சென்னை உயர் நீதி மன்றத்தில் 33 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பிராமணர்
  2. தமிழக நீதி மன்றங்களில் பிராமண நீதிபதிகளை விரல் வீட்டு எண்ணி விடலாம். மாவட்ட நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட பிராமணர்கள் எவரும் இல்லை.

நீதி துறையில் இட ஒதுக்கீடு வேண்டுமா? இல்லையா?  என்று கேட்டால் எவரானாலும் நேர்மையான நீதிபதி வேண்டும் என்று சொல்வேன்.  இந்த நாட்டு மக்களின் ஒரே நம்பிக்கை நீதி துறை மட்டுமே.  நல்லவர் நீதிபதியாக வர விழைவோம் என்று விவாதத்தை முடித்தேன்.

பார்வை – 4 இடஒதுக்கீடு திறமை  இல்லாதவர்களா?

நம்மவர் பலர் பிராமணர்கள் மட்டுமே திறமையானவர்கள் என பேசி கொண்டிருக்கிறார்கள். பல நேரங்களில் இட ஒதுக்கீடு முறையில் வேலைக்கு/ மேற்படிப்புக்கு  சேர்ந்தவர் திறமை இல்லாதவர் என்றும் பேசுவதை கேட்க்கிறோம். இதை விட முட்டாள் தனமான வாதம் உண்டா என்று தெரியவில்லை.

தமிழ் நாட்டின் இட ஒதுக்கீட்டின் படி OC 31% சதம் ஒதுக்க படுகிறது. இதில் நம் குலத்தவர் மட்டுமே வெற்றி பெருகிறார்களா என்றால் இல்லை! இல்லை!! இல்லவே இல்லை. சென்ற ஆண்டு நமது குலத்தவர் மருத்துவ படிப்பில் சேர்ந்தது மிக சீலரே. 

யார் OC யில் உள்ள ஒதுக்கீட்டை பெறுகிறார்கள்.  சுலபமான பதில்.  OC என்பது அனைவருக்குமான போட்டி.  ஒரு BC மாணவன் 200 மதிப்பெண் பெற்றால் அவன் தகுதி  அடிப்படையில் OC Quota வில் தன் சீட்டை பெறுகிறான்.

சமீபத்தில் நடந்த NEET Exam பற்றிய ஆய்வு:

Total Seats Allocated for OC : 833 (31% of the total Doctor seats in Tamil Nadu)

The community split of the OC category seats as follows.
BC – 434 / MBC – 97 / Backward Muslim : 44 / SC : 36 / SCA : 1
The forward community got only 211 out of 833 seats allocated to the OC category. Many Kerala / north indian names figured in Forward Community passed students.
Totally around 50-70 (less than 1% of total doctor’s seats) might have from Brahmin Community Students.

OC யில் நம் பங்கு 0.5% போக,  30.5% மற்றவரே திறமை அடிப்படையில் பெறுகின்றனர்.

திறமை என்பது நம் குலத்துக்கு மட்டுமே உள்ளது என்றால் ஒவ்வொரு கல்லுரியில் 31% (OC Quota ) நம் குல இளஜர்கள் மட்டுமே இருக்க முடியும்.  ஆனால் அப்படி இல்லை.     OC quota வில் BC மற்றும் இதர பிரிவினர்  பெருமளவில் வெற்றி பெறுகிறார்கள்.

இப்போது B.E உதாரணத்தை பார்ப்போம்

அண்ணா பல்கலை கழகத்தின் B.E – Civil இட ஒதுக்கீடு:

OC – Cut off Mark : 197.5
BC Cut off Mark : 197.00

OC and BC cutoff வித்தியாசத்தை பாருங்கள்.  நம்மில் பலர் எவ்வளவு அறியாமையில் இருக்கின்றோம் என தெரியும்.

197.50  (OC)வாங்கியவன் புத்திசாலி.

197 (BC) வாங்கியவன் முட்டாளா? அறிவு உள்ளவன் இப்படி சொல்வனா?

தனிப்பட்ட முறையில் ஒருவர்  தன் மகனின் திறமை பற்றி உயர்வாகவும்   உங்கள் மகனை / மகளை  திறமை பற்றி  தாழ்வாகவும்  பேசி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.  அவரை, எவ்ளவு நல்லவராக இருந்தாலும், உங்களுக்கு பிடிக்குமா?  அவரின் மீது வெறுப்பு வருமா வராதா?  ஏனேனில் உங்கள் மகனும் திறமைசாலி தான் . அது மட்டும் இல்லாமல் உங்கள் சுய மரியாதையை அவர் கேவல படுத்துகிறார். அவர் மீது உங்களுக்கு வெறுப்பு வந்தால் அது சரியே.

மற்றவரை பற்றி  மோசமாக  பேசுபவர்,  ஊரை பகைக்கிறார் என்று அர்த்தம்.  அவரின் அழிவை ஊர் கொண்டாடும்.  அவர் நாகரிகம் இல்லாதவர் என்று அறியப்படுவார். அவர் தன் நண்பர்களால் மறைமுகமாகவும் எகிரிகளால் மிக கேவலமாகவும் திட்ட  படுவார்.  அது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பதோடு முடிந்துவிடும்.

ஆனால் ஒரு குலத்தை சேர்ந்த சிலர் “தாங்களே அறிவாளிகள்”  என்றும் மற்றவர் மூடர் என்றும் பொது வெளியில் சொல்லி திரிந்தால்  அந்த குலத்தின்  மீது வெறுப்பு படரும்.  அந்த குலத்தை மெதுவாக அழிக்கும்.  எவன் ஒருவன் நம் குலத்தை மற்றவர் வெறுக்கும்படி தன் பேச்சால் செய்கிறானோ அவன் நம் குலத்தை அழிக்கும் பாவத்தை சுமக்கிறான்.

அடுத்தமுறை Anti-Reservation  பற்றி நீங்கள் பேசும்போது  “நீங்கள் பிராமணர்கள்ளுக்கு நல்லது செய்கிறீர்களா அல்லது தீமை செய்கிறீர்களா என்று ஒருமுறை யோசியுங்கள்.

பார்வை – 5  தமிழ் நாடு Vs மற்ற மாநிலங்களில் இட ஓதுக்கீடு

திரு திருமாவளவன் அவர்கள் தலித்துகளின் உள்ள அருந்ததியர்கள் உள் ஒதுக்கீட்டை எதிர்த்தார். அது ஒரு வாத பிரதிவாதமாகவே இருந்தது. பல கட்டங்களில் / சூழ்நிலையில் இட ஒதுக்கீட்டை பலர் எதிர்க்கிறார்கள் / ஆதரிக்கிறார்கள்

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. தெலுங்கானா போன்ற மாநிலங்களில் 50% மேலும் இட ஒதுக்கீடு இருக்கிறது. அதை போலவே இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். தொடர்ந்து வாத பிரதி வாதங்ககள் நடக்கேவே செய்கின்றன.

ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் இந்த நிலை  இயல்பே.  ஆனால் மற்ற மாநிலங்களில்அவர்கள் எவரும் “நீ கன்னடகாரன் இல்லை. நீ ஆரியன்” என்று சொல்வதில்லை. வாதங்களில் கோபம் இருக்கிறது ஆனால் வெறுப்பு இல்லை.

ஆனால் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வாதம் பொது வெளியில் வாதம் செய்பவனின் வீட்டு பெண்களின் உடல் உறுப்புகள் விமர்சிக்கப்படும் நிலை இருக்கிறது.

சமீபத்திய உதாரணம் : எழுத்தாளர் ஜெயமோகன் ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். பலர் அதற்கு எதிர்வீணை ஆற்றினார்கள். இது இயல்பாகவே இருந்திருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலனோர் மிக மோசமான வார்த்தைகளை பயன் படுத்தினர். பலர் அவரை தனிப்பட்ட முறையில் கேவல படுத்தி எழுதினர். திரு ஜெயமோகன் அவர்கள் தன் வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.

ஊரறிந்த எழுத்தாளருக்கே இந்த கதி. சாதாரண மனிதர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எழுதி தங்கள் குடும்ப பெண்களை மற்றவர் கேவலமாக பேச வாய்ப்பு அள்ளிகிறார்கள். இந்த கேவலம் தேவையா? என்று யோசிக்கவேண்டும்.

பார்வை – 7  ஆன்மீக பார்வையில்  இட ஓதுக்கீடு 

இறைவன் நமக்கு கொடுப்பதை எவர் தடுக்க முடியும்? இட ஒதுக்கீடு 69% அமுல் படுத்தப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆகின்றன. இறைவன் மற்ற கதவுகளை திறந்தான். “கடல் தாண்டினால் பாவம் சுழும்” என்று எண்ணிய சமூகத்தில் பாதி பேர் அமெரிக்காவில் / ஆஸ்ட்ராலியாவிலும் வாழும் நிலை வைத்தான். “ஏழை பிராமணர்” என்ற நிலையிலிருந்து Technologist   என அடுத்த கட்டத்துக்கு முன்னேற வைத்தான். பெருமளவு ஏழ்மையை வெல்ல வைத்தான். (சுந்தர்சு) பிட்சை  என்பவரே உலகில் அதிகம் சம்பாதிக்கும் நிலை வைத்தான். இறைவன் திருவுள்ளமே நடக்கும். மனிதர் எவர் நம்மை தடுக்க?

நம்மைவிட எளியோருக்கு உதவுவதே புண்ணியம்; சுவர்க்கம் புகும் வழி. அதன் அடிப்படியிலும் இட ஓதுக்கீட்டை எதிர்காத்திருப்போம்.  நம்மை விட எளியவர்களுக்கு இட ஒதுக்கீடு பயன் அள்ளித்திருக்கிறது என்பது மிக உண்மை.  அதனால் அதை ஆதரிப்போம்

பல நேரங்களில் “ஆண்ட பரம்பரை” என்று பெருமை பேசுபவர், மிக பெரும் செல்வந்தர்கள், செல்வாக்கானவர்கள் இட ஓதுக்கீட்டை பெரும் போது நம்மில் பலருக்கு கோபம் வருவது புரிந்துகொள்ள கூடியதே. ஆனால் தவிர்க்க முடியாது என்பதையும் புரிந்து கொள்வோம்.

பார்வை – 8  ஊழலில் தப்பிக்கும் ஆயுதம் 

திரு சிதம்பரம் மகன் திரு கார்த்திக் மீது துக்ளக் ஆசிரியர் திரு குருமூர்த்தி அவர்கள் ஊழல் குற்றச்சாட்டை வைத்தார். திரு சிதம்பரம் குடும்பம் காங்கிரஸ் கட்சியை சேர்த்தவர். திராவிட அரசியல் செய்யாதவர். நம்மில் பலர் அவரின் திறமையை நினைத்து அவரை விரும்புகிறோம். முன்பொருமுறை ஆனந்த விகடன் ஆசிரியர் ஒரு ஜோக் வெளியிடதற்காக கைது செய்யப்பட்டபோது திரு சிதம்பரம் (அப்போது அவர் இளம் அரசியல்வாதி) மிக சிறப்பாக செயல்பட்டு பலரை கவர்ந்தார். அவரின் பேச்சை கேட்க நம்மில் பலர் விரும்புவதுண்டு.

இப்போது ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடன் திரு கார்த்திக் சிதம்பரம் அவர்களின் பதில் தான் தமிழக அரசியலின் அடிப்படை. “ஆரிய நாய்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை”. முடிந்தது கதை.

ஒரு காங்கிரஸ்காரர் கூட ப்ராமண எதிர்ப்பு என்பது தான் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டும்போது மிக சிறந்த தப்பிக்கும் வழி என்று நினைக்கிறார். மற்றவரை பற்றி என்ன சொல்ல?

இட ஒதுக்கீட்டை எதிப்பதன் முலம் நாம் ஊழல் பேர்வழிகளுக்கு ஏன் பதுங்குமிடம் தர வேண்டும். இது ஒட்டு மொத்த தமிழகத்துக்கு கேடு அல்லவா? தமிழக மக்கள் தங்கள் தலைவரை தீர்மானிக்கட்டும். வெறும் பிராமண எதிர்ப்பு என்ற பெயரில் எவரும் ஒட்டு கேட்காத / ஊழல் செய்துவிட்டு தப்பிக்காத நிலையை நாம் உருவாக்குவோம்.

நம் தமிழ் நாட்டின் எதிர்காலம் கருதி, இட ஒதுக்கீட்டை எதிர்க்காமல் ஆதரிப்போம்,

பார்வை – 9 பிறப்பின் அடிப்படையில் தனி ஒதுக்கீடா ?

இந்த கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது. நமது சமுகத்தில் சுமார் 20000 குடும்பங்கள் அர்ச்சகர் பணி செய்து வருகின்றனர். அவை அனைத்தும் பிறப்பின் அடிப்படியில் அமைந்தது. குருக்கள் குடும்பங்களில் பிறந்தவர் மட்டுமே. எனவே இந்த கேள்வி அர்த்தமற்றது

பார்வை – 10  வெறுப்பின் நிழலில் 

ஒரு சமுகத்தை சேர்த்தவர் மீது அவரின் பிறப்பின் அடிப்படையில் வெறுப்பை உமிழும் கூட்டம் எல்லா காலத்திலும் இருத்திருக்கிறது. முஸ்லிம்கள் / கிறிஸ்த்தவர்கள் / தலித்துகள் / தெலுங்கு / மலையாளம் / கன்னட பேசுவோர் மீது பிறப்பின் அடிப்படையில் வெறுப்பு காட்டுபவர்கள் இருக்கிறார்கள்.   தமிழ் நாட்டில் சில மாவட்டக்களில் பெரும்பான்மையாக இருக்கும் சமூகங்களின் மீது அநியாயமாக பழி சுமத்தி பேசுபவரும் இருக்கிறார்கள். ஒரு மனித கூட்டத்தை பற்றி மோசமாக பேசுபவன் / எழுதுபவன் மனதில் வெறுப்பு எனும் குஷ்டம் படர்ந்து இருக்கிறது.

இப்படி மற்ற சமூகங்கங்ககளின் மீது வெறுப்பு உமிழ படும் பொது, தமிழர் மனசாட்சி விழித்து கொள்கிறது. பெரும்பாலோர் இத்தகைய செயலை செய்பவரை எதிர்கிறார்கள். வெறுப்பு செய்தவர் பதுக்கி போகிறார் அல்லது தன் பேச்சை மாற்றி கொல்கிறார். நம் தேசம் ஆஃப்ரிக்க நாடுகளை போல் இன வாரியாக அடித்து கொண்டு ரத்த வெள்ளமாக ஆகாமல்  இருப்பதற்கு நமது பெரும்பாலான மக்களின் மனசாட்சியுடன் கூடிய  எதிர்ப்பே காரணம்.    இந்த நாட்டை  அதுவே காக்கிறது.

ஆனால் பிராமணர்களை மீது காட்டும் வெறுப்புக்கு தமிழ் சமூகத்தின் மனசாட்சி  அதிகம் எதிர்ப்பு காட்டுவதில்லை. பிராமணர் மீது வெறுப்பை உமிழுபவர் “சமூக நீதிகாக போராடுபவர்” என்று ஒரு முகமோடியின் பின் நிற்க்கிறார். உங்கள் பிள்ளைகளின் வேலையை / படிப்பை பிராமணர்கள் பிடுங்கி கொள்ளாமல் நங்கள் தடுப்போம் என்று பிராமண எதிர்ப்பாளர் கூறி கொள்கிறார். மற்றவர் வெறுப்பினால் பாதிக்கப்படும் போது ஏற்படும் மனசாட்சியின் குரல், பிராமணர் பாதிக்கப்படும்  போது பெருமளவு அமைதியாகி விடுவதற்கு இதுவே காரணம் .

இந்த நிலை நீடிப்பது நம் குலத்துக்கு நல்லதா? இறைவன் மனித உருவத்தில், நமக்கு உதவுகிறான் என்ற வேத வாக்கியம் நினைவு இல்லையா. நம் சுற்றத்தார் நம்மை நேசிக்க தடுக்கும் காரணங்களை கண்டறிந்து விலக்க வேண்டாமா?

நம்மிடம் வெறுக்க பட வேண்டிய விஷயம் என்ன இருக்கிறது. நேர்மை இல்லையா? நியாயம் கெட்டவரா? நம்பக தன்மை இல்லாதவர்களா? நாட்டுக்கு துரோகம் இழப்பவரா? தேச பக்தி இல்லாதவர்களா? தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் பலரை நம் சமூகம் தந்தது. சிறந்த ஆசிரியர்களை தந்தது. எழுத்தாளர்களை / சிந்தனையாளர்களை  நம் சமூகம் தமிழ் நாட்டுக்கு தந்தது.

நாம் யுகயுகமாய் இங்கு பிறந்தோம். இங்கயே மறித்தோம். மீண்டும் பிறந்தோம். அரங்கன் அருள் இருந்தால், இந்த ஜென்மத்தில், சுவர்க்கம் புகுவோம். இல்லையேல்  காவேரி கரையில் / தாமிரபரணி கரையில் மீண்டும் பிறக்க வரம் கேட்போம். மீண்டும் மீண்டும் இங்கேயே பிறப்போம்.  மரிப்போம்.  இது நமது புண்ணிய பூமி.   இது எமக்கு  இதன் மலையும் / ஆறுகளும் / குளங்களும் தெய்வம். இந்த மண்ணை நேசிப்பவர் நாம்.  ஆனால் இந்த மண்ணில் பிறந்தவர் நம்மை வெறுக்க நாமே காரணங்களை தரலாமா.

நம்மை வெறுப்பவர் சொல்லும் ஒரே காரணம் அரசு வேளையில் நாம் அதிகம் இருக்கிறோம் என்பதுதான்.  இன்றய நிலையில் நம் குலம் அரசு வேலையில் சுத்தமாக இல்லை. வெறும் இட ஒட்டுகேதுக்கு எதிரான பேச்சால் பெரும் வெறுப்பு எனும் பரத்தை ஏன் சுமக்க வேண்டும்?

நீங்கள் இல்லை .. ஆனால் பலர்

நண்பர் ஒருவர்:  1926 ம் ஆண்டு முதல் இட ஒதுக்கீட்டை பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்துருப்பார்.  அவரின் கேள்விகளுக்கு சாதாரணமாக பதில் அளிக்க முடியாது.  வாதங்களில் பிச்சு உதறுவார்.  ஒருமுறை நம் சகோதர இயக்கம் “இட ஒதுக்கீட்டுக்கு” எதிரான ஆர்ப்பாட்டம் நடத்தியது. அவரை கலந்துகொள்ள அழைத்தார்கள்.  அந்த பக்கமே போகவில்லை.

அடுத்தவர்:  இட ஒதுக்கீட்டை எதிரிக்கும் போராளி.   இட ஒதுக்கீட்டிநால்  பாதிக்கப்பட்ட ஒரு ஏழை மாணவனுக்கு உதவி கேட்டோம்.  எங்களுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

பலர் வாய்ச்சொல்லில் வீரர்களாக இருந்து நமது குலத்தை பலர் வெறுக்க பேசி நம் அடுத்த தலைமுறையை “சமூக வெறுப்பு” என்னும் படு குழியில் தள்ளுகிறார்கள்

சமூகத்தின் பார்வையில்…..

ஒரு குலத்தின்   வாழ்வு அதன் மதிப்பில் இருக்கிறது.

“ஐயர் ஓட்டலில் போய் இட்லி வாங்கியா?  குழந்தைக்கு ஊட்டனும்”

இந்த வாக்கியத்தில் இருக்கும் நம்பிக்கையை  கவனியுங்கள்.   இந்த நம்பிக்கையே நம் குலத்தை மிக  சிறந்த / வளமையான வியாபாரம் செய்பவர்களாக  ஆக்கும்.  இதை ஆங்கிலத்தில் Social Capital என்பார்கள்.

நம் குலத்துக்கும் Social Capital இருக்கிறது.  கடந்த 100 ஆண்டு காலமாக பிராமண வெறுப்பு வளர்க்கப்பட்டுள்ளது.  அந்த வெறுப்பை வளர்க்க பெரும் பணம் / பெரும் உழைப்பு செலவிடப்பட்டுள்ளது.  அனாலும் தமிழ் மக்கள் நம்முடன் நேசத்துடன் / நம்மை பற்றி நல்ல கருத்துடனும் இருகிறார்கள்.  இந்த நல்ல பெயர் நம் மூதாதையர் நமக்கு கொடுத்த சொத்து.  இதை வெறும் வாய் சொல்லால் கெடுத்து “பிராமண வெறுப்பை” வளர்ப்பவன் நம் குலத்துக்கு அறிந்தோ அறியாமலோ துரோகம் இழைக்கிரான்.

என்ன செய்யவேண்டும் :

அக்கம் பக்கம் கொஞ்சம் பாருங்கள். குஜராத்தில் படேல் சமூகம் இட ஒதுக்கீட்டை 1989′ களில் கடுமையாக எதிர்த்தது. இப்போது அவர்கள் எதிர்ப்பை கை விட்டார்கள். எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள். ராஜஸ்தானில் / உத்தர பிரதேசத்தில் “குஜ்ஜர்கள்” பிரிவை சேர்த்தவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்தார்கள். இப்பொது தங்களுக்கும் வேண்டும் என போராடுகிறார்கள். ஒரு புத்திசாலி சமூகம் இப்படி தான் இருக்க வேண்டும்.

ஆனால் நம்மில் பலர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஒரு வறட்டு தவளையை போல் பேசுகிறோம் / எழுதுகிறோம். அதனால் நம்மை எதிர்பவரை வலிமை ஆக்குகிறோம்.

நம்மை எதிர்ப்பவர் (இப்பபோது):  “பிராமணர்கள் இட ஓதுக்கீட்டை அழிக்க நினைக்கிறார்கள்.  நான் அவர்களிடம் இருந்து உங்களை காப்பேன்.  ஒன்று கூடுங்கள். அவர்களை எதிர்ப்போம்”.  என்று பேசி கூட்டம் சேர்க்க முடியும்.

நாம் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என தமிழ் நாட்டின் முலை முடுக்கெல்லாம் தெரியப்படுத்த வேண்டும். நமக்கு வேண்டியது நமது சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு / முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு  சலுகை வேண்டும். அவர்களுக்கு 2% இட ஒதுக்கீடு வேண்டும் என போராட வேண்டும்.

விளைவு என்ன என்று பார்க்கலாம்:

நம்மை எதிர்ப்பவர் : பிராமணர்கள்  தம் குலத்திலுள்ள ஏழைகளுக்கு 2% இட ஒதுக்கீடு கேட்க்கிறார்கள்.   ஒன்று கூடுங்கள். அவர்களை எதிர்ப்போம்.

கூட்டம் சிரிக்கும்.  தமிழ் நாட்டு மக்கள் நம்மை எதிர்பரை பார்த்து சிரிக்கவே செய்வர். பிராமண எதிர்ப்பை குறைப்பது நமது கடமை. நம்மை எதிர்க்க இருக்கும் காரணங்களை அழித்தால் நம்மை எதிர்ப்பவர் கூட மாறிவிடுவர். அது நம் எதிர்கால சந்ததியருக்கு நல்லது.

தவளை யின் குரல் :

75 வருடங்களாக இட ஒதுக்கீட்டுக்கு எதிராக “கத்தி” கொண்டிருக்கிறோம்.  தாத்தாவின் அப்பா  தலையை கொண்டுபோய் வீட்டின் முன் உள்ள பாறாங்கல்லை தலையால் முட்டி முட்டி உடைக்க பார்த்தார்.  தாத்தா அதையே செய்து பாறாங்கல்லை உடைக்க முடியவில்லை.  அப்பாவும் அதையே செய்து பார்த்தார்.  பாறாங்கல் உடைய மறுத்தது.  ஊர சிரித்தது.

இன்றைய தலைமுறை மகன் வந்தான்.  ஏன் பாறாங்கல்லை உடைக்க வேண்டும் ; தாண்டலாமே என்று யோசித்தான். தாண்டினான்.

இன்று நமது இளைஞ்சன் எவனாவது அரசு வேலைக்கு TNPC  தேர்வு எழுதி பார்த்து இருக்கிறீர்களா.  இல்லை இல்லை இல்லவே இல்லை.

இட ஒதுக்கீடுக்கு எதிராக பேசுவது பாறாங்கல்லை தலையால் முட்டி முட்டி உடைக்க பார்க்கும் வேலை.  ஒரு தவளை போல் கத்தி கத்தி நம் எதிரிக்கு பலம் சேர்த்துக்கொண்டிருக்கிறோம்.  நம் தலைமுறையை வெறுப்பெனும் நெருப்பில் தள்ளி விடுகிறோம்.

பிராமணனே சிறந்தவன் / திறமையாளன் என்றும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் பேசுபவன் நம் குலத்தை அழிக்கிறான்.

நாம் அறிவிக்க வேண்டியது:

தமிழர்களே!!!! தமிழர்களே!!!! பிராமணர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் இல்லை. 10000 ஆண்டுகலாய் நாம் இணைந்து இருதோம். உங்களுக்காக நாங்கள் பிரத்தித்தோம். உங்களின் வீட்டின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டோம். எண்களில் ஏழைகளுக்கு / முதல் தலைமுறை படிப்பவர்களுக்கு 2% இட ஒதுக்கீடு வேண்டும்.

1. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம்.
2. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம்.
3. எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்

இதை செய்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் சுத்தமாகிவிடும்.

அவ்வளவு தான்.

www.brahmisforsociety.com