தடம் மாறும் தடம்
தொ.பரமசிவன். தமிழ்ப் பண்பாட்டியலின் ஆய்வு முகம் என்ற ஆறிமுகத்தோடு ஒரு பேட்டி “தடம்” பத்திரிகையில்:
“சிறுதெய்வக் கோயில்கள் மெள்ள பிராமணியத்துக்குள்ளும் ஆகம விதிகளுக்குள்ளும் உட்செரிக்கப்படும் இன்றையச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“பெரு தெய்வ நெறி, சிறு தெய்வ நெறியை விழுங்கப்பார்க்கிறது என்பது உண்மைதான். ஆனால், அவற்றால் சிறு தெய்வங்களை முழுமையாக விழுங்க முடியாது.
இப்போது, கோயிலில் ஆடு வெட்டுவதைத் தடுக்க முடியுமா? சிறு தெய்வங்களை, பெரு தெய்வங்கள்போல ஓரளவு தோற்றம்கொள்ள வைக்கலாமே தவிர, அவற்றை முழுமையாக பெரு தெய்வங்களாக மாற்ற முடியாது. ஏனெனில், சிறு தெய்வங்கள் எளிய மக்களின் தெய்வங்கள். அவற்றுக்கான சடங்குகள் எளிய மனிதர்களின் சடங்குகள். அவற்றை முழுமையாக மாற்ற முடியாது என்பதே என் துணிபு.”
“ஆனால், மேல் நிலையாக்கம் என்ற ஒன்று தொடர்ந்து நடந்துகொண்டுதானே இருக்கிறது?”
‘‘இருக்கலாம். அது எல்லாம் நாட்டார் மரபை உட்செரிக்கச் செய்யும் பிராமணியத்தின் அர்த்தமற்றப் பிரயத்தனங்கள். அது தோற்றுப்போகும். பெருந்தெய்வங்களில் பெண் தெய்வத்துக்கு ஆண் தெய்வத்துணை வைக்கப்படுகிறது. அப்படி சிறு தெய்வத்திற்கு வைப்பதில்லை அல்லவா? மாரியம்மன் கையில் இருந்து சூலாயுதத்தை எடுத்துவிட்டால், அது எப்படி அம்மனாக இருக்கும்? எனவே, இது ஒரு தற்காலிக நிலை. இந்துத்துவத்தின் தற்காலிக எழுச்சி இது என்றே கருதுகிறேன். நிச்சயம் பிராமணியத்தால், நாட்டார் மரபை ஒன்றும் செய்ய முடியாது.”
நமது பதில்:
மதிப்புக்குரிய தொ.பரமசிவன் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களின் பேட்டி எங்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு வகையில் மிகவும் வருத்தத்தையும் அளித்தது.
- தமிழக பிராமணர்கள் நமது கிராமகளில் அறவே இல்லை. தமிழ் நாட்டில் 98% கிராமங்களில் பிராமணர்கள் இல்லவே இல்லை.
- இன்றைய கிராம அக்ரகாரம் ஆளில்லாத பகுதியே ஆகும். பெருமளவு பிராமணர்கள் பெரு நகரங்களில் வசிக்கிறார்கள். அல்லது தமிழ் நாட்டை வீட்டு வெளியே வசிக்கிறார்கள். கிராமங்களில் 50 வயதுக்கு கிழ் உள்ளவர்கள் மிக மிக சொற்பம்.
- முனிஸ்வரனை / கிராம / சிறுதெய்வக் கோயில்களை குல தெய்வமாக வணங்கும் பிராமணர்களும் உண்டு. அது அவர்களின் குடும்ப வழக்காக காலம் காலமாக இருக்கும்.
- கிராம தெய்வத்துக்கு கடா வெட்டும் அதே குடும்பம் புரட்டாசி / மார்கழி மாதத்தில் சைவ விரதம் இருக்கும். இதில் முரண்பாடு எதுவும் இல்லை. பன்முக தன்மை உடைய நமது கலாச்சாரம் பன்முக தன்மை உடைய குடும்ப வழக்கங்களை காலம் காலமாய் பேணுகிறது. நமது கலாச்சாரம் உயிர் துடிப்புக்கான கலாச்சாரமாய் இருக்க இதுவே கரணம்
ஐயா, இன்றைய சூழலில் தமிழக பிராமனைர்களாகிய எங்களுக்கு எங்கள் குல வழக்கத்தியே காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறோம். இதில் அடுத்தவர் குல வழக்கத்தை எப்படி மாற்றுவது. கிராமங்களில் வாழவே இல்லாத சமுகம் அந்த கோயில்களில் கலாச்சார படையெடுப்பு நடத்துகிறது என்பதும் அது தோற்று விடும் என்பதும் உங்களின் கற்பனை அல்லவா. உங்களை போன்றோர் பொது வெளியில் உண்மைக்கு புறம்பானதை சொல்லலாமா.
வெறுப்பு உலகளவியது. பிரேமதாசாஉக்கு தமிழர்கள் மீது வெறுப்பு. ஹிட்லருக்கு யூதர்கள் மீது வெறுப்பு . வெறுப்பை கட்டுபவர்கள் அதற்கு ஒரு காரணமும் வைத்திருக்கிறார்கள். ஒரு சமுகத்தை வெறுப்பது என்பது ஒரு மன நோயே. அது பலருக்கும் இருக்கிறது. வெறுப்பின் நிழலை அழிக்க முடியாது ஆனால் கடந்து போக முடியும்.
தமிழ் நாட்டில் ஐயப்பன் பக்தி கடந்த 30 ஆண்டுகளாக பரவி வருகிறது. குடிசைகளிலும் / பணம் படைத்தோர் வீட்டில் என வித்தியாசம் இல்லாமல் கடும் விரதம் கடைப்பிடிக்க படுகிறது. சமஸ்கிரத பாடலான “ஹரிகராசனம்” பாடல் பட்டி தொட்டியெல்லாம் பாடப்படுகிறது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் ஐயப்பன் கோயில் என்பது நமது முனீஸ்வரன் கோயில் போல் அந்த பகுதி வாழ் மக்களுக்கான காவல் தெய்வம். தமிழர்கள் எவருக்கும் ஐயப்பன் கோயில் பற்றி தெரியாது. நம்மவர்கள் சிலர், “தமிழ் நாட்டில் பல கோயில்கள் இருக்க, மிக பாழடைந்த நிலையில் இருக்க, ஐயப்பன் கோயிலுக்கு செல்வதன் காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பிகிறார்கள். இந்த கேள்வி நியாமான கேள்வி. அனால் ஐயப்பன் பக்தி என்பது மலையாளிகளால் செய்யப்படும் சதி / பண்பாட்டு படையெடுப்பு என கூறினால் அது நம் பாரம்பரிய கோயில்களில் மீது அக்கறை அல்ல, வெறும் “வெறுப்பு” மட்டுமே.
நமது பாரம்பரிய உணவு பழகங்களை மீட்டு எடுக்கும் முயற்சி நடக்கிறது. அதை பலரும் வரவேற்க்கிறார்கள். நமது அடையாளங்களை தக்க வைத்து கொள்ள எடுக்கும் எந்த முயற்ச்சியும் வரவேற்கத்தகுந்ததே. மிக முக்கியமாக இந்த முயற்சியில் எவரையும் குற்றம் சொல்லும் உணர்வு இல்லை என்பதை நினைவில் கொள்ளுவோம.
நவீனத்தை ஏற்கும் அதே வேளையில் நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் மதிக்கும் / போற்றும் இளைஜர்களை உருவாகுவோம். அதற்கு உங்கள் ஆய்வு பயன்படட்டும். இதுவே எங்களின் வேண்டுகோள்.
வணக்கத்துடன்
Admin Team
Www.brhminsforsociety.com
உண்மையான உணர்ச்சிபூர்வமான பதில்.
ஏதோ நீண்ட தூக்கத்தில் இருந்தவர் இப்படித்தான் உளருவாரகள. கடந்த 100 ஆண்டுகளின் காலமாற்றங்களை கற்றவராக தெரியவில்லை. அவரைத்தட்டியெழப்பியுள்ளீர்கள்.நன்று.
Excellent start. We, ABBA AKHILA BHRATHA BRAHMIN ASSOCIATION supports your activities. expecting north indian girls horoscopes to marry our tamilnadu brahmin boys. thanks.