கவண் – பட விமர்சனம்
அநீதி கண்டு பொங்கி எழும் ஹீரோ. பழி வாங்கும் வில்லன். வெற்றி பெரும் ஹீரோ. சார்!. எல்லா கதையிலும் இருப்பது தானே என்கீறீர்களா?
கதை களம் புதிது. ஊடங்கங்களில் உள்ள ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது படம். அதுவும் நாம் தினம் தினம் பார்க்கும் டிவி நிகழ்ச்சிகளில் உள்ள நாடக தன்மையை (ஆடல் போட்டியில் தோற்று, இயல்பாக தோல்வியை ஏற்று பேசுபவரை, செயற்கையாக அழ வைத்து டிவி பார்ப்போரின் பரிதாப உணர்ச்சியை தூண்டும்போது) வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஒரு ரவுடி அரசியல்வாதியின் இமேஜை உயர்த்த ஒரு சேனல் பணம் வாங்கிக்கொண்டு (வில்லன் சார்) முயற்சி செய்யும் பொது, ஹீரோஉம் (விஜய் சேதுபதி) அவன் நண்பர்களும் சேனல் முதலாளியுடன் மோதுகிறார்கள். அவர்களுக்கு ஒரு வேறு ஒரு சேனலின் முதலாளி (டி ராஜேந்தர்) உதவுகிறார்.
சிறுபான்மை இஸ்லாமியர்களை ஊடங்கங்கள் “தீவிரவாதியாக” காட்டுவது பற்றி படத்தின் பின் பாதி அலசுகிறது. இஸ்லாமியர்களின் வாதங்களை மிக சிறப்பாக வெளிப்படுத்துகிறது. மொத்தத்தில் பொழுது போக்கு + சமுக அக்கறை என ஒரு கலவை.
மேற்கொண்டு படிக்கும் முன் :
படத்தின் டைரக்டர் கிவ் ஆனந்த். ஐயன், மாற்றான், அனேகன், கோ போன்ற படங்களை கொடுத்தவர். மிக நல்ல Directorராக அறியப்பட்டவர்.
படத்தில் ஒரு காட்சி :
அது ஒரு ஆடல் போட்டி. ஒரு கிராம கலை குழு மிக அற்புதமாக ஆடுகிறது. அது வெல்ல வேண்டிய குழு. ஆனால் நடுவர் குழுவுக்கு சேனல் தீர்ப்பை மாற்ற உத்தரவு இடுகிறது. நடுவர் கிராம கலை குழுவை கேவலமாக பேசி அவர்களை தோற்கடிக்கிறார்.
அநியாயமாக பேசும் நடுவர் ஸ்ரீசூரணம் இட்ட ஐயங்கார்.
நம்மில் பலர் படத்தின் இந்த காட்சியை பார்த்திருப்போம். நம் கவனத்தை கூட இந்த காட்சி கவர்த்திருக்காது.
சிறுபான்மை இஸ்லாமியர்களை ஊடங்கங்கள் “தீவிரவாதியாக” காட்டுவது பற்றி மிக தீவிரமாக எதிர்த்து பேசும் படம், அதே செயலை பிராமணர்கள் விஷயத்தில் செய்கிறது.
பட குழுவில் எவரும் இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்க மாட்டார்கள் அல்லது அவர்களின் கவனத்தை கூட இந்த முரண்பாடு கவர்த்திருக்காது. பிராமணர்களை அயோக்கியர்களாக / மூளை இல்லாதவர்களாக தமிழ் சினிமாவில் கட்டுவது பழகி விட்ட ஒன்று. ஏனனில் இது அவர்களுக்கு மனதில் உறுத்தாத விஷயம்.
குறிப்பு : படத்தின் இயக்குனரை குறை சொல்ல இந்த விமர்சனம் எழுதப்படவில்லை. கீழ்கண்ட கேள்விகளுக்கு விடை காணவே இந்த பட விமர்சனம்.
1. இதுவரை நமது தரப்பு வாதங்களை எடுத்து வைத்து ஒரு படமாவது வந்திருக்கிறதா? அல்லது பொது வெளியில் நம் தரப்பு குறைகளை சொல்லி இருக்கிறோமா.
2. இந்த வெறுப்பை குறைக்க என்ன செய்யவேண்டும்.
சுவாரஸ்யத்துக்காக :
தலைப்புக்கான காரணம் குறித்து படக்குழு “‘கவண்’ என்பது தூய தமிழ்ச் சொல். மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி, ‘கவண்’ என்று கருதப்படுகிறது.
இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட கவண் பற்றி தமிழ் இலக்கிய நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.விசை வில்பொறி (catapult),கல்லெறி கருவி (sling) என்று இலக்கியத்திலும், உண்டிக்கல் என்று வழங்குதமிழிலும் அழைக்கப்படுகிறது கவண்” என்று தெரிவித்திருக்கிறது.
Face Book intro:
இன்றைய தேதியில் (5/72017), கவண் படம் எந்த திரையரங்குகளிலும் திரையிடப்படவேயில்லை. இந்த விமர்சனம் படம் வெளியானவுடன் எழுதப்பட்டு, இப்போதுதான் வெளியிடப்படுகிறது. பொதுவெளியில் நாம் சொல்லும் கருத்தால் படத்துக்கு எந்த சாதக /பாதகமும் இருக்கக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்ச்சியுடன் இப்போது இந்த விமர்சனம் வெளியிடப்படுகிறது. பாடத்தின் டிரேக்டருக்கும் நாமது உணார்வு தெரியப்படுத்தப்படும்.
கடவுள் தீர்ப்பு கொடுத்தாகி விட்டது.
இனி டப்பாக்கு தான்.
Sila vishayangalai eppodhumpol kandukolla vendaam.
Nammudaya nilaippadu anaivarukkum (Ella vishayangalilum] theriyavendum.Nammudaya muyarchi arasiyalai No
kki irukkattum.Matravai piragu.