பிராமண எதிர்ப்பின் கரணம் என்ன ?

jayamohan

பிராமணவெறுப்பின் அரசியல் பின்னணி: இங்கே பிராமண வெறுப்பு எதனால் உருவாக்கப்பட்டது? அதன் பண்பாட்டு அடித்தளம்தான் என்ன? சங்ககாலம் முதல் நாம் காணும் தமிழகப் பண்பாட்டு மோதல் என்பது தமிழர் x வடுகர் என்பதுதான். [வடுகர் என்றால் தெலுஙகர், கன்னடர். கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் நடுவே உள்ள வேசரநாட்டைச் சேர்ந்தவர்கள்] கோதாவரி கிருஷ்ணா படுகையில் இருந்து மக்கள் இங்கே குடியேறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.அதை இங்குள்ளவர்கள் எதிர்த்துப்போராடி தோற்றபடியே இருந்தனர் உண்மையில் இருபது நூற்றாண்டாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் வடுகர்களே. தமிழக வரலாற்றில் தமிழ்மன்னர்கள் ஆண்டகாலம் மொத்தமாகவே முந்நூறு வருடம் இருக்காது. தமிழக ஆட்சியை வடுகர்களிடமிருந்தே வெள்ளையர் கைப்பற்றினர். அதன்பின்னரும் அவர்களையே ஜமீன்தார்களாக வைத்திருந்தனர். வெள்ளையரின் ஊழியர்களாக இருந்த பிராமணர்களுக்கும் வெள்ளையரின் நிலக்கிழார்களாக இருந்த வடுகர்களுக்கும் இடையே போட்டியும் கசப்பும் இருந்தது. ஈவேரா அவரது கட்டுரை ஒன்றில் காவலதிகாரியாக ‘நிமிர்வும் மிடுக்கும் கொண்ட’ நாயிடுவுக்குப் பதிலாக ‘மீசையில்லாத பார்ப்பனன்’ வரும் நிலையை வெள்ளையன் உருவாக்கிவிட்டதை எண்ணி வருந்தி எழுதியிருக்கிறார். இதுதான் அக்காலத்தின் முக்கியமான முரண். இதில் மெல்லமெல்ல பிராமணர் கை ஓங்கி வந்தது. மறுபக்கம் ஜமீன்தாரிமுறை ஒழிப்பால் தெலுங்கர்களின் ஆதிக்கம் சரிந்தது. சுதந்திரப்போராட்டம் வந்தபோது பிராமணர் மேலும் அதிகாரம் பெற்றனர். அதற்கு எதிரான வடுகர்களின் கசப்பே திராவிட இயக்கம். அக்கசப்பை அவர்களிடம் பெருக்கி இயக்கம் கண்டவர்கள் மலபார் நாயர்கள். திராவிடர் என்ற சொல்லை ஈவேரா எடுத்துக்கொண்டது தெலுங்கர்களை உள்ளடக்கும்பொருட்டே. ஏனென்றால் அதற்கு முன்னரே தமிழர் என்ற சொல்லையே மிகப்பரவலாக அன்றைய தமிழ்மறுமலர்ச்சி இயக்கம் கையாண்டு வந்தது வரதராஜுலு நாயிடு தலைமையில் ஈவேரா வெளியேறி திராவிட இயக்கம் உருவானதன் பின்னணியில் உள்ள இந்த மொழி அரசியலை நாம் கோவை அய்யாமுத்து போன்றவர்களின் சுயசரிதையில் காணலாம். சி.என்.அண்ணாத்துரை போன்றவர்கள்கூட வீட்டில் தெலுங்கு பேசியவர்கள் என்பதை பாரதிதாசனின் கட்டுரை காட்டுகிறது. இத்தனை ஆண்டுக்கால அரசியல் வழியாக வடுகர் x தமிழர் பிரச்சினையை வெற்றிகரமாக பிராமணர் X தமிழர் என்று மாற்ற இவர்களால் முடிந்தது. அன்று எழுச்சி பெற்று வந்த இடைநிலைச்சாதி அரசியலுக்கு இந்த இருமை உதவிகரமாகவும் இருந்தது. இதுவே வரலாறு. சிலகாலம் முன்பு அசோகமித்திரனுக்கு சென்னையில் நிகழ்ந்த ஒரு கூட்டத்தை லீனா மணிமேகலை பிராமணியக் கூட்டம் என்று கடுமையாகத் தாக்கி எழுதியிருந்தார். நான் லீனாவை நன்றாக அறிவேன். தனிப்பட்ட முறையில் மதிப்பும் பிரியமும் அவர்மேல் உண்டு. அந்தக் கட்டுரை எனக்கு ஒரு ஆச்சரியம். நான் நண்பரைக்கூப்பிட்டு ‘லீனா தெலுங்கரா” என்றேன். “இல்லை சார் தலித் என்றார்கள்” என்றார். ‘அது அவர் உருவாக்கும் பிம்பம். தலித் இத்தனை பிராமண வெறுப்பைக் கக்கமாட்டார். கண்டிப்பாக இந்தம்மா தெலுங்குதான்’ என்றேன். அவர் அரைமணிநேரத்தில் கூப்பிட்டு “எப்டிசார் சொன்னீங்க? உண்மைதான்’ என்றார். “தமிழகத்தின் பிராமணக்காழ்ப்பு அரசியலின் பின்புலத்தை அறிந்தால் இதை ஊகிப்பது ஒன்றும் கஷ்டமே இல்லை” என்றேன். இந்த அதிகார அரசியலை கொஞ்சம் கொஞ்சமாக தலித்துக்கள் இன்று உணரத் தொடங்கியிருக்கிறார்கள். தங்கள் சொந்த அரசியலை அவர்கள் உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பிராமண வெறுப்பின் பண்பாட்டுப் பின்னணி: இந்தியாவில் பிராமண மறுப்பு என்றும் இருக்கும். அதற்கான வேர் நமது சமூக அமைப்பிலேயே உள்ளது. நம் சாதிச் சமூகத்தின் உச்சியில் இருந்தவர்கள் பிராமணர்கள். அதன் கருத்தியலை நிலைநிறுத்தியவர்கள். ஆகவே அவர்களை அடித்தளத்தில் இருந்துகொண்டு சாதியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பது இயல்பானதே பிராமணிய மதிப்பீடுகளை நிராகரிக்காமல் சென்ற நிலப்பிரபுத்துவகால மனநிலைகளை நாம் கடக்க முடியாது. கொள்கைத்தளத்தில் இது மிக இன்றியமையாதது. மிகத்தீவிரமாக, ஈவேராவை விட பலமடங்கு முழுமையுடன் அதைச் செய்தவர் நாராயணகுரு. நடராஜகுருவும் நித்யசைதன்ய யதியும் அவ்வகையில் பிராமண எதிர்ப்பாளர்களே. ஆனால் பிராமண எதிர்ப்பு வேறு பிராமணக் காழ்ப்பு வேறு. பிராமண எதிர்ப்பு என்பது பிராமணர்களால் முன்வைக்கப்பட்ட சென்றகால நிலப்பிரபுத்துவ யுக மதிப்பீடுகளை தர்க்கபூர்வமாக மறுத்து உடைப்பது. அவர்கள் உருவாக்கிய நம்பிக்கைகளைக் கடப்பது. அவர்களின் மனநிலைகளை நிராகரிப்பது. அதை மிகத்தீவிரமாக நித்ய சைதன்ய யதியின் எழுத்துக்களில் காணலாம். என் முன்னுதாரணம் இந்த மரபே. பண்டித அயோத்திதாசரின் எழுத்துக்களில் உள்ளதும் பிராமண நிராகரிப்பே. பிராமணக் காழ்ப்பு என்பது அது அல்ல.அது கண்மூடித்தனமான வசைபாடல். அவமதித்தல். சிறுமை செய்தல். அதற்கு வரலாற்றுணர்வோ வாசிப்போ சிந்தனையோ தேவையில்லை. .ஈவேரா முன்வைத்தது அதைத்தான். அதன் முதன்மை நோக்கம் தன் சொந்த சாதிப்பற்றை மறைப்பதுதான். நேற்றைய சாதியமைப்பில் நடுப்பகுதியில் இருந்து அனைத்தையும் அனுபவித்துவிட்டு பிராமணனை கூண்டில் ஏற்றி தப்பிப்பது மட்டும்தான். இந்து மெய்ஞான மரபுக்குள்ளேயே பிராமண எதிர்ப்பு என்றும் இருந்தது. பிராமணர்கள் வைதிகமரபின் குரல்களாகவே பெரும்பாலும் ஒலித்தனர். அவைதிக மரபுகள் அவர்களுக்கு எதிராகவே செயல்பட்டன. அது முற்றிலும் வேறு ஒரு தளம். இன்றைய நிலையில் சாதிப்பற்று பற்றிய குற்றச்சாட்டுகளை பிராமணர்கள் மேல் சுமத்துபவர்கள் முதலில் தங்கள் சொந்தச் சாதிப்பற்றை அறிக்கையிட வேண்டும். சாதிக்கு எதிரான எந்தக் கலகமும் சொந்தச் சாதியின் சாதிவெறிக்கு எதிரான நிலைபாட்டில் இருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும். இத்தனை சாதி எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கும் தமிழ்ச்சூழலில் இடைநிலைச்சாதியில் இருந்து அச்சாதியை விமர்சனம் செய்து ஒரு குரல் எழுவதை நம்மால் காணமுடிவதில்லை. ராஜாஜியை கிழித்து தோரணம் கட்டலாம். முத்துராமலிங்கத் தேவர் பற்றி ஒரு விமர்சனத்தை தமிழகத்தில் எழுதிவிடமுடியாது. இதுவே இங்குள்ள சாதி எதிர்ப்பின் உண்மையான நிலை பாலைவன மக்கள் ஒரு சடங்குசெய்வார்களாம். வருடத்தில் ஒருமுறை ஒரு வெள்ளாட்டைப்பிடித்து கிராமத்திலுள்ள அத்தனை நோய்களையும் அதன்மேல் ஏற்றுவதற்குரிய சில பூசைகளைச் செய்தபின் அதை ஊரைவிட்டுத் துரத்தி பாலைவனத்தில் விடுவார்கள். அது நீரின்றி செத்து காய்ந்து அழியும். நோய்கள் ஊரைவிட்டு விலகிவிட்டதாக இவர்கள் எண்ணிக்கொள்வார்கள். சாதி வெறியில் ஊறிய தமிழகம், அப்படிக் கண்டெடுத்த வெள்ளாடுதான் பிராமணர்கள். அதன்மூலம் இங்கே இன்னமும் தலித்துக்களை அடிமைகளாக்கி வைத்திருக்கும் பழியில் இருந்து இடைநிலைச்சாதிகளும் பிரமணரல்லா உயர்சாதியினரும் தப்பித்துக்கொள்கிறார்கள் பிராமணர்களும் சாதிமுறையும்: இந்த வெறுப்பை பிராமணர்கள் மேல் பிறர் மேல் காட்ட என்ன காரணம் சொல்லப்படுகிறது? அவர்கள் சாதிமேட்டிமை கொண்டவர்கள். சாதிமுறையின் லாபங்களை அனுபவித்தவர்கள்.சாதியை நிலைநிறுத்தியவர்கள். ஆகவே அவர்களை அவமதிப்பது ‘சாமிக்கு நேத்திக்கடன்’. [ராமசாமியும் சாமியே] சாதியைப்பற்றி அம்பேத்கர் முதல் கோசாம்பி வரை எத்தனையோ பேர் எழுதிவிட்டனர். இன்று பக்கம் பக்கமாக அவை மொழியாக்கம் செய்யப்பட்டு கிடைக்கின்றன.சாதியை பிராமணன் உருவாக்கி பிறரிடம் பரப்பி அவர்களைச் சுரண்டி அவன் மட்டும் கொழுத்து வாழ்ந்தான் என்பதுபோன்ற அப்பட்டமான திரிபை அடிப்படை ஞானம் கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அப்படி ஒருவர் சொல்கிறார் என்றான் அது சுயநலத்தின் விளைவான அயோக்கியத்தனம் மட்டுமே சாதிமுறை இங்கிருந்த பழங்குடிச் சமூக அமைப்பில் இருந்து மெல்லமெல்ல உருவாகி வந்தது. சாதிகள் என்பவை பழங்குடி இனக்குழுக்களின் தொகுப்பு. ஆகவே தான் ஒவ்வொரு சாதியும் உபசாதிகளாகவும் கூட்டங்களாகவும் பிரிந்துகொண்டே செல்கிறது. இச்சாதிபேதங்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி இங்கே நிலப்பிரபுத்துவம் கட்டிஎழுப்பப்பட்டது. அந்தச் சுரண்டலே இங்கே பேரரசுகளை உருவாக்கியது அந்த நிலவுடைமை முறையின் புரோகிதர்களாக இருந்த பிராமணர்கள் அந்த முறையை நிலைநாட்டுவதற்குரிய சிந்தனைகளை பரப்பியவர்கள்.அந்த அமைப்பின் லாபங்களை அனுபவித்தவர்கள். அதற்கு அவர்கள் பொறுப்பு ஏற்றாகவேண்டும். ஆனால் அவர்கள் மட்டும்தான் அதற்குப் பொறுப்பா என்ன? இங்கே நாடாண்டவர்கள், நிலத்தை உரிமைகொண்டவர்கள், வணிகம் செய்து பொருள்குவித்தவர்கள் எவ்வகையிலும்பொறுப்பில்லையா? அவர்களெல்லாம் பிராமணர்களை கைகாட்டி தப்பித்துக்கொள்லலாமா? இங்குள்ள சாதிமுறை நேற்றைய சமூகப் – பொருளியல் அமைப்பின் உருவாக்கம். இன்று அது சமூக ரீதியாக்ப் பொருளிழந்துவிட்டது.அதன் பண்பாட்டுக்கூறுகள் சிலவற்றுக்கு மட்டுமே இன்று ஏதேனும் மதிப்பு உள்ளது. அது நேற்றைய யதார்த்தம். நேற்றை இன்று சுமந்தலையவேண்டியதில்லை. நவீன மனிதன் அதன் சாராம்சத்தை ஏற்றுக்கொண்டு முன்னகர்ந்தாகவேண்டும். அந்த மனநிலைகளை ஒவ்வொருவரும் உதறியாகவேண்டும் அந்த அமைப்பு கொடுமைகளுக்காக நாம் இன்று குற்றவுணர்வு கொண்டாகவேண்டும். எவ்வகையிலேலும் அந்த அமைப்பின் நலன்களை அனுபவித்த ஒவ்வொருவரும் அந்தக் குற்றவுணர்ச்சியை அடையவேண்டும். தங்களைவிடக் கீழாக ஒரு சாதியை நடத்திய சாதியில் பிறந்த எவரும் அடைந்தாகவேண்டிய குற்றவுணர்ச்சி இது. இக்குற்றவுணர்ச்சியே நாம் நேற்றைய மனநிலைகளில் இருந்து மீள்வதற்கான வழியும் ஆகும். இதை சிலநாட்கள் முன் எழுதியபோது எனக்கு வந்த கடிதங்கள் என்னை பிராமணன் என வசைபாடின. அதாவது இங்குள்ள பிராமணரல்லாத உயர்சாதிகள் இடைநிலைச் சாதிகள் எவ்வகையிலும் அந்தக் குற்றவுணர்ச்சியை அடையத் தயாராக இல்லை. அப்பொறுப்பை ஏற்க அவர்களுக்கு மனமில்லை. ஏனென்றால் உள்ளூர அவர்கள் அச்சாதிய மனநிலைகளை தக்கவைக்க விழைகிறார்கள். தன் மண்ணில் இன்னமும் இரட்டைக்குவளை இருப்பதை கண்டு கண்மூடிக்கொள்ளும் கவுண்டரும் நாயக்கரும் நாயிடுவும் ‘பெரியார் மண்ணுடா!’ என்று சொல்லி பிராமணன் மேல் பாய்வதைப்போல பச்சை அயோக்கியத்தனம் வேறில்லை. அதைத்தான் காண்கிறோம். ‘பிராமணன் பீயள்ளுவதைக் கண்டதுண்டா’ என்று ஒருவர் கேட்டிருந்தார். “இல்லை, செட்டியாரும் முதலியாரும் கவுண்டரும் தேவரும் நாடாரும் கூடத்தான் அள்ளுவதில்லை’ என்று நான் பதில் சொன்னேன். பிராமணன் உடலுழைப்பு செய்வதில்லை என்று இங்கே மேடைமேடையாகச் சொல்லப்படுகிறது. நான் கண்ட பிராமணர்களில் பாதிப்பேர் ஓட்டல்களில் இரவுபகலாக சமையல்வேலை செய்து வியர்குருவும் ஈரச்சொறியும் கொண்ட உடல்கொண்டவர்களே. ஆம் ‘சொறிபிடித்த பார்ப்பான்’ என்று பாவேந்தர் பாரதிதாசனார் அவர்கள் வசைபாடினாரே, அவர்கள்தான். ஆனால் வியர்த்து ஒழுக வெலைசெய்யும் வேளாளரைக் கண்டதில்லை, நாயிடுவைக் கண்டதில்லை. பிராமணக் காழ்ப்பை சாதிய எதிர்ப்பு என்ற போர்வையில் வெளிப்படுத்துவது இங்குள்ள இடைநிலைச்சாதியின் சாதிவெறியர்கள் கொள்ளும் ஒரு கூட்டுப்பாவனை மட்டுமே. ஒவ்வொருவருக்கு உள்ளூர உண்மை தெரியும். பிராமணர்களின் எதிர்மனநிலை: இன்று பிராமணர்கள் ஒடுக்கப்படுபவர்களாக உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஒடுக்கியதன் குற்றவுணர்ச்சி மறைந்து ஒடுக்கப்படுவதன் ஆற்றாமையும் சினமும் அவர்களிடம் வெளிப்படுகிறது. சவால்விடுவதுபோல சாதிச்சங்கங்களை அமைக்கிறார்கள். ‘பிராமண சங்க அடலேறே’ என்று ஒருவருக்கு வினைல் போர்டு வைத்திருப்பதை பார்வதிபுரத்தில் பார்த்தேன். இங்கு நிகழும் கீழ்த்தரமான வெறுப்பரசியல் அவர்களை எதிர்ப்பரசியலுக்குக் கொண்டுசெல்கிறது. மெல்லமெல்ல அவர்களையும் வெறுப்பால் நிறைக்கிறது. தமிழர்நாகரீகம் என்கிறோம். பண்பாடு என்கிறோம். நாம் ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வெறுப்பின் கீழ்மை நம் பண்பாட்டின் மாபெரும் இழுக்குகளில் ஒன்று என்பதை நாம் உணரவேண்டும். நவீன மனிதன் ஒருநிலையிலும் ஒரு மக்கள்திரளை ஒட்டுமொத்தமாக வெறுக்கமாட்டான். ஒருவரையும் அவர்களின் அடையாளம் காரணமாக வெறுக்கமாட்டான். கீழ்த்தர இனவெறி, சாதிவெறிதான் இது. இதையே முற்போக்கு என்று எண்ணிக்கொள்ள நம்மை பயிற்றுவித்திருக்கிறார்கள் பிராமண வெறுப்பு என்பது தலித்வெறுப்பின் மறுபக்கம். தலித் வெறுப்பு உள்ளடங்கி இருக்கிறது. பிராமண வெறுப்பு வெளிப்படையாக முற்போக்கு முகத்துடன் முன்வைக்கப்படுகிறது. பிராமண வெறுப்பு கொண்டவன் உறுதியாக தலித் வெறுப்பாளனே. தலித் வெறுப்பை கைவிடுபவன் பிறப்பு அடிப்படையில் எவரையும் வெறுக்கமுடியாதவன் ஆகிறான். அவனால் பிராமணர்களையும் வெறுக்கமுடியாது. வெறுப்பை அன்றி எதையுமே உணரமுடியாத மனங்களை நான் கருத்தில்கொள்ளவில்லை. அடிப்படை நாகரீகமும், மனிதாபிமானமும் கொண்டவர்களை நோக்கியே பேசுகிறேன். இக்கீழ்மையை விட்டுவெளியேறாதவரை நாம் நாகரீக மனிதர்களே அல்ல. இன்றைய தமிழ்ச்சமூகத்தின் கீழ்மைகளில் முதன்மையானது அது கொண்டிருக்கும் சாதியவெறுப்பே. பிராமணர்களும் தலித்துக்களும் இருவகையில் அதன் பலியாடுகள். நாகரீகமறிந்த இளைஞர்கள், தாழ்வுணர்ச்சியில் இருந்து வெளிவந்த நவீன மனிதர்கள், தன் ஆற்றலிலும் அறிவிலும் நம்பிக்கை கொண்டவர்கள், இனிமேலாவது இக்கீழ்மையில் இருந்து வெளிவரவேண்டும். இவ்வாறு ஜெயமோகன் கூறியுள்ளார்.

facebook intro lines:

நம்மை தமிழ் சமுகம் இரு விதமான பார்வைகளில் அணுகுகிறது.

  1. நம்மை பற்றிய நேச பார்வை :

தினசரி சமூக நடவடிக்கைகளான வீடு வாடகைக்கு விடுவது, சிறு தனியார் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகள் (Eg Cashier , accountant etc), நமது உணவகங்களில் உள்ள நம்பக தன்மை (குழந்தைக்கு சாப்பாடு வைக்கணும். ஐயர் கடையில இட்லி வாங்கியா),  கடன் கொடுப்பது (முதன் முதலில் தவணை முறையில் விட்டு பொருள்களை விற்ற, இன்றைய பிரும்மாண்டமாக வளர்ந்துள்ள Company, மாம்பலத்தில் ஆரம்பிக்கப்பட்டது), நம்மை கடுமையாக எதிர்ப்பவர் கூட தன் ஆடிட்டர்ரை நமது சமூகத்தில் இருப்பவரை தேர்வு செய்கிறார்.  “ஏன்டா ஐயர் ரா  இருந்து கிட்டு இப்படி பண்ணலாமா”  என பொதுவாக கேட்கப்படும் கேள்வி நம் மீது தமிழ் சமுகம் வைத்திருக்கும்  நம்பிக்கைக்கு சான்று.

  1. நம்மை பற்றிய வெறுப்பு பார்வை

மழை பெய்யவில்லை என்றல் கூட “பார்ப்பன / அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முடியடிப்போம்” என்ற  போஸ்டர்கள், “பாம்பையும் பார்ப்பனையும் கண்டால் ..” என்று முழக்கம், “பிராமணர் பால் கடை என்பதால் அங்கு நான் வாங்குவதில்லை” என்று ஒரு தலைவர் கூட்டத்தில் சொல்ல, கூட்டம் கை தட்டுகிறது.  “பன்றிக்கு பூணல்” என்று ஒரு சிறு குழு.  தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் நம்மை எதிர்பவர்களால் செலவழிக்கப்படுகிறது.  “பாப்பார புத்திய காட்டரியே”  (அது என்ன பார்ப்பனருக்கு என்று ஒரு புத்தி ?) என்ற வசவு பல நேரங்களில் நண்பர்களுடன் சண்டை வரும்போது கேட்கமுடியும்.  நம்முடன் மிக நட்பாக சமூகம் பற்றி / மொழி பற்றி / இலக்கியம் பற்றி பேசுபவர் FB  இல் நம்மை பற்றி கேவலமாக செய்தி பரப்புவார்.

கடந்த 100 ஆண்டுகளில் தமிழ் சமூகத்தில் பிராமண எதிர்ப்பு ஏன் வந்தது என்ற கேள்வி நம்மில் பலருக்கும் உண்டு.  ஜெயமோகனின் இந்த கட்டுரை அதற்கு விடை தேடுகிறது.

8 Responses to பிராமண எதிர்ப்பின் கரணம் என்ன ?

  1. Vaidya K Iyer says:

    மாயை திராவிட சிற்பிகளுக்கு இந்த பதிவு

    திராவிட groupபிடம் எனக்கு சில சந்தேகங்கள்

    1. கடவுள் கிடையாது, கோவில் கூடாது.
    Then what about church & mosque?

    2. மத சம்பந்தமான நம்பிக்கை விரதம் மூடநம்பிக்கை,
    Then why you people wearing skull cap and attending Ramzan austerity?.

    3.கடவுள் இல்லை, கோவிலில் இருப்பது கல்தான் எனில், பின், கல்லுக்கு ஏன் தமிழில் அர்ச்சனை? சமஸ்கிருதம் ஏமாற்று எனில் தமிழ் ஏமாற்று வேண்டுமா?

    4.கடவுளை கற்பிப்பவன் அயோக்கியன்? பின் ஏன் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் ?
    எல்லோரும் அயோக்கியன் ஆகவா?

    5. வேற state ல் போய் சாமி கும்பிடாதே, தமிழ்நாட்டில் கும்பிடு.
    இல்லாத சாமிய கும்பிடறவன் முட்டாள்னா, அந்த முட்டாள் தனத்த தமிழ்நாட்டில் தான் பண்ணணுமா?
    முழு முட்டாள்தனமும் தமிழுக்கு உரியதா?

    6.தெலுங்கு பாலாஜியையோ கேரள அய்யப்பனையோ கும்பிடாதே, தமிழ் கடவுளை மட்டும் கும்பிடு.
    (தமிழுக்கு மட்டும் தான் இவர்களுக்கு இல்லை )

    கடவுளுக்கு தனிதனியாக state, மொழி உண்டா?
    இது Mecca க்கும் ஜெருசலத்திற்க்கும் பொருந்துமா?

    1956க்கு முன்பு சென்னை மாகாணம் பிரிப்பதற்கு முன் பாலாஜியும், அய்யப்பனும் தமிழர்களாக இருந்து ? பின் telugu & malayali ஆக மாறி விட்டனரா?

    1956 முன் அவர்களுக்கு தமிழ் தெரிந்து இருக்குமே.
    பாவம் முருகனுக்கு மட்டும் தமிழை தவிர வேறு மொழி தெரியாது அது எப்பிடி ஒரு குடும்பத்துல அப்பா ஹிந்தி, அண்ணன் தமிழ், தம்பி மலையாளி ,

    7. உண்டியல்ல பணம் போடாமல் ஏழைக்கு கொடுங்கள்!
    Then, ஏழைக்கு உதவ அரசுக்கு நாங்க கட்ற tax பணத்துல meccaக்கு ஏன் ஆளை அனுப்புறிங்க.

    8. தமிழனுக்கு மதம் கிடையாது?
    தமிழன் இந்து இல்லை. அப்போ தமிழன் christian ஆக or muslim ஆக இருப்பானோ?

    தமிழன் இந்து இல்லை என்றால் இந்தியாவில் எந்த state லேயும் இல்லாத அளவிற்கு அழகழகான கற்சிற்பங்களுடன் கூடிய பிரமாண்டமான கோவில்களை கட்டிய நமது முன்னோர்கள் இந்துக்கள் இல்லையா.? முட்டாள்களா?

    9. வீட்டுக்காரர் மாட்டுக்கறி தின்போம்னு போராடுறாரு

    வீட்டுக்காரம்மா பசு மாட்டை கும்பிட்டு கோமாதா பூஜை பண்ணிக்கிட்டு இருக்கு 😂

    இதுதான் திராவிட கொள்(ளை)கையா? ஊருக்கு தான் உபதேசமா?

  2. Vaidya K Iyer says:

    நாத்திகம், பகுத்தறிவு பற்றி கவிஞர் கண்ணதாசன்.
    ஈ வே ரா சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது. இதை தொடர்ந்து அந்த அந்த ஆபாச ஊர்வலம் கைவிடப்பட்டது.
    கவிஞர் கண்ணதாசனின் ”எண்ணங்கள் ஆயிரம்” என்ற நூலிலிருந்து !!!!!!!!!!!!!!
    நான் ஒரு இந்து. இந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால் இந்துவாகவே வாழ விரும்புகிறேன். நான் கடவுளை நம்புகிறேன்; அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்; அந்தக் கடவுளைக் கல்லிலும் கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.
    ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி இருதயத்தை ஆட்சி செய்கிறது. நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது. நேரான வாழ்க்கையை இருதயம் அவாவுகிறது. பாதகங்களை, பாவங்களை கண்டு அஞ்சுகிறது.
    குறிப்பாக ஒரு இந்துவுக்குத் தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை. கடைசி நாத்திகனையும், அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.
    என்னை திட்டுகிறவன்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.
    இந்து மதத்தைப்போல் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை .
    நீ பிள்ளையாரை உடைக்கலாம்; பெருமாள் நாமத்தை அழிக்கலாம்; மதச்சின்னங்களை கேலி செய்யலாம்; எதைச் செய்தாலும் இந்து சகித்துக் கொள்கிறான்.
    ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறந்தது போல் எண்ணிக் கொண்டு, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்.
    கடந்த நாற்பது வருசங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லையே!
    பாவப்பட்ட இந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி, அதை நம்புகிற அப்பாவிகளிடம் ‘ரேட்டு ‘ வாங்கிச் சொத்துச் சேர்க்கும் ‘பெரிய ‘ மனிதர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.
    அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல், வாழ்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.
    பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். நடிகையின் ‘மேக் அப்’ பைக் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப்போல், அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே!
    என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமைக்கொண்டு, ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது? வேண்டுமானால் ‘பணத்தறிவில் ‘ முன்னேறிவிட்டது என்று சொல்லலாம்.
    ஆளுங் கட்சியாக எது வந்தாலும் ஆதரித்துக் கொண்டு, தன் கட்சியும் உயிரோடிருப்பதாகக் காட்டிக் கொண்டு, எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வாழ்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள் போட்டிருக்கும் திரை, பகுத்தறிவு!
    உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர, வென்றதாக இல்லை. இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான். அவர்கள் எப்படியோ போகட்டும்.
    இந்த சீசனில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள் கோவில்களுக்கு முன்னால் பகுத்தறிவு விளையாட்டு விளையாடிப் பார்க்கலாம் என்று கருதுகிறார்கள். இதை அனுமதித்தால், விளைவு மோசமாக இருக்கும். நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு போக வேண்டாம். நம்புகிறவனை தடுப்பதற்கு அவன் யார்?
    அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்கச் சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன் கடை வைக்க தொடங்குகிறார்கள்
    வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘போகாதே போகாதே என் கணவா ‘ என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்? நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்? தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?
    இந்த நாலரை கோடி (அன்று) மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக் கூட காண முடியாது. பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்!
    ஆகவே இந்த காரியங்களுக்கு யாரும் துணை வர மாட்டார்கள்!!!!

  3. S.mythili. says:

    First of all we should explain the society,who are Brahmins.what are the duties and rights of them.how they are useful for the society.their intelligent and intellectual nation how they serve with honesty to common people,their discipline,dedication,and devotion.(seekural anthanar enbor aravor—)this is our duty to explain that we are Thor well wishers. Not their enemies.until the vote is discrimination for cast system,we are helpless.even today there are some people who respect our service.this is only because of politicienans who did politics for their wellbeing .so let us March foreordained reach our goal.

  4. Adhi Sankara refers to Thiru Jnana SAmbandar as DRavida Sisuin Soundarya Lahari and so at least in his time Sravidas were not Vadugas.

    • Srinivasan says:

      அயா,கட்டுரை ஞானம் அபாரம்.இதையே இன்னும் விளக்கமாக பல கட்டுரை யாக தரலாமே.

      கட்டுரை யின் நடையை எளிமையாகஅமைதால் அடிமட்ட நபருக்கு ம் புரியுமல்லவா.
      தொண்டனும் புரிந்து கொண்டு வி டால் தலைவனை விட்டு விடுவான் அல்லவா.

  5. Dr Sridharan says:

    People still have faith in Brahmins தந்தை பெரியார் ஒரு தெலுங்கு மலைவாசி அவர் தமிழர் கிடையாது.British people wanted some body to against Hinduism. Some Target was needed only 3 percent minority was very vulnerable Brahmins were targeted

    If British conspiracy to divide and rule used across the world many countries in India south side Brahmins were victims. This

  6. Mind boggling article giving a very different perspective to the Brahmin hatred. I have heard of Periyar and DK party leaders being Telugus, but this is far beyond that. I too am a Telugu, by the way 🙂 . Need some more knowledge to strongly publicize the facts. I love your observation – “Brahmins are peace loving people who work for common national good.” Yes that’s what our wise ancestors destined us to do. Unfortunately some of our forefathers conspired along with other forward caste Kshatriyas and Vaishyas to subdue and denounce the Shudras. Many of our parents and grand parents believed that we are superior caste and would not allow friends from other caste s including the Kshatriyas and Vaishyas. That instigated more hatred for Brahmins among all other castes including Shudras and dalits. I could not invite my friends to my home until my grand mother was alive. I am differentiating Shudras and dalits. Dalits were the out-castes who did not follow the chaturvarna system and traditions. The members of the chaturvarna system castigated them out of the villages and towns into slums. Some of the out-castes were traditional tribals who lived in forests and mountains or nomads like the “Kuruvikarars”. It is interesting though that our puranas have recorded glorifying stories about tribals too – The story of Kannappa nayanar, a tribal hunter tying Narasimha Swamy and presenting Him to Adi Shankaracharya’s disciple, the story of Lord Muruga are good examples and there are many more. Do let me know whether I got my perspective correct. Of course, this is a topic that needs more discussion, reading, analysis and further discussion stretched into months and years. I am ready for it because I too have suffered humiliation and guilt for being born a Brahmin. I started feeling better after reading எங்கே பிராமணன், வெறுக்கத்தக்கதா பார்ப்பனீயம், இந்து மகா சமுத்திரம் and many discourses and books of scholars. There is a need for re-establishing the status of our Brahmin community as intellectual, service-minded, noble members who provide highly elevating direction to the society. Please do correct me if I am wrong. I am yet to read Kannadasan’s article. I will do that some time this week.

  7. Raz ngarajan Madanagopalan says:

    Hate-politics has never won.
    Will Tamil Nadu be content with avalable talents only and not seek to augment its output by encouraging people with talents and establishing healthy relationship with them? Brahmins are known for their intellectual abilities which can be utilized by encouraging them and not by denouncing them!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *