ஒரு போராளி யின் கதை :
மத்தியில் வாஜ்பாய் பிரதமராக இருந்த நேரம். நாடு புதிய ஜனாதிபதியை தேர்தெடுக்க வேண்டிய நேரம். பல பெயர்கள் பத்திரிகையில் வெளி வந்தன. அந்த இளம் வக்கீலுக்கு ஒரு யோசனை. உடனே மயிலை MLA வை தொடர்பு கொண்டான். அவரும் மாநில BJPக நிர்வாகி மூலம் BJP தலைமைக்கு உடனே தொடர்பு கொண்டார். பிரதமருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு அந்த யோசனை உடனே பிடித்து போனது. மறுநாளே அந்த பெயர் அறிவிக்க பட்டது. நாடே மகிழ்ந்தது. நமது மதிப்புக்குரிய DR.அப்துல் கலாமின் பெயர் தான் அது. அந்த யோசனையை முதலில் சொன்னதற்காக / சரியான நபர்களிடம் எடுத்து சென்றதற்காக தென் சென்னை BJP அந்த இளம் வக்கீலுக்கு பாராட்டுதலை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
சுமார் 3000 கோடி முத்திரை தாள் ஊழல். போலி முத்திரை தாள் தயாரித்து அரசை ஏமாற்றினார்கள். பலர் கைது செய்ய பட்டனர். ஆனால் தமிழ் நாட்டை சேர்த்த ஊழலில் முக்கிய புள்ளியாகிய முகமது அலி IPS (திரு கருணாநிதி அவர்களை கைது செய்தவர்) மற்றும் 8 IPS அதிகாரிகள் மீது எந்த நடவைடிகையும் இல்லை. அந்த வக்கீல் போராட தீர்மானித்தான். சட்ட உதவியை நாடினான். பொது நல வழக்கு தொடர்தான். இந்த வழக்கிலிருந்து அவனை விலகிக் கொள்ள கோடிக் கணக்கில் பேரம் பேச முயற்சித்தனர். மசியவில்லை. மிரட்டப்பட்டான். பயப்படவில்லை. இதைப் பற்றி ஆனந்த விகடனில் அட்டைப் படத்துடன் கூடிய cover storyல் இடம் பெற்றான். கோர்ட் உத்தரவின் பேரில் முகமது அலி IPS கைது செய்யப்பட்டார். மற்ற IPS அதிகாரிகள் பதவி பறிக்க பட்டது. அவன் வெற்றி நேர்மையின் வெற்றியாக பத்திரிகை உலகம் கொண்டாடியது.
செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்த நேரம். தேர்தல் நெருங்குகிறது. தமிழகம் இலவச சுனாமியால் தாக்க படுகிறது. திமுக – அதிமுக இரண்டும் போட்டி போட்டுகொண்டு இலவச வாக்குறுதிகளை அளித்தன.
ஆடு / டிவி / மிக்ஸி என இலவசங்கள் ஊர்வலம். அந்த வக்கீல் பொங்கி விட்டான். அரசாங்கம் செய்ய வேண்டியது இலவசமாக கல்வியும் மற்றும் மருத்துவமும் மட்டுமே. ஒரே வருடத்தில் வீணாக போகும் இலவச பொருள்கள் நமது பொருளாதாரத்தையே மொத்தமாக முடக்கிவிடும். ஆயிரக்கணக்கான கோடி இலவச பொருள்கள் ஒட்டு வாங்குவதற்காக கொடுக்கப்படும் லஞ்சமாகும் என உயர் நீதி மன்றத்தில் முறையிட்டான். பொது நல வழக்கு. ஆனால் தோற்று போனான். அந்த வழக்கில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால், வீணாகி போன சுமார் 60000 கோடி ரூபாய் மருத்துவம் மற்றும் கல்விக்காக செலவிட பட்டிருக்கும். மிக பெரிய மாற்றத்தை தமிழகம் சந்தித்திருக்கும் . அனாலும் அவன் கலங்கவில்லை. வழக்கை உச்ச நீதி மன்றத்துக்கு எடுத்து சென்றான்.
நெஞ்சிலே தீயாய் தேச பக்தி; தளராத நேர்மை; கொள்கை பிடுப்பு; போராட்ட குணம்; எளியவருக்கெல்லாம் சட்ட உதவி ; எப்போதும் புன் சிரிப்பு; சீரான உடை;
பாலாஜி என்ற போராளி 6 மாதம் முன் ஒரு விபத்தில் சிக்கினான். மரணம் அந்த போராளியை தன் 44 வயதில் வென்றது. நேற்றைய தினம் பாலாஜி என்ற போராளியை நாம் இழந்தோம்.
இறுதி யாத்திரை :
நாள் : 12/4/2017
இடம் : சென்னை மைலாப்பூர் – லஸ் கார்னர் – நவ சக்தி விநாயகர் கோயில் அருகில்
நேரம் : காலை 8 மணி
ஒரு நல்ல நண்பனை இழந்த துக்கத்தில்
Admin
Brahmins For Society – Tamil Nadu Chapter
ஆழ்ந்த வருத்தம் , இறந்த பின் தான் இவரது புகழ் தெரிகிறது
Achievements of any Organisation, Govt or Individual which has a massive response on the Society needs to be conveyed to Public thro Media immediately, so that people come to know if it & make others to spur into make a step towards that right direction.
I am very proud of Shri Balaji.Slute to his soul.
Very truely said. But V r surrounded by facist prejuidice n perverted press n public. First n foremost to be strongly cricized r the so-called Mylapore Mla n the State n Central Govts at that time bcos they should have high lighted Abt this
individual the late advocate shri.balaji. infact bjp got big advertisement n claim fame for installing dr.apj kalam.
மிகுந்த வேதனை….
It is really accident?
The same question raised in my mind.
S, I 2 have d same doubt. But no body will support except our own people, only the time have to take action
I am very much proud of Sri
Balaji. May his soul rest in peace.
By
K.Ganesh.
Feel very sad. May his soul rest in peace.
போராளிகள் சாவதில்லை
மீண்டும் நம்முடனே பிறந்திருப்பான்
We lost a gem
ஒரு நல்ல நண்பனை இழந்த துக்கத்தில்
போராளிகள் மட்டும் விபத்தில் சிக்குவதன் ரகசியம் என்னவோ?
May his soul rest in peace.
We are very thankful to you for bringing such laudable initiatives of the common men to light. Actually, these things do not see the light of the day.
கலியுகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை அந்த உத்தமனின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
திரு. பாலாஜி நல்லதை நினைத்து போராடினார் என்ற நிகழ்சியால் நமக்கெல்லாம் உணர்த்தினார், அன்னாருக்கு என் கண்ணீர் அஞ்சலி. கவிஞர் கண்ணதாசனின் பாடலில் வரும் வரிகள் “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…….. நல்லதை நினைத்தே போராடு
Surprised .So much is going on .All our wishes.
Any photo of this immortal fighter for to?
அருமை
We lost such a great person. My deepest condolences to his family.
So sad. I have met him once. Very nice person. I learnt that he is a devoted swayamsevak.
We should do more for him.
Jaihind.
There are many more Balajis’ to be identified. They have to come up and raise to the occasion.
Why…? Everyone who has read and known about Sri. Balaji can become another Balaji.
Come on. It’s our society, our city and our Nation. Bharath Matha ki Jai.
-Ganesh Srinivasan-
No information about him was circulated through Social media during his struggle. He fought for the common cause selflessly. Kudos to him.
Super. We missed a porali. But lot of porali are there.
Bhaskar
It is a news for me. My sincere salute to this brave man. what was the cause for the accident? Has anybody taken this matter for investigation? We lose many Balajis in this fashion.
Wish his immortal remains ‘The Athma’ guides us to bring forth hundreds of Balajis to do good to the society.
At the outset, my humble pranams to the noble person and pray for the selfless fighter’s soul to rest in peace. If we are fortunate enough, we will be blessed with many more Balajis in time to time. May His tribe grow from strength to strength.
why not brahmins society start a news paper to inform TRUE news to all people in tamilnadu
Our salute to Shri balaji proud to have such a brave lawyer
சமூகத்திற்க்காக இப்படிப்பட்ட தன்னை
தன் வீட்டையும் கூட சட்டை செய்யாமல் உயிரை தியாகம் செய்த
அன்புச் சகோதரனுக்கு என் அழ்ந்த
துக்கத்தை பகிர்ந்து கொள்வதுடன்
அன்னார் குடும்பத்தினர் அனைவர்க்கும் என்நமஸ்காரங்களை
உரித்தாக்குகிறேன்.
நம் காலத்து வாஞ்சிநாதனை இழந்துவிட்டோம்.நஷ்டம் சமூகத்திற்க்கு
என் ஷாஷ்ட்டாங்க நமஸ்காரங்கள்.
Being as Satrian is important but in Kali – Yuga it is very important to be a Sanakiyan.
இதுபோன்ற நல்லவர்களுக்கு நாம் துணை நிற்காமல் சென்றால் வருங்கால மிகவும் மோசமாக இருக்கும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவோருக்கு நாம் எப்போதும் துணையாக இருக்க வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர் அதிகமாகும்
We lost a good patriotic human being, all what we do is send some messages praisibg him. There might be few Balaji doing their services from our community, let’s go d and provide protection and support through a organised platform with powerful people from our community. Let’s create an NGO or use an existing one.
திரு பாலாஜி அவர்களின் இழப்பு நம் பிராமண சமுதாயத்தின் இழப்பு.அவரின் முயற்சி தொடரபடவேண்டும்