சுப்பிரமணி மாமாவும் சித்திரகுப்தனும்

சுப்பிரமணி மாமாவும் சித்திரகுப்தனும் :

சுப்பிரமணி மாமா – ஒரு தீவிர பிராமண அபிமானி. அவரின் 18 வயதில் Reservation Quota வினால் அவருக்கு கல்லுரி சீட் கிடைக்காமல் போனது. அதிலிருந்து அவருக்கு இட ஓதுக்கீடு பற்றி ஒரு தீவிரமான அபிப்ராயம் தோன்றி விட்டது.

-x-x-x-x-x

பிராமணர்கள் அழிக்க படுகிறார்கள் என தீவிரமாக நம்பினார். எப்போதும் பிராமண உயர்வு பற்றியும் ஒற்றுமை இன்மை பற்றியும் அதிகம் பேசுவார். அனேகமாக (ஒரே) ஒரு அரசியல் கட்சி பற்றி வாரம் ஒருமுறையேனும் விமர்சனம் செய்வார். அரசியல் புள்ளி விவரங்களை பற்றி விரல் நுனியில் வைத்து இருப்பார். எவராலும் அவரை வாதத்தில் தோற்கடிக்க முடியாது.  (எதிர் வாதத்தில் உள்ள உண்மைகளை காது கொடுத்து கேட்டால் தானே தோற்பதற்கு!!)

-x-x-x-x

ஒருமுறை பிராமண சங்க கூடத்துக்கு போனார். “நாம் என்ன செய்தோம். நமக்கு என்று ஒரு வங்கி (Bank) வேண்டும், ஒரு என்ஜினீரிங் கல்லூரி வேண்டும். ” என நீண்ட நேரம் பேசினார். பலர் கை தட்டினார்கள். அங்கிருந்த நிர்வாகி சுப்பிரமணி மாமாவிடம் ஒரு சிறு நிகழ்ச்சியை நடத்த சொல்லி கேட்டார். அவர் பகுதியில் உள்ள சிலரை சங்கத்துக்கு உறுப்பினர் ஆக்கி, ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். சுப்பிரமணி மாமா சிலரிடம் உறுப்பினர் ஆக சொல்லி கேட்டார். கூட்டத்துக்கு கூப்பிட்டார். ஆனால் எதுவும் சரிபடவில்லை. எப்படியோ ஒரு கூட்டத்தை நடத்தி விட்டார். கூட்டம் நடத்த இடம் வாடகை மட்டும் காபி என கொஞ்சம் செலவானது. சுப்பிரமணி மாமாவுக்கு இதெல்லாம் சரிப்படவில்லை.

ஒருமுறை சங்க கூட்டத்துக்கு புதியவன் ஒருவன் வந்திருந்தான். எதோ கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை செய்கிறானாம். “நமக்கான தேவைகளுக்கு மாஸ்டர் லிஸ்ட் முதலில் வேண்டும். ஒவ்வொரு தேவைக்கும் டாஸ்க் போர்ஸ் வேண்டும் என்று பேசினான். பலர் அவன் பேச்சை உற்று கேட்டார்கள். மாமாவுக்கு கொஞ்சம் வயிற்றில் கோளாறு. அடிக்கடி பற்றி எறியும். இப்பொது எரிந்தது. “நீங்க சந்தி பண்ணுவியா. தர்ப்பணம் பண்ணுவியா. etc etc ” என்று ஆரம்பித்து (அவரனுக்கு இதில்ஆர்வமில்லை. அவன் நம் சமூக மனிதர்களை நேசிக்கும் ஒருவன். தாக்க படும் சமூகம் என்பதால் அக்கறை. மாற்றும் கொண்டு வர முடியும் என நம்புகிறான்). மாமா அவனை கிழித்து தொங்க போட்டார். “நீயெல்லாம் பிராமண சமூகம் பற்றி பேச வந்துவிட்டாய்” என்று ஓட ஓட அடித்தார்.

வாரம் எதாவது சங்க வேலை வந்தது. யாராவது வீட்டுக்கு வந்தார்கள். நெறைய பேசினார்கள். டிவி பார்க்க முடியவில்லை. “செயல்” பட வேண்டி இருந்தது.   கொஞ்சம் எரிச்சலும் கோபமும் வந்தது. எதோ ஒரு சின்ன காரணத்துக்கு சிறு சலசலப்பு. இவர் “Prestige ” பத்மநாப ஐயர் போல் முறுக்கி கொண்டார். “பாலிசி என்றால் பாலிசி” என்றார். “விட்டு தொலைங்கோ” என்று மாமி சொல்ல சங்கத்துக்கு போவதையே நிறுத்தி விட்டார்.

அவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து அவரை அழைப்பார்கள். பல ஆலோசனைகளை வழங்குவார். “சங்கத்திலிருந்து என்னை கூப்பிடுகிட்டே இருகாங்க. எனக்குத்தான் டைம் சரியாய் இருக்கு” என்று அடிக்கடி சொல்லி கொள்வார்.

“கண்டிப்பா நீங்க இந்த Meeting கு வரணும்” என்று பிராமண சங்க நிர்வாகி தொந்தரவு (?!) செய்தால் “எல்லா பிராமண சங்கமும் ஒண்ணா ஆகணும். அப்போதான் நம்ம சமூகம் உறுப்புடும். போய் அந்த வேலையை பாருங்கோ” என்று சொல்லி அனுப்பிவிடுவார். அப்பாடி!. அவன் திரும்பி வரமாட்டன்.

x-x-x-x-x-x

அவருக்கு ஒரே பையன். அமர்க்களமாக திருமணம் நடந்தது. 2000 பேர் திருமணத்துக்கு வந்தார்கள். முழுமையான வழக்கை. 72 இறந்து போனார். சுடுகாட்டுக்கு 6 பேர் வந்திருந்தார்கள். (4 பேர் தூக்குவதற்கு, பையன் கொள்ளி போட, ஒரு டிரைவர் (திரும்பி போக))

x-x-x-x

நீங்கள் படிக்கும் இந்த நேரத்தில் சுப்பிரமணி மாமா எம லோகத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். நாமும் என்ன நடக்கிறது என பார்ப்போம்.

x-x-x-x-x-x

எமன் : சுப்பிரமணி!. ப்ரம்மஹத்தி தோஷத்துக்கு (பிராமணர்களை அழிப்பதற்கு) காரணமாக இருந்ததால் உங்களுக்கு தலைகீழாக தொங்கும் தண்டனை விதிக்கிறேன்.

x-x-x

சுப்பிரமணி மாமா : இது அநியாயம். நான் ஒரு தீவிர பிராமண அபிமானி. பிராமணர்களுக்கு என்று ஒரு வங்கி ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியவன் நான். என்னை போய் ?

சித்திரகுப்தன் : தனியாக வங்கி ஆரம்பிக்க உங்களால் எவ்வளவு தர முடியும்.

சுப்பிரமணி மாமா : 5000 ரூபாய்.

சித்திரகுப்தன் : வங்கி ஆரம்பிக்க 500 கோடி Reserve வங்கிக்கு தர வேண்டும். அது தவிர வங்கி நடத்த நூற்று கணக்கான கோடி வேண்டும். நீங்கள் வீடு காட்டும் போது, மொட்டை மாடியில் , ஹெலிபேட் (helicopter இருக்கும் இடம்) வைத்து கட்ட வேண்டும் என்று யோசித்தீர்களா. இல்லையே. உங்கள் சொந்த விஷயமானால் Practical  லாஜிக். சமுகமானால் உளறி கொட்டலாம். அப்படித்தானே?

-x-x-x-

சுப்பிரமணி மாமா : ப்ராமண சங்கத்து நிர்வாகிகள் என் இல்லத்துக்கு அடிக்கடி வருவார்கள். உங்களுக்கு தெரியுமா?

சித்திரகுப்தன் : அவர்கள் உண்மை விசுவாசிகள். நீங்கள் செயல் படுபவர் போல பேசியதால் அவர்கள் உங்கள் இல்லத்துக்கு வந்தார்கள். கடைசி வரை நீங்கள் உங்கள் சமூகத்துக்கு எதுவும் செய்யவில்லை. மேலும் செயல் படுபவர்கள் நேரத்தையும் கெடுத்தீர்கள்.

x-x-x-x-x

சுப்பிரமணி மாமா : பிரமாண சங்கங்கள் ஓன்று படவேண்டும் என்று சொன்னவன் நான்.

சித்திரகுப்தன் : உலகத்தில் எந்த சமுகமாவது ஒரே தலைமையின் கீழ் இருக்க முடியுமா. அது சாத்தியமா. உனக்கு எந்த சங்கம் மனதுக்கு பிடித்திருக்கிறதோ அதில் உன் பங்களிப்பை செலுத்து.  “ஒருங்கிணைப்பு கூட்டம்” நடந்தது; வந்தவர்களின் எண்ணிக்கை 100 தாண்டவில்லை; ஆனால் FB இல் எழுதுவோர் ஆயிரம் ஆயிரம். நீங்கள் அந்த கூட்டத்துக்கு போக கூட இல்லை. SUN டிவில் தொடர் முக்கியம். பேச்சு மட்டும் வாய் கிழியும்.

நீங்கள் மளிகை கடைக்கு போனால் அங்கு இருக்கும் காலண்டரை கவனியுங்கள். அதில் ஒன்று “சென்னை வாழ் xxxx கிராம xxxx (ஜாதியின் பெயர்) சங்கம்” என்று இருக்கும். அதாவது சென்னையில் வாழும் ஒரு கிராம பகுதியை சேர்த்தவர்களுக்கான சாதி சங்கம். இதுவே வலிமை. பல சிறு குழுக்களாக இருப்பது வலிமையே. சிறிய குழுக்களாக இருக்கும்போது பிணைப்பு உறுதியானது. எந்த சாதி சமூகமும் ஒரு தலைமையில் இயங்குவதில்லை.

இன்றைய தினத்தில் செயல்பாட்டுடன் (பணம் / உழைப்பு / நேரம் – கொடுப்பவர்; வெறும் வாய்ச்சொல் அல்ல) இருப்பவர்கள் ப்ராமண சங்கங்களில் மிக மிக குறைவு; ஒரு சமூகதுக்கு குறைந்தது 1% பேர் செயல்படறல்களாக வேண்டும். பிரமாண சமூகம் 30,00,000 என்று கொண்டால், 30,000 பேர் செயல் படுபவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு வாய்ச்சொல் வீரர்; செயல்படாமல் இருப்பதற்கு “ஒற்றுமை இன்மை” எனும் மாயா வாதத்தை வைத்து தப்பித்து கொள்கிறீர்கள்

x-x-x-x-x-x-x-x-x

சுப்பிரமணி மாமா :  பிராமணர்களின் பூணல் அறுத்த போது பெரும் கோபப்பட்டு நீண்ட கட்டுரை FB இல் எழுதியவன் நான்

சித்திரகுப்தன் : மைலாப்பூரில் கண்டன கூட்டம் நடந்தது; வந்தவர்களின் எண்ணிக்கை 1100 தாண்டவில்லை. நீங்கள் என்ன செய்து கொண்டிருந்திர்கள் என நியாபகம் இருக்கா.

-x-x-x-x-x-x-x

சுப்பிரமணி மாமா : நான் இட ஒதுக்கீட்டை எதிர்த்தேன். என் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தேன்.

சித்திரகுப்தன் : இதுவரை நீங்கள் இட ஒதுக்கீபட்டுக்கு எதிராக 7842 பேரிடம் வாதாடி இருக்கிறீர்கள். உங்கள் கடைசி காலத்தில் Face Book மூலம் பலரிடம் வாதம் செய்திருக்கிறீர்கள். பெரும்பாலும் “இட ஒதுக்கீடு மூலம் பலன் பெறுபவர்கள் திறமை இல்லாதவர்கள் என பேசி பலரை வெறுப்படைய வைத்தீர்கள். அதில் 4411 பேர், உங்கள் வாதத்தை பற்றி கவலை படவில்லை. 1802 பேர் உங்களை மட்டும் வெறுத்தார்கள். மீதி உள்ள 1629 பேர் பிராமண குலத்தையே உங்களால் வெறுத்தார்கள். அதில் சிலர் மேற்பதவிக்கு செல்லும்போது பிராமணர்கள் மீது வெறுப்பை வெளி கட்டினார்கள்.  அதனால், அவர்களின் வெறுப்பால் பல பிராமணர்கள் பாதிக்க பட்டர்கள். அதற்கு மூல காரணம் நீர் தான்.  சிலர் பிராமண எதிர்ப்பு கட்சிக்கு உங்களால் ஆதரவு அளிக்கும்படி செய்திர்கள். இது தவறு இல்லையா?

x-x-x-x-x

சுப்பிரமணி மாமா : என் கருத்தை சொல்ல எனக்கு உரிமை உள்ளது. இதில் தவறு என்ன?

சித்திரகுப்தன் : உண்மை. ஆனால் உங்கள் தனிப்பட்ட விவகாரத்தில் நெளிவு சுளிவுடன் எவரும் உங்களையோ அல்லது உங்கள் குடும்பத்தையோ வெறுக்காத வண்ணம் பேசும் நீங்கள், பிராமண குலத்தை பலர் வெறுக்கும் படி  பொது வெளியில் நடந்து கொள்கிறார்கள். இது சரியா?

x-x-x-x

சுப்பிரமணி மாமா :  நான் தொடர்ந்து பிராமண சமூகத்தின் நலம் விரும்பி இருக்கிறேன்

“வெறும் பேச்சு” போதும் என நீங்கள் தீர்மானித்து விட்டிர்கள். உங்கள் மகனை பள்ளியில் சேர்த்தீர்கள். அவன் மார்க் குறையும் பொது டியூஷன் வைத்தீர்கள். கல்லுரியில் சேர்த்தீர்கள். திருமணம் செய்து வைத்தீர்கள். இவை அனைத்தும் “செயல்கள்”. உங்கள் சமூகத்தின் மீது நீங்கள் வைத்த அபிமானம் என்பது உங்களின் அறிவு குழந்தையை போன்றதே. அதற்கு நீங்கள் செய்தது என்ன. வெறும் பேச்சு மட்டுமே.

“பிராமண வெறுப்பு” ஏன் ஏற்படுகிறது. அதை குறைக்கும் வழி என்ன என்பது பற்றி ஒரு அறிவார்த்த நபராக நீங்கள் யோசித்து இருக்குறீர்களா. கடந்த 100 ஆண்டுகளாக பிராமண எதிர்ப்பு தமிழகத்தில் இருக்கிறது. அதை குறைக்க உங்கள் பங்களிப்பு என்ன. ஒரே மாதிரியான சிந்தனை. ஒரே மாதிரியான பேச்சு. இதன் விளைவு கடும் வீழ்ச்சியில் இருக்கிறோம் என்று கூட புரிந்து கொள்ளவில்லை.

x-x-x-x

சுப்பிரமணி மாமா : நான் சமஷ்டி உபநயனம் செய்ய என் பங்களிப்பை செய்துள்ளேன் ?

எவ்வளவு என்பது தான் கேள்வி. உங்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு, உங்களுக்கு இறைவன் கொடுத்த அளவு, நீங்கள் உங்கள் சமூகத்துக்கும் நாட்டுக்கும் கொடுக்கவில்லை. நீங்கள் கொடுத்தது 2000 ரூபாய். உங்கள் ஆண்டு  வருமானம் 24 லட்சம். சதவீதத்தில் என்ன பங்கு.   தர்ம காரியத்துக்காக வருமானத்தில்  5% கூட ஒதுக்க முடியாத நீர், எப்படி சுவர்க்கம் புக ஆசைப்படுகிரகள்

எல்லோரும் மண் தள்ளினால் எப்படி பாலம் கட்ட முடியும். சக்திக்கேற்ற வகையில் செயல் பட வேண்டாமா. அனுமனாக பிறந்தவன் கடல் தாண்ட வேண்டும், வானரமாக பிறந்தவன் கல் பாறை கொண்டு பாலம் கட்ட வேண்டும். அணில் லாக பிறந்தவன்  மட்டுமே  மண் தள்ள வேண்டும். உங்களை பெரும் சக்தி படைத்தவராக உங்களை படைத்தோம். நீரோ வெறும் அணில் செய்யும் வேலையை செய்துவிட்ட இப்போது முதுகில் மூன்று கோடு கேட்கிறீர்கள்.

x-x-x-x-x-x-x-x-x

சுப்பிரமணி மாமா : தேவைக்கு மீறி தான் என்னால் தர்மம் செய்யமுடியும். அதை தானே செய்தேன்?

அப்படியா. உன் காலம் பிறகு எழுதிய உயிலில் சமூக நலத்திற்காக எதாவது எழுதினீர்களா. உங்கள் பெயர் நிலைக்க / தர்மம் தழைக்க ஒரு சிறு பகுதியாவது விட்டு விட்டு வந்திர்களா. இல்லையே. உங்கள் மனைவியின் பெயரில் மற்றும் மகன் பெயரில் மட்டுமே உங்கள் சொத்துக்கள். அடுத்த முன்று ஆண்டுகளில் உங்கள் மனைவி இங்கு வந்து விடுவாள். ஆஸ்திரேலியாவில் இருக்கும் மகன், உங்கள் சொத்தை அனுபவிக்காமல் அழிப்பான்.

நீங்கள் இறக்கும்போது உங்கள் சொத்து 12 கோடி. ஆனால் நீங்கள் செய்த தர்மத்தை தான் நீங்கள் இங்கு எடுத்து வர முடியும். உங்கள் வருமானத்தில் நீங்கள் தர்ம காரியத்துக்கு செய்த தொகை 0.001% மட்டுமே.

உமக்கு நாம் அள்ளி கொடுத்தோம். நீங்கள் வெறும் கையுடன் இங்கு வந்தீர்கள்.

-x-x-x-x-x-x

நான் அடுத்த தலைமுறையை பற்றி கவலை பட்டேன். அவர்கள் முன்னேறும் வழி வகுத்தேன். இதில் என்ன தவறு?

எது நல்ல வழிகாட்டல். உன் தந்தை உனக்கு தந்தது வழிகாட்டல். உனக்கு அவர் நமது கலாச்சாரத்தை சொல்லி கொடுத்தார். தமிழில் புதுமை பித்தனை / கல்கியை அறிமுக படுத்தினார்.   நீ சுஜாதாவையும் / பாலகுமாரனையும் விரும்பி படித்தாய்; ஆங்கில நாவல்களை தேடி தேடி படித்தாய்; சோவும், ஜெயகாந்தனும் உன் சமூக பார்வையை கொடுத்தார்கள். உங்கள் வீட்டில் சாப்பிடும் நேரம் சமூக / அரசியல் பற்றிய விவாதங்களாக இருந்தது.

படிக்கும் பழக்கம் உன் கற்பனை வளத்தை / ஆளுமையை அதிக படுத்தியது. உன் தொழில் சாலையில் பெரும் பதவியை வகிக்க உதவியது. நீ படித்தது தமிழில்;உன் தந்தை உனக்கு நல்ல ஆங்கிலமும் சொல்லி கொடுத்தார். சமஸ்கிரதம் அறிமுக படுத்தினர். உன் இளம் வயதில் உன்னை பெரும் தகுதி உள்ளவனாக மாற்றினார். உன்னால் திருப்பாவையையும் சொல்ல முடிந்தது; ஒரு presentation எடுக்க முடிந்தது

நீ என்ன உன் மகனுக்கு செய்தாய். தமிழ் மொழி படித்தால் முன்னேற முடியாது என்று எவனோ ஒருவன் சொல்லியதை நம்பினாய். 12 வதில் படிக்கச் வைத்தது பிரெஞ்சு. அவன் 3 கழுத்தை வயதில் பிரெஞ்சில் அ , ஆ, இ .. என எழுதி 200 மதிப்பெண் வாங்கினான்.  9வது வயதில் Entrance Preparation  என்று சொல்லி மற்ற  எதை பற்றியும் அவனுக்கு தெரியாமல் பார்த்து கொண்டாய்.  திருக்குறளை ரசிக்க தெரியாதவன், காயத்திரியும் சொல்ல மாட்டான் என்பது உனக்கு புரியாமல் போனது.  பேச தெரியாமல் / பழக தெரியாமல் / இலக்கியம் அறியாமல் / நமது கலாச்சாரம் பற்றி எதுவும் தெரியாமல்/ நாடு மற்றும் மொழி மற்றும் சமூக உணர்வு இல்லாமல் “உணவு / உறக்கம் / செஸ்” என்ற ஒரு ஆடு போல ஆக்கி விட்டாய்.

நீ ஒரு factory இன் General Manager. உன் செயலால் பலருக்கு உதவி செய்தவன்; “நன்றி” என்ற வார்த்தையை கேட்டவன்; தமிழ் இலக்கியம், சரித்திரம், கர்நாடக இசை, உலக அறிவு, அரசியல் அறிவு, சமூக பார்வை, பணம் சம்பாதிக்கும் திறன், அதை பெருக்கும் திறன் என ஒரு முழு வழக்கையை அனுபவித்தாய்.

ஆனால் உன் மகன் ஒரு Individual Contractor; உனக்கு புரியும்படி சொல்லப்போனால் ஒரு கடை நிலை ஊழியன்; அவன் ஒரு முடிவும் எடுக்க முடியாது; எடுக்கவும் தெரியாது; கொடுத்த வேலையை செய்வான்; வீட்டுக்கு வந்து படம் பார்ப்பர்ன். தூங்குவான். ஒரு ஆட்டின் வழக்கை.

உன் பேரன் உன்னுடைய காரியத்துக்கு வரவில்லை; உன் 13 நாள் காரியதன்று அவன் MCdonal மாட்டு soup குடித்து கொண்டிருந்தான். ஒரே மகன் ஒரே பேரன்;

உன் அப்பா உன்னை வளர்த்த விதம் உயர்வானது என்று உனக்கு தெரியவில்லை. உன்னை போல் உன் பேரன் இருக்கவேணும் என்ற விருப்பமும் இல்லை.  எந்த உணர்வில்லாத ஆட்டை வளர்த்தாய்; அது அடுத்த ஆட்டை வளர்கிறது ; 5000 ஆண்டு பாரம்பரியத்தை அழித்தாய்;

உன் பாரம்பரியத்தை எப்படி அழித்தாய் என பார்.

நீ தமிழில் வல்லவன்; ரசிப்பவன்; உன் மகனுக்கு தமிழ் படிக்க தெரியாது. உன் பேரனுக்கு தமிழ் பேச தெரியாது.
நீ தேசியவாதி; உன் மகனுக்கு கொள்கை என்பது கிடையாது. எருமை போல பால் கறக்க மட்டும் வளர்த்தாய்; உன் பேரனுக்கு இந்திய தேசம் பற்றி எதுவும் தெரியாது.

ஒரு குதிரை கூட தன் பிள்ளை தன் போல இருக்க வேண்டும் என்று நினைக்கும். நீ பசு மாட்டிற்கு ஆதரவாக Face Book  எழுதி தள்ளும் போது, உன் பேரன் beef சூப் குடித்து கொண்டு இருக்கிறான். நீ நாட்டை பற்றி / தேச பக்தியை பற்றி / மோடி பற்றி பேசி தள்ளும்போது உன் பிள்ளை நாட்டுக்கு திரும்பவே கூடாது என ஆஸ்திரேலியாவில் citizenship கேட்டு கெஞ்சி கொண்டிருக்கிறான்.  எதிர்காலத்தில் வெள்ளைக்கரான் அடித்து துரத்தினால் மட்டும் இந்தியாவுக்கு வருவான்.

-x-x-x-x-x-x-x-x

பின்குறிப்பு : சித்திரகுப்தன் செய்தது சரியா இல்லையா என்பதை படிப்போரின் கருத்துக்கே விடுகிறோம்.

6 Responses to சுப்பிரமணி மாமாவும் சித்திரகுப்தனும்

  1. A S Krishnamurthy says:

    Very confusing article, but loaded with facts. Basically confusing because, the article is trying to address all the layers of ONE small community.
    It would hv been better, if the same article has been broken into social segment wise and sharply adressed that particular segment of society.
    For eg., General Manager is a role and bound by COBE, hence it is “Adharma” to practice favouritism.
    இந்த கட்டுரை, வாய் சொல்லில் வீரர்களை சாடுவதாக அமைகிறது. Good.
    ஒரு சமுதாயம் முன்னேற, பல வகையான செயல்கள் பிரதானமானவை.
    1.We do need good Orators for தர்க்கம் to create public perception.
    2.We need On Ground Workers, to execute
    3.We need wealth or Funds. Mostly causal funders will not like Visibility.
    4.Policy makers / Opinion Makers amongst Public to gain Political relevance. This is most important as our votebank is very low.
    5. Creation of Wealth creators
    Points 4&5, brahmin community should follow Jews of the world model.
    6. No direct political patronage to any party.
    7. Encourage some wings to get formed to protect all the innocent and people who are contributing in above manner.
    8. We need to form Legal wings, Medical wings, Education wings, Cultural wings, Literature wings, ritual wings, etc.
    Unless we generate sufficient funds we cannot reach anything but remain a helpless society similar to Kashmir Pandits.
    Blaming one another (like this author and subramani mama) will be normal but will not lead to a solution.
    The above is my personal opinion and outcome of deep thought processes inside me.

  2. V R SOUNDER RAJAN says:

    அவர்வர்களுக் தெரிந்ததை சொல்லி காலத்தை ஒட்டியவர்கள்தான் இதை ஷேர் பண்ணனும்தான் நினைச்சேன் ஆனால் தோரா வழக்கு (ILLOGICAL ) முடிவு வளர்ந்தவனை பார்த்து பொறாமைப் படுபவன் கற்பனை என்றுதான் புரியும் ஒற்றுமையை ஏற்படுத்துவதை விட காழ்ப்புணர்ச்சிதான் மிகும்

  3. ஆரியத்தமிழன் says:

    நடைமுறையில் உள்ள நிலவரத்தை காட்டும் பதிவு

  4. NAGARAJAN R says:

    REALITY NARRATED VERY WELL. I AM AFRAID IF THE AUTHOR HAS KNOWN ME BEFORE AND DEPICTED ME AS SUBRAMANI MAMA. SHALL TRY TO CHANGE AT LEAST A LITTLE BIT.

  5. M Narayanan says:

    சித்ர குப்தன் சொன்னதாக கூறியிருப்பவை ஒன்றைத் தவிர-முகநூலில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தை எழுதி, பலர் பிராமணர்களை வெறுக்கும் படி செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டு சரியாகப் படவில்லை.
    இட ஒதுக்கீட்டினால் முன்னேறிய சமுகம் எனப்படும் சமூங்களில் உள்ள ஏழைகள் பாதிக்கப்படுவதை உணர்ந்து தான் எல்லாக் கட்சிகளின் ஆதரவுடன், பிஜேபி அரசு முன்னேறிய சமூகத்துக்கும் 10 சதவீத ஒதுக்கீட்டை அளித்தது. இது ஒரு நாளில் நடந்ததல்ல, பல ஆண்டுகளாக பலரால் உருவாக்கப்பட்ட பலமான வாதங்களால்தான் முடிந்தது.
    கனப் பணி செய்வது மிக மிக முக்யமான விஷயமென்றாலும், அது எல்லோரoறும் முடியாது. களப்பணி செய்பவர்கள் பெரும்பாலும் பிறரைத் தள்ளிவிட்டு, தங்களை முன்னிலைப் படுத்தும் குணமுள்ளவர்களாக இருப்பதை கவனித்தால் புரியும். அதைக் குறையும் சொல்ல முடியாது. ஏனென்றால் வல்லவர்களாக இருந்தால் தான்மை தாக்குப் பிடிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *