அர்ச்சகன் பேசுகிறேன்
அர்ச்சகன் பேசுகிறேன் :
தங்கத்தில் கூரை வேய்ந்த கோயில்; கடும் கூட்டம்; பளபளபான அர்ச்சகன்; கழுத்தில் மெல்லிய செயின்; காதில் கடுக்கன்; கேட்காமல் கொட்டும் பணம்; வெளி மாநிலத்தவர் “பண்டிட்ஜி” என வணங்கும் தோற்றம்; அழுக்கிலா வேட்டி; வெள்ளி சரிகையில் அங்க வஸ்திரம்; சொந்தம் மற்றும் சுற்றதாரிடம் மதிப்பு; பசு நெய்யினால் வந்த தேஜஸ்; செல்வாக்கு உள்ளவர் கூட மதிக்கும் தோற்றம்;
ஒரு அர்ச்சகர் என்றவுடன் உங்களுக்கு வரும் பிம்பம் இது.
எங்களில் சிறிய சதவிகிதம் பேரை உங்களுக்கு இப்படி தான் தெரியும்; தமிழகத்தில் 30 கோயில்களில் எங்களில் ஒரு பிரிவினர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். மேலும் 200 கோயில்களில் சுமாரான நிலையில் இருக்கிறார்கள்.
நான் அவனில்லை;
நான் நூற்றுக்கணக்கான / பழமையான கோயிலை சேர்த்தவன். என் கதை கேளிர்.
என் கதை / என் பெருமாளின் கதை :
என் பன்னிரென்டாவது வயதில் பாட சாலை படிப்பை முடித்து இங்கு வந்தேன்; என் தகப்பனாரின் உதவி நபராக என்பெருமான் கைங்கரியம் செய்ய வந்தேன்; 1100 ஆண்டு முன் சோழன் கட்டிய கோயில்; சோழ சக்கரவர்த்தி இங்கு நின்றான்; கோயில் தீர்த்தம் அருந்தி இருப்பான்; தமிழ் பண்டிதர் இந்த தூண் அருகில் நின்றே பாடல் இயற்றினார்; எழுத பட்ட கல்வெட்டுகள்; பிறகு அந்நிய படை எடுப்பு அதை இந்த கிராமத்தார் சமாளித்த விதம் / செய்த தியாகங்கள் என என் தகப்பனார் எனக்கு விளக்கினார்; நான் இந்த பாரம்பரியத்தின் ஒரு பகுதியானேன்; என்பெருமான் என்னுள் இறங்கி போனார்;
50 வருட காலம் ஓடி போய் விட்டது; தொடர்ந்து கோயிலுக்கு வருபவர்கள் குறைந்து போய் விட்டார்கள்; என் கிராமம் வெறிச்சோடியது; பெரும்பாலோர் சென்னை / பெங்களூர் / அமெரிக்க என வெளியேறினர்; அடுத்த தலைமுறைக்கு இந்த கோயில் இருப்பதே தெரியவில்லை; ஏன் தங்கள் பாரம்பரியம் பற்றியும் எதுவும் தெரியவில்லை. சேவிக்க வருபவர் குறைந்து குறைந்து, எப்போதாவது சிலர் வரும் நிலையானது.
காலம் மாறியது; ஒரு ஆறு போல நிற்காமல் மாரி கொண்டே இருக்கிறது; எவரையும் அது கேட்பதில்லை; மக்கள் மன நிலை மாறி கொண்டே இருக்கிறது;
அமைதியாக கோயிலில் தியான மண்டபத்தில் அமர்ந்து பெருமானின் அருளை உள் வாங்கி கொள்வது மாறி, கூட்டம் நெரிசலில் 5 வினாடி பெருமானை செவிப்பது என மாறி போனது;
பிரபந்தம் சொல்லிக்கொண்டே, அடி பிரதஷணம் செய்து மனதை ஒருநிலை படுத்தி சேவிக்கும் முறை இல்லாமல் போனது;
கோயிலின் ஒவ்வொரு தூண் அருகில் நின்று, அதன் பிரும்மாண்டத்தை வியந்து, அதை செய்தவன் திறமையை வணங்கி அதன் அருகே அமர்ந்து தொட்டு பார்த்து அனுபவிக்கும் பழக்கம் இல்லாமல் போனது
ஆனால் நான் மாறவில்லை: என் சுழற்சி மாறவில்லை:
வேட்டி கட்டுவது அறவே காணாமல் போனாலும், என் உடை மாறவில்லை.
What’s app காலத்திலும், என் சிகை அலங்காரம் மாறவில்லை.
நான் 18ம் நூற்றாண்டின் இன்றும் இருக்கிறேன்; நமது பண்பாட்டின் தொடர்ச்சியாக இருக்கிறேன்.
மாதம் 500 சம்பளமாக பெற்றாலும், எனக்கு குறையில்லை;
கர்ப்பகிரகத்தில் ஈரம் இருந்துகொண்டே இருந்ததால், காலில் சேற்று புண் வந்தாலும் வலிப்பதில்லை; மார்கழி மாதம் காலை 3.30 இக்கு எழுந்து கிணற்று ஜலத்தில் குளித்து 4.30 க்கு கோயிலை திறந்து என்பெருமானை சேவைக்கும்போது, எனக்கு குளிர்வதில்லை;
லீவு என்பது எனக்கு இல்லை; உடல் நலமில்லா நிலை தவிர, ஒரு அம்மா தன் குழந்தையை கவனிப்பதை போல, என்றைக்கும் என் கடமையை தவறுவதில்லை;
தீபாவளி / பொங்கல் மற்றும் எந்த விசேஷ நாள்களிலும், என் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன்; என்பெருமானே என் குடும்ப தலைவன்;
-x-x-x-x-x-x
“பிச்சை” என TAG அடித்து, Face Book பூராவும் என் கடமையை கேவலமாக பேசும் என் சகோதரனே!. அடுத்த அர்ச்சனை உன் பெயரில் / உன் நல் வாழ்வுக்காகவே.
சினிமாவிலும் / வலை தளத்திலும் மிக கடுமையான / மிக கேவலமாக வறுத்தெடுக்க பட்டாலும், அதை அனைவரும் வேடிக்கை பார்த்தாலும், நான் மாற போவதில்லை
எனக்கு மன வருத்தங்கள் இருக்கின்றன. மீனின் கண்ணீரை யார் அறிவார்.
x-x-x-x-x
என் அடுத்த தலைமுறை என் வேலையை விரும்பவில்லை. நானும் அவர்களை கட்டாய படுத்தவில்லை. அவர்களை குறை சொல்வதிலும் பயனில்லை. அவரவர் வாழ்க்கையை அவரவரே முடிவு செய்வர்.
அனைவரும் – அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் அகா வேண்டும் என்று ஒரு வாதம்!. உண்மை தானே. நான் வணங்கும் ஆழ்வார்களும் / நாயன்மார்களும் பிராமணர் மட்டும் அல்லவே. மேலும் எங்கள் எண்ணிக்கை பெருமளவு சரிந்து விட்டது. கோயில் கைங்கரியம் செய்பவரின் சராசரி வயது 50; பெரும்பாலோர் அடுத்த 10 ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள். இப்போதே 2 கோயில்களுக்கு ஓர் அர்ச்சகர் என்ற நிலை இருக்கிறது.
அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களில் நல்லவர்கள் வரட்டும். நல்லது நடக்கட்டும். நமது பாரம்பரியம் புதிய அர்ச்சகர்களால் தொடரட்டும்.
என் காலம் இருக்கும் வரை ,,,என் கடமை தவற மாட்டேன்….
இப்படிக்கு
உங்களுக்காக வாழ்நாள் முழுதும் பிராத்திக்கும்
- அர்ச்சகன்
-x-x-x-x-x-x-x-x-x-x-x
BrahminsForSociety . com – வேண்டுகோள்.
இதை படித்தவுடன் உங்களுக்கு 3 வகையான எண்ணம் தோன்றலாம்.
முதல் வகை :
நமது அரசாங்கத்தை / ஒரு அரசியல் கட்சியை / ஒரு தலைவரை இந்த நிலைக்கு காரணமாக்கி திட்டி பதிவு போடலாம் – ; நமது இன்றைய நிலைக்கு வேறு எவரையோ கை காட்டுவதும், தேவையில்லாத வாத / பிரதி வாதங்களில் ஈடுபடுவதும் உங்கள் சக்தியை வீணாக்கும். உங்களுக்கு பொழுது போகும், எந்த காரியத்தையும் சமூகத்துக்காக செய்யாமல், “சமூக அக்கறை” கொண்டவர் என உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளலாம். இந்த பதிவு உங்களுக்காக எழுத படவில்லை. தவளைகள் – செயல் திறன் இல்லாதவை – விலகி செல்லுங்கள்
இரண்டாம் வகை :
என்னை இந்த நெல்லை பாதிக்கவில்லை; அவர்கள் வேறு வேலை செய்து கொள்ள வேண்டும்; வேதம் படிப்பதை விட JAVA படித்தால் உபயோகம்; எனக்கு பொறுப்பு எதுவும் இல்லை – தோல் தடித்தவை ; விலகி செல்லுங்கள்;
மூன்றாம் வகை :
வருத்தம் தருகிறது; இது போல பதிவுகளை அடிக்கடி படிக்கிறேன்; என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை; எவ்விதம் உதவுவது என்று தெரியவில்லை. நம்பிக்கையானவர்கள் யார் என்றும் தெரியவில்லை.
உங்களுக்காகவே இந்த பதிவு; உங்களால் இப்பொது மாறுதல் தர முடியும். உங்களின் சிறிய தொகை ஒரு கோயில் அர்ச்சகருக்கு உதவ முடியும்; உங்கள் கடமையை நீங்கள் இப்போது செய்ய முடியும்; உங்கள் பணம் எப்படி செலவிட படுகிறது / உதவுகிறது என்று உங்களால் பார்க்க முடியும்.
எங்களின் வாக்குறுதி : உங்கள் பணத்தில் இருந்து ஒரு “டீ” குடித்தாலும் அது பாவ காரியமாக கருதுகிறோம்; மாறாத நேர்மையே எமது வாக்குறுதி
நம்ம சேவா டிரஸ்ட் ஒரு எளிய அறிமுகம்:
- நமது தமிழ் நாட்டில் தினசரி புஜைக்கு வசதியற்ற ஆனால் பாரம்பரிய பெருமை கொண்ட கோயில்களை தேர்த்துஎடுத்து (ஆரம்பமாக 3 கோயில்கள் – Test run) WebSiteல் அளிக்கிறோம்.
2. உங்கள் விருப்பப்பட்ட கோயிலை நீங்கள் தேர்வு செய்து கொண்டு “கட்டளைதரராக ” (Sponsor) ஆகலாம்.
3. நீங்கள் 4 நாட்களை தெரிந்து எடுத்து கொள்ளலாம் (உங்கள் குழந்தைகளின் பிறந்த தினம் / திருமண நாள் போன்றவை )
4. அந்த நாட்களில் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
5. உங்களுக்கான ஒரு வருட கட்டணம் Rs.1001 + சேவை கட்டணமாக ர். சேர்த்து 1161 செலுத்தவும்
விதிமுறைகள் :
1. ஒருவர் Rs. 1161 மேல் செலுத்த முடியாது. குடும்பத்துக்கு ஒரு ஸ்பொன்சொற் மட்டுமே. நீங்கள் MNC ஜெனரல் மேனேஜர் அனாலும் சாலையில் `அப்பளம் விற்கும் நபரானாலும், ஒரே தொகை மட்டுமே தர முடியும்.
2. 120 குடும்பங்கள் சேர்ந்து ஒரு அர்ச்சகருக்கு கட்டளைதாரர் (Sponsor Group)
3. டிரஸ்ட் அர்ச்சகருக்கு மாதம் 8000 வரை சம்பளமாக தரும். உங்கள் பணம் செலவழித்த விதம் பற்றி மாதம் கணக்கு உங்களுக்கு அனுப்பி வைக்க படும்.
How to pay the money: (Act now; do not postpone; tomorrow may be too late)
- Click : https://nammasevatrust.com/Donate.html
- Three temples are listed; Select one
- Read about the temple. And click “Donation” button at the end
- Fill the form for your Pooja details. (You can do 4 pooja’s)
- Go to payment gateway to pay the money (credit card, debit card, net banking)
Regards
Admin
BrahminsForSociety com
உயர்திரு அர்ச்சகர் அவர்களே,
உங்கள் நிலைமை அறிந்து மிகவும் வருத்தபடுகிறேன். என்னால் முடிந்தளவு உதவி செய்ய விரும்புகிறேன்.
அன்புடன்,
i am krishnarajan Rajagopala willing to pay for one year for one year contact / WhatsApp 9443683522.
Please contact me at g.kannan@yahoo.com
Thanks
Kannan
Donation limit is reached for the three temples listed in yr website .please give list of shiva temples
Nan thiruvarur dt kudavasal division 11 Alathur sivalayam poojai seidhu varugiren.enaku kramathil 3000 sambalam tharugirargal veru varumanam kidayadhu .enaku mudindhal udhavi seyungal
Hello Thiru Venkataraman
Ungalai eppadi thodarbu kolvathu?
நான் இணைய விரும்புகிறேன்.ஒரு கோவிலை ஸ்பான்சர் செய்ய.வங்கிக்கணக்கு கோவில் விவரம் கிடைத்தவுடன் என் பங்கை அநுப்புகிறேன்.
Very sad state of affairs but this can be corrected by God & time only.from my side I am villing for one year kattalaitharar for one temple once I receive the list of temples in tamilnadu.please send the list as early as possible