அனிதா மரணமும் / நமது கைகளில் பூசப்படும் ரத்த கரையும்
இது கடும் மன வேதனையில் எழுதப்படுகிறது. அநியாயமாக ஒரு சிறு பெண்ணின் மரணம் நடைபெறுகையில், அந்த ரத்த கறையை நம் குலத்தின் மீது தடவ நடக்கும் முயற்சியை எதிர்த்து மனசாட்சி உள்ளவர்களுக்காக எழுத படுகிறது.
பதிவு 1 : அனிதா விக்கான நமது அஞ்சலி.
ஒரு மகளை, சகோதரியை, அற்புதமான படிப்பாளியை இழந்து தவிக்கும் உன் குடுப்பதாரின் ஈடு செய்யமுடியாத இழப்பின் வருத்தத்தில் BraminsForSociety பங்குகொள்கிறது. அனிதாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரதிக்கிறோம்.
இறையே! இனி எந்த குழந்தையையும் இது போல முடிவெடுக்காதிருக்க உன்னை வேண்டுகிறோம்.
பதிவு 2: மனசாட்சி உள்ளவர்களுக்கான நமது வேண்டுகோள்
பதிவு 3: ஏன் பிராமண இளைஜர்கள் மருத்துவம் படிப்பதை தவிர்க்கிறார்கள் – ஒரு ஆய்வு கண்ணோட்டம்
–x—x–x-x–x-x-x
பதிவு 2: மனசாட்சி உள்ளவர்களுக்கான நமது வேண்டுகோள்
ஒரு சிறு பெண்ணின் மரணம், அதிலும் புத்திசாலி மாணவியின் தற்கொலை முடிவு தாங்க முடியாத வலியை தருகையில், தமிழகம் முழுதும் மன வருத்தத்தில் இருக்கயில், ஒரு குழு சதியாக மாற்ற முயலுகிறது. தமிழகத்தின் மன வேதனையை “பரப்பன வெறுப்பாக” மாற்ற முயலுகிறது. அந்த சிறு குழந்தையின் ரத்தத்தை நம் கைகளில் பூச நினைக்கிறது. கடும் பிரச்சார பலத்தால், அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார்கள்.
NEET விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான போராட்டமோ அல்லது NEET க்கு ஆதரவான வாதங்களோ ஒரு ஜனநாயக நாட்டில் இயல்பாக நடக்கும் செயலே. மக்கள் முன் தன் வாதங்களை வைக்க எந்த ஒரு அமைப்புக்கும் உரிமை உள்ளது. NEET வேண்டும் அல்லது NEET வேண்டாம் என்பது என்பதை பற்றி நாம் கருத்து கூற போவதில்லை. அது தனிப்பட்ட மனிதர்களின் கருத்து.
எப்படி ஒரு பொய்யை ஜோடிக்கிறார்கள் என விளக்கும் கட்டுரை; “பார்ப்பன சதியை” மட்டும் பார்ப்போம்.
பார்ப்பன சதி 1 : Secrete Information
ஜூன் 2015 : சென்னை மேற்கு மாம்பலம் ஜவகர் வித்யாலயா பள்ளி: 10ம் வகுப்பு வரை CBSE அடுத்து அந்த பள்ளியில் 11, 12 வகுப்புகளுக்கு CBSE பட திட்டம் இல்லை. அனைவரும் 11, 12 வகுப்புகளுக்கு தமிழ் நாடு கல்வி திட்டத்தில் சேருகிறார்கள். 11, 12 வகுப்புகளுக்கு CBSE படித்தால், தமிழக பொறியியல் மற்றும் மருத்துவம் மற்றும் மேற்படிப்புக்கு சேர்வது கடினம் என்பதே அனைவரின் கருத்து. அப்போது நீட் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எவரும் அதிகம் கவலை படவில்லை. இது தான் தமிழகம் முழுவதும் மாணவர்களின் நிலை.
சதி 1: பார்ப்பன மாணவர்களுக்கு மட்டும் டெல்லியிலிருந்து NEET இருக்கிறது என்ற ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தால் மட்டும் இது சதி .
பார்ப்பன சதி 2 : On the day of examination
2017 Jan : NEET இருக்கிறது / இல்லை என்ற குழப்பம் தீரவில்லை. ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்லி கொண்டிருந்தார்கள். எவருக்கும் / எவரிடமும் சரியான தகவல் இல்லை.
2017 மார்ச் : NEET எழுதியாகவேண்டும். வேறு வழி இல்லை என்பது புரிந்து போனது.
8th May 2017: NEET எக்ஸாம் நடந்தது. சட்டையில் முழு கை வைத்து இருந்தால், விதிமுறைப்படி பாதி சட்டை கிழிக்கப்பட்டது. பெண்களின் அனைத்து நகைகளும் கழற்ற பட்டன. கையில் கடவுளின் பெயரால் கட்டிய கயிறுகள் அறுக்கப்பட்டன. எந்தவிதமான Electronic மற்றும் உலோக சாமான்கள் (தங்கம், வெள்ளி) அனுமதிக்க படவில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் / மாநிலத்திலும் வேறு வேறு விதி முறைகள். கடும் சோதனைகள். தேர்வு மையத்தை சுற்றி கடும் போலீஸ் பாதுகாப்பு. 2 மணி நேரத்துக்கு முன் வரவேண்டும் என்ற விதி. கடும் வெயிலில் பெற்றோர்கள் நின்றார்கள். பெற்றோர்களிடம் இந்த கடுமையான விதி முறைகளுக்கு ஆதரவும் / எதிர்ப்பும் (பேச்சில் மட்டும்) இருந்தது.
ஒரே விதமான விதி இல்லாமல் ஒவ்வொரு சென்டரில் அதிகாரிகளின் தன்மைக்கு ஏற்ப மாணவர்கள் நடத்த பட்டார்கள். (குறிப்பு : தமிழக பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வு எழுதிய மகளின் (Fail ஆன)) நீட் அனுபவத்தை நேரடியாக பார்த்த கட்டுரையாளர் அனுபவம்)
பார்ப்பன சதி 2 : சட்டைக்குள் வெளியே தெரியாமல் இருந்த பூணல் பல இடங்களில் கழற்ற படவில்லை. சமூக வலை தளங்களில் இது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. நீட் தேர்வின் விதிமுறைகளை அமுல் படுத்திய தமிழக அரசு அதிகாரிகள்/ போலீசார் எவரும் பிராமணர்கள் இல்லை. அனாலும் எப்படியோ இந்த சதிக்கு அவர்கள் துணை போய்விட்டார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம்.
குறிப்பு: பேண்டுக்குள் (pant) வெளியே தெரியாமல் இருந்த அரைஞாண் குடி (இடுப்பில் கட்டப்படும் அரணா கயிறு) கூட எவருக்கும் கழற்ற படவில்லை.
பார்ப்பன சதி 3 : On the day of NEET Result
NEET Exam: “பார்ப்பனர்கள் சீட்டுகளை அள்ளினார்கள்” என்ற செய்தி பத்திரிகைகளில் வந்து சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கில் FORWARD செய்யப்பட்டது. கடைசியாக பார்ப்பன சதியை கையும் களவுமாக பிடித்த திருப்தி, பலருக்கு கிடைத்தது. ஒதுக்கியே ஆக வேண்டும் என்று பலர் சமூக ஊடகங்களில் கருத்து மழை பொழிந்தார்கள்.
இந்த பொய் செய்தி பரவும் பொது நம்மவர்கள் பலருக்கு புரியவேயில்லை. நமது இளைஜர்கள் மருத்துவ படிப்புக்கு கடந்த பல வருடங்களாகவே ஆர்வம் காட்ட வில்லை என்பது கண் கூடாக தெரிகிறது. பெரும்பாலும் புத்திசாலி மாணவர்கள் பொறியியல் அல்லது CA எடுக்கிறார்கள். மருத்துவம் நமது மாணவர்களால் தவிர்க்க படுவதை பார்க்கிறோம். அதனால் தான் 35 வயதுக்கு கிழே நம் குலத்தவர் மருத்துவராக இருப்பதில்லை. இதில் இப்படி ஒரு செய்தியை எப்படி எடுத்துக்கொள்வது என குழப்பம்.
வழக்கம் போல் நிஜம் / உண்மை நிதானமாக வந்தது.
உண்மை 1 : BC / MBC / BCM / ST / SC இவர்களுக்கு கிடைத்த மொத்த சீட்டுகள் 93.3%. சதவீதம்
உண்மை 2 : Open Category பிரிவில் வந்தவை 833 சீட்டுகள். அவை
Forward Cast (FC) : 211
Backward Cast (BC) : 434
Most Backward Cast (MBC) : 97
Backward Muslim (BCM) ; 44
Scheduled Cast (SC) : 36
Special Central Assistance (SCA): 1
பார்ப்பன சதி 3 : அதெல்லாம் சரி!. பாப்பானுக்கு 211 சதம். பெரியாரின் மண் இது. அடுக்குமா?
211 சீட்டுகளும் பிராமணர்களுக்கு இல்லை. தமிழகத்தில் உள்ள சைவ வெள்ளார் / முதலியார் / செட்டியாரின் ஒரு பிரிவு என தமிழக மக்கள் தொகையில் 10% இருப்போருக்கானது. வெற்றி பெற்ற 211 பெயர்களை பார்க்கும்போது மலையாள / கிறிஸ்துவ / வட இந்திய பெயர்கள் நிரம்பி வழிகின்றன. பாப்பான்கள் சதவீதம் சுமார் 0.50% முதல் 1% வரை இருக்கலாம் என தெரிகிறது.
NEETடுக்கு முன்பும் NEETடுக்கு பின்பும் பிராமணர்களில் மருத்துவ சீட்’ல் எந்த வித்தியாசமும் இல்லை. ((ஏன் என்பது பற்றி அடுத்த பதிவில் விரிவாக காண்போம்)
வெளி மாநில மாணவர்கள் OPEN CATEGORY யில் மருத்துவ சீட் பெறுவது பற்றி தமிழக எதிர் கட்சி தலைவர் திரு ஸ்டலின் விசாரணை கோரினர்.
வட நாட்டுக்காரன் என்ன? பர்மிய / பங்களாதேஷ் ஊடுருவல்காரன் கூட தமிழ் நாட்டில் மருத்துவ சீட் வாங்கலாம். தமிழ் பேசும் பாப்பானுக்கு ஒரு சீட்டு கூட போக கூடாது. என்ற அடிப்படையில் நம் மீது அன்புள்ளவர்களால் திரு ஸ்டலின் அவர்களின் குற்றச்சாட்டு கண்டு கொள்ள படவில்லை. இந்த குற்றச்சாட்டு பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. மயான அமைதி காத்தார்கள் நமது அனுப்புக்குரிய மானுட நேயர்கள். அவ்வளவு வெறுப்பு / மனித நேயம்.
பார்ப்பன சதி 4 : அனிதாவின் தற்கொலை:
தமிழகம் துக்கத்தில் மூழ்கியது. தமிழக மக்களின் துக்கத்தை “பார்ப்பன வெறுப்பாக” மாற்ற OVER TIME செய்கிறார்கள். நடந்தவற்றை கொஞ்சம் பார்ப்போம்.
பார்ப்பன சதி (i) : 5 பேர் அடங்கிய சுப்ரிம் கோர்ட் தீர்ப்பு
பார்ப்பன சதி (ii) : சோனியா (என்ன சாதி?) தலைமையிலான காங்கிரஸ் நீட் சட்ட வரையறையை உருவாக்கியது.
பார்ப்பன சதி (iii) : ப ஜ க அரசு NEET சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
பார்ப்பன சதி (iv) : NEET மசோதா மாநிலங்களவையில் 1 ஆகஸ்டு 2016 அன்று விவாதித்திற்கு வந்த போது தி.மு.க.வின் உறுப்பினர்கள் எதிர்ப்பை பதிவு செய்யவேயில்லை. மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பும் செய்யவேயில்லை. (அ.தி.மு.க.வினர் வெளி நடப்பு செய்தனர்). குரல் வாக்கெடுப்புக்கு எதிராக Division கோரி தங்கள் எதிர்ப்பை பாராளுமன்றத்தில் காட்டி இருக்கலாம். தமிழகத்தின் எதிர்ப்பை ஒருங்கிணைந்து பதிவு செய்ய கிடைத்த வாய்ப்பு போய்விட்டது. பார்ப்பன சதியால் ஏற்பட்ட கவன குறைவு.
பார்ப்பன சதி (v): NEET டுக்கு எதிராக இருந்த அனைத்து மாநிலங்களும் பார்ப்பன சதியால் தன் முடிவை மாற்றி கொண்டன. தமிழகம் தனித்து விடப்பட்டது.
பார்ப்பன சதி (vi) : பாதிக்க பட்ட மாணவி அனிதா சுப்ரிம் கோர்ட்டுக்கு சென்றார். அவருக்கு எதிராக தன் வாத திறமையை காட்டி, அனிதா தரப்பை தோற்கடித்தவர் திரு. சிதம்பரத்தின் மனைவி திருமதி நளினி சிதம்பரம்.
பார்ப்பன சதி (vii) : ஜெயலலிதா என்ற பார்ப்பன முதல்வர் NEET டை தான் உயிருள்ளவரை எதிர்த்து கொண்டே இருந்தார்.
இதுவே சதியின் கதை. ஒரு பொய்யை திரும்ப திரும்ப உரக்க கூறினால் அதை நம்ப ஆரம்பிப்போம்.
இது நமக்கு கொடுக்கும் பாடம் இரண்டு.
- நம் குலத்தை சேர்ந்த பலர் ஈ.வே.ரா மற்றும் தி.க புத்தகங்களை படிப்பதினாலும் / ஒருவகையான தாழ்வு மன நிலையிலும் / நம் குலத்தை குற்றம் சொல்வதனால் கிடைக்கும் புகழிலும் மயங்கி, மனித நேயம் பற்றி அதிகம் பேசுவார்கள். அவர்களில் ஒருவர் கூட இந்த அநியாயமான பொய்யை எதிர்க்கவில்லை. பலர் “சாதியில் என்ன இருக்கிறது” என்று “நான் பாப்பான் இல்லை. மனிதன்” என்பார்கள். அவர்களும் வாய் திறக்கவில்லை. (தான் / தன்னை சார்ந்த குலம் தாக்கப்படும்போது, விலகி செல்பவன் ஒரு துரோகி என்றே நினைக்க தோன்றும்)
- பிறப்பின் அடிப்படையில் வெறுப்பு என்பது மனதில் ஏற்படும் ஒரு தொழு நோய் போன்றது. நமது நாட்டில் பல குலத்தை, சாதியை, மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பிறந்த பிரிவின் காரணமாக அவமான படுத்தப்படுகிறார்கள். சில சமயங்களில் பழிவாங்கப்படுகிறார்கள். தலித்துகள் / சிறுபான்மையினர் / சில மாவட்டங்களில் அதிகம் இருக்கும் ஜாதியை சேர்த்தவர்கள் மற்றவர்களால் மோசமாக பேச படுகிறார்கள். இந்த தொழு நோய் வந்தவர்களை திருத்த முடியாது.
நாம் குலத்தோருக்கு வேண்டுகோள் : நம்மை மனதின் தொழு நோய் வர விடாமல் காத்து கொள்வோம். எந்த காலத்திலும் உங்கள் தரம் இறங்கி பொது வெளியில் பேசி அல்லது எழுதி விடாதீர்கள். பன்றி உண்ணுவதை பசு உண்ணுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்
x—x—-x—-x–x—-x-x-x-x-x-
அனிதாவை காப்பாற்றி இருக்கலாமா? இந்த நிலையை தவிர்த்து இருக்கலாமா?
நிச்சயமாக முடிந்திருக்கும். NEET இல் பாதிக்க பட்டவர்களை (அதாவது, 12 ம் வகுப்பு தேர்வில் அரசாங்க கல்லுரியில் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கும் அளவுக்கு மதிப்பெண் பெற்றவர்கள், ஆனால் NEET தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள்) இரண்டு வகையாக பிரிக்கலாம்.
- NEET தேர்வில் தனியார் கல்லுரிகளில் இடம் பெரும் அளவிற்கு மதிப்பெண் பெற்றவர்கள்: இவர்களின் பீஸ் மற்றும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கலாம். இது அவர்களின் பாதிப்பை குறைக்கும்.
- NEET தேர்வில் தோற்றவர்கள். (அனிதாவை போல)
ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்த வருடத்துக்கான NEET தேர்வுக்கு பயிற்சி மையங்களை உருவாக்கி இந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அள்ளித்திருக்கலாம். அவர்களுக்கு தங்க இடம் மற்றும் உணவு அளித்து, மாதம் ஒரு தொகையை ஊக்க தொகையாக கொடுத்து, நம்பிக்கையை கொடுத்து அடுத்த வருடம் மருத்துவ படிப்புக்கு தயார் செய்திருக்கலாம்.
- இதை காரணம் காட்டி, தமிழகத்துக்கான அடுத்த வருட மருத்துவ கல்வி இடங்களை அதிகம் பெற்று மேற்கண்ட மாணவர்கள் பயன் படும்படி செய்திருக்கலாம்
இப்படி பாதிப்பை குறைக்கும் வகையில் நடவடிக்கை இருந்தால், அனிதாவை காப்பாற்றி இருக்கலாம்.
இறுதியாக ஒரு வார்த்தை:
நமது குலத்தின் கல்வி மீதான ஆராதனையை எழுத்தாளர் ஜெயா மோகன் வார்த்தைகளில் உங்களுக்கு அளிக்கிறோம்.
“……பேரா ராஜ் கௌதமனின் சுயசரிதை நாவலான காலச்சுமை [சிலுவைராஜ் சரித்திரத்தின் இரண்டாம்பகுதி] ஒரு முக்கியமான நிகழவை ஆவணப்படுத்துகிறது. அவரது மகள் கௌரி பிளஸ் டூவில் மாநில அளவில் வெற்றிபெறுகிறாள். அவரது கல்லூரியிலும் அவர் வாழும் தெருவிலும் வாழும் இடைநிலைச்சாதியைச் சேர்ந்த ஒருவர் கூட அவ்வெற்றியை அறிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் தலித். அவரை அறிந்தவர்கள், நெருக்கமானவர்களிடம் அதைப்பற்றி அவரே பேசும்போதுகூட இயல்பாகத் தவிர்த்துச்செல்கிறார்கள்
ஆனால் அவரை அறிந்திராத பிராமணர்கள் அவர் இல்லம் தேடி வருகிறார்கள். அவளைக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகளும் பரிசுகளும் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். இதை எழுதிச்செல்லும் ராஜ் கௌதமன் அவர்களின் அந்த மகிழ்ச்சி தனிமனிதர்கள் சார்ந்தது அல்ல, கல்வி மீதான அவர்களின் வழிபாட்டுமனநிலையைச் சார்ந்தது என்கிறார்.
ஒருவேளை தமிழகத்திற்கு பிராமணர்கள் அளிக்கும் முதன்மையான கொடையே அதுதான். கல்விமேல், கலைகள் மேல் அவர்களிடமிருக்கும் பற்றே அவர்களை இச்சமூகத்திற்குத் தேவையானவர்களாக ஆக்குகிறது. அவர்களிடமிருந்த பண்பாடும் கலைகளும் மட்டுமே சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் அழியாமல் நீடித்தன என்பதை நினைவுறுங்கள். பாட்டோ பரதமோ அவர்களே அதைப் பேணிக்கொண்டிருக்கிறார்கள்…………….”
சில அசிங்கமான குற்ற சாட்டுகளால் நம் நிலை தாழ போவதில்லை. தமிழ் கூறும் நல் உலகம் நம்மை கை விட போவதில்லை. நாம் நாமாகவே இருப்போம்.
Regards
Admin
If we want to be bharmin we should not think about our personal problem we should be very happy in doing social services without expecting benefits from others God will give all situations to do and keep our sanathana dharmam. If we are not ready to face hurdles we have only one choice to leave the name of bharmin. All the best . Do your regular rituals regularly Dharmo rakshitha rakshithaga
IF BRAHMIN GIRL GET MARKS 1185 OUT OF 1200, BUT SHE GOT ADMISSION IN PRIVATE COLLEGE IN MANAGEMENT QUOTA, WHAT IS THE SOLUTION FOR BRAHMINS IN TAMILNADU.