Big Boss – ஒரு சமூகம் நான்கு முகங்கள்
ஒரு சமூகம் நான்கு முகம்
பிக் பாஸ் – ஒரு பார்வை
விளையாட்டு / கலாச்சாரம் / கலை / மொழி / பொருளாதாரம் / அரசியல் போன்றவற்றில் ஒட்டு மொத்த நாட்டுக்கு எது நல்லதோ அதுவே சரி. இவற்றில் சாதி / குலம் / மதம் போன்றவற்றுக்கு இடம் இல்லை என்பது நமது கருத்து. பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு விளையாட்டு போட்டி. அது பற்றி ஒரு குலத்தின் பார்வையில் எழுத கூடாது.
ஆனால் இந்த போட்டி ஏற்கனவே சமூக வலைதளங்களில் நம் குலம் சார்ந்த விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதனால் நம் மீது வைக்கப்படும் விமர்சனங்களை புரிந்து கொள்ள உதவும் விமர்சன கட்டுரையை உங்கள் முன் வைக்கிறோம். இதை “விதி விலக்கு” என்று புரிந்து கொள்ளவும்.
மிக முக்கிய குறிப்பு : நம் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் உள்ள உண்மை தன்மையை அறிவதே. அதனால் பிக் பாஸ் முடிவுகளை பாதிக்காத வண்ணம் வேண்டுமென்றே தாமதித்து போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.
முகம் 1 : காயத்திரி
துடுக்கு பேச்சு; புறம் பேசுதல்; அதிக கோபம்; அவர் பயன் படுத்திய “ஹேர்” என்ற வார்தையும் , சேரி பிகேவியர் என்ற வார்த்தையும் மிக கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது நியாயமே.
ஓவியா கடும் மன உளைச்சலில் இருக்கும் போது காயத்ரி காட்டிய அரவணைப்பு அவரின் மனித நேய முகத்தை காட்டியது. அதற்காக பாராட்டும் பெற்றார். காயத்ரிக்கு போட்டியாளர்களின் பலர் ஆதரவாக இருந்ததும் விமர்சனத்துக்குள்ளாக்கியது. இந்த விமர்சனமும் புரிந்து கொள்ள கூடியதே.
டிவி முன் உட்கார்ந்து பார்த்த அனைவரின் கோபத்தை காயத்ரி பெற்றார். கடும் எதிர்ப்பை எதிர் கொண்டார். அவருக்கு தான் ஏன் வெறுக்கப்படுகிறோம் அல்லது விமர்சிக்கப்படுகிறோம் என்று கூட தெரியவில்லை. அவர் வெளியே வந்த பிறகு புரிந்து கொண்டிருக்க கூடும்.
காயத்ரி 50 நாட்கள் கடந்தது எப்படி என்ற கேள்வி பலருக்கும் வந்தது. இதுவும் இயல்பான கேள்வி / சந்தேகம். இந்த போட்டி கொஞ்சம் சர்ச்சைக்குரியதாக இருப்பது வியாபாரத்துக்கு உதவும் என பிக் பாஸ் டீம் நினைத்திருந்தால், அதற்கு காயத்ரி தொடர்வது நல்லது என்றும் அவர்கள் நினைத்திருக்க சாத்தியம் அதிகம். வியாபார தந்திரம்.
இப்பொது தான் பலர் “திராவிட கருப்பு கண்ணாடி” அணித்து கொண்டனர். காயத்திரியின் குலம் / சாதி பார்க்கப்பட்டது. அவர் பிராமண பெண்; கமலஹாசன் பிறப்பால் பிராமணர். அதனால் திரு கமல் காயத்திரிக்கு ஆதரவாக நடக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் வார்த்தை விளையாட்டு விளையாடினார்கள்.
“பாப்பார புத்திய காட்டுறியே !” என்ற குற்றச்சாட்டு நம்மில் பலரை நிலை குலைய வைத்துவிடும். பல நேரங்களில் நாம் தவறு செய்யும்போது அல்லது நம் மீது தவறு இருப்பதாக நம் நண்பர்கள் நினைக்கும்போது சில நண்பர்கள் “”பாப்பார புத்தி” என்ற ஆயுதத்தை (ப்ரிமாஸ்திரம்) பயன் படுத்துவார்கள். பல ஆண்டு பழக்கமானாலும் அவர்களின் ஜாதி நமக்கு தெரித்து இருக்காது. (ஒரு பேட்டியில் “என்னிடம் உன் ஜாதி என்ன என்று கேட்காதவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே” என திரு சீமான் தெரிவித்து இருந்தார்; முற்றிலும் உண்மை ). நண்பரின் குற்றச்சாட்டு வலிக்கும், ஆனால் சரியாக திருப்பி அடிக்க தெரியாது. திருப்பி அடிக்க அவர் சமூகம் மற்றும் அதன் குறைகளை பற்றி நமக்கு தெரியவேண்டும். நம்மில் பெரும்பாலோர், 90% பேர் சென்னை / திருச்சி / பெங்களூர் (California?) என நகர வழக்கை வாழ்பவர்கள். தமிழக ஜாதி அரசியல் பற்றி பெரும்பாலோனோருக்கு தெரியவே தெரியாது.
பாப்பார புத்தி (No – 1) (நண்பரின் அனுபவம்) : நானும் என் கல்லூரி நண்பர்களுடன் நன்றாக ஊரை சுற்றினோம். படிப்பில் நாட்டமில்லை. கவலையும் பட வில்லை. ஆனால் ஆண்டு தேர்வில் நான் பாஸாகி விட்டேன். (எப்படி?? என இன்னும் குழப்பம் ). என் நண்பர்கள் பெயில். என் நண்பர்களில் ஒருவன் “பாப்பார புத்திய காட்டிட்டே” என்றான். எனக்கு ஆத்திரம் “ஏன்டா !. எச்ச பீடி பிடிக்கும்போது நான் பாப்பான்னு தெரியல!. குடிக்கும் பொது தெரியல. பொண்ணுக பின்னாடி சுத்தும் பொது தெரியல. இப்போ உனக்கு நான் பாப்பான்னு தெரியுமா” என்று கத்திவிட்டேன். பிறகு நண்பர்கள் மன்னிப்பு கேட்டு என்னை சமாதானப்படுத்தினர். பாப்பார புத்தியில் இது ஒரு வகை.
பாப்பார புத்தி (No – 2) : என்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர் தன் மேலாளர் பார்ப்பான் என்றும் அவர் ஒரு தலை பட்சமாக (லீவ் கொடுப்பது, சம்பள உயர்வில் என்பது போன்ற) முடிவுகள் எடுக்கிறார். என்றும் குற்றம் சாட்டினார். (அதாவது பிராமணர்களுக்கு சாதகமாக). அது வரை நான் அமைதியாக இருந்தேன். இது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது நண்பரின் பார்வை கோளாறாகவும் இருக்கலாம். நானறிந்த வரை, அவ்விதம் ரொம்ப நாள் செய்ய முடியாது. வேலை போய்விடும். ஆனால் நண்பர் இது “Brahmins Nature” என்று பொது படுத்தினர்.
அவர் சொந்த ஊர் அருகில் உள்ள கிராமத்தில், தாழ்த்த பட்ட ஒருவர் செருப்புடன் நடந்ததால் அவர் வாயில் 4 பேர் சேர்த்து மலத்தை (ஆம்!.. இது 100% உண்மை) திணித்து விட்டனர். அவர்களை போலீஸ் கைது செய்தது. அந்த ஊர் அரசியல் வாதி இந்த அநியாயமான காரியத்தை செய்தவர்களை ஜாதி அடிப்படையில் காப்பாற்றி விட்டார். கவுதமன் என்பவர் அந்த நிகழ்வை காட்சிப்படுத்தி / ஆவணமாக எடுத்து YouTube பில் வெளியிட்டார். அதை நண்பரிடம் சொன்னேன். அவர் பதில் என்ன தெரியுமா? “It is a exception”. கரணம் அந்த அநியாயத்தை செய்தவர்கள் அவர் குலத்தை சேர்ந்தவர்கள். ஒரு லீவு அல்லது ஒரு இஸ்ரயேமென்ட் விஷயத்தில் பொங்குபற்றுவார்கள், பெரும் அநியாயம் தன் அருகில் நடக்கும்போது அமைதியாக இருப்பார்கள். 90% இவர்களின் சமூக பார்வை கோளாறாக இருக்கும்.
—x நாம் பிக் பஸ்ஸுக்கு வருவோம்
திரு கமல் தான் ஒரு அறிவு ஜிவி ஆயிற்றே? அவர் “பாப்பான்” குற்ற சாட்டை எப்படி எதிர் கொள்வார் ? என ஆவலுடன் எதிர்பார்த்தேன்.
- காயத்திரியை பொது மக்கள் கேள்வி கேட்கும்படி செய்து விட்டார். பயம். தானே கேள்வி கேட்டு, அதிலும் விமர்சனம் வந்தால் என்ன செய்வது என்ற பயம். (“எதுக்குடா வம்பு” என நாம் அனைவரும் விலகி இருப்போம். அதேயே கமலும் செய்தார்)
- “அப்படி என்னை பார்த்து சொல்லாதீங்க. அது அசிங்கம் (யாருக்கு ?) ” என்று கும்பிடு போட்டார். ஒரு தார்மிக கோபம் கூட அவருக்கு வரவில்லை. கூழை கும்பிடு / கை தட்டல் ; முடிந்தது கதை.
நமக்கு கமலின் படங்களின் வசனங்ககள் நினைவு வந்தன. படத்துக்கு எந்த சம்மந்தமும் இல்லாமல் வந்த வசனகள்; அவர் முற்போக்குவாதியாக காட்டுவதற்கு நம் குலத்தை கேவலமாக பேசிய வசனங்கள் / காட்சிகள் நினைவில் வந்தன.
பெரும்பாலும் அந்த காட்சிகள் / வசனங்கள் படத்துக்கு தேவை படாதவையாக இருக்கும். ஒரு பலகீனமான எதிர்ப்பு கிளம்பினால் நல்ல விளம்பரமாக இருக்கும் என்பது நோக்கம். அல்லது “முற்போக்கு” என்ற முகமுடி அணிய பயன்படும்.
ஒரு ஊரில் ஒரு மகன் இருந்தான். ஒரு நாள் அவன் செருப்பு தவறுதலாக அவன் அம்மாவின் மேல் பட்டு விட்டது. அதை பார்த்து கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரன், கை தட்டினான். மகனுக்கு பெரும் பூரிப்பு. கை தட்டல் பெற அம்மாவை செருப்பால் அடித்தால் போதும் என்று கண்டு கொண்டான். தினமும் அவளை அடித்தான். ஒரு நாள் மகனுக்கும் பக்கத்து விட்டு காரனுக்கும் ஒரு சிறிய பிரச்சனை வந்தது. பக்கத்து வீட்டுக்காரன் மகனை செருப்பால் அடித்தான். “செருப்பால் அடிப்பதின் வலி இப்போது மகனுக்கு புரிந்தது.
கமல்ஹசன் அரசியலுக்கு வருவதாக அறிவித்து உள்ளார். முதல்வராக விருப்புவதாகவும், ப ஜ க உடன் கை கோர்ப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை எனவும் அறிவிக்கிறார். மேலும் ஞானி போன்ற பார்ப்பனரும்அவரை ஆதரிக்கிறார்கள். இனி அவரின் ஜாதியை பற்றிய விமர்சனம் சூடு பிடிக்கும். 5000 வருடம் முன் வந்த கமல் முன்னோர்கள் செய்த கொடுமைகள் விதிக்கு வரும். “பார்ப்பன சதி ” தெருவெங்கும் முழங்கும். ஜாதியை சொல்லி அடித்தால் என்ன ஆகும் / எப்படி வலிக்கும் என அவர் உணர்வாரா என்று பார்க்க வேண்டும்.
…. மீண்டும் பிக் பாஸ்
காயத்ரியிடம் இந்த ஜாதி பற்றிய குற்றச்சாட்டை கமல் கூறினார். அது அவருக்கு புரியவேயில்லை. “இது புரியாதிருப்பதே நலம்” என்றார். இப்படி ஜாதி அரசியல் பற்றி தெரியாத / புரியாத பெண்மணியிடம் இந்த குற்றச்சாட்டை வைத்தவர்களை பற்றி எண்ணி பார்த்தேன். சிரிப்பு தான் வருகிறது.
பார்வையாளர்கள் காயத்ரி என்ற தனி நபரிடம் / போட்டியாளரிடம் கண்ட குறைகள் நியாயமானவை என்பதில் துளியும் சந்தேகமில்லை. கமல் என்ற நடிகரிடம் / அரசியல் ஆசை உள்ளவரிடம் / ஒரு போட்டியை ஒருங்கிணைப்பவரிடம் உள்ள குறைகள் பற்றிய விமர்சனங்கள் / வாத பிரதி வாதங்கள் அனைத்தும் நியாயமானதே.
ஆனால் “பகுத்து” அறிபவர்கள் என தம்மை கூறி கொள்வோர்’ “கடவுளை மற ; மனிதனை நினை ” என மானுடம் பேசுவதாக தம்மை நினைப்போர் கூறிய குற்றச்சாட்டு; “பாப்பார புத்தி”; அவர்களின் “கண்ணியம்” எது என வெளிப்பட நிகழ்வு.
அவர்களும் காலத்தினால் மாறுவர் என்ற நம்பிக்கையுடன் , கடந்து செல்வோம்
வையாபுரி : மத்திய வயதுக்காரர். உடலை வருத்தும் வேலை வந்தால் புலம்பல். அவ்வப்போது அழுகை. கொஞ்சம் கோபம். கொஞ்சம் பாசம். வெற்றி / தோல்வி பற்றி அதிகம் கவலை இல்லை. மூத்தவர் என்பதால் இயல்பாக கிடைத்த மரியாதை என நாம் வீட்டில் பார்க்கும் பெரியவர். பெண்களுக்கு அப்பா. ஒரு சிறப்பு: அவருக்கு இருந்த அற்புதமான நகைச்சுவை உணர்ச்சி அனைவரையும் சிரிக்க வைத்தது. நேசிக்கவும் வைத்தது.
கணேஷ் : , ஆட்டத்தில் நேர்மை, பெண்களிடம் கண்ணியம், கடும் சூழநிலையிலும் (விளையாட்டில் கண்ணில் அடி பட்டு ஒரு நாள் முழுவதும் வலியுடன் இருந்தபோதிலும், தன் நிலை இழக்காமை), கடும் உடல் பயிற்சி, ஓரளவு புத்திசாலித்தனம் என கணேஷ் அனைவரின் கவனம் ஈர்த்தார். தன் நேரடி போட்டியாளரான சினேகனுக்கு ஒருமுறை நியாமாக உதவினார்/ காப்பாற்றினார். ( சினேகன் சரியான நேரத்தில் பதில் உதவி செய்தார்). அனைவருக்கும் “Bro” ஆனார்.
இந்த மூன்று முகங்களில் எது நம் சமூகத்தை பிரதிபலிக்கிறது? எல்லாமும் அல்லது எதுவும் இல்லை என்பதே நேர்மையான பதில். தமிழகத்தின் அனைத்து சமூகத்திலும் இவர்களை காணலாம். ஏன் ஒவ்வொரு வீட்டிலும் இந்த முன்று முகம் உடையவர்கள் இருப்பார்கள். சிலர் வெறுக்க படுவார்கள் / சிலர் நேசிக்க படுவார்கள்.
நாம் விடை தேடும் கேள்விகள்……
பாப்பார புத்தி எங்கிருந்து வந்தது. இந்த காரணம் இல்லாத வெறுப்பு என்று தணியும். இதை தணிக்க நாம் என்ன செய்ய வேண்டும். நமது அடுத்த தலைமுறையும் நம்மை வெறுப்பு காட்டும் நபர்களை / விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருக்குமா?
அரசு வேலையில் நமது சதவீதம் 0% நெருங்கி கொண்டிருக்கிறது. போலீஸ் / அரசியல் என பொது வாழ்க்கையில் நாம் இல்லை. அரசு Contractors நம்மவர் எவரும் இல்லை. நம்மில் 30% மேற்பட்டோர் தமிழ் நாட்டுக்கு வெளிய வசிக்கின்றனர். நமது குலம் அதிகம் வசிக்கும் இடங்களில் பெரும்பாலோர் 50% வயதுக்கு மேல் தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் நம் சமூகம் ஒதுங்கி கொண்ட சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது.
இன்னும் ஏன் வெறுப்பு? என்று தணியும்? இதை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
ஒரு கொசுறு :
சினேகன் வெற்றி பெறுவார் என நினைத்தேன். மற்றவர்கள் நடிகர்கள்; பிக் பாஸ் மூலம் அவர்கள் புகழ் அதிகமாகும். வாய்ப்புகள் பெருகும். ஆனால் சினேகன் “எழுத்தாளராக / பாடலாசிரியராக மட்டுமே இருப்பார். அவரின் உழைப்புக்கு அவர் வெற்றி பெறுவது மட்டுமே சரியாக இருக்கும். மேலும் அவர் மீது சாதி பாசம் (தமிழ் எழுத்தாளர் சாதி)
ஆராவுக்கு வாழ்த்துக்கள்.
Big boss result was a total shock. Ganesh deserved it. Ingeyum brahmisukku 0% thaana