கு.ப.ரா… பெண் மனதை அப்பட்டமாக சித்திரித்த எழுத்தாளர்!

இந்த 10 ஆண்டுகளாக பரதேசிபோல் திரிந்தபோதும், உப்பு சத்தியாக்கிரகம் காரணமாக ஆறு மாத காலம் சிறையில் இருந்தபோதும் அடிக்கடி என் மனதில் தோன்றி, என்னை மயக்கிய பெண் உருவம் யாருடையது எனத் தவித்தேன். அப்பா! அது நூருன்னிஸாவுடையதுதான். முக்காடிட்ட ஒரு சிறுமியின் குற்றமற்ற முகம்; அதில் மை தீட்டிய இமைகளிடையே குறுகுறுவென அசைந்தாடும் இரண்டு விழிகள்.ரோஜாக்களிடையே மல்லிகையைப்போல கீழ் இதழை சற்றே கடித்து வெளியே தொற்றிய பல் வரிசை. இத்தகைய உருவம் மோகினிபோல் என் மனதில் குடிகொண்டு ஆட்டிவைத்ததேஅது அவளுடையது!” (கு..ராவின் நூர் உன்னிஸா கதையிலிருந்து…)

`கு..ராஎன்றழைக்கப்படும் கு..ராஜகோபாலனைப் பற்றி யார் பேசினாலும் முதலில் வந்து விழும் வார்த்தைகள், `ஆண்பெண் உறவுதான் அவர் எழுத்தின் சாராம்சம்என்பதுதான். “பெண்ணின் சித்தத்தை இருளாக்கும் உணர்ச்சிகளையும், கருவாக நின்றுவிட்ட வேட்கைகளையும், வெகுநுட்பமாகவும் அநாயசமாகவும் படம் பிடிப்பதில் நிகரற்றவன். பெண் மனதைச் சித்திரிப்பதில்  வல்லவன்என்பது கு..ராவின் நெருங்கிய சகாவான கரிச்சான் குஞ்சுவின் கூற்று.

`நான் முதன்முதலாக எழுதிய கதை `நூர் உன்னிஸா.’ நான் திருச்சியில் மூன்றாவது பாரத்தில் படிக்கும்போது என்னுடன் முகமது அலி என்கிற முஸ்லிம் பையன் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு கணக்கு வராது. நானும் கணக்கில் புலியல்ல. ஆனால், சனிக்கிழமைதோறும் அவன் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டு போய், கணக்குப் போட்டுக் கொடுக்கச் சொல்வான். அந்த மாதிரி ஒரு தடவை போனபோதுதான் நூர் உன்னிஸாவின் மூல விக்கிரகத்தைப் பார்த்தேன். அவ்வளவு அழகான சிறுமியை நான் இன்னும் பார்க்கவில்லை. அன்று பார்த்த அவள் முகமும் சாயலும் என் இளம் உள்ளத்தில் அப்படியே பதிந்துவிட்டன. இருபது வருடங்களுக்குப் பிறகும் அவை என் மனதில் தங்கி, நூர் உன்னிஸாவின் வர்ணனையாக அமைந்தன. அந்தக் கதையில் பாக்கி எது, கற்பனை எது, உண்மை எது என்று நான் சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?’ கதையின் மூலம் பற்றிப் பேசும் இடத்தில் கு..ராவே இப்படி எழுதுகிறார்

` `வாழ்க்கை என்னும் பெருநதி ஓடிக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்து ஒவ்வோர் எழுத்தாளனும் ஒரு குடத்தைக் கொண்டுபோய் நீர்  மொண்டு வந்து நமக்குத் தருகிறான்என்று அன்னதா சங்கர்ராய் குறிப்பிடுவார். அந்தக் குடத்தின் அளவையும் தன்மையையும் பொறுத்து நமக்குக் கிடைக்கும் கதையின் தன்மை அமையும். அந்தக் குடம் எழுத்தாளனின் வாழ்க்கை கண்ணோட்டம், வாழ்க்கை அனுபவம், வாசிப்பு அனுபவம், இலக்கியக் கொள்கை இவற்றால் வடிக்கப்பட்டதாக இருக்கும். கு..ராவின் குடம், பெண்மனம்ஆண் மனம் என்பதில் மையம்கொண்டு நமக்கு நீர் வார்க்கிறது. உப்பு சத்தியாக்கிரகத்தில் சிறைக்குப் போனவன் கதையை எழுதுபவர் அல்ல கு..ரா. சிறைக்குப் போனவனின் மனதில் மோகினிபோல் குடிகொண்டுவிட்ட பெண்ணைப் பற்றி எழுதுபவர்தான் கு..ரா.

 

`என் கதை புத்தகத்தை விமர்சனம் செய்தவர்களில் யாரோ ஒருவர், நான் உடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் இவற்றைப் பற்றித்தான் எழுதுகிறேன் என்று எழுதிய ஞாபகம். இது குற்றச்சாட்டானால் நான் குற்றவாளிதான். நான் கவனித்த வரை, என் அனுபவத்திலும் வாழ்க்கையிலும் அவைதாம் எங்கே திரும்பினாலும் கண்ணில் படுகின்றனஎன்பதே கு..ராவின் வெளிப்படையான வாக்குமூலம்..

புதுமைப்பித்தனைப்போலவே வறுமையான பொருளாதாரப் பின்னணிதான் இவருக்கும். 1902-ம் ஆண்டு ஜனவரியில் பிறந்த கு..ரா., 1944 ஏப்ரல் 27-ம் தேதி மறைந்தார். 45 ஆண்டுகாலம்  வாழ்ந்தார். தெலுங்கு மொழி பேசும் (வீட்டு மொழி) பிராமணக் குடும்பம். தந்தை  பட்டாபிராமய்யர் தென்னிந்திய ரயில்வேயில் வேலைபார்த்ததால், குடும்பம் திருச்சியில் வாழ்ந்தது. அவர் நேஷனல் கல்லூரியில் இன்டர்மீடியேட் படித்துக்கொண்டிருந்த 1918-ம் ஆண்டில் தந்தை காலமானார். ஆகவே, குடும்பம் கும்பகோணத்துக்குக் குடிபெயர்கிறது. அங்கே அரசுக் கல்லூரியில் சேர்ந்து பி.. படிக்கிறார். சம்ஸ்கிருதத்தைத் துணைப் பாடமாக எடுத்துப் படிக்கிறார். புதுக்கவிதையின் முன்னோடி என அறியப்படும் எழுத்தாளர் .பிச்சமூர்த்தி, அவரது கல்லூரித் தோழர்; பக்கத்து வீட்டுக்காரர். இருவரும் எழுதத் தொடங்கிய பிறகு `கும்பகோணம் இரட்டையர்கள்என அறியப்பட்டவர்கள்.

1926-ம் ஆண்டு சுப்புலட்சுமி என்கிற அம்மணி அம்மாளைத் திருமணம் செய்துகொள்கிறார். பட்டாபிராமன், ராஜாராமன், கிருஷ்ணமூர்த்தி என மூன்று மகன்கள். சோகம் என்னவெனில், இவர் மறைந்த சில ஆண்டுகளிலேயே அவரது மனைவியும் இளைய மகன்கள் இருவரும் இறந்ததுதான். மூத்த மகன் பட்டாபிராமன் மட்டும் தஞ்சையில் வாழ்கிறார். மகன்கள் யாருமே திருமணம் செய்துகொள்ளவில்லை.

மதுரை மாவட்டம் மேலூரில் தாலுகா அலுவலகத்தில் அரசுப் பணியில் சேர்ந்து ரெவின்யூ இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்றார் கு..ரா. அந்த நேரத்தில் திடீரென அவருக்குக் கண்பார்வை குறைந்துவிட்டதால் வேலை இழப்பு ஏற்படுகிறது. இதைப் பற்றி கு..ராவின் சகோதரியும் எழுத்தாளருமான கு..சேது அம்மாள் எழுதுகிறார், `இலக்கிய உலகில் `கு..ராஎனப் பிரபலமடைந்த ராஜகோபாலன், அப்போது கண் நோய் காரணமாக அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலகியிருந்தார். கண்களில் சதை வளர்ச்சியால் பார்வை தடைப்பட்டது. ஆனால், அவருடைய இலக்கிய திருஷ்டி, ஒருவித சூஷ்ம தரிசனத்தின் உதவியைக்கொண்டு தொடர்ந்து கதை, கவிதைகள் சிருஷ்டித்துக்கொண்டிருந்தார்‘. அவர் சொல்லச் சொல்ல கு..சேது அம்மாள் எழுதுவாராம்.

1936-ம் ஆண்டில் `தமிழ்நாடுஎன்ற தினசரியில் .ரா ஆசிரியராகவும், கு..ராவும் சி.சு.செல்லப்பாவும் உதவி ஆசிரியர்களாகவும் சிறிது காலம் பணியாற்றினர். கும்பகோணத்தில் ஆர்.மகாலிங்கம் என்கிற மருத்துவர் செய்த சிகிச்சையால் கண் பார்வை ஓரளவு மீண்டது. எழுத்தை நம்பியே இனி வாழ்ந்துவிடலாம் என்ற முடிவில் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். குடும்பம் கும்பகோணத்தில் இருக்க, இவர் மட்டும் சென்னையில்புதுமைப்பித்தனைப்போலவே.

`1937-ம் ஆண்டில் குடும்பத்தை சென்னைக்கு அழைத்துச் செல்கிறார். சமாளிக்க முடியாமல் மீண்டும் கும்பகோணத்துக்கே வருகிறார். அவருடைய நண்பரான பிச்சமூர்த்திக்கு, கோயில் நிர்வாக அலுவலர் வேலை கிடைத்ததால் அவரும் சென்னையிலிருந்து கும்பகோணம் வந்துவிட்டார். கும்பகோணத்துக்குத் திரும்பிய கு..ரா., துணிச்சலான முயற்சி ஒன்றை மேற்கொண்டார். `மறுமலர்ச்சி நிலையம்என்ற பெயரில் புத்தக விற்பனை நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். அவருடைய வீட்டுத் திண்ணைதான் வியாபார ஸ்தலம். ஒருமுறை நான் அவரைப் பார்க்கச் சென்றபோது, அவருடைய விற்பனைக் கலையை நேரில் கண்டு திகைப்புற்றேன். நண்பர்கள் வந்து திண்ணையில் உட்காருவார்கள். புத்தகங்களை எடுத்துப் புரட்டுவார்கள். சிலர் திண்ணைக்கே நாள்தோறும் வந்து தொடர்கதையாகப் படித்து முடித்துவிடுவார்கள். இன்னும் சிலர், எடுத்துக்கொண்டு போய்ப் படித்துவிட்டு திருப்பிக்கொடுத்துவிடுவார்கள். விற்பனை என்ற பேச்சுக்கே இடமில்லை. `என்ன செய்வதுதாட்சண்யமாய் இருக்கிறது. புத்தகங்களை விரும்பிப் படிக்கிறார்களே. அதுவே ஒரு நல்ல காரியம்தானே?’ எனும் கு..ரா., ஓர் அப்பாவியாகத்தான் வாழ்ந்தார்என, சிட்டி எழுதுகிறார்.

“1943-ம் ஆண்டில்  `கிராம ஊழியன்இதழின் கௌரவ ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் நானும் தி.ஜானகிராமனும் அவருடன் பழக வேண்டும் என்ற ஒரே நோக்கில் சென்னையில் பார்த்த உத்தியோகத்தையும் உதறிவிட்டுக் கும்பகோணத்துக்கு வந்து சேர்ந்தோம்எனக் கரிச்சான் குஞ்சு குறிப்பிடுகிறார். எப்படியான நண்பர்கள் அவருக்கு வாய்த்திருக்கிறார்கள் என்பதை வாசிக்கையில், வியப்பும் பெருமூச்சுமே எழுகின்றன. ஆனாலும் காலம் அவரை வஞ்சித்தது. 1944-ம் ஆண்டு ஏப்ரலில் தஞ்சையில் `கலாமோகினிஇதழின் ஆசிரியரான சாலிவாகனன் திருமணத்துக்குச் சென்றுவிட்டு, விடிய விடிய கல்யாண ஊர்வலத்தில் நடந்தும் நாகஸ்வரக் கச்சேரி கேட்டும் கால் வலியுடன் கும்பகோணம் திரும்பியிருக்கிறார்கள் கு..ராவும் தி.ஜானகிராமனும் கரிச்சான் குஞ்சும். அந்தக் கால்வலியே அவருடைய வாழ்வைக் குடித்த `காங்கரின்என்ற வியாதியாக மாறியது.

 

தி.ஜானகிராமன் இதைப்பற்றி எழுதுகிறார், `என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. கரிச்சான் குஞ்சுவும் என்னோடு சேர்ந்து அழுதுகொண்டிருந்தான். கு..ரா கிடந்த கிடையும் பட்ட சித்ரவதையும் எங்கள் இருவர் மனதிலும் ஓர் அநிச்சயத்தையும் கலவரத்தையும் மூட்டியிருந்தன. நாங்களும் கையாலாகாமல் தவித்தோம். கால்களின் வெளியே இரண்டு பக்கங்களிலும் எரிச்சல். `அது பையப் பைய உயிரை அரித்துக்கொண்டிருக்கிறதுஎன்று கடைசி மூன்று நாள்களுக்கு முன்னர்தான் எங்களுக்குச் சந்தேகம் வந்தது. ஏற்கெனவே மெலிந்து துவண்ட அந்தப் பூஞ்சை உடல், எப்படி இந்த வதையைத் தாங்குகிறது! கால்கள் இரண்டையும் உடனடியாக வெட்டி எடுக்க வேண்டும் என ஆஸ்பத்திரியில் தீர்மானித்தார்கள். கு..ரா அதை மறுத்துவிட்டார். நனைந்த கண்களுடன் `LET ME DIE A PEACEFUL DEATH’ என்று சொல்லிவிட்டு `காவேரி தீர்த்தம் ஒரு டம்ளர் வேண்டும்என்றார். ஓடிப்போய் கொண்டுவந்து கொடுத்தார்கள். கை நடுங்க அதை வாங்கி ஒரு வாய் குடித்தார். உடனே உடல் துவண்டது. வீட்டுக்குக் கொண்டுபோவதற்குள் உயிர் பிரிந்தது.’

`இலக்கியப் பணி ஒன்றையே நம்பி வாழ்க்கை நடத்துவது கஷ்டம் என்பதை நிரூபித்தவர்கள் கு..ராவும் புதுமைப்பித்தனும்என்று புதுமைப்பித்தனின் துணைவியார் கமலா, புதுமைப்பித்தன்நினைவு மலரில் எழுதினார்.

 

1964-ம் ஆண்டில் சிட்டி அவர்களின் முன்னுரையுடனும்  தி.ஜானகிராமன் அவர்களின் பின்னுரையுடனும் வெளியிட்ட கு..ராவின் `சிறிது வெளிச்சம்தொகுப்பை 70-களில் நான் வாசித்தேன். `சிறிது வெளிச்சம்கதை, அந்த இள வயதில் என்னை அப்படியே ஆட்கொண்டுவிட்டது.

அந்தக் கதையில் சாவித்திரியின் புருஷன் பகல் முழுவதும் வீட்டில் இருக்க மாட்டான். இரவில் இருப்பதாக பெயர் பண்ணுவான். பெரும்பாலும் ராத்திரி 2 மணிக்கு வந்து கதவைத் தட்டுவான். பக்கத்து வீட்டில், கதை சொல்லும் எழுத்தாளன் குடியிருக்கிறான். தினமும் சாவித்திரியை அவன் கணவன் அடிக்கிறான், உதைக்கிறான். ஒருநாள் இதுபோல் சாவித்திரியை அடித்துக்கொண்டிருக்கும்போது எழுத்தாளன் போய் கதவைத் தட்டுகிறான். `நீ உன் மனைவியை இப்படி  அடித்தால், நான் போலீஸை அழைத்து வருவேன் அல்லது நானே உன்னை உதைப்பேன்என்று ஆத்திரத்தில் குறுக்கிடுகிறான். `நான் போகிறேன்எனச் சொல்லிவிட்டு புருஷன் வெளியே போகிறான். கதை சொல்லும் எழுத்தாளன் வீட்டுக்குள் சாவித்திரி வருகிறாள்தாழ்ப்பாள் விடுபடும் சத்தம் கேட்டது. நான் படுக்கையிலிருந்து சட்டென எழுந்து உட்கார்ந்தேன். அவள் என் அறை வாசலில் வந்து நின்றதுபோல் தோன்றிற்று. உடனே எழுந்து மின்சார விளக்கைப் போட்டேன்.

 

வேண்டாம் விளக்கு வேண்டாம். அணைத்து விடுங்கள் அதை’’ என்றாள் அவள்.
உடனே அதை அணைத்துவிட்டு, படுக்கையில் வந்து உட்கார்ந்தேன். அவள் என் காலடியில் வந்து உட்கார்ந்துகொண்டாள். `புருஷன் ஒருவிதம், மனைவி ஒருவிதமா!’ என எனக்கு ஆச்சர்யம்.
உங்களுடன் தனியாக எப்படி இருட்டில் பேசத் துணிந்தேன் என்று நீங்கள் யோசனை செய்ய வேண்டாம். நீங்கள் இதற்காக என்னை வெறுக்க மாட்டீர்கள் என்று எனக்கு எதனாலோ தோன்றிற்றுவந்தேன்.’’

அம்மா…’’

என் பெயர் சாவித்திரி.’’

எதற்காக இந்த மனிதனிடம் இங்கே இருக்கிறீர்கள்? பிறந்தகம் போகக் கூடாதா? இந்த புருஷனிடம் வாழாவிட்டால் என்ன கெட்டுப்போய்விட்டது?’’

இருக்கவேண்டிய காலம் என்று ஊர் ஏற்படுத்தியிருக்கிறதே, அதற்குமேல் பிறந்த வீட்டில் இடம் ஏது? பெற்றோராவது, புருஷனாவதுஎல்லாம் சுத்த அபத்தம். காக்கை, குருவிபோலத்தான் மனிதர்களும்சிறகு முளைத்த குஞ்சை, கூட்டில் நுழையவிடுகிறதா பட்சி?’’

புருஷன்…’’

என்னடா இந்தப் பெண் இப்படிப் பேசுகிறாள் என்று நீங்கள் நினைப்பீர்கள். நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் எனக்கு ஒன்றுதான். புருஷனா! புருஷனிடம் வந்த சில மாதங்கள் பெண் புதிதாக இருக்கிறாள். பிறகு, புதிதான பானம் குடித்துத் தீர்ந்த பாத்திரம்போலத்தான் அவள்.’’
நீங்கள் அப்படி…’
நீங்கள் என்று ஏன் சொல்கிறீர்கள், நீங்கள்தானே பெரியவர். என் நெஞ்சு புண்ணாகி, அதன் ஆழத்திலிருக்கும் எரியும் உண்மையைச் சொல்கிறேன். உங்களுக்கு கலியாணம் ஆகிவிட்டதா?’
இல்லை.’
ஆகி, மனைவி வந்து சில மாதங்கள் ஆகியிருந்தால் நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகும்.’
வாசற்புறம் கேட்காதபடி சற்று மெல்லிய குரலில்தான் பேசினாள். அந்தப் பேச்சிலிருந்து துடிப்பும் வேதனையும் தாங்க முடியாதவனாக இருந்தன.
 “…
அதாவது நான் ஒன்று கேட்கட்டுமா?’’ திடீரெனக் கேட்டேன்.
கேட்கிறது தெரியும். உங்களுடன் ஓடிவந்துவிடச் சொல்கிறீர்கள். நீங்களும் இதே மாதிரிதானே, சில மாதங்களுக்குப் பிறகு..?’
என்ன சாவித்திரி…’
அதாவது, ஒருவேளை நீங்கள் அடித்துக்கொல்லாமல் இருப்பீர்கள். மிருக இச்சை மிகைப்படும்போது என்னிடம் கொஞ்சுவீர்கள். இச்சை ஓய்ந்ததும் முகம் திருப்பிக்கொள்வீர்கள். புதுமுகத்தைப் பார்ப்பீர்கள்…’
நீ இவ்வளவு பட்டவர்த்தனமாகப் பேசும்போது நானும் பேசலாமா?’
தாராளமாக
என்னைக் கவர்ந்து வைத்துக்கொள்ளும் சக்தி உன்னிடமல்லவா இருக்கிறது.’
அதெல்லாம் சுத்தக் கதை. அதை இங்கே இப்போது புகவிடாதீர்கள். வெட்கமற்ற உண்மையை நான் கொட்டுகிறேன். நீங்கள் எதையோ சொல்கிறீர்களே? எந்த அழகும் நீடித்து மனிதனுக்கு அழகு கொடுக்காது.’
நீ எப்படி அந்த மாதிரி பொதுப்படையாகத் தீர்மானிக்கலாம்?’
எப்படியா? என் புருஷனைப்போல என்னிடம் பல்லைக் காட்டிய மனிதன் இருக்க மாட்டான். நான் குரூபியல்ல; கிழவியல்ல; நோய்கொண்டவள் அல்ல. இதையும் சொல்கிறேன்மிருக இச்சைக்குப் பதில் சொல்லாதவளும் அல்ல. போதுமா?’
சாவித்திரி, உன் உள்ளத்தில் ஏற்பட்ட சோகத்தால் நீ இப்படிப் பேசுகிறாய். என்றாவது நீ சுகத்தை ருசிபார்த்திருக்கிறாயா?’
எது சுகம்? நகை போட்டுக்கொள்வதா? நான் போடாத நகை கிடையாது. என் தகப்பனார் நாகப்பட்டினத்தில் பெரிய வக்கீல், பணக்காரர். புடைவை, ரவிக்கை என நான் அணியாத தினுசு கிடையாது. சாப்பாடா, அது எனக்குப் பிடிக்காது. வேறென்ன பாக்கி, சரீர சுகம்; நான் ஒரு நாளும் அடையவில்லை இதுவரையில்.’
அதாவது…’
என் புருஷன் என்னை அனுபவித்துக் குலைத்திருக்கிறான். நான் சுகம் என்பதைக் காணவில்லை.’
பிறகு எதைத்தான் சுகம் என்கிறாய்?’
நான் உள்ளத்தைத் திறந்து பேசுவதற்கும்கூட ஓர் எல்லை இல்லையா? இதற்கும் மேலும் என்னை என்ன சொல்லச் சொல்கிறீர்கள்?’
 …………….
சாவித்திரி…’
நீ சொல்வதெல்லாம் சரி என்றுதான் எனக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது.
நிஜமா!’’ என்று எழுந்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
பொய் சொன்னால்தான் நீ உடனே…’
அப்பா, இந்தக் கட்டைக்குக் கொஞ்சம் ஆறுதல்!’
சாவித்திரி, உன்னால் இன்று என் அபிப்பிராயங்களே மாறுதல் அடைந்துவிட்டன.’
அதெல்லாம் இருக்கட்டும். இந்த அந்தரங்கம் நம்முடன் இருக்கட்டும், என் கட்டை சாய்ந்த பிறகு வேண்டுமானால் யாரிடமாவது சொல்லுங்கள்.’
ஏன் அப்படிச் சொல்கிறாய்?’
இல்லை, இனிமேல் இந்தச் சரீரம் என் சோகத்தைத் தாங்காது. ஆனால், எதனாலோ இப்போது எனக்கே ஒரு திருப்தி ஏற்படுகிறது.’
நான் சொல்லவில்லையா?’’ என்று நான் என்னையும் அறியாமல், துவண்டு விழுபவள்போல இருந்த அவளிடம் நெருங்கி, என்மேல் சாய்த்துக்கொண்டேன். அவள் ஒன்றும் பேசாமல் செய்யாமல் கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் சாய்ந்துகொண்டாள்.

இவ்வளவு மாதங்கள் கழித்து, நிதான புத்தியுடன் இதை எழுதும்போதுகூட, நான் செய்ததைப் பூசி, மெழுகிச் சொல்ல மனம் வரவில்லை எனக்கு. இப்படி மனம்விட்டு ஒரு பெண் சொன்ன வார்த்தைகளைக் கொஞ்சம்கூட மழுப்பாமல் எழுதிய பிறகு கடைசியில் ஒரு பொய்யைச் சேர்க்க முடியவில்லை.
மெள்ள அவளை படுக்கையில் படுக்கவைத்தேன், என் படுக்கையில்! அப்போதும் அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவ்வளவு ரகசியங்களை ஒரேயடியாக வெளியே கொட்டின. இதழ்கள் ஓய்ந்துபோனதுபோல பிரித்தபடியே கிடந்தன.
திடீரெனஅம்மாபோதுமடி!’’ என்று கண்களை மூடியவண்ணமே முனகினாள்.
சாவித்திரிஎன்னம்மா?’’ என்று நான் குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக்கொண்டேன்.

போதும்.’’
சாவித்திரி விளக்கு…’
அவள் திடீரென எழுந்து உட்கார்ந்தாள்.
ஆமாம். விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக்கொள்ளுங்கள். சற்று நேரம் இந்த வெளிச்சம் போதும்!’’ என்று எழுந்து நின்றாள்.
நீ சொல்வது அர்த்தமாகவில்லை சாவித்திரி.’
இனிமேல் திறந்து சொல்ல முடியாது. நான் போகிறேன். நாளைக்கு வேறு ஜாகை பார்த்துக்கொள்ளுங்கள்.’
ஏன்ஏன் நான் என்ன தப்பு செய்துவிட்டேன்.’
ஒரு தப்பும் இல்லை. இனிமேல் நாம் இந்த வீட்டில் சேர்ந்து இருக்கக் கூடாது. ஆபத்து’’ என்று சொல்லி என்னைப் பார்த்துவிட்டு, சாவித்திரி தானே விளக்கை அணைத்துவிட்டு சிறிதும் தயங்காமல் உள்ளே போய் கதவைத் தாழிட்டுக்கொண்டாள்.
சட்டென என் உள்ளத்திலும் எரிந்த விளக்கு அணைந்தது.
போதும்போதும்எது போதும் என்றாள். தன் வாழ்க்கையையாதுக்கமா? தன் அழகா, என் ஆறுதலா அல்லது இந்தச் சிறிது வெளிச்சமா?”

என்று முடிகிறது கதை.

 

தாகூரின் மீது மதிப்புக்கொண்டிருந்தவரான கு..ரா., தாகூர் திருச்சிக்கு வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்திருக்கிறார். அதன் பிறகு மிகுந்த ஆர்வத்துடன் வங்க மொழியைக் கற்றிருக்கிறார். வங்க இலக்கியங்களை ஆழ்ந்து படித்திருக்கிறார். வங்க நாவல்களிலும் கதைகளிலும் வரும் பெண்களைப்போலவே கு..ராவின் கதைகளில் வரும் பெண்களும் அறிவார்ந்த உரையாடல்களில் ஈடுபடுவது, வங்க இலக்கியம் இவர் மீது செலுத்திய தாக்கம் எனலாம். புதுமைப்பித்தன் கதைகளில் தூக்கலாக உள்ள கதை அம்சம் கு..ரா கதைகளில் குறைவு. கு..ராவுக்குக் கதாபாத்திரங்களின் மன ஓட்டம்தான் கதை ஓட்டமே. சொல்லாமலே சொல்லிவிட வேண்டும் என்பது கு..ராவின் பாதை. `ஒவ்வொரு சிறுகதையும் ஒரு கவிதை போல எந்த இடத்தில் முடிகிறதோ, அந்த இடத்தில் தானாகப் பேனா வந்து நின்றுகொள்ள வேண்டும். அதற்குமேல் ஓர் எழுத்தும் நகரக் கூடாதுஎன்ற கதைக்கொள்கை கொண்டவர் கு..ரா.

கு..ராவின் கதை என்பதற்கான சர்வலட்சணங்களும் பொருந்திய கதை ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், அது `ஆற்றாமைஎன்னும் கதையைச் சொல்லலாம். முதல் முறை அந்தக் கதையை வாசித்தபோது மனம் அதிர்ந்தது உண்மை. `இவ்வளவு அப்பட்டமாக பெண் மனதை சித்திரிக்க முடியுமா!’ என்ற வியப்பு ஏற்பட்டது.

 

சாவித்திரியின் புருஷன் வடக்கே எங்கோ மிலிட்டரி சர்வீஸில் இருந்தான். சாஸ்திரத்துக்காக சாந்திமுகூர்த்தம் நடந்த மூன்று நாள் இருந்துவிட்டு அவசர அவசரமாகப் போய்விட்டான். வருஷம் இரண்டாயிற்று. கடிதங்கள் வந்தன. ஆள் வரக்காணோம். சாந்திமுகூர்த்தம் ஆகாமல் வைத்திருந்தால் நாலு பேர் ஏதாவது சொல்வார்கள் அல்லவா! அதற்காக சம்பந்திகள் இருவரும் சேர்ந்து முகூர்த்தத்தை நடத்திவிட்டார்கள். பிறகு, பெண்ணை விட்டுவிட்டுப் பையன் எவ்வளவு காலம் இருந்தாலும் பாதகமில்லை. நாலு பேர் பிறகு வாயைத் திறக்க மாட்டார்கள். ஆனால், அந்தச் சாந்திமுகூர்த்தம் சாவித்திரிக்கு எமனாகத்தான் பட்டது. உள்ளத்தை அவள் ஒருவிதமாக முன்னர்போலவே அடக்கி ஒடுக்கிவிட்டாள். உடல்தான் ஒடுங்க மறுத்தது. ஒடுங்கிய உள்ளத்தையும் தூண்டிவிட்டது. அந்த மூன்று நாள் அனுபவித்த ஸ்பரிச சுகத்தை அவளால் மறக்க முடியவில்லை. வாய்விட்டு அலறிற்று. சாவித்திரி, நல்ல சரீரக்கட்டு படைத்த யுவதி. இளமைச் செருக்கு அவள் உடலில் மதாரித்து நின்றது. அதன் இடைவிடாத வேட்கையை அவளால் சகிக்க முடியவில்லை. எதிர் வீட்டில் கமலா. புதுப்பெண்டாட்டி. கணவன் ராகவனுடன் சல்லாபமாக இருப்பதும், அதை இங்கு வந்து சாவித்திரியிடம் பகிர்ந்துகொள்வதுமாக இருப்பவள்.

இந்தக் கமலாவுக்கு எவ்வளவு கொழுப்பு! அகமுடையான் அருகில் இருந்தால் இப்படியெல்லாமா குதிக்கச் சொல்லும்? என்னிடம் வந்து என்ன பீத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது? நான் கிடக்கிறேன் வாழாவெட்டிபோல. என்னிடம் வந்து என்ன கும்மாளம்! இல்லை. வேண்டுமென்றுதான். நான் பார்த்து வேதனைப்பட வேண்டும் என்றுதான் இப்படியெல்லாம் செய்கிறாள்போலிருக்கிறது! சதா இவள் அகமுடையான் சொன்னது என்ன பிரதாபம்! இவள்தான் அகமுடையானைப் படைத்தவளோ?… ஏன் தலைகீழா நிற்க மாட்டாள். உடனொத்தவள் நான் தனியாகக் கிடந்து சாவதைப் பார்த்து நாம் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோமே என்று அவளுக்குப் பெருமை! நான் நொந்துகிடக்கிறேன், நொந்துபோயிருப்பேன் என்று கொஞ்சமாவது அவளுக்குத் தோன்றினால்எப்படித் தோன்றும்? பட்டால் அல்லவா தெரியும் அவளுக்கு’ – சாவித்திரி பொருமிக்கொண்டே படுத்திருந்தாள். அப்போது ராகவனைத் தேடி அவனுடைய நண்பன் சீனு வருகிறான்.

சாவித்திரி அவனைஎதிர்வீட்டுக் கதவை சும்மா தட்டுங்கோ!” என்று குரூரத்துடன் வழிகாட்டுகிறாள். அவன் கதவைத் தட்டியதும் ராகவன் எழுந்து வந்து திறக்கிறான். “, வாருங்கள்!” என்று ராகவன் பலதரப்பட்ட உள்ளக் கலவரத்தில் கதவைத் திறந்தபடியே விட்டுவிட்டு சீனுவை வாசலுக்கு அழைத்துக்கொண்டு போனான்.

ஒரு விநாடி சீனுவின் கண்களில் ஒரு காட்சி தென்பட்டது. மின்சார விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வாசற்படிக்கு எதிரே கமலா ஆடை நெகிழ்ந்த நிலையில் படுத்திருந்தவள், ராகவன் உடம்பு கதவு திறந்த இடத்திலிருந்து விலகினதும் சடாரென எழுந்து கட்டிலை விட்டுக் குதித்து சுவர் ஓரம் ஓடினாள்.

சாவித்திரி இன்னும் கொஞ்சம் நன்றாகப் பார்த்தாள். கமலா தலையில் கட்டுப் பூ தொங்கிக்கொண்டிருந்தது. அறையிலிருந்து மல்லிகை வாசனையும் ஊதுவத்தி வாசனையும் கம்மென வெளியேறின. அந்தரங்கம் திறந்துகிடந்தது போன்ற அந்த அறையை அதற்குமேல் அவளால் பார்க்க முடியவில்லை. ஏகாந்தம் ஆடையற்று நின்றது போன்ற அந்த ஒளி அவள் கண்களுக்குக் கூச்சத்தைக் கொடுத்தது. சத்தம்வராமல் அறைக்கதவைச் சாத்திக்கொண்டாள். திடீரென ஒரு வருத்தமும் பச்சாதாபமும் தோன்றி அவளைத் தாக்கின. “ `என்ன காரியம் செய்தேன்!’ என்ன பாவம் செய்தோ, யாரைப் பிரித்துவைத்தோ இப்போது இப்படித் தனியாகக் கிடந்து தவிக்கிறேன். ஐயோ…” அளவற்ற ஆவலில் ஒன்றையொன்று கவ்விக்கொண்டு கலந்த இரண்டு உள்ளங்கள் ஒரு கணத்தில் சிதறி தூரத்தில் விழுந்தன. கமலா கண்ணீர் பெருகாத தோஷமாக, மகாகோபத்துடன் ஆடையைச் சீர்திருத்திக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் படுத்தாள்.

 

சீனுவை அனுப்பிவிட்டு ராகவன் உள்ளே வந்தான்.

மெதுவாகக் கட்டிலில் ஏறி கமலாவைத் தொட்டான். கமலா அவன் கையைப் பிடுங்கி உதறி எறிந்தாள்.
இன்னொரு கதவையும் நன்றாகத் திறந்துவிடுகிறதுதானே!’
, ஞாபகமில்லை கமலா!’
ஞாபகம் ஏன் இருக்கும்?’
சின்ன விஷயத்துக்கு ஏன் பிரமாதப்படுத்துகிறாய்?’
சின்ன விஷயமா? என் மானம் போய்விட்டது.’
ராகவனுக்கு அதுவும் இதுவுமாக எரிச்சல் கிளம்பிற்று.
எவ்வளவு போய்விட்டது?” என்று சீறினான்.
போதும் வாயை மூடுங்கள். அண்டை அயல் இருக்கிறது!” என்று அவளும் சீறினாள்.
சாவித்திரியின் காதில் இதுவும் விழுந்தது. குப்புறப்படுத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.
பாவியை என்ன செய்தால் என்ன?” என்று புலம்பினாள்.
கமலா மூக்கைச் சிந்தும் சத்தம் கேட்டது.
திருப்திதானா பேயே!” என்று சாவித்திரி தன்னைத்தானே உரக்கக் கேட்டுக்கொண்டாள்.

இவ்வாறு `ஆற்றாமைகதை முடிகிறது.

கு..ராவின் கதை, உலகம் மிகவும் சிறியது; பிராமணக் குடும்ப வளவுக்குள் நிலைகொண்டிருப்பது. பிற சமூகத்தினரைப் பற்றி அவர் எழுதிய கதைகள் சில உண்டு. பண்ணைச்செங்கான், ராஜத்தின் காதல், அடிமைப்பயல்போல. ஆனால், அவை ஓர் உயர் சாதிக்காரரின் பார்வையில்தான் எழுதப்பட்டுள்ளன. “பொதுவாக இவர் கதைகளில் 14 முதல் 17 வயதுள்ள பிராமணக் கன்னிகைகளின் மதர்ப்பானயெளவன உடல் வனப்பு பற்றிய வர்ணிப்புகள் இடம்பெறுகின்றன. புதுமைப்பித்தனிடம் இதைக் காண்பது அரிது. அவருக்கு இந்த விஷயத்தைச் சொல்ல ஓரிரு சொற்களே போதும்என்கிற ஆய்வாளர் ராஜ்கௌதமனின் கருத்தை நிராகரிக்க முடியாது.

அவருடைய 91 கதைகளிலும் அவருடைய முத்திரை இருக்கும் என்றாலும், `ஆற்றாமை‘, `கனகாம்பரம்‘, `மோகினி மாயை‘, `உண்மைக்கதை‘, `படுத்த படுக்கை பெண்மனம்‘, `சிறிது வெளிச்சம்‘, `நூர் உன்னிஸா‘, `என்ன அத்தாட்சி?’ போன்ற கதைகள் அவசியம் வாசிக்கவேண்டிய கதைகள்.

 

பெண்கள் மற்றும் பெண் மனம் பற்றி அதிகம் எழுதிய கு..ரா., பெண் அடிமைத்தனத்துக்கு எதிரான உணர்வுகொண்டவர். `அவள் இஷ்டம்என்றொரு கட்டுரை, அவர் பெண் விடுதலை குறித்துக்கொண்டிருக்கும் கருத்தை வெளிப்படுத்துகிறது. பெண் அடிமையாகவில்லை. அவள் அடிமையும் ஆக மாட்டாள். ஆகவும் முடியாது. இதுவரையில் அவள் அடிமைபோல இருக்க இசைந்தாள். அவ்வளவுதான். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற வேலிகளை ஆண் மகன் போட்டா பெண்களைக் கட்டுப்படுத்த முடியும்? அவளாகவே அந்த அடைப்புக்குள் போய் புகுந்துகொண்டு அந்த அடைப்பையே தன் கோட்டையாக்கிக்கொண்டாள். ஆனால், இப்போது அந்த வாழ்க்கை அவளுக்குப் பிடிக்கவில்லை. அது சலித்துப்போய்விட்டது. புதுமை வேண்டுகிறாள். விடுதலை கேட்கிறாள். அந்த ஆட்டம் போதும் இனிமேல் வேண்டாம் என்று அதிலிருந்து விலகி, ஒருகாலத்தில் தானே வேண்டாம் என ஒதுக்கிய சுதந்திரத்தை அடைய விரும்புகிறாள். வேண்டாம் என்கிறாள் பெண். ஆணுக்கு யாதோர் ஆட்சேபனையும் இருக்க முடியாது என்று எண்ணுகிறேன்.

கரிச்சான் குஞ்சு சொன்னதுபோல கு..ரா அப்பாவிதான். இந்தப் பகுதி வாசிக்க வித்தியாசமாக இருந்தாலும் வரலாற்றிலிருந்து துண்டித்து பெண் விடுதலையை கற்பனை வெளியில் செதுக்கிப்பார்ப்பதாகவே இருக்கிறது. கருத்துக்காகவும் கதைக்காகவும் இல்லாவிடினும், கலைக்காக, மனங்களை வாசிக்கக் கற்றுத்தரும் நுட்பத்துக்காக, கு..ரா கொண்டாடப்படவும் வாசிக்கப்படவும்வேண்டிய அசலான படைப்பாளி. நம் பெருமைக்குரிய முன்னோடி கு..ராஜகோபாலன்.-

Ref : Vikatan

One Response to கு.ப.ரா… பெண் மனதை அப்பட்டமாக சித்திரித்த எழுத்தாளர்!

  1. N, Ragavan says:

    மிகவும் அருமையான பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *