Nan Ariyana

hitler quoteஎன் முப்பாட்டனுக்கும், அவனுக்கு முந்தய தலைமுறைக்கும் “ஆரியன்” என்ற ஒரு இன ம் தமிழகத்தில் இருக்கிறது! “பிராமணர்கள் ஆரியர்கள்” என்ற வாதம் தெரியாது. ஆரிய என்றால் குணம்; திராவிட என்றால் இடம். ஸ்ரீராமபிரானை ஆரிய – (உயர்ந்த) என்ற பொருளில் சொல்லுகிறது கம்பராமாயணம்; திரவிட என்பது நாம் வசிக்கும் பகுதியின் பெயர் (தெற்கு பாரதம்). ஆதி சங்கரரை “திராவிட சிசு” என வரலாறு அழைத்தது.

தமிழ்நாட்டில் பிராமணர்கள் 5000-7000 வருடம் முன்பு கைபர், கணவாய் வழியாக வந்த வந்தேரிகள் என்று எவனாவது சொன்னால் உன் முட்பாட்டனும் என் முப்பாட்டானும் ஒன்றாய் இணைந்து “யாரங்கே! மனநல மருந்துவரை அழை” என்பர். தமிழ் நாட்டில் உள்ள எவனுடைய முப்பாட்டனும் அறியாத பிராமணர்கள் ஆரிய குலத்தோர் என்பது!

தமிழின் மூத்த நூல் தொல்காப்பியம். தமிழக அந்தணர்கள் தொழிலை விளக்குகிறது. ஐயோ பாவம் தொல்காப்பியனுக்கு தெரியாது தமிழக அந்தணர்கள் “ஆரியர்” என்று.

திருவள்ளுவர் 10 அதிகாரங்களில் தமிழக அந்தணர்கள் பற்றி எழுதியிருக்கிறார். அவருக்கும் தெரியாது தமிழக அந்தணர்கள் “ஆரியர்” என்று. தமிழகத்தில எந்த பழம் தமிழ் நூலிலும் அந்தணர்கள் ஆரியர்கள் என்ற சிறு குறிப்புகூட இல்லை.

அவர்களுக்குதான் தெரியவில்லை! திராவிட இனத்தவரின் சகோதர்களின் நிலைபற்றி பார்கலாமா !

ஐயா!! கன்னட சகோதரரரே! உங்கள் பக்கத்து வீட்டு ராவ் (கன்னட ஐயர்); ஆரியர்; 5000-10000 வருடம் முன் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்! நாம் இருவரும் ஒரே இனம்!! அவர் வெளியாள். அவர் கன்னடர் அல்லர். ஜெர்மன் தான் அவரின் தாயகம். நாளை ஜெர்மனுக்கு போய் விடலாம். நாமிருவரும் ஒரே இனமாதலால் காவேரி பிரச்சனை பற்றி பேசி…..

இப்படி பெங்களூரில் போய் பேசி பார்த்தல் என்ன ஆகும்!!. கன்னடர்கள் சிரிக்க மாட்டார்கள்!!!!. இது போலத்தான் மலையாளிகள், தெலுங்கர்கள். இவர்கள் எவருக்கும் திராவிடம் என்பது ஒரு அபத்தமான காதில் விழக் கூடாக கூக்குரல்.

தமிழ் என்பது திராவிடத்தின் தாய்மொழி, அந்த கொள்கையை கன்னடியரும், தெலுங்கரும் மற்றும் மலையாளிகளும் ஏற்கமாட்டார்கள். ஆனால் வரலாறு பொய் ஆகிவிடுமா! என்று பதில் வருகிறது. அதனால் வரலாறையும் அறிவியலையும் இங்கு ஒரு பார்வை பார்த்துவிடுவோம்.

ராமஜென்ம பூமி சர்ச்சை!! சுமார் 800 வருடங்களுக்கு முன் அயோத்தியில் கோயிலை இடித்து பாபர் மசூதியை கட்டினார் என்பதே வாதம். ஒரு தரப்பு கோயில் இடிக்கப்பட்டது என்பதற்கான சான்றுகளை, தொல்லியல் ஆயுவுகளை (அந்த இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட சான்றுகள்) வழங்குகிறது. ஏதிர்தரப்பு கோயில் இடிக்கப்படவில்லை என்பதற்கான சான்றுகள், வாதங்களை முன் வைக்கிறது. விவகாரம் முற்றுப்பெறவில்லை.

இது சமீபத்தில வரலாறு. கடந்த சில நூறு ஆண்டுகள் நடந்த சம்பவங்கள், அனைத்தும் வரலாற்று பூர்வமாக நமக்கு தெரியும்; ஆண்ட மன்னர்கள் பற்றியும் தெரியும். படையெடுப்புகள், இறந்தவர்களின் எண்ணிக்கை, பயன்படுத்திய நாணயங்கள், இயல், இசை என எல்லாம் தெரியும். ஆனால் கோயில் இடிக்கப்பட்டதா என்று இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

நம்முடைய மனம் எவ்விதம் விரும்புகிறதோ, அந்த வாதங்கள் நாம் நம்புகிறோம். அதனால தான் ஒரு கம்யூனிஸ்டு வரலாற்று ஆசிரியர் கூட கோயில் இடிக்கப்பட்டது என்று ஆய்வு அறிக்கையை வெளியிடவில்லை. ஒரு இந்து சார்பு சரித்திர ஆய்வாளர் கூட கோயில் இடிக்கப்படவில்லை என்று கூறவில்லை. உண்மையில் இவர்கள் தங்கள் கொள்கை சார்ந்த கண்டுபிடிப்புகளை கண்டறிகிறார்கள்.

இப்பொது ஆரிய வரலாற்று கதையை பார்ப்போம்.

5000-7000 வருடத்துக்கு முன்னால் கைபர்போலன் கணவாய் வழியாக வந்து ஆரியர்கள் திராவிடர்களை தெற்கு பக்கம் துரத்தி வடநாட்டை கைப்பற்றினார். தாங்கள் கைப்பற்றிய வடநாட்டில் நிம்மதியாக இருக்கலாம்தானே. ஆனல் அவர்கள் அப்படி நிம்மதியாய் இருக்காமல் ஒரு சிறு குழுவினர், பிராமணர்கள் மட்டும் கிளம்பி (அன்றைய மக்கள் தொகை அடிப்படையில் சில நுறு பேர் மட்டும்) தென் இந்தியா வந்தனர்.

அனால் நல்ல ஆரியர்கள் வரவில்லை. அதாவது மாயாவதின் / அம்பேத்கரின் / முலாயம் சிங் யாதவின் போன்ற நல்ல ஆரியர்களின் மூதாதையர் வரவில்லை. வெறும் பிராமணர்கள் மட்டும் கிளம்பி வந்தனர். அதாவது பாரதி / உ வே சாமிநாத ஐயர் / வாஞ்சி நாதன் / வைத்திய நாத ஐயர் மற்றும் சாலையில் அப்பளம் விற்று பிழைப்பு நடத்தும் சுப்பிரமணி போன்றோரின் மூதாதையர் தென் இந்தியா வந்தனர்.

அந்த சில நூறு பேர் (அன்றைய மக்கள் தொகையில்), லக்ஷக்கணக்கான திராவிடர் மீது கலாச்சார படையெடுப்பு நடத்தினர். தன் தாயகமான வடநாட்டில் இருந்துஅடித்து விரட்டப்பட்ட திராவிடர்கள் அந்த சில நூறு ஆரியர்களின் எல்லா தவறான பழக்கங்களையும் ஏற்று, தங்களுக்குள் பிரிவினையான சாதி, தீண்டாமை போன்றவற்றையும் ஏற்படுத்தினர். ஆரியர்கள் வந்தேறிகள் என தெரியாமல் 4900-6900 வருடம் ஒரு கூட்டமாக இருந்தனர். ஆனால் வந்தேறி ஆரிய பார்ப்பனரும் தமிழ் கற்று கொண்டு, வீட்டில் தமிழில் மட்டுமே பேசி ஏமாற்றி வருகிறார்கள். நல்லவேளையாக ஆங்கிலேயர் வந்து நமது வரலாறை ஆராய்ந்து “ஆரிய” படையெடுப்பை “கண்டு”பிடித்தார்கள். அந்த ஆங்கிலேயரிலும் ஆரிய அடிமைகள் உண்டு. அவர்கள் “ஆரிய” படையெடுப்பை மறுத்து வருகின்றனர். அனால் நாம் ஏமாற கூடாது.

2021 ல் நாம் பார்க்கும் அனைத்து சமூக தீமைகளுக்கும் 5000-7000 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்த பார்ப்பனர்களே காரணம்!! – இந்த மூட்டையின் பெயர் வரலாராம். (மிடியலடா சாமி… எப்படித்தான் இந்த கதையை கூச்சமில்லாமல் தொடர்ந்து சொல்லுறீங்க…அவார்டு தான் கொடுக்கணும்)

சமீபகால 600 வருடங்களுக்கு முன் நடந்த ராமஜென்ம பூமியில் மசூதி கட்டப்பட்ட விதம் பற்றியே வாதம் மற்றும் பிரதிவாதம் போய் கொண்டிருக்கிறது. இதில் 5000-10000 ஆண்டுக்கு முன் நடந்தது என்று ஒரு கதையை மேடை தோறும் பேசுகிறார்கள். அதையும் கேள்வி கேட்காமல் ஒரு கூட்டம் தமிழ் நாட்டில் (மட்டும்) நம்புகிறது. அடபோங்கடா நீங்களும் உங்க வரலாறும்.

பின்குறிப்பு :

இந்த தொடர் “நான் ஆரியன் இல்லை” என நிரூபிக்க எழுதப்படவில்லை. நான் யுகயுகமாய் இங்கு பிறந்தேன். இங்கயே மறித்தேன். மீண்டும் பிறந்தேன். அரங்கன் அருள் இருந்தால், இந்த ஜென்மத்தில், சுவர்க்கம் புகுவேன். இல்லையேல் மீண்டும் காவேரி கரையில் / தாமிரபரணி கரையில் மீண்டும் பிறக்க வரம் கேட்பேன் . மீண்டும் மீண்டும் இங்கேயே பிறப்பேன்.

நான் சார்ந்த குலத்தை நியாயமாக விமர்சித்தால், அது சரியென்றால், ஏற்றுக்கொள்வேன்; என்னை மாற்றிக்கொள்வேன்.

ஆனால் நான் தமிழன் இல்லை என்பவன் என் தாய் மலடி என்று சொல்லுபவன்

அப்படி எவன் சொன்னாலும் அவன் தமிழன் இல்லை!!. அவன் அப்பன் தமிழன் இல்லை!!. அவன் அம்மா தமிழச்சி இல்லை!!.

– இதுவே என் பதில்.

அடுத்ததாக : ஆரிய படையெடுபு பற்றிய அரசியல் மற்றும் அறிவியலை பார்க்கலாம்…

Regards

Rajan Sundara

Admin

தம் குலத்தின் மீது பாசம்; அனைவருடன் நேசமான நட்பு; தமிழ்பால் தீராக் காதல்; தாய் நாட்டின் பால் மாறாத பற்று; இறையே! இவையே நாம் வேண்டுவது.

 

 

14 Responses to Nan Ariyana

  1. P.K.Mayuri says:

    So rightly said ! True … The view and comments on our society should be changed for good !

  2. r muthuraman says:

    arumai miga arumaiyana vatham

  3. R. Vedachalam says:

    I am excited. Very well narration indeed.

  4. Srikanth Srinivasan says:

    Commendable commentary

  5. S Gopinath says:

    Nice article. The article should published and circulated all over Tamilnadu

  6. Sivakeerthi S says:

    Excellent Article. Update this with relevant Proof.

  7. VC BALAJI says:

    Very good article. However, the critics claim that we speak the same style of language all over Tamil Nadu(I mean the accent), Whereas other castes speak in an accent that is native for their region. Therefore the critics claim that we have are not natives of Tamil Nadu? Can any one explain??

  8. VC BALAJI says:

    The article throws a lot of light. However, the words “andhana” represented in the sanga illakiam or in other tamizh literatures are being questioned as not equating to “brahmanas” ? as per varnasharama dharma system? A finer skillful definition is required sir.

  9. Viwaran says:

    There is a considerable change in attitude towards our community,but it will take lot of time to change completely as this poisonous tree has grown massively nurtured watered over the years by Dravidian leaders.Even after 50 years we will be talking like this.Only solution as far as Iam conserned is to rename our Brahmin community as a new religion and call our self as minority religion.By this we can bring a change in our community’s life and also we can enjoy the fruits of reservation

  10. Rajesh srinivasan says:

    Very good narration with facts.

  11. HV Krishna Prasad says:

    Supper

  12. Bikshan says:

    எல்லாவற்றையும் செய்தோம், ஆனால் அதை சொல்ல கூச்சத்தை வளர்த்தோம், விவாதங்களில் இவைகளை சொல்ல மறந்தோம், ‘சாக்கடையில் கல் எறிந்தால் உன் மீதே விழும்’ என்று கூறி, கூறவேண்டியவைகளை உரக்க கூறாமல் இருந்ததால் சாக்கடைகள் அரியணைக்கு அரிதாரம் பூசுவதை அமைதியாகவே பார்த்தோம். ‘தேவை வந்தால் எதிர்த்து நிற்பதும் வீரமே’ என்று சின்னஞ்சிறு சிறு கதைகள் பேசாமல் போனோம்..’பிறந்த பொழுதிலிருந்து எல்லோருமே ஜாதியின் முத்திரையுடன்தான் நம்மை பார்த்த பொழுது, அதை பற்றி அழுத்தமாகவும் சத்தமாகவும் பேசாமல் போனோம். ‘நாய்க்கு நாய் மொழிதான் புரியும் என்று தெரிந்தாலும் களத்தில் இறங்கி கத்தாமல், கவின்மொழி பேசுவதுதான் நாகரிகம் என்று இருந்தோம். நம்முடைய இந்த மென்மை போக்கினால் அடுத்த தலைமுறையை அல்லலுக்கு உள்ளாக்கினோம்.

  13. K.Hariharasubramanian says:

    Are the proponents of the “Aryan in the Invision Theory”(AIT) ready to accept that the Dravidians who lived in the northern India then were defeated at the hands of the forefathers of the present day Bhramins? In that case what about their much praised chivalry( பெண்களே புலியை முறத்தால் விரட்டியது) ALL are then heightened figment of imagination and gaffe, because their menfolk were not able to face the fragile Bhramins Aryans and they had to run for their life with all their race down south 2000 kms away.What a bravery is it? Then either of the stories must be fake. The AIT propagandists shamelessly eat the dust and embarrass themselves as inferior to Bhramins in their valour.Had this poser been made to them that they were mauled at the hands of the present day Bhramins’ forefathers they would have turned their ire on the bastard pastor Robert Caldwell who spun this story in his novels. No bloody iota of evidence for this gain saying. This question should be put to the so called அஞ்சாநெஞ்சன் & தளபதிs in a TV debate.

Leave a Reply to r muthuraman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *