ஆழ்வார்கள்ஓர் எளிய அறிமுகம்

அறிமுகம்

முதலில் ஆழ்வார் என்கிற சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்ப்போம்.

புகவானின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று சொல்வார்கள். பகவான் வி~;னுவாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. எதிலும் தீவிரமாக ஆழவார்களை ஆழ்வார் என்று அழைக்கலாம். துக்கத்தில், துயரத்தில், சந்தோ~த்தில் ஆழ்வாரும் உண்டு. ஏ.கே.ராமானுஐன் ஆழ்வார் பாடல்களில் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புத்தகத்துக்கு Hymns for the Drowning ன்று பெயர் வைத்தார். வெள்ளத்தில் மூழ்குபவர்களுக்கான பாடல்கள் என்று வெள்ளம் என்றால் பக்தி வெள்ளம்.

“ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்” என்று திருமழிசை ஆழ்வாரே நான்முகன் திருவந்தாதியில் சொல்லியிருக்கிறார். நான் சொல்லப் போகும் ஆழ்வார்கள் தனிச்சிறப்புள்ளவர்கள், நாலாயிர திவ்வியப்பிரபந்தம் என்னும் அருமையான வைணவ நூலின் பாடல்களை இயற்றியவர்கள்.

இந்த முன்னுரையுடன் ஆழ்வாரான பொய்கையாரின் முதல் பாடலைப் பார்ப்போம்.

வையம் தகளியா(ய்) வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய

சுடராழியான அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராழி நீங்குகவே என்று (2082)

என்று கம்பீரமான மிகப் பெரிய விளக்கு ஒன்றை ஏற்றுகிறார் பொய்கை ஆழ்வார்.

உலகம் தான் அகல், கடல்தான் நெய், சூரியன்தான் ஒளிப்பிழம்பு, இம்மாதிரியான பிரம்மாண்டனை விளக்கைச் சக்கரம் ஏந்திய விஷ்ணுவின் பாதத்தில் ஏற்றி, சொற்களால் ஒரு மாலை அணிவித்தேன் – என் துன்பக் கடல் எல்லாம் நீங்குக என்று.

இதைச் சொல் மாலை என்பது எத்தனை பொருத்தமானது.

(சொல் மாலை  – அந்தாதியீன்   அழகு)

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரம் ஆளுக்கு நூறு பாடல்களை பாடியிருக்கிறார்கள். அவை அந்தாதி என்னும் வடிவில் உள்ளன. அதாவது, முதல் பாடலின் கடைசி வரியில் அடுத்த பாடலின் ஆரம்ப வார்த்தை இருக்கும். இப்படிச் சொற்களை மாலை போன்று தொடுக்கிறார்கள் மூவரும். அதில் விசேஷம் நூறாவது பாட்டின் கடைசி வார்த்தை முதல் பாட்டின் முதல் வார்த்தை. ஊதாரணமாக முதல் பாடல் வையகம் என்று ஆரம்பிக்கிறது, என்று என்பதில் முடிகிறது. அடுத்த பாட்டு, என்று கடல் கடைந்தது என்று தொடங்குகிறது. பொய்கையாரின் முதல் திருவந்தாதியின் நூறாவது பாடல் மாயவனை மனத்து வை என முடிகிறது! மாலை ஒரு சுற்று முற்றுப் பெற்று விட்டதல்லவா!

ஒரே ஒரு பாடலை முதலில் மாதிரி பார்ப்போம்.

நீயே உலகெலாம் நின்அருளே நிற்பனவும்

நீயே தவத்தேவ தேவனும் – நீயே

எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்(து)

இருசுடரும் ஆய இவை (2401)

ஏழாம் நூற்றாண்டில் எழுத்பபட்ட இந்த வெண்பாலின் அற்புதம் ஏறக்குறைய உங்களுக்குப் புரியும் என்று எண்ணுகிறேன். கடவுளைப் பார்த்து,

நீதான் எல்லா உலகமும்,

பூமியில் நிலைத்திருப்பவை எல்லாம் உன்அருள்.

நீதான் தேவர்களுக்கெல்லாம் தேவன்.

நீதான் சூரியன், சந்திரன்.

இவ்வகையிலான அபாரமான நாலாயிரம் பாடல்களைக் கொண்டது. திவ்வியப் பிரப்பந்தம். அவற்றைப் பாடிய ஆழ்வார்கள் பற்றியது இந்தப்புத்தகம்.

 

ஆழ்வார்கள் பத்து பேர். அவர்கள் பெயர் :

பொய்கையும் ஆழ்வார் என்று குறிப்பிடும் பழக்கம் பழந்தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார், மதுராந்தகியாழ்வார், குலோத்துங்க சோழன் மகளார் அம்மங்யாழ்வார், போன்று சோழ சாசனங்களிலிருந்து இந்தச் சொல் இருபாலர்க்கும் பயன்பட்டது என்பது தெரிகிறது. ஆண்டாள் என்னும் பெயரில் ஆள் என்பதே ஆழ்வாரின் பகுதி என்று எண்ணவைக்கிறது.

ஆழ்வார் என்கிற சொல்லை சமண, பௌத்த ஞானிகளுக்கும் பயன்படுத்தியுள்ளனர். ஊதாரணமாக மயித்திரியாழ்வார் என்று புத்ததேவர்க்குப் பெயருள்ளதை தக்கயாகப்பரண என்னும் நூல் சொல்கிறது. அவிரோதியாழ்வார் என்று ஒரு சமண முனிவரக்குப் பெயர் இருந்திருக்கிறது.

இவர்கள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களும் இல்லை. முதலாழ்வார்களான பொய்கையார். பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் அயோநிஜர்கள் எனப்படுகிறார்கள். இவர்கள் கண்டெடுக்கப்பட்டவர்கள் என்பதும், பிற்பாடு ரிஷிகளாக இருந்தவர்கள் என்பதும் தெரிகிறது. திருமழிசையாழ்வார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்பது அவர் பாட்டிலிருந்தே தெரிகிறது.

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் (841) என்று அவரே சொல்லிக்கொள்கிறார். பெரியாழ்வார் வேயர் குல அந்தணர் (மூங்கிலைச் சார்ந்த பார்ப்பனக் குடியினரை வேயர் என்று சொன்னார்கள்). பெரியாழ்வாரின் துளசித் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை ஆண்டாள் திருமங்கையாழ்வார் கள்வர் குலத்தைச் சேர்ந்தவர். குலசேகர ஆழ்வார் சேரநாட்டு அரசு குலத்தைச் சேர்ந்தவர். திருப்பாணாழ்வார் அந்திம வம்சம் பஞ்சம் குலம் என்பது அப்போது அழைக்கப்பட்ட பாணர் சாதியில் பிறந்தவர். தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிராமணர். நம்வாழ்வார் வெள்ளாள சிற்றரசர் வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் மாணாக்கரான மதுரகவி பிராமணர். இவ்வாறு எல்லாக் குலங்களிலும் ஆழ்வார்கள் இருந்திருக்கிறார்கள்.

சாதி வித்தியாசம பார்க்காமல் இருப்பது வைணவக் கருத்துகளில் தலையாயது. அந்தணருக்கான கிரியைகள் அவர்களுக்கு முக்கியமில்லை. அவற்றை அவர்கள் புறக்கணித்தார்கள் என்பதற்குக்கூட ஆதாரம இருக்கிறது. அந்தணரான தொண்டரடிப் பொடி ஆழ்வார்.

 

குளித்துமூன்(று) அனலை ஓம்பும்

குறிகொள் அந்தண்மை தன்னை

ஒளித்திட்டேன் (896)

என்று சொல்லும்போது தினம் குளிப்பது, மூன்று முறை அக்கினி ஹோத்திரம் செய்வது போன்ற சடங்குகள் (சுவைரயடள) முக்கியமில்லை என்பதை வலியுறுத்துகிறார்.

முதலாழ்வாரன பொய்கையார்.

புந்தியால் சிந்தியா(து) ஓதி உருவெண்ணும்

அந்தியால் ஆம்பயன்அங் கென் (2114)

என்று பாடும்போது, பகவானை மனத்தால் நினைக்காமல் வேறு மந்திரங்களை உருப்போட்டுச் செய்யும் சந்தியாவந்தனத்தால் பயனே இல்லை என்று, ஆரம்பித்திலிருந்தே சடங்குகள் முக்கியமில்லை என்றது வைணவம்.

தோண்டரடிப் பொடியாழ்வார்.

இழிகுலத்தவர்களேனும் எம் அடியார்கள் ஆகில்

தொழுமினீர் கொடுமின் கொண்மின் (913)

என்;று, வைணவராக இருந்தால் போதும் : குலம் முக்கியமில்லை: அவர்களைமத் தொழுது, அவர்களுக்குக் கொடுக்கலாம், கொள்ளலாம் என்ற சாதியற்ற வைணவத்தின் ஆணிவேர் ராமானுஜர் காலத்துக்கு முன்பே இருந்திருக்கிறது.

 

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் நம்வாழ்வார்,

குலந்தாங்கு சாதிகள் நாலினும் கீழிழிந்து எத்தனை

நலந்தானிலாத சண்டாள் சண்டாளர்களாகிலும்

வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்கு ஆள்என்றுள்

கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே (3195)

ஏத்தனைதான் கீழான சாதியராக இருந்தாலும் சக்கரத்தை வலது கையில் வைத்திருக்கும் விஷ்ணுவின் ஆள் நான் என்று உள்கலந்துவிட்டால், அவர்களின் அடியவர்களுக்கு அடியவர் நாங்கள் என்று கூறும் இந்தக் குரல் எட்டாம் நுற்றாண்டிலேயே சாதி பாராட்டாத பக்திக்குரல்.

பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாடல்களின் வரிசைக்கிரமம் அவற்றைத் தொகுத்த நாதமுனிகள் அமைத்தது. இக்கட்டுரைத் தொடரில் அந்த வரிசையைப் பயன்படுத்தினால், ஒரே ஆழ்வாருக்குப் பலமுறை திரும்ப வரவேண்டியிருக்கும். அதனால் ஆழ்வார்கள் வாழ்ந்த கால வரிசைப்படி அவர்கள் பாடல்களையும் தத்துவங்களையும் விளக்க முற்படுகிறேன்.

இக்கட்டுரையில் உள்ள வைணவக் கருத்துகள் யாவும் பெரிய மகான்களும், உரை எழுதியவர்களும், வியாக்யானக்காரர்களும் கொடுத்த கருத்துகள். என் சொந்தக் கருத்துகள் அங்கங்கே இருப்பின் அதை நான் தனியாகக் குறிப்பிடுகிறேன். பிரபந்தத்தில் என் ஈடுபாடு நான் ஒரு வைணவன் என்கிற கோணத்தில் மட்டும் இல்லை. அதன் தமிழ் நடையும் சொற்பிரயோகங்களும் என் எழுத்துத் திறமைக்கு வலுவான பின்னணியாக இருந்திருக்கின்றன. பிரபந்தத்தில் குறிப்பாக நம்வாழ்வார் திருவாய்மொழியில் உள்ள பிரபஞ்சக் கருத்துகள், இயற்பியல் காஸ்மாலஜ கருத்துகளுடன் ஒத்துப்போவதை ஓர் அறிவியல் உபாசகன் என்ற முறையில் வியந்திருக்கிறேன். அந்த வியப்புகளையும் உங்களுக்குக் கொடுக்க முயல்கிறேன்.

ஊதாரணமாக நம்வாழ்வாரின் பாசுரம் ஒன்று இவ்வாறு தொடங்குகிறது.

ஓன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லை அன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் (3330)

ஸ்டிபன ஹாக்கிங்கின் ஒரு கட்டுரையில் (பிரபஞ்சத்தின் தொடக்கம்) பிரபஞ்சம் எப்படி தொடங்கியது என்பதை வேண்டுமானால் அறிவியல் கண்டுபிடிக்க முடியுமே ஒழிய, பிரபஞ்சம் ஏன் இருக்க முனைகிறது என்பதை அதனால் விளக்கமுடியாது என்கிறார். அதற்கு அறிவியலாளர்கள் தயக்கத்துடன் ஒப்புக்கொள்கிறார்கள். எதுவுமே இல்லாத, காலம்கூடத்துலங்காத அந்த முதற்கணத்திற்கு முற்பட்ட நிலையைப் பற்றி இயற்பியல் சிங்குலாரிட்டி என்கிறது. நம்மாழ்வாரும் அகைத்தான் சொல்கிறார்.

 

வெளியீடு கிழக்கு பதிப்பகம்
First Floor,
Ambal Building, சென்னை 600 014.

ph – 91-44-4200 9603

website : www.nhm.in

குறிப்பு : Google ல் தேடி  Free download செய்து படிப்பவர்கள் 1000 வருடம் தலை கீழாக நரகத்தில் தொங்குவார்கள், என சுஜாதாவின் சார்பாக சாபம் விடுகிறோம்.

 

 

 

7 Responses to ஆழ்வார்கள்ஓர் எளிய அறிமுகம்

 1. arputhamaan thuvakkam, aazvaargalai pattriyathu. vaazhga sujata vin pugazh

 2. Kamakshi Narayanan says:

  Excellent explanations. hope to see more such elucidations.

 3. Kamakshi Narayanan says:

  Excellent explanations – very illuminating !

 4. Raz ngarajan Madanagopalan says:

  That people from various walks of life have become ‘Alwars’ was well brought out; but, as a note, people who search in the google, down- load the material and read freely, are challenged that that they will hang in hell from the trees. This is in bad taste and should be deleted, I feel.

 5. Rangarajan Madanagopalan says:

  The final note may be recast with a request to not resort to free reading through free downloading methods.

 6. Ashokkumar says:

  What is this you are giving curse.

 7. V.KRISHNAMOORTHI.C.L.I.A, L.I.C. OF INDIA.DHARAPURAM. says:

  EXCELLIANT BOOK.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *