Thuglak Dt 7-4-2021 Page 18 EWS 10% Reservation Tamil nadu
#EWS_Reservation_TamilNadu
Thuglak Dt 7-4-2021 Page 18 on : Economically Weaker Section (10%) Reservation
பொதுப்பிரிவினரில் பொருளாதாரரீதியில் பின் தங்கியவர்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் அமுல்படுத்தப்படவில்லை. பல கட்சிகள் இந்த இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர். அவர்களின் வாதங்களைப் பார்க்கலாம்.
வாதம்-1: பொதுப்பிரிவு 31%; அதில் பெருமளவு இதர சமூகத்தினர் பெறுகின்றனர். அதுவே போதும்.
உண்மை: NEET Exam (2018) முடிவுகள். 1829 மருத்துவ இடங்கள் 69% இடஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்படுகின்றன. மீதி உள்ள 823 இடங்கள் (31%) பொதுப்பிரிவில் உள்ளன. இந்தப் பொதுப்பிரிவில் பெற்றவர்களின் இடங்களின் எண்ணிக்கை கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
FC- 211; BC-424; MBC-97; BC-Muslim – 44; SC-36; SCA- 1 – Total 823
மீதி உள்ள 211 மருத்துவ இடங்கள் இதர வகுப்பினருக்கு பொதுப்பிரிவினர்களுக்குக் (Forward Caste) கிடைத்தன. அதாவது 7% மட்டுமே. (குறிப்பு: பொதுப்பிரிவில் / போட்டியில், தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்களின் வெற்றி, நமது சுதந்திரதின் வெற்றி என்பதில் மகிழ்ச்சி); இதன் மூலம் பொதுப்பிரிவில் உள்ள 31% இடங்கள் Forward Caste (இதர சமூகம்) மட்டுமே பயனுறுது என்பது தவறான வாதம்.
வாதம்-2: இந்த 7% போதாதா. ஒரு குறிப்பிட்ட சமூகம் 7% இடங்களை பெறுவது அதிகம்.
உண்மை: பொதுப்பிரிவில் கிருத்துவ / இஸ்லாமிய மதத்தில் உள்ள சில பிரிவினர் உள்ளிட்ட 76க்கும் மேற்பட்ட ஹிந்து ஜாதியினர் இருக்கின்றனர். மேலும் இவர்களுடன் சேர்ந்து தமிழ்நாட்டில் வாழும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், மற்றும் தமிழக எல்லையோர மாவட்டங்களை சேர்ந்த மொழிச் சிறுபான்மையினரும் இந்தப் பொதுப்பிரிவில் உள்ளனர். ஏறக்குறைய 1 கோடி மக்கள் பொதுப்பிரிவில் இருக்கக் கூடுமென்பது ஓர் கணக்கு. அவர்கள் அனைவர்க்கும் சேர்த்து 211 இடங்கள் கிடைத்திருக்கின்றன. இதில் கேரள, வடஇந்திய, மற்றும் வெளி மாநிலப்பெயர்கள் மீதி 211 இல் மிக அதிகம் இருப்பதை கவனத்தில் கொள்வதும் முக்கியம்.
வாதம்-3: பொதுப்பிரிவில் தமிழக பார்ப்பன சமூகத்தை சேர்த்தவர்கள் அதிகம் மருத்துவ இடங்களை பெறுகிறார்கள்.
உண்மை: பொதுப்பிரிவில் எந்த ஜாதிக்கும் எவ்வளவு இடம் கிடைத்தது என்று அரசு தெரிவிப்பது இல்லை. ஒரு கணக்கிற்காக, இந்த 211 பெயரில் தமிழ்ப்பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு, பிராமணர்கள் வழக்கமாக வைக்கும் பெயர்களை மட்டுமே கணக்கில் எடுத்தால் 30-60 மாணவர்கள் மட்டுமே இருக்கக்கூடும். அதாவது 0.4% முதல் 0.6% இருக்கலாம். இந்தப் பொதுப்பிரிவில் கண்டிப்பாக 1% கீழ் தான் பிராமணர்கள் பலனடைபவர்களாக இருக்கின்றார்கள். (Ref : https://swarajyamag.com/ideas/no-tamil-brahmins-are-not-getting-into-mbbs-through-backdoor-due-to-neet) எனவே பிராமண ஜாதியினர் அதிகம் பலனடைகிறார்கள் எனும் வாதம் தவறு. அரசு வேலை மற்றும் கல்விச்சலுகை பெறுகின்ற இதர ஹிந்து ஜாதியினர் மற்றும் பிற மதத்தினரின் எண்ணிக்கை பற்றி அரசு வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும். நாம் உண்மைகளின் அடிப்படையில் நம் நிலையை எடுப்போம்.
வாதம்-4: ஆண்டு வருமானம் 8 லட்சம் உள்ளவர் வறுமையில் உள்ளவரா?. அவருக்கு இடஒதுக்கீடு தேவையா?
உண்மை: ஏழைகளுக்கே இடஒதுக்கீடுச் சலுகை என்ற அடிப்படையில் BC, SC, ST போன்ற ஜாதிகளுக்கு 5 லட்சம் வருமான வரம்பாக காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. பின் அந்த வரம்பு 8 லட்சம் என மாற்றப்பட்டது. இந்த வருமான வரம்பு, அதாவது 8 லட்சம் EWS 10%-க்கும் தொடர்கிறது. இந்த வருமான வரம்பு BC /SC /ST ஒன்றாகவும், (8 லட்சம் என்றும்) இதர சமூகத்தினருக்கு (OC) வேறு தொகையும் வைக்க சட்டத்தில் இடமில்லை; நேர்மையும் இல்லை. ஆனால் இதன் மீதான விமர்சனங்கள் இப்போதாவது வருவது ஏற்கத்தக்கதே. எளியவர்க்கு வழங்கும் சலுகையை வலியவர் பெற அனுமதிப்பது நியாயம் அல்ல. வருமான வரம்பை கண்டிப்பாக கணிசமாக குறைக்க வேண்டும். மேலும் முதல் தலைமுறைப்பட்டதாரிகள்/தாய்மொழியில் படித்தவர்கள்/ கிராமப்புற மாணவர்கள் போன்ற மாணவர்களுக்கு முன் உரிமை அளிக்கலாம்.
வாதம்-6: இந்த ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது;
வேறு பார்வை: “வகுப்புவாரி பிரிதிநிதித்துவம்”, அதாவது ஜாதி வாரியாக மக்கள் தொகைக்கு ஏற்ற இடஒதுக்கீடு என்பதே சமூகநீதி என்றால்,. அந்தக் கொள்கைப்படியே 10% இடம் பிரிக்கப்படும். இதனால் கொள்கைரீதியான முரண்பாடும் இல்லை. தற்போது இடஒதுக்கீடு பெறுகின்ற ஜாதிக்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
பக்கத்து மாநிலத்தவர் நமது பொதுப்பிரிவில் வெற்றி பெறுவதில் தவறு இல்லை; நம்முரில் படித்து அவர்களின் சொந்த ஊருக்குச் சென்று பணியாற்றும் வாய்ப்புப் பெறுவதிலும் குற்றம் இல்லை. நமக்குக் கோபமும்/வருத்தமும் இல்லை. ஆனால் 10% பொதுப்பிரிவுக்கு தமிழ் ஜாதிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தால், பாரதியின்/வா.உ.சி ன்/ஓமந்தூராரின் பேரன் பேத்திகள் நம் கை பிடித்து மருத்துவம் பார்க்கும். தேவை ஏற்படின், தற்போதைய இடஒதுக்கீடு சதவீதத்தை (69%) அதிகமும் ஆக்கலாம். 2021 ன் தேவை, 10% இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துவதன் மூலம் அனைவரையும் அரவணைக்கும் அரசாக, “நவீன தீண்டாமையை” கடைபிடிக்காத ஆட்சி என்ற நிலையை எடுக்கலாம்.
Rajan Sundara, Admin
www.brahminsforsociety.com
குலத்தின் மீது பாசம்; அனைவருடன் நேசமான நட்பு; தமிழ்பால் தீராக்காதல்; தாய்நாட்டின்பால் மாறாத பற்று; இறையே! இவையே நாம் வேண்டுவது.
Leave a Reply