Bangalore & Kaveri

Bangalore-Kaveriஅவர்கள் நால்வரும் Elctronic cityயில் வேலை செய்யும் Software engineers. ஒருவர் கன்னடியர், ஒருவர் குஜராத்தி, இருவர் தமிழர்கள். தமிழர்களில் ஒருவர் ஐயர். காபி நேரம்; காவிரி பிரச்சினையை பற்றி பேச்சு திரும்பியது. ஐயர் தமிழ்நாட்டு வாதங்களை எடுத்து வைத்தார். கர்நாடகாவுக்கும் ஆந்திராவுக்கும் உள்ள பிரச்சினைகளையும் போட்டு உடைத்தார். கன்னடியிருக்கோ கோபம் தாங்க முடியவில்லை. ‘காவிரி எங்குளுது’ என்று மட்டும் கூற முடிந்தது.  மேலும் அவருக்கு கர்நாடகா சார்பு வாதங்கள் எதுவும் தெரியவுமுல்லை. திடீரென்று ஆவேசம் வந்தவராய்   ஜாதி  பற்றி பேச தொடங்கினார்

“ஏண்டா ஐயிரே! நீ தமிழனா! உன்னை தமிழன் என்று எவரும்  ஒப்புக் கொள்வதில்லை. உங்க ஊருல பெரும்பாலான கட்சியில உன்னை சேர்க்கமாட்டான்.    ஆனா உன்னை பெங்களூர்ல மரியாதையா நடத்தினோம் டா. எங்க ஊர்ல வந்து பிழைப்பு நடத்திட்டு ஏன்டா எங்களுக்கு துரோகம் நினைக்கிறாய்…

ஆவேசத்தில் வார்த்தைகள் தெறித்து விழுந்தன. அவர் உளறியது  உண்மை இல்லை  என்ற கதை என்பதை ஒரு புறம் இருக்கட்டும்.

நம்பவர்கள் பலர் பெங்களூரில் செட்டில் ஆகிறோம்.  பிழைப்பு தேடி பக்கத்து மாநிலங்களுக்கு செல்கிறோம். தமிழ் உணர்வு இருக்க வேண்டியதுதான். ஆனால் நமது நட்பை வெறுப்பேற்றும்படி ஏன் இருக்க வேண்டும். அசைவ உணவு உண்பவனிடம் அது பாவம் என சொல்வது அந்த அளவிற்கு அவருக்கு கோபத்தை தருமோ, அதுபோல காவிரியை பற்றி ஒரு கன்னடரிடம் பேசுவதும்.

தமிழ்நாட்டில் 40 லட்ஷம்  தெலுங்கு பேசும் மக்கள் வாழ்கிறார்கள். வீட்டில் தெலுங்கும், வெளியே தமிழாய் சமூகத்துடன் கலந்து உறவாடுகிறார்கள். வாய் மொழி தமிழ் தாய் மொழி தெலுங்கு என வாழ்கிறார்கள். இன்னமும் சொல்லப்போனால் மேடையில் அற்புதமான தமிழ் பேசும் பல தலைவர்கள், வீட்டில் தெலுகு பேசுகிறார்கள்.

ஆனால் பெங்களூர் வாழ்  தமிழர்கள் கன்னடம் கற்பதில்லை என்ற குறை கன்னடர்களுக்கு இருக்கிறது. மேலும் நாம் அ.தி.மு.க / தி.மு.க அரசியலை அங்கு பேசுகிறோம். நமது மாநில அரசியல் கட்சிகளுக்கு அங்கு கிளை இருக்கிறது. ஓட்டும் விழுகிறது.

யோசித்து பாருங்கள்: தெலுகு தேசம் கட்சிக்கு தமிழ் நாட்டில் ஒட்டு விழுந்தால், நமக்கு எப்படி இருக்கும். தமிழ் நாட்டில் 20 வருடம் வேலை செய்துகொண்டு, “எனக்கு தமிழ் தெரியாது” என்று சொன்னால் நமக்கு எப்படி வலிக்கும். சென்னையின் ஒரு பகுதி முழுவதும் தெலுங்கில் கடை போர்டுகள் எழுத பட்டிருந்தால் நாம் எப்படி உணர்வோம். இவை அனைத்தயும் நாம் பெங்களூரில் செய்கிறோம்.

‘Be a Roman when you are in Rom:

பெங்களூர் வாழ் தமிழர்  அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்.

கன்னடம் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கட்சி காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் ப.ஜ.க.மட்டும்தான். தமிழ்நாட்டு கட்சிகளுக்கு ஓட்டு அளிப்பது கன்னடியர்களை வெறுப்பேற்றும் செயல். உங்கள் தமிழ் அடையாளங்கள் வீட்டோடு இருக்கட்டும். அக்கம் பக்கத்தாரே நமது நட்புப் சொந்தமும். அவர்களை பகைத்தல் சரியான / அறிவார்ந்த செயல் அல்ல.

தமிழ்நாட்டில் 40 லட்ஷம்  தெலுங்கு பேசும் மக்கள் வாழ்கிறார்கள். வீட்டில் தெலுங்கும், வெளியே தமிழாய் சமூகத்துடன் கலந்து உறவாடுகிறார்கள்.

இன்னொரு உதாரணம் பாலக்காடு தமிழர்கள்.  இன்றும் அவர்கள் தமிழ் பேசுகிரார்கள்.  ஆனால் பொது வெளியில் மலையாளிகளுடன் கலக்கிறார்கள்.

பெங்களூர் வாழ் தமிழர்  அனைவரும் பின்பற்ற வேண்டிய முன் உதாரணம்.