Category Archives: கனவுகள்-தேவைகள்

Business Consultancy

business-consultantமாதம் 24,000 சம்பளம். மனைவி;  மகள், வாடகை வீடு;  இழுபறி வாழ்க்கை; சார்!!  இதெல்லாம் தெரிந்த கதைதானே! என்கிறீர்களா! சின்ன வித்யாசம் இது. கஷ்டபடுபவரின் கதையல்ல. வென்றவரின் கதை. ராமநாதன் வறுமையை வென்ற கதை.

Project Japan – Training Center

japan1

ராமநாதனை சத்ய நாராயாணா கோயில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். மஞ்சளாக ஸ்ரீசூரணம் மற்றும் நாமம்;  47 வயது;  முணுமுணுயென காயத்திரி;   (வேறு எதுவும் தெரியாது! 6-ம் வகுப்பில் போட்டிக்காக 10 பாட்டுக்கள் திருப்பாவை  மனனம் செய்தது. கொஞ்சம் அரை குரையாக ஞபகம்)  பெருமாளை சேவிப்பார்.  பிரசாதம் வாங்குவார்.   அலுவலகம் செல்வார்.  வீடு திரும்புவார். சுலபமான மனிதர்.

Brahmin Angel Investors

EAST  தாம்பரம் தாண்டி வலப்பக்கம் திரும்பி ….இப்பொது நமக்கு “பாலாஜி பவன்” னுக்கு வழி தேவையில்லை.  அதன் தலைமை COOK  ஸ்ரீநிவாசனை தெரிந்தால் போதும்.  இந்த கதையின் நாயகன் அவர் தான்.  ஸ்ரீநிவாசனுக்கு இந்த ஆடி வந்தால் 53 முடிகிறது.  10ம் வகுப்பில் பாழாய் போன கணிதம் 1 மார்கில் கவிழ்த்து   விட்டதால் சமையலுக்கு வந்தவர். சுமாரான சம்பளம்.  நல்ல கை வாகு.  சாத்தமது பண்ணினால் 1 கப் குடிப்பீர்கள்.  (சாத்துமது – என்றால் என்ன? என்று சொல்ல போவதில்லை). கொஞ்சம் சீட்டு. கொஞ்சம் பன்னீர் புகையிலை.

Pooja and a Corporate Iyer

homam

எங்கள் இல்லத்தில் லட்சுமி பூஜையும்/சுதர்சன ஹோமமும் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எங்கள் பகுதியின் ஐயர் கிடைக்கவில்லை. வழக்கம் போல் Google லை கேட்டேன். ஒரு வெப்சைட்டில் “உங்கள் ஐயர்” என்று வந்தது. வலை தளைத்தில் ஐயர்-ரை புக் செய்ய போனேன். எனது பெயர் முகவரி மற்றும் பிறந்த தேதி, குலதெய்வம், கோயில் இஷ்ட  தெய்வம் என எல்வாவற்றையும் வாங்கிக் கொண்டது. பணம் கொஞ்சம் அதிகம் தான். இதில் வெப்சைட் “NON Profit Organization”  என்று பீற்றி கொண்டது. கொஞ்சம் எரிச்சாலாகிப் போய் வலை தளத்தை மூடப் போனேன். என் மனைவியின் நச்சரிப்பால் வேறு வழியின்றி பணத்தை கட்டினேன். 24 மணி நேரத்தில், ஒரு ஆச்சரியம் எனக்கு நீண்ட EMAIL வந்தது.

Brahmin Help Desk

connecting handsநீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் வசிப்பதாக வைத்துக் கொள்வோம். நமது கதையின் நாயகன் ராமநாதனின் வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியும் கூட உங்களுக்கு நமது நாயகன் ராமநாதனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ராமநாதனுக்கு 50 வயது. பக்கத்து தொழிற்ச்சாலையில் கணக்கர்.  ஒரு பையன் 10 –ம் வகுப்பு . (சொல்ல தேவையில்லை ஒரே மனைவி) . ஒரு சொந்த வீடு;  மூன்றாம் தலைமுறை கண்டவீடு.