Category Archives: Tamil Writers

இதற்குத்தானே ஆசைப்பட்டார் பாலகுமாரன்!

பாலகுமாரனை எனது 18-வது வயதிலிருந்து அறிவேன். நேரடியான அறிமுகமும் பழக்கமும் 23-வது வயதில் நிகழ்ந்தது. பரஸ்பர விமர்சனங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் மத்தியிலும்கூட அந்த உறவில் கடைசி வரை எந்தக் கீறலும் இல்லை. அவர் வழியேதான் நான் இலக்கியத்திற்குள் வந்தேன். இலக்கியப் பள்ளியில் அவரே என் முதல் மானசீக ஆசான். என் காலத்து வாசகர்கள் பலரையும் அவர் எங்காவது ஓரிடத்தில் தன் படைப்பின் வழியே சந்தித்திருக்கிறார். இப்படி பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்று கோலோச்சிய காலத்தில் நானும் இருந்தேன்.

கல்கி

Kalki Krishnamurthy

கல்கி கிருஷ்ணமூர்த்தி என்ற இவர் பெயரில், கல்கி என்பது என்ன? இது இயற்பெயரா? அல்லது அவர் இணைத்துக்கொண்ட ஒன்றா? அல்லது மற்றவர்கள் அவருக்கு அளித்த பட்டப் பெயரா? நான் எண்ணியதுண்டு. பிறகு தான் தெரிந்தது, இவர் தன் மனைவி கல்யாணியின் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களையும், தன் பெயரிலிருந்து முதல் எழுத்தையும் சேர்த்து ‘கல்கி’ என்று தன் பெயர் முன் இணைத்துக்கொண்டாராம். (இந்த இடத்தில் எழுத்தாளர் சுஜாதா நினைவுக்கு வருகிறார்).

Sujata

sujata

ளம் தமிழ் எழுத்தாளர்கள் சந்திக்கும் விமர்சனங்கள் இரண்டு வகை. ‘சுஜாதா மாதிரியே எழுதறீங்க…’, ‘சுஜாதா மாதிரி இல்லை’. விசேஷம் என்னவென்றால், இரண்டுக்குமே சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் சந்தோஷமாகப் புன்னகைத்து விடுவதுதான்!

சாவி 100

பேராசிரியர் கல்கி, தேவன், துமிலன் என அற்புதமான படைப்பாளிகளைத் தந்த அதே ஆனந்த விகடன்தான், சாவி என்கிற திறமையான பத்திரிகையாளரையும் தந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி, சாவியின் நூற்றாண்டு!